Showing posts with label ஏன் திமுக கூட்டணி வேண்டாம். Show all posts
Showing posts with label ஏன் திமுக கூட்டணி வேண்டாம். Show all posts

Sunday, April 4, 2021

யாருக்கு வாக்களிப்பது? அதற்கு முன் யார் யாரை நிராகரிப்பதென்பதை முடிவு செய்யுங்கள்!

எந்தத்தேர்தலிலும் பார்த்திராத அளவுக்கு இந்த சட்ட மன்றத் தேர்தலில் இரண்டு கழகங்களும் கூட்டணி  முடிவாகும் முன்னரே தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை கடந்த மூன்று மாதங்களில் தனித்து நடத்தி முடித்து விட்டன. பத்துவருடங்களாக ஆட்சியைப் பிடிக்க முடியாத பெரும்பசி, வெறியோடு திமுக பெரும்பணச் செலவில் பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுக்கும் உத்திகளோடு களம் இறங்கியிருக்கிறது. அநேகமாக தமிழகத்தில் இருக்கும் மொத்த ஊடகங்களையும் திமுக தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, திமுகதான் ஆட்சியைப் பிடிக்கப் போகிறது என்ற செய்தியை பல்வேறு விதமான வழிகளில்  ஜனங்களுடைய மனதில் பதிய வைக்கும் உளவியல் யுத்தத்தில் வென்றதுபோல ஒரு மாயையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.


வணிக ஊடகங்களை திமுகவால் விலைக்கு வாங்க முடிந்தாலும், தனிமனிதர்களாக சமூக ஊடகங்களில் செய்துவரும் திமுக எதிர்ப்பை ஒன்றும் செய்ய முடியாமலும், அவைகளின் தாக்கம் எந்த அளவுக்கு சேதாரத்தை ஏற்படுத்தும் என்பதை சரியாக கணிக்க முடியாமலும் தவித்துவருகிறார்கள் என்பது தான் கள யதார்த்தம்


உதயநிதி அடுத்த முதல்வரா? கேட்கவே படுதமாஷாக இருக்கிறதே! ஆனால் சங்கர மடம் போல இல்லாத திமுகவில் என்ன நடக்கும் என்பது தான் ஊரறிந்த ரகசியமாயிற்றே!

தேர்தல் நேரக்காமெடிகளை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு வாக்காளர்களாகிய நமக்கு முன்னால் இருக்கிற கடமை, வாய்ப்புக்கள் என்னவென்பதைக் கொஞ்சம் பார்க்கலாமா?

