Saturday, February 16, 2019

சீனப்புளுகும்! பாகிஸ்தானியப் புளுகும்!

அண்டப்புளுகு! ஆகாசப்புளுகு! என்பதற்குப் பதில் இனிமேல் சீனப்புளுகு! பாகிஸ்தான் புளுகு! என்றே மாற்றி வைத்துக்கொள்ளலாம் போல! 
 
முதலில் சீனப்புளுகு! இளநீர் குடித்தால் மார்பகம் பெருக்குமா? போலி விளம்பரம் செய்து மாட்டிக் கொண்ட சீன நிறுவனம்!
The Chinese beverage company which claimed its coconut milk would enlarge women's breasts has bowed to public pressure and replaced its offending advertising campaign with a more wholesome, less misleading, version.Xu Dongdong, a representative from Hainan Coconut Palm Group, also admitted to local media on Wednesday that his company's product did not have breast enlarging properties.  என்கிறது இந்தச்செய்தி    
அதுசரி! பாகிஸ்தானியப் புளுகு எப்படி இருக்கும்?
காஷ்மீர் அவந்திபோராவில் CRPF வாகனங்கள் மீது தற்கொலைத் தாக்குதல் (fedayeen) நடத்தியதற்குப் பிறகு பாகிஸ்தான் என்னென்ன மாய்மாலங்கள் செய்து கொண்டிருக்கிறது? dawn என்றொரு நாளிதழ். ஜின்னாவால் ஆரம்பிக்கப்பட்டது என்று சொல்வார்கள். அதில் இன்றைக்கு வந்திருக்கிற ஒரு கட்டுக்கதை!

படத்தில் இருப்பவர் ரெஹ்மான் மாலிக்! முந்தைய அரசில் உள்துறை அமைச்சராக இருந்தவர். நேற்று வெள்ளிக்கிழமை, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த தாக்குதலை நடத்தியதே இந்தியாவின் RAW உளவு அமைப்புதான் என்று ஒரேபோடாகப் போட்டிருக்கிறார். இதற்குமேல் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? 
ஆனால் இது பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷிக்கோ, இங்கே சோனியா காங்கிரசின் நவஜோத் சிங் சிதுவுக்கோ தெரியாது போல இருக்கிறதே! அவர்கள் வேறு மாதிரியல்லவா சப்பைக்கட்டுக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்!    


Minister of Foreign Affairs Shah Mahmood Qureshi Exclusive Talk with Geo News in Munich Germany (15.02.19) 🇵🇰 🇩🇪
3:49
3,756 views
        

Friday, February 15, 2019

எல்லோரும் இந்நாட்டு மன்னர்! விரலில் மை வைக்கும் வரை!

இங்கே மாற்று அரசியல் , அரசியல் மாற்று என்ன என்ற தெளிவான புரிதல் இல்லாமலேயே, அரசியல் களம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமாக மாறிக் கொண்டே வருவதில், புதிய மாற்றங்கள் என்ன வந்து விடுமென்று நினைக்கிறீர்கள்?
மாற்றத்தை நோக்கி என்று தலைப்பு வைத்ததனாலே மட்டும் மாற்றத்துக்கான வழிமுறைகள் பேசப்படும் என்று எதிர்பார்ப்பதே கூட இங்கே தவறாகத்தான் இருக்கிறது.இங்கே ஒரு பத்திரிகையாளர், ஓட்டு வாங்கி ஜெயித்ததனாலேயே அவருக்குத்தான் மொத்தகுத்தகை என்று சொல்வது ஏற்புடையதுதானா?

ஒருவிரல் புரட்சி என்று சொல்லப்படுகிற winner takes all  வாக்குச் சீட்டு ஜனநாயகத்தில் தான் எத்தனை எத்தனை கோளாறுகள்? ஒருமுறை ஒருத்தனுக்கு ஓட்டு போட்ட பாவத்துக்காக, ஐந்துவருடங்கள் அந்தநபர் என்ன செய்தாலும் சகித்துக் கொண்டே இருக்க வேண்டுமா? சில காலத்துக்கு முன்னால் right to recall தேர்ந்தெடுத்த நபரைத் திரும்ப அழைக்கும் உரிமை வேண்டுமென்கிற குரல் இங்கேயும் எழுந்தது நினைவு இருக்கிறதா?
எப்போது இந்தக்கூத்தெல்லாம் நடந்தது என்கிறீர்களா? இங்கே அதைப்பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். ஆனால். இங்கே  முதலில் வாக்களிக்கிற மகாஜனம், என்ன தெரிந்து, நல்லவனைத்தான் தேர்ந்தெடுக்கிறோமா என்று புரிந்துதான் ஓட்டுப் போடுகிறார்களா? பெரும்பாலான தருணங்களில், இங்கே ஓட்டுப்போடுவதே, அவனைப் பிடிக்காது அதனால் இவனுக்குப் போடுகிறேன் என்கிற நெகடிவ் ஓட்டாகத் தான் இருக்கிறது, கவனித்திருக்கிறீர்களா? 

இன்னார் வரவேண்டும் என்று தெளிவாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை குறைவு. கணிசமான பகுதி,யார் ஜெயிப்பார்கள் என்று படுகிறதோ, அங்கேயே கண்ணை மூடிக் கொண்டு ஓட்டுப் போடுகிற ரகம்! ஆக எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று எல்லோருக்கும் ஓட்டுரிமை கிடைத்தும் எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாமலேயே 1952 முதல் இதோ எதிர்வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் என்றிருக்குமானால் யாரை நொந்து கொள்வது? 
தேர்தல் என்றால் இதுமாதிரி காமெடிகள் இல்லாமல் இருக்குமா?   
மாற்றுக்கருத்துகளைத் தேடிப் படிப்பவன் நான்! எழுத்தாளர் ஜீவி சொன்னாரே என்பதற்காக கமென்ட் மாடரேஷனை விலக்கிவைத்திருந்தது தவறு என்று காண்பித்துக் கொடுத்த மணிவண்ணன் மாதிரி ஆசாமிகளுக்கு நன்றி.  

பதிவின் உள்ளடக்கத்துக்கு சம்பந்தமில்லாதவை, வெட்டி ஓட்டுகிற போஸ்டர்கள், பின்னூட்டங்களில் கறாராக நிராகரிக்கப்படும்..