அன்புள்ள வாக்காளரே!
வணக்கம். இன்னும் 2 நாட்களில் விரலைக் கறை படுத்திக் கொள்ளப் போகிறீர்கள். ஆனால் கறை நல்லது, நீங்கள் சரியான அரசைத் தேர்ந்தெடுப்பீர்களேயானால்.
பொதுவாகத் தேர்தலின் போது எதிர்காலத்தை எண்ணிப் பார்த்து வாக்களியுங்கள் என்று அறிவுரை சொல்வார்கள். ஆனால் நான் கடந்த காலத்தை நினைத்துப் பார்த்து முடிவு செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இன்று நம் முன் ஐந்து வாய்ப்புக்கள் நிற்கின்றன. அவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதை விட எவற்றையெல்லாம் நிராகரிப்பது என்று சிந்தித்தால் நாம் தேர்ந்தெடுக்கக் கூடியது எது என்பது தானே தெளிவாகிவிடும்.
நாம் தமிழர் என்றொரு கட்சி களத்தில் நிற்கிறது. அந்தக் கட்சி விடுதலைப் புலிகளின் சித்தாந்தால் மன ஊக்கம் பெற்று (inspiration) உருவானது. அதன் ஆதர்ச தலைவர் பிரபாகரன். அவரது அணுகுமுறை இந்தக் கட்சித் தலைவரிடமும் பிரதிபலிக்கிறது. மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை மரத்தில் கட்டி வைத்து தோலை உரித்து பனைமட்டையால் விளாச வேண்டும், தன் முடிவை ஏற்காதவர்களை கிரீஸ் டப்பாவை நசுக்குவது போல் நசுக்கிவிடுவேன் என்றெல்லாம் அவர் பகிரங்கமாகப் பேசுகிறார். சுருக்கமாகச் சொன்னால் அது அரசியல் கட்சியல்ல, ஒரு வழிபாட்டுக் கும்பல் (Cult) அதை நிராகரித்து விடலாம்
அமமுக, மக்கள் நீதி மய்யம் இரண்டும் தனிநபர்களின் சுயநலத்தால் உருவானவை. சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொண்டு விட்டார். அந்த நிலையில் அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ள கட்சியும் தேர்தலிலிருந்து ஒதுங்கியிருக்கத்தானே வேண்டும்? சசிகலா, திமுகவை வீழ்த்துவதுதான் நமது நோக்கம் என்று அறிவித்து இருக்கிறார். அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்ட கட்சி, திமுகவை வீழ்த்தும் நோக்கம் கொண்ட அதிமுகவைத்தானே வலுப்படுத்த வேண்டும்? அதற்கு மாறாக திமுகவிற்கு எதிரான வாக்குகளைப் பிரிக்க முற்படுவது ஏன்?
ஏனென்றால் தேர்தல் வெற்றியை அல்ல, தேர்தலுக்குப் பின் பேரம் நடத்தி, ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டத் தன்னை மீண்டும் கட்சிப் பொறுப்பில் பிணைத்துக் கொள்வதை எதிர்பார்த்து, தினகரன் களம் இறங்குகிறார். அவரது சொந்த நலனைக் காப்பாற்ற நாம் வாக்களிக்க வேண்டியதில்லை
கமல்ஹாசனின் கட்சி தோன்றக் காரணம் விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்ட இடைஞ்சல். அப்படி இடைஞ்சல் ஏற்பட்டிருக்காவிட்டால் என் சொத்து மதிப்பு ரூ 200 கோடி இருந்திருக்கும் (இப்போது 177 கோடி) என்கிறார். தனக்கு ஏற்பட்ட பண இழப்புக் காரணமாக பழி வாங்க அரசியலில் நுழைந்திருக்கிறார். அதற்கு முன்பு அவர் அரசியல் பிரசினைகள் குறித்து சினிமாவிலோ, வெளியிலோ ஏதும் கருத்துச் சொன்னதில்லை என்பதை இதோடு பொருத்திப் பார்த்தால் உண்மை புரியும்.
தன்னை காந்தியின் பி டீம் என்கிறார் கமல்..காந்தி தனது எல்லாக் கூட்டத்தையும் பிரார்த்தனையோடு தொடங்கினார். ரகுபதி ராகவ ராஜாராம் பிரபலமானது அவரது கூட்டங்களின் மூலம்தான். கமல்ஹாசனுக்கு இறை நம்பிக்கை இருப்பதாகத் தெரியவில்லை. கடவுள் இல்லை என்று சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும் என்ற அவரது திருவாசகத்தின் பொருள் புரியாமல் விழிக்கிறான் பாமரன். கடவுளை நம்பாதவர் காந்தியின் பீ டீம் ஆக இருக்க முடியுமா?
ஒரு பக்கம் தன்னை காந்தியின் பி டீம் என்று சொல்லிக் கொள்பவர், தன்னை பெரியாரின் சீடர் என்றும் சொல்லிக் கொள்கிறார். காந்தியை பிரிட்டீஷ் அரசின் ஒற்றர், கவர்மெண்டின் ரகசிய அனுகூலி, உழைக்கும் மக்களின் துரோகி என்றெல்லாம் எழுதியவர் பெரியார் (19.2.1933, குடி அரசு தலையங்கம்) பெரியாரின் சீடர் எப்படி காந்தியின் பி.டீமாக இருக்க முடியும்?
திமுக ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தால் அதன் 2006-11 ஆட்சிக்காலம் நினைவுக்கு வருகிறது. மின்வெட்டு, நிலப்பறிப்பு, அதிகாரிகளை மிரட்டுவது, அரைப் பிளேட் பிரியாணிக்கும் பராட்டோவிற்கும் அடிதடி, அராஜகம், ரெளடியிசம் இவையெல்லாம் நினைவிலாடுகின்றன.
ஆரம்ப நாட்களிலிருந்து இன்று வரை திமுகவில் நீடிக்கும் ஒரே விஷயம், இந்து மத வெறுப்பு, இந்துக் கடவுள்களை இழிவுபடுத்திப் பேசுவது.
நான் எல்லாவற்றையும் விட முக்கியமாகக் கருதுவது அது குடும்ப ஆட்சியை நிறுவ முயல்வதை. குடும்ப உறுப்பினர்கள் அரசியல் கட்சியில் இருப்பதற்கும் ஓர் அரசியல் கட்சி குடும்பத்தின் கையில் இருப்பதற்கும் பெருத்த வித்தியாசங்கள் உண்டு. அப்போதும் கூட அது அந்தந்த கட்சிக் காரர்களின் தலையெழுத்து என்று நாம் பொருட்படுத்தாமல் இருந்து விடலாம். நாம் கட்சியின் உறுப்பினர்களாக இல்லாதவரை அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்து விடலாம். ஆனால் அவர்களுக்கு ஆட்சி அதிகாரம் பெற்றுத்தர முற்படும் போது நாம் அதை நிராகரிக்கும் வகையில் செயல்பட்டாக வேண்டியிருக்கிறது. நம் தனிவாழ்வு, தொழில், சமுக வாழ்வு இவற்றின் மீது நேரிடையாகவும், மறைமுகமாகவும் அதிகாரம் செலுத்தி வரும் அமைப்புஅரசு . அந்த அதிகாரத்தை ஒரு குடும்பத்தின் கையில் ஒப்படைத்தால் என்னவாகும்?
அதிமுக அரசு இருண்டகாலத்திலிருந்து தமிழகத்தை விடுவித்தது. அதன் ஆட்சிக்காலத்தில் எதிர்மறையாக ஏதும் பெரிதாக செய்துவிடவில்லை. நீட் ஜிஎஸ்டி எல்லாம் தமிழ்நாட்டிற்கு எனப் பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டவை அல்ல. நாடு முழுமைக்குமானவை. நீட் தேர்வு காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் நடத்தப்படுகிறது (உதாரணம் பஞ்சாப், ராஜஸ்தான்) திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரளத்திலும் நடக்கிற்து. GST விகிதங்களைத் தீர்மானிப்பது ஒரு தனிநபரல்ல. ஓர் அரசுத் துறை அல்ல. ஒரு குழு -கவுன்சில் - தீர்மானிக்கிறது. அந்தக் கவுன்சிலில் எல்லா மாநில பிரதிநிதிகளும் இருக்கிறார்கள். உதாரணமாக தில்லியின் சார்பில் மனீஷ் சிசோடியா (பாஜக) புதுச்சேரியின் சார்பில் நாராயணசாமி (காங்கிரஸ்( வங்கத்தின் சார்பில் அமித் மித்ரா (திருணாமூல்) கேரளத்தின் சார்பில் தாமஸ் ஐசக (மார்க்சிஸ்ட்)
எப்போதும் அதிமுகவின் அணுகுமுறை என்பது சட்டரீதியாக சாதிக்க முடிந்தவற்றிற்கு நீதிமன்றங்களை நாடுவது (உதாரணம்: காவிரி,) சட்டப்போரட்டத்தின் மூலம் சாத்தியமாகதவற்றிற்கு மாற்று வழிகளைக் காண்பது (உதாரணம் : 69% இட ஒதுக்கீட்டிற்கு ஒன்பதாம் அட்டவ்ணை மூலம் சட்டப் பாதுகாப்பு, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு)
எடப்பாடி அரசு மத்திய அரசோடு இணக்கமாக இருந்து திட்டங்களைப் பெற்று வருகிறது (உதாரணம் 11 மருத்துவக் கல்லூரிகள், மெட் ரோ ரயில் விரிவாக்கம்) தமிழக அரசின் வருவாய் முதன்மையாக மூன்று வழிகளில் வருகின்றன. 1.ஜி எஸ் டி (அதில் ஒரு பங்கு மத்திய அரசுக்குரியது) 2. பதிவுக் கட்டணங்கள் (நிலம், வீடு, வாகனங்கள்) 3. டாஸ்மாக். இந்த வருமானத்திலிருந்து அது அரசு ஊழியர் சம்பளம், விலையில்லா அறிவிப்புகள், போன்றவற்றையும் பிற செலவுகளையும் எதிர் கொண்டு பின் வளர்ச்சித் திட்டங்களுக்கும் செலவிடுவது என்பது மிக சிரமம். அனேகமாக சாத்தியமில்லை. வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒப்புதலும் (கடன் வாங்கக் கூட) நிதியும் தேவை . இதற்கு இரு அரசுகளுக்குமிடையே நல்லுறவு தேவை.
மத்திய அரசோடு மோதல் போக்கை கடைப் பிடிப்பது அரசியல் கட்சிகளுக்கு வேண்டுமானால் தங்கள் பிம்பங்களைக் கட்டமைத்துக் கொள்ள உதவலாம். மாநில வளர்ச்சிக்கு உதவாது. அதற்கு யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு நடைமுறை சாத்தியமாக முடிவெடுக்கும் pragmatic அரசுதான் தேவை.
தேர்தல் என்பது இருப்பதில் எது சிறந்ததோ அதைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புதான். வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அன்றாட வாழ்வில் பெரும் பிரசினைகளை ஏற்படுத்தாத அதிமுக ஆட்சி தொடர வாக்களியுங்கள்
எண்ணித் துணிக கருமம். அன்புடன் மாலன் .

எழுத்தாளர் மாலன் சொல்கிற விஷயங்களோடு முழுமையாக உடன்படுகிறேன் அதனால் இங்கேயும் பகிர்கிறேன் அதிமுக மீது எனக்கு வேறுவிதமான கருத்து இருக்கிறது. அதற்காக திமுக மாதிரியான ஒரு நாசகார கட்சியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது இல்லையா?

நீங்களும் இதை ஏற்பதோடு குடும்பத்தினர், உறவுகள், நண்பர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்! செய்தியைப் பொதுவெளியில் பகிர்ந்துகொள்ளுங்கள் .
தமிழகம் பிழைத்திருக்க திமுகவை அதன் கூட்டணிக் கட்சிகளோடு முழுமையாக நிராகரிப்பதுதான் ஒரே நல்லவழி! நம்மால் செய்ய முடிவதும் கூட!

மீண்டும் சந்திப்போம்.
        

Saturday, April 3, 2021

ஏன் திமுகவை, அதன் கூட்டணிக் கட்சிகளோடு முழுதாக நிராகரிக்க வேண்டும்?

தேவியர் இல்லம் பக்கங்களில் நண்பர் ஜோதிஜி திமுகவை ஏன் நிராகரிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களைத் தொடர் பதிவுகளாக எழுதி வருகிறார். நண்பர்கள் வட்டம் அதிகமுள்ள அவருக்கே, வாசகர்கள் interaction / பின்னூட்டங்கள் மிகவும் குறைவாக இருப்பதில்  எதற்காக கருத்துச் சொல்லி வீண் வம்பை விலைக்கு வாங்கவேண்டும் என்பதான அச்சம் நீடிப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது தமிழில் வலைப்பதிவுகள் அதிகமாக வர ஆரம்பித்த நாட்களில் திராவிட வலைப்பதிவர்கள் என்ற போர்வையில் பலர் அராஜகமாக,பின்னூட்டம் எழுதுகிறவர்களைக் குறி வைத்து, ஆபாசத்தாக்குதல்கள் நடத்திய காலம் மலையேறிவிட்டது என்றாலும், பதிவு எழுதுகிறவர்கள் நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கிப்போவது மட்டும்  இன்னமும் குறையவில்லையோ? இத்தனைக்கும் ஒரு  தனிமனிதனாக மறைந்த பதிவர் டோண்டு ராகவன் இந்த ஆபாச திராவிடங்களை போடா ஜாட்டான் என்று துணிந்து அம்பலப்படுத்தியபோது, தாக்குப்பிடிக்க முடியாமல் சிதறி ஓடியவர்கள் இப்போது முகநூலில் ஆதிக்கம் செலுத்திவருவது வேறு விஷயம். அங்கேயும் அவர்களுக்குப் புரிகிற மொழியிலேயே பதிலடிகள் கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றன.  


இந்த மிரட்டலுக்கெல்லாம்  பயப்படமாட்டேன் நான் கலைஞரின் மகன் என்று சவடாலாகப் பேசியவர்கள் சரித்திரம் என்ன? எந்த இந்திரா மீது கல்லெறிந்து , அவதூறு  பேசினார்களோ அவரது காலிலேயே விழுந்து கூட்டணி வைத்துக் கொண்டார்கள் (எம்ஜியாரும் சூடு பட்டபிறகு மத்தியில் ஆளுகிறவர்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற பாடம் கற்றுக்கொண்டார்) பின்னர் வந்த ராஜிவ் திமுகவைப்  பெரிதாகக் கண்டு கொள்ளவிஅறிவாலயத்தில் ல்லை! சோனியாவுக்கு ஓடோடிச் சென்று கருணாநிதி ஆதரவுக்கரம் நீட்டியது, ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கனிமொழி, ஆபாச ராசரா இருவரும் திகார் சிறையில் மாதக் கணக்கில் அடைபட்டிருந்த நிலையிலும் தொடர்ந்ததே! அறிவாலயத்தில் ஒரு தளத்தில்  கருணாநிதியின் மனைவி தயாளுவிடம் சிபிஐ விசாரணை நடத்திக் கொண்டு இன்னொருதளத்தில் கலீஞரின் கையை முறுக்கி கூட்டணி பேரமும் நடத்தி 63 சட்டசபைத் தொகுதிகளையும் கொடுத்த கருணாநிதியின் அதே தைரியம் தான் தனக்கும் என்று இம்சை அரசன் பட வடிவேலு மாதிரிச் சவடாலாகச் சொல்வதாக மட்டுமே இசுடாலின் சவடாலை எடுத்துக் கொள்ள முடிகிறது! 


ஒரே ஒரு தேர்தல்தான்! உச்சத்தில் இருந்த வடிவேலு திமுகவுக்குப் பிரசாரம் செய்யப்போனா ர். மொத்த வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு நிற்கிறார் என்பது  அவருக்கு மட்டுமே அல்ல, இன்னும் நிறைய அரசியல் கோமாளிகளுக்கும் காத்திருக்கிற விதி!  


இசுடாலின் காமெடி அரசியலுக்கு நாம்தமிழர் கட்சியின் அபிமானி சாட்டை துரைமுருகன் போன்றவர்கள் பதில் கொஞ்சம் ரசிக்கிற மாதிரி இருக்கிறது.


 இன்றைய அரசியல் காமெடிகளை நீளம் கருதி இத்துடன் முடித்துக் கொண்டு விடலாமா? 

மீண்டும் சந்திப்போம்.

Friday, April 2, 2021

அண்ணாமலை IPS போன்ற இளைஞர்களே நமது நம்பிக்கைக்குரிய வேட்பாளர்கள்!

முதலில் தற்போதைய காமெடி ஒன்றைப் பார்த்து விடுவோம்! அரவக்குறிச்சியிலிருந்து கரூருக்கு ஓடிப் போன செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி பிஜேபி வேட்பாளர் அண்ணாமலை IPS, தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகப் பயந்துபோய் புகார் அளித்ததில் அண்ணாமலை IPS மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளதாம்!


சமீப காலங்களில் இதுமாதிரி திமுக ஆசாமிகள் பயந்து புகார் கொடுத்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது தான் முதல்முறையாகக் கூட இருக்கும்! அண்ணாமலை அப்படி என்ன மிரட்டிவிட்டாராம்? கீழே 13 நிமிட வீடியோ


அடாவடித்தனம்,அராஜகம். அபாண்டமாக அவதூறு அரசியல் பேச்சு எல்லாவற்றிற்கும் மொத்தக்குத்தகை எடுத்திருப்பது  திமுகதான்! அவர்களுடைய அடாவடி, அராஜகத்துக்கு ஒரு வலிமையான சவாலாக  இந்த இளைஞர் வேகமாக வளர்ந்து வருவது திமுகவினருக்கு ஆரம்பமுதலே மிகவும் உறுத்தலாக இருந்திருப்பது முதல் அரவக்குறித்ச்சி என்றாலே பண அரசியல்தான் என்று இருந்ததை உடைத்தது. திமுகவின் சிறுபான்மைக் காவலர் வேஷத்தை வெற்றிகரமாக அம்பலப்படுத்தியது என்று அண்ணாமலை IPS  அவர்களின் செயல்பாடுகள் வெகுவாகவே திமுகவினரை பயமுறுத்தியிருப்பதை அவருடைய வார்த்தைகளிலேயே கேளுங்கள்! இதுவரை திமுகவின் அரவக்குறிச்சி formula, திருமங்கலம் formula,எதையும் எவரும் challenge செய்ததில்லை! இன்று ஒரு இளைஞர் அந்தமாதிரி formula,வை உடைப்பேன் என்று உறுதியாக இருக்கிறார் என்றால், அவரே நமது நம்பிக்கைக்குரிய வேட்பாளர்! நம்பிக்கை நட்சத்திரம்!  

டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் இன்று,ஒளிபரப்பான நிகழ்ச்சி இது.தீபக் போபண்ணா அரவக்குறித்ச்சியின் நம்பிக்கை நட்சத்திரமான அண்ணாமலை IPS உடன் உரையாடுகிறார். ஒரு தெளிவான பார்வையுடன் அரசியல் பேசுகிற வெகுசிலரில் அண்ணாமலை IPS உம்  ஒருவர் என்பதில் சந்தேகமிருக்கிறதா என்ன?

ஒப்பீட்டளவில் இன்னும் இரு இளைஞர்களின் அரசியல் எப்படி என்று பார்த்தால் மட்டுமே அண்ணாமலை IPS அரசியல் வரவேற்கப்படவேண்டிய ஒன்று என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும்! வீடியோக்கள் 1 நிமிடம் மட்டுமே எங்கள்Blog ஸ்ரீராமுக்கு ஸ்பெஷலாகச் சொல்லி ஆகவேண்டும்!   


கரூரில் கெஞ்சுகிறார் தேமுதிகவின் விஜயபிரபாகரன். கேள்வியைக் கேட்டிருக்க வேண்டிய இடம் பிரேமலதா (அம்மா) LK சுதீஷ் (தாய்மாமன்) தான்!அது கூடத்  தெரியாதவரிடம் ஜனங்கள் ம்ட்டும் பதில் சொல்லி விடுவார்களா?


இந்தத்திமிருக்காகவே உதயநிதி மட்டுமல்ல, ஒட்டு மொத்த திமுக கூட்டணி வேட்பாளர்களுமே தோற்றாக வேண்டும்!

தமிழகத்தின் விடிவுகாலம் திமுக கூட்டணியை முழுதாக நிராகரிப்பதில் இருந்து தொடங்குகிறது!

மீண்டும் சந்திப்போம்.

Tuesday, April 16, 2019

பனிமலர்! செந்தில்பாலாஜி! மாறியது ஒண்ணே ஒண்ணு!

போகன் சங்கர் முகநூல் பகிர்வுகளில் பனிமலர் என்ற பெயர் அடிபட்டதை பார்த்துத் தேடியபோதுதான்  இந்த வீடியோவை கண்டடைந்தேன். FirstPost தளத்துக்காக H ராஜா அவர்களைப் பேட்டி காண்கிறார். சன்டிவி தொகுப்பாளினியாக இருந்த பழக்கம் போகவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது.




கரூர் மாவட்ட திமுகவினர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஆட்சியர் அன்பழகன், தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்
1:12 PM - 16 Apr 2019

செந்தில் பாலாஜியுடன் சேர்ந்து ஜோதிமணி அடாவடி... கலெக்டர் வீட்டுக்குள் புகுந்து அராஜகம்!


திமுக எப்போதுமே இந்தமாதிரி உருட்டல் மிரட்டல்களில் ஈடுபடுகிற ரவுடிகளின் கட்சியாகவே இருந்துவருவது தெரிந்த விஷயம்தான்! 



திமுகவுக்குள் நுழைந்தவுடன் திமுக அராஜகப்  பாரம்பரியத்திலும் செந்தில் பாலாஜி ஐக்கியமாகி விட்டதாக ஆசியாநெட் தமிழ் செய்தி சொல்கிறது.  ரவுடிகள் இருக்கவேண்டிய இடம் சிறைச்சாலை! தேர்தல் களத்தில் அல்ல என்ற பாடத்தைப் புகட்டத் தயாராக இருக்கிறோமா? 


நிராகரிக்கவேண்டியது இந்த உதிரிகளையும் சேர்த்துத்தான்! தனியாக வேறு சொல்ல வேண்டாம் இல்லையா!  



இந்த துக்ளக் அட்டைப்பட நையாண்டி வெளிவந்து மூணு வருஷம் ஆயிடுச்சா? பக்கவிளைவுகள் அதிகம் உள்ள கட்சி திமுக என்பது மட்டும்  தாத்தா தலையெடுத்த நாளிலிருந்து மாறவே இல்லையே! ஒண்ணே ஒண்ணு மாறிடுச்சாம்! இது இன்னைக்கு வெளியான துக்ளக் அட்டைப்படம்


மாறியது நெஞ்சம்! மாற்றியவர் யாரோ? என்று பாட்டுப் பாடியெல்லாம் தெரிந்துகொள்ளவேண்டியதில்லை!

எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு! இனியும்   ஏமாந்துவிடப் போகிறோமா?  விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்! தெரியுமில்லையா? 
    

Monday, April 15, 2019

வாக்குச் சீட்டும் ஆயுதம்தான்! சரியாகப் பயன்படுத்தினால்!



மு.க.அழகிரி வெளியில் மூச்சுவிடாமல் இருந்தாலும், உள்ளுக்குள் தனது நண்பர்களோடு உட்கார்ந்து அடிக்கடி அரசியல் பேசுகிறாராம்.கடந்த வாரம் நெல்லைக்குப் போய்விட்டுத் திரும்பியவர், வீட்டில் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “மீடியாக்காரங்கள எல்லாம் சபரீசன வெச்சு சரிபண்ணி வெச்சுக்கிட்டு ‘திமுகதான் பெருவாரியா ஜெயிக்கும்’னு பேச வைக்கிறாங்க.
ஆனா, உண்மை நிலவரம் என்னன்னு அவங்களுக்குத் தெரியல, எனக்குத் தெரிஞ்சு தென் மாவட்டங்கள்லயே தூத்துக்குடியும், திருநெல்வேலியும்தான் திமுக கூட்டணி ஜெயிக்கும். மத்த இடங்கள்ல மண்ண கவ்வப் போகுது பாருங்க” என்று சொன்னாராம் என்று முணுமுணுக்கிறது இந்து தமிழ்திசை 
 

களநிலவரங்களை சரியாக உள்வாங்கிக்  கொள்வதிலும் அதன் மீதான தன்னுடைய அனுமானங்களைச் சரியாகச் சொல்வதிலும் மு க அழகிரியின் சாதுர்யத்தை ஒரு மதுரைக் காரனாக நான் குறைத்து மதிப்பிட்டதே இல்லை. 
                                                       


கனிமொழி ஏப்ரல் 18ஆம்  நாள்வரை கூடக் காத்திருக்காமல், தான் என்றைக்கும் பெரியார் கொள்கையிலிருந்து விலகமாட்டேன் என்று கொள்கை மறுமுழக்கம் செய்திருக்கிறார்.
                                                     

துண்டுச்சீட்டில் எழுதிக்கொடுப்பதைக் கொஞ்சம் கூட யோசிக்காமல்     அப்படியே வாசிப்பதில் அப்பாவுக்குத் தப்பாமல் பிறந்தபிள்ளை என்பதை மூன்றாம் கலீஞர் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். இந்தத்தேர்தலில் பிஜேபி திமுகவைப் போல 20 மடங்கு இடங்களில் போட்டியிடுகிறது என்பதை யாரும் சொல்லித் தர மாட்டார்களோ? 
ஏன் மீண்டும் மோடி வேண்டும் மோடி
குஜராத் மாநிலத்தில், 18 ஆண்டுகளாக வசிக்கும் நான், தற்போது ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு, வேளாண்மை நிறுவனத்தின் திட்டங்களில் பணியாற்றி வருகிறேன். கர்நாடகா, மகாராஷ்டிரா கடலோர பாதுகாப்பு மற்றும் மணல்மேடுகள் மேம்பாட்டு திட்டம், இந்தியா, வடகொரியா மியான்மர், வங்கதேசம், தாய்லாந்து, இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் ஒருங்கிணைந்த காடுகள், மீன் வளம், விவசாயம், வேளாண் காடு வளர்ப்பு, மணல் மேடுகள், உணவு பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், கடலோர சூழலியல் பாதுகாப்பு புனரியக்கம், பேரிடர் மேலாண்மை போன்ற பலதரப்பட்ட இயற்கை வள மேம்பாட்டு பிரிவுகளில், ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை வல்லுன ராக பணிபுரிந்து வருகிறேன்.மோடி குஜராத்தின் முதல்வராகும் முன்பிருந்தே, நான் வதோதராவில் வசித்து வருகிறேன். 'குஜராத் எனர்ஜி கமிஷன்' என்ற அரசாங்க நிறுவனத்திலும் பணிபுரிந்ததால், அவருக்கு பிற்பாடு மாநிலத்தில் ஏற்பட்டு இருக்கும் மாற்றங்களும், வளர்ச்சியும் எனக்குநன்றாக தெரியும். பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் குஜராத். படித்த திறமைசாலிகளுக்கும், பெண்களுக்கும் தகுந்த மரியாதையும் பாதுகாப்பும் அதிகம் கிடைக்கும் இடம்.மோடி, பரம்பரை வழி வராத, தனித்தலைமை, தகுதியின் பொருட்டு தலைவராக கண்டு எடுக்கப்பட்டவர். மோடி, இந்தி யாவை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் செல்ல தேவையான தெளிவான பார்வையும் நெடுங்காலப் பயனளிக்கும் திட்டங்களையும் கொண்டவர். எடுத்த திட்டத்தை குறித்த காலத்துக்கு முன்பே கச்சிதமாக, வெற்றியுடையதாக முடிக்கும் திறன், அவரிடம் எப்போதும் வெளிப்பட்டிருக்கிறது.அது, மாநிலத்தில் முதல்வராக இருக்கும்போதும் சரி, இப்போது தேசத்தின் பிரதமராக இருக்கும்போதும் சரி; எடுத்த காரியத்தை செவ்வனே செய்து முடிப்பவர் மோடி.எப்போதும் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குறித்து நோக்கில் ஊக்கமளிக்கின்ற, நேர்மையான, கடின உழைப்பாளி. அவருடைய தனித்திறம் மற்றும் செயலாக்கத்திறம், பெரும்பான்மை மக்களை அவர் மீது நம்பிக்கை கொள்ள செய்துள்ளது.



1.பிற நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்துதல்2.முதலீடுகளை கவர்தல்3.ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இந்தியாவின் நிரந்தர பங்களிப்புக்காக சபை உறுப்பினரின் ஆதரவை நாடுதல்போன்ற மூன்று முக்கிய குறிக்கோள்களுடன் பற்பல நாடுகளுக்கும், துாதரகங்களுக்கும் அயராமல் விஜயம் செய்தார். அவற்றில், குறித்த வெற்றிகளையும் கண்டார். எல்லா குடிமக்களுக்கும் நியாயமான கவுரவம் அளிக்கும் பொருட்டு தனது ஆட்சியில் ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே சந்தை, ஒரே வரி போன்ற பல விஷயங்களை முன்னெடுத்துள்ளார். பல பழமையான செயலுக்குதவாத சட்டங்களை களைந்துள்ளார். தன் ஆட்சிக்காலத்தில் அவர் பல சந்தர்ப்பங்களில் அசாதாரணமான முடிவெடுக்கும் தனித்திறமையையும், செயல்படுத்தும் விரைவான செயல்திறனையும் நிரூபித்துள்ளார். இத்திறமைகள் மற்ற எந்த அரசியல் தலைவர்களிடமும் தற்போது காண இயலாதது.இளைஞர்களின் திறமைகளையும், தொழில்நுட்ப அறிவியலையும், மேம்பட்ட உட்கட்டமைப்புகளையும், அடிப்படை வசதிகள் பெருக்கத்தையும், இயற்கை வளங்களின் பாதுகாப்பு, சமூகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டையும் முன்னிறுத்தி, தேசத்தை ஊழலற்ற முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்கிறார்.மோடியே, செயலுாக்கம் உடைய ஆட்சியின் தனித்துவ உதாரணம் ஆவார். அவருடைய செயல்பாடுகள், சில நேரங்களில் பலருக்கு வலித்தாலும், நொதித்த புண்ணுக்கு மருந்திடும் நேரம் போன்றதே அந்த வலிகளும்; 65 ஆண்டுகள் அழுகிய புண்ணுக்கு மருந்திட்டு ஆற்றுவது,இன்றியமையாதது. வலிகளை பொறுப்போம்; நோயற்ற தேசம் செய்வோம்; தேசப்பற்றுடன் காப்போம்; என்றென்றும். இந்த தேசம் இளமையாய், என்றென்றும் ஜொலிக்க, மீண்டும் வேண்டும் மோடி.-என்கிறார் முனைவர் தெய்வ ஆஸ்வின் ஸ்டான்லி oswinstanley@gmail.com கட்டுரையாளர், ஒருங்கிணைந்த கடல்சார் சூழலியல் மேலாண்மை வல்லுனர்.  நன்றி தினமலர்  
                                                                


ரொம்ப சீரியசான ஆய்வுக்கட்டுரை மாதிரி ஆஸ்வின் ஸ்டேன்லி  சொன்னது இருந்ததோ? காமெடிக்கு கழகங்கள் இருக்கையில் கவலை எதற்கு? இசுடாலினை வைத்துச் செய்கிறார்கள்.


ஏன் திமுக கூட்டணிக்கு வாக்களிக்கக் கூடாது என்பதற்கு தஞ்சைப்பகுதியில்                 75 வயதான முதியவர் ஒருவர் மோடி படத்துடன் பேருந்துநிலையத்தில் வாக்கு கேட்டுக் கொண்டிருந்ததில் ஆத்திரமடைந்த  ஒரு உபி அவரை சரமாரியாகத் தாக்கியதில் முதியவர் மரணம் என்கிற ஒரு சோறு பதமான செய்தி ஒன்றே போதும்! விமானத்தில் கோஷம் எழுப்பிய சோபியாவுக்காக வரிந்து கட்டிக் கொண்டு வந்த ஊடகங்கள் இந்தப் பாதகத்தைக் கண்டுகொள்ளவில்லை.
நாமும் அப்படி ஒதுங்கிப்  போய்விட வேண்டுமா? அல்லது ஆட்சியில் இல்லாதபோதே அராஜகம் தலைவிரித்தாடும் திமுக மற்றும் அதன் தேர்தல் கூட்டாளிகளாகிய விசிக, மதிமுக,  இடதுசாரிகள் மற்றும் காங்கிரசை முற்றொட்டாக நிராகரித்துப்பாடம் புகட்டப் போகிறோமா?
இன்னும் மூன்றே நாட்கள் தான்! அமைதியானவழியில் வாக்குச் சீட்டைச் சரியாகப் பயன்படுத்தி திமுக கூட்டணியைக் களையெடுக்கிற வாய்ப்பு கிடைக்கிறதே!    
நழுவ விடலாமா?
                                       

Sunday, April 14, 2019

அரசியல் களத்தில் இன்று! சொல்ல விடுபட்டவை!

வருகிற தேர்தலில் திமு கழகம் தான் கற்ற வித்தை மொத்தத்தையும் களத்தில் இறக்கியிருக்கிறது என்பது தெரியாத அப்பாவியா நீங்கள்? கழகத்தின் வித்தை என்பது பொய், அதிகப்பொய், இன்னும் அதிகப்பொய் என்பதோடு நின்று விடுவதில்லை. எதிராளியை விலைக்கு வாங்குவது, முடியாவிட்டால் அவதூறு பரப்பித் தங்களை உத்தமர்களாகக் காட்டிக் கொள்வது என்பதெல்லாம் தாண்டி செயற்கையாகப் புரட்சியையும் தூண்டிவிடுவது என்ற லெவலுக்குப் போயாகி விட்டதை The Hindu அம்பலப்படுத்தியிருக்கிறது.


இந்த வீடியோவில் பேசுகிற பத்ரி கிட்டத்தட்ட மய்யம் உறுப்பினர் மாதிரியே பேசினாலும், உண்மை நிலவரத்தைப் போட்டுடைத்திருக்கிறார். அனிதாவின் அண்ணனை கமலுக்கு பதில் பேசவைத்தது backfire ஆகியிருக்கிறதா? இருக்கலாம்!

‪அவாளுக்கு இருமுடிக்கட்டு ‬‪இவாளுக்கு ஜல்லிக்கட்டு ‬
‪திருவாளர் பொதுஜனத்துக்கு சம்மர் கட்டு ‬
‪அதுசரி. இது நாளைக்காவது தமிழ் இந்துல வருமோ🤪டவுட்டுதான்‬
‪அரசியலில் எதுவுமே தானாக நடப்பது இல்லை. எல்லாவற்றையும் தனக்கு லாபகரமாக நடத்திக்கொள்ள பார்ப்பதுதான்😂😂😂

இந்த இணையதளத்தைப் பற்றி
THEHINDU.COM


Private firm run by party men explored ways to build ‘Brand Thalapathy’




அன்புமணி ராமதாசை மறந்து போய்விட்டோமா? இப்போது விட்டால் நினைவு வைத்துக் கொள்ள அவசியமே இல்லாமல் போய்விடும்!  


இங்கே நடிகை கஸ்தூரி அரசியல்வாதிகளைவிட நன்றாகவே குழப்புகிறார். கூடிய சீக்கிரத்தில் இவரும் ஒரு அரசியல் கட்சி தொடங்கிவிடுவார் போலிருக்கிறது! அத்தனை அழுத்தம் திருத்தமாக கருத்தை எடுத்து வைக்கிறார். முழுநிகழ்ச்சி இங்கே  

  
மீண்டும் சந்திப்போம்! 
            

பிறந்தது தமிழ்ப்புத்தாண்டு! பிறக்கட்டும் புதிய தமிழகம்!

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளும் வணக்கங்களும்! ஒரு புதிய ஆண்டு பிறக்கிறதென்றால், நலமும் வளமும் பெருகட்டும்! நாடும் மக்களும் செழிக்கட்டும் என வாழ்த்துவது மரபு. இந்தப் புத்தாண்டு அந்த வாழ்த்துக்களை உண்மையாகவே  நடத்திக் காட்ட ஒரு வாய்ப்பையும் தந்து பிறந்திருக்கிறது. 


இந்து மக்கள் முன்போல வாய்மூடி மௌனிகளாக இருக்கப் போவதில்லை என்பதை சமீபகால நிகழ்வுகள் படம்பிடித்துக் காட்டுகின்றன என்று ஒரே இந்தியா நியூஸ் தளத்தில் சிவ.
சரவணகுமார் எழுதியிருக்கும் இந்தக்கட்டுரை சொல்கிறது  அதிலிருந்து சில பகுதிகள்:
ஸ்டாலின் தாங்கள் ஹிந்து விரோதி அல்ல என்று மேடைக்கு மேடை அலற ஆரம்பித்திருக்கிறார்… கருணாநிதி திருமால் போற்றி , முருகன் போற்றியெல்லாம் வெளியிட்டார் என்கிறார்…பாஜக மட்டும்தான் இந்துக்களின் ஏகபோக பிரதிநிதி என்று கேள்வி எழுப்புகிறார்..
அவருடைய சகோதரி கனிமொழியின் பகுத்தறிவு பிரச்சாரங்கள் எல்லோருக்கும் தெரியும்… திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் பற்றி அவர் பேசியதும் , ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுப்பு அனுமதிப்பது குறித்து அவர் பேசியதும் , தன்னுடைய தந்தை உடல் நலம் குன்றி இருந்த போது அவருடைய உதவியாளர் அவர் நெற்றியில் விபூதி வைப்பதைப் பற்றி கிண்டலடித்து பேசியதும் இன்னும் எல்லோருக்கும் நினைவிருக்கிறது…
அப்படிப்பட்ட புரட்சிகர பகுத்தறிவாளர் கவிதாயினி கனிமொழி தற்போது நெற்றியில் பொட்டு இல்லாமல் வெளியே வருவதே இல்லை …தூத்துக்குடியில் ஒரு கோயில் விடாமல் சுற்றுகிறார்… அவருடைய தாயார் ராசாத்தி திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு , தன் மகள் திருச்செந்தூர் முருகன் அருளால் வெற்றி பெறுவார் என்று அறிவிக்கிறார்… இதோ நேற்றுவரை தன்னுடைய டுவிட்டர் ப்ரோபைலை டி.பி. யில் வைத்திருந்த ஈவேரா படத்தை மாற்றி விட்டு பனைமரத்தின் படத்தை வைத்திருக்கிறார் கனிமொழி..  

திமுகவின் பொய்புரட்டுக்கள் அதோடு ஓய்ந்து விட்டதா? இல்லை என்கிறது The Hindu நாளிதழ் அம்பலப்படுத்துகிற செய்தி! ஜல்லிக்கட்டு விவகாரத்தை எப்படி திமுகவினர் திட்டமிட்டு என்னவோ மெரினா புரட்சி  என்று கிளப்பி விட்ட கதை இப்போது அம்பலத்துக்கு வந்திருக்கிறது.   

தி.மு.க-வால் கட்டமைக்கப்பட்டு தூண்டப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டம், ஏமாற்றப்பட்ட தமிழக இளைஞர்கள்! “Operation Thalapathy”-க்காக பகடைக்காயான தமிழர் எழுச்சி – பகீர் உண்மைகள்!
ஜெயலலிதா மரணமடைந்ததும் தமிழகத்தில் ஒரு நிலையற்ற அரசியல் தன்மையையும், குழப்பத்தையும் உருவாக்க தி.மு.க எடுத்த முன் முயற்சி திட்டம்தான் ஜல்லிக்கட்டு போராட்டம் என்றும்,இப்போராட்டத்தை எப்படி தூண்டிவிடுவது, நடத்துவது, எந்தெந்த தீய சக்திகளைக் கொண்டு தொடர்ச்சியாக இதை ஒரு சாகும்வரை போராட்டமாக நடத்தி நிர்வாகத்தை நிலைகுலைய செய்து அ.தி.மு.க அரசை கவிழ்ப்பதுதான் தி.மு.க-வின் திட்டமென்றும் இந்து ஆங்கில நாளிதழ் தங்களுக்கு கிடைத்த ஓ.எம்.ஜி என்ற நிறுவனம் மூலம் கசிந்த சில மின்னஞ்சல் தகவல்கலை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசியல் ஸ்திரமற்ற நிலையை உருவாக்க உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தின் பெயர் “பிராண்டு தளபதி”-யாகும். ஜல்லிக்கட்டு ஆதரவு இயக்கம் என்ற ஒரு போராட்டத்தை செயற்கையாக தூண்டி நடத்தியது பிராண்டு தளபதி என்கிற ஸ்ட்ரேட்டஜிக் திட்டம்தான்.
திருச்சி தி.மு.க எம்.எல்.ஏ அன்பில் பொய்யாமொழி மற்றும் அண்ணாநகர் எம்.எல்.ஏ மோகன் ஆகியோர் இந்த சூப்பர் திட்டத்தின் இயக்குனர்கள்.
இந்த பிராண்டு தளபதி திட்டத்தை வடிவமைத்து, இந்த போராட்டத்தை நிர்வகித்தது One Mind Generation Research Foundation (OMG) என்கிற ஒரு மேலாண்மை ஆலோசனை நிறுவனமாகும் என்றும் இரகசியமாக வெளியான இ.மெயில் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளதாக தி இந்து பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
2015-ஆம் ஆண்டே இத்திட்டம் தொடங்கியதாகவும் அப்போது முதன் முதலாக ஜல்லிக்கட்டுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கப்பட்டதாகவும் ஆனால் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் பொது இந்த போராட்டம் பிசுபிசுத்ததால் ஜெயலலிதா மரணத்துக்கு பின் விரிவான அளவிலும், தீவிரமாகவும் இந்த திட்டம் முன்னெடுத்து செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டத்துக்கான செலவுகள் அனைத்தும் தி.மு.க-வினர் ஏற்றுக் கொண்டதாகவும், அதன்படி OMG நிறுவனம் தி.மு.க-வின் பெயர் வெளியே தெரியாதவாறு மக்கள் கலை இலக்கிய கழக போராளி கோவன், சின்னப்பொண்ணு, கவிஞர் வைரமுத்து போன்றோரை இந்த போராட்டத்தில் பங்கேற்க செய்து, தமிழக இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை தூண்டி விட்டு இப்போராட்டத்தி நடத்தியதாகவும் மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
2016 சட்டசபை தேர்தலின் போது தி.மு.க-வுக்கான தேர்தல் அறிக்கையை தயாரித்து அளித்தது இந்த OMG நிறுவனம்தான் என்றும், ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் தமிழக அரசியலில் மேற்கண்டவாறு குழப்பம் விளைவிக்கவும் இந்த நிறுவனம் பயன்படுத்தப்பட்டதாகவும் மேற்படி இ.மெயில் தகவல்கள் தெரிவிப்பதாக இந்து ஆங்கில நாளிதழ் செய்திகள்  தெரிவிக்கின்றன.

திமுக காங்கிரஸ் கூட்டணியை ஏன் முற்றொட்டாக நிராகரிக்க  வேண்டுமென்பதற்கான காரணங்கள் நிறைய இருக்கின்றன.உறுதியான முடிவெடுத்து செயல்படுத்துகிற வாய்ப்பு இன்னும்  நான்கே நாட்களில் நமக்கு  கிடைக்கிறது.

திமுகவோடு, கூட்டணி சேர்ந்திருக்கிற உதிரிகளான விசிக, மதிமுக, இடதுசாரிகள் மற்றும் காங்கிரசை நிராகரிப்போம்! புதிய தமிழகம்  பிறக்க அதுவொன்றே வழி!  
    

Thursday, April 11, 2019

ஒரு கடிதம்! சிலபல நையாண்டி! அரசியல் களம் இன்று!

நடிகை கஸ்தூரி இப்போது அரசியல் விமரிசகர் ஆகிவிட்டார்! கூர்மையான வார்த்தைகளில் தன்னுடைய கருத்தைச் சொல்வதில் கொஞ்சம்கூடத் தயக்கமோ பயமோ இல்லாமல் என்பதுதான் கூடுதல் விசேஷம். ஒரு பெண் இத்தனை துணிச்சலோடு பேசினால் தமிழேண்டா திராவிட வசவாளிகள் தாக்குதல் இல்லாமல் இருக்குமா? போடா ஜாட்டான் என்று அவைகளை புறந்தள்ளி விட்டுப்போகிற தைரியமும்  அவருக்கு இருப்பதை பார்க்கையில் ஒரு #Salut சல்யூட் அடிக்கவும் தோன்றுகிறது! 

  


முகநூலில் சில பதிவுகள் மேலோட்டமாக நையாண்டி செய்கிற மாதிரி இருந்தாலும் கொஞ்சம் யோசிக்க வைப்பவை. பின்னூட்டங்களோ பதிவை விட இன்னும் ஆழமான நையாண்டியுடன்! சமூகவலைத்தளங்களில் எப்படியெல்லாம் சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள் என்பதைப் பார்க்கும்போதே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்பதையும் மறக்காமல் சொல்லிவிட வேண்டும்!

உடன்பிறப்பே, 

எனது இதயம் கனத்து விட்டது; கண்கள் பனித்து விட்டது!
சற்றொப்ப,ஆத்திக அடிப்பொடியாகவே நீ மாறிவிட்டதைக் கண்டிடும் போது, எனது மனம் நடுங்குகிறது! பகவான் கிருஷ்ணனின் பாதம் தாங்கியாக நீ மாறியது கண்டு குமைந்து போய்க் கல்லறையின் வெளிவாசலில் அமர்ந்து இந்த மடலை வரைகிறேன்!
நம்மை எல்லாம் வளர்த்து விட்ட தந்தை - பெரியார் என்று நம்மாலும், ஈவேரா என ஆரிய வந்தேறிகளாலும் அழைக்கப்படும் கிழவனார் - எனது ஆட்சி நடைபெற்ற போது சேலம் மாநகரில் ராமர், கிருஷ்ணர் சிலைகளைச் செருப்பாலடித்து ஊர்வலம் நடத்தினார் ; அதைப் புகைப்பட ஆதாரத்துடன் சோ தனது 'துக்ளக்' ஏட்டில் வெளியிட்ட போது அத்தனைப் பிரதிகளையும் பறிமுதல் செய்து 'பத்திரிகை சுதந்திரத்தை' நிலை நாட்டியவன் நான்!
ஆனால், ஐயகோ வீரமணி சொன்ன ஒரு வாசகத்துக்கு வந்த எதிர்ப்பைக் கண்டு நீ பின்னங்கால் பிடரிபட ஓடிப்போய் கிருஷ்ணன் காலில் விழுந்தாயே!
தமிழனை உனக்குத் தெரியாதா? அவன் சோற்றால் அடித்த பிண்டம்! வாழை மட்டை! அவனுடைய கடவுளை எவ்வளவு கேவலப் படுத்தினாலும் நமக்கு வோட்டுப் போடுவான்!
அவனுக்குப் புரியாத வகையான மொழியில் ஆறுதலும் கூறவேண்டும்: அதே நேரத்தில் நாத்திகத்தையும் வளர விட வேண்டும்! 'கோயில் கூடாது என்பதல்ல கொள்கை - கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகி விடக் கூடாது'- என்றால் கை தட்டுவான் தமிழன்! 'எங்கள் அம்பாளின் முன், எங்கள் முருகனின் முன் சகல பாவங்களும் பொடி பட்டுப் போகுமே - பிறகு எப்படியடா கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகும்?"- என அப்பாவித் தமிழன் கேட்கவே மாட்டான்!
அவனை நம்பி நீ எதுவும் பேசலாம்! நெற்றிக் குங்குமத்தை ரத்தமா எனக் கேட்கலாம்! தீ மிதிப்பது காட்டுமிராண்டித் தனம் என்று கூறலாம்! அத்தனையும் பொறுத்துக் கொண்டு தமிழன் நமக்குதான் வோட்டளிப்பான்! அவன் என்ன இஸ்லாமியனா - எங்கோ பாரீஸ் நகரப் பத்திரிகையில் வரையப்பட்ட கார்ட்டூனுக்கு இங்கே மவுண்ட் ரோடில் பொங்கி எழும் இஸ்லாமிய வல்லமை இந்துவுக்கு உண்டா?
அந்த இஸ்லாமிய வல்லமைக்கு உள்ளேதான் நமது 'மதச்சார்பின்மை' மடங்கிக் கிடக்கிறது என்பது நீ அறியாததா உடன் பிறப்பே? அதனால்தானே குல்லா போட்டோம் - ரம்ஜான் கஞ்சி குடித்தோம் - நமது தொலைக்காட்சிகளில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை 'விடுமுறை தின' நிகழ்ச்சி ஆக்கி மகிழ்ந்தோம்!
ஆனால் ஐயகோ இப்போது நீ ஒரே அடியில் சுருண்டு போய் 'கிருஷ்ண பரமாத்வை' கழக மேடையில் இடம் பெறச் செய்து விட்டாயே! "ஆரியம் இருக்கும் இடம் அக்ரஹாரம் மட்டுமல்ல"- என்று நமது அண்ணா கூறியதை மெய்ப்பித்து விட்டாயே!
சரி போகட்டும் விடு - தலை முழுகியே தீராத பாவம் கால் கழுவியா போய்விடப் போகிறது? திராவிடக் கொள்கைக்கு ஒவ்வொரு தேர்தலிலும் திவசம் செய்ய வேண்டி உள்ளது!
ஒன்று கூறுகிறேன் - உற்றுக் கேள் உடன்பிறப்பே! 'சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்'- என்று கீதையில் அந்தக் கிருஷ்ணன் கூறி உள்ளான்! அதனைக் கொள்கை வாசகமாகப் போட்டு, எனது பாணியில் எடுத்து இயம்பத் தயங்காதே! நடந்தது நடந்துவிட்டது - சமாளிக்கக் கற்றுக் கொள் உடன்பிறப்பே!
அதாவது 'நான்கு வகை வேலைப் பிரிவுகளை நானே உண்டாக்கினேன்'- என்று கிருஷ்ணன் கூறுவது நமது கழகத்துக்கு அப்படியே பொருந்துவதைக் கண்டாயா?
சிந்திப்பவன், அறிவுத் துறையில் ஈடுபடுபவன் எவன் ஆயினும் பிராமணன் - இன்று ஆங்கிலமும் இந்தியும் பயின்று சரளமாகப் பேசுபவர்களே நமது பல வேட்பாளர்கள்! இவர்கள் கழக அளவில் பிராமணர்கள்!
டீக்கடை, பஜ்ஜிக் கடை, அழகு நிலையம்... எல்லாவற்றிலும் புகுந்து, CCTV காமிரா இருப்பதையும் கவனிக்காமல், தங்கள் வீரத்தைக் காட்டும் நமது 'செயல் வீரர்கள்' - அவர்களை ரவுடிகள் எனக் கூறுவது ஆரிய சூழ்ச்சி - அந்த வீரமிக்க உடன்பிறப்புகள் நமது கழக அளவீடுகளின்படி சத்ரியர்கள்!
கட்டுக்கட்டாகப் பணம் பிடிபடுகிறதே - வோட்டு வியாபாரத்தில் சிறந்து விளங்குகிறார்களே - அவர்கள் கழக அளவிலான வைசியர்கள்!
எனது மூன்றாம் தலைமுறை இளவட்டம் பிரசார ஊர்திக்குள் சொகுசாக அமர்ந்திருக்க, வெளியே கம்பியைப் பிடித்தபடி தொங்கி அடிமை ஊழியம் புரிபவன் முதல், ஐந்தாவது தலைமுறையாக போஸ்டர் ஒட்டியபடியே உள்ளானே அந்த உடன் பிறப்பு - அவனே நமது கழகத்தின் சூத்திரதாரி!
நான்கு வர்ணங்களை நானே படைத்தேன் - சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் - என்ற மகா வாக்கியத்தின் அடியில், 'அதையே நாமும் படைத்தோம்'- என்று பெருமை பொங்க எழுதிடு தம்பி! 'நமக்கு நாமே - சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்!'
கல்லறையில் இருந்து 
மு.க   


கொஞ்சம் இடம்கொடுத்தால் தலைக்குமேலேறி உட்கார்ந்து கொள்கிற திராவிட மாயை எப்படிப்பட்டதாம்?  


இசுடாலின் அம்பூட்டு திறமைசாலியா? சந்தேகமே வேண்டாம் என்கிறார் ஒருவர்!

  
மாரிதாஸ் சிவகங்கைத் தொகுதி வாக்காளர்களுக்கு மட்டும் இப்படிச்  சொல்லலாமா? 


ஊழலைத் தவிர வேறொன்றும் தெரியாத கூட்டணிதர்மம்! திமுக காங்கிரஸ் விசிக மதிமுக இடதுசாரிகள் எவருக்கும் வாக்களிக்காமல் இருப்பதொன்றே தேசம் காக்கும் வழி!

நாம் தப்பிப்  பிழைத்திருக்க உதவுகிற வழியும் கூட!
   

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)