நடிகை கஸ்தூரி இப்போது அரசியல் விமரிசகர் ஆகிவிட்டார்! கூர்மையான வார்த்தைகளில் தன்னுடைய கருத்தைச் சொல்வதில் கொஞ்சம்கூடத் தயக்கமோ பயமோ இல்லாமல் என்பதுதான் கூடுதல் விசேஷம். ஒரு பெண் இத்தனை துணிச்சலோடு பேசினால் தமிழேண்டா திராவிட வசவாளிகள் தாக்குதல் இல்லாமல் இருக்குமா? போடா ஜாட்டான் என்று அவைகளை புறந்தள்ளி விட்டுப்போகிற தைரியமும் அவருக்கு இருப்பதை பார்க்கையில் ஒரு #Salut சல்யூட் அடிக்கவும் தோன்றுகிறது!
முகநூலில் சில பதிவுகள் மேலோட்டமாக நையாண்டி செய்கிற மாதிரி இருந்தாலும் கொஞ்சம் யோசிக்க வைப்பவை. பின்னூட்டங்களோ பதிவை விட இன்னும் ஆழமான நையாண்டியுடன்! சமூகவலைத்தளங்களில் எப்படியெல்லாம் சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள் என்பதைப் பார்க்கும்போதே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்பதையும் மறக்காமல் சொல்லிவிட வேண்டும்!
எனது இதயம் கனத்து விட்டது; கண்கள் பனித்து விட்டது!
மு.க
கொஞ்சம் இடம்கொடுத்தால் தலைக்குமேலேறி உட்கார்ந்து கொள்கிற திராவிட மாயை எப்படிப்பட்டதாம்?
மாரிதாஸ் சிவகங்கைத் தொகுதி வாக்காளர்களுக்கு மட்டும் இப்படிச் சொல்லலாமா?
முகநூலில் சில பதிவுகள் மேலோட்டமாக நையாண்டி செய்கிற மாதிரி இருந்தாலும் கொஞ்சம் யோசிக்க வைப்பவை. பின்னூட்டங்களோ பதிவை விட இன்னும் ஆழமான நையாண்டியுடன்! சமூகவலைத்தளங்களில் எப்படியெல்லாம் சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள் என்பதைப் பார்க்கும்போதே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்பதையும் மறக்காமல் சொல்லிவிட வேண்டும்!
உடன்பிறப்பே,
எனது இதயம் கனத்து விட்டது; கண்கள் பனித்து விட்டது!
சற்றொப்ப,ஆத்திக அடிப்பொடியாகவே நீ மாறிவிட்டதைக் கண்டிடும் போது, எனது மனம் நடுங்குகிறது! பகவான் கிருஷ்ணனின் பாதம் தாங்கியாக நீ மாறியது கண்டு குமைந்து போய்க் கல்லறையின் வெளிவாசலில் அமர்ந்து இந்த மடலை வரைகிறேன்!
நம்மை எல்லாம் வளர்த்து விட்ட தந்தை - பெரியார் என்று நம்மாலும், ஈவேரா என ஆரிய வந்தேறிகளாலும் அழைக்கப்படும் கிழவனார் - எனது ஆட்சி நடைபெற்ற போது சேலம் மாநகரில் ராமர், கிருஷ்ணர் சிலைகளைச் செருப்பாலடித்து ஊர்வலம் நடத்தினார் ; அதைப் புகைப்பட ஆதாரத்துடன் சோ தனது 'துக்ளக்' ஏட்டில் வெளியிட்ட போது அத்தனைப் பிரதிகளையும் பறிமுதல் செய்து 'பத்திரிகை சுதந்திரத்தை' நிலை நாட்டியவன் நான்!
ஆனால், ஐயகோ வீரமணி சொன்ன ஒரு வாசகத்துக்கு வந்த எதிர்ப்பைக் கண்டு நீ பின்னங்கால் பிடரிபட ஓடிப்போய் கிருஷ்ணன் காலில் விழுந்தாயே!
தமிழனை உனக்குத் தெரியாதா? அவன் சோற்றால் அடித்த பிண்டம்! வாழை மட்டை! அவனுடைய கடவுளை எவ்வளவு கேவலப் படுத்தினாலும் நமக்கு வோட்டுப் போடுவான்!
அவனுக்குப் புரியாத வகையான மொழியில் ஆறுதலும் கூறவேண்டும்: அதே நேரத்தில் நாத்திகத்தையும் வளர விட வேண்டும்! 'கோயில் கூடாது என்பதல்ல கொள்கை - கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகி விடக் கூடாது'- என்றால் கை தட்டுவான் தமிழன்! 'எங்கள் அம்பாளின் முன், எங்கள் முருகனின் முன் சகல பாவங்களும் பொடி பட்டுப் போகுமே - பிறகு எப்படியடா கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகும்?"- என அப்பாவித் தமிழன் கேட்கவே மாட்டான்!
அவனை நம்பி நீ எதுவும் பேசலாம்! நெற்றிக் குங்குமத்தை ரத்தமா எனக் கேட்கலாம்! தீ மிதிப்பது காட்டுமிராண்டித் தனம் என்று கூறலாம்! அத்தனையும் பொறுத்துக் கொண்டு தமிழன் நமக்குதான் வோட்டளிப்பான்! அவன் என்ன இஸ்லாமியனா - எங்கோ பாரீஸ் நகரப் பத்திரிகையில் வரையப்பட்ட கார்ட்டூனுக்கு இங்கே மவுண்ட் ரோடில் பொங்கி எழும் இஸ்லாமிய வல்லமை இந்துவுக்கு உண்டா?
அந்த இஸ்லாமிய வல்லமைக்கு உள்ளேதான் நமது 'மதச்சார்பின்மை' மடங்கிக் கிடக்கிறது என்பது நீ அறியாததா உடன் பிறப்பே? அதனால்தானே குல்லா போட்டோம் - ரம்ஜான் கஞ்சி குடித்தோம் - நமது தொலைக்காட்சிகளில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை 'விடுமுறை தின' நிகழ்ச்சி ஆக்கி மகிழ்ந்தோம்!
ஆனால் ஐயகோ இப்போது நீ ஒரே அடியில் சுருண்டு போய் 'கிருஷ்ண பரமாத்வை' கழக மேடையில் இடம் பெறச் செய்து விட்டாயே! "ஆரியம் இருக்கும் இடம் அக்ரஹாரம் மட்டுமல்ல"- என்று நமது அண்ணா கூறியதை மெய்ப்பித்து விட்டாயே!
சரி போகட்டும் விடு - தலை முழுகியே தீராத பாவம் கால் கழுவியா போய்விடப் போகிறது? திராவிடக் கொள்கைக்கு ஒவ்வொரு தேர்தலிலும் திவசம் செய்ய வேண்டி உள்ளது!
ஒன்று கூறுகிறேன் - உற்றுக் கேள் உடன்பிறப்பே! 'சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்'- என்று கீதையில் அந்தக் கிருஷ்ணன் கூறி உள்ளான்! அதனைக் கொள்கை வாசகமாகப் போட்டு, எனது பாணியில் எடுத்து இயம்பத் தயங்காதே! நடந்தது நடந்துவிட்டது - சமாளிக்கக் கற்றுக் கொள் உடன்பிறப்பே!
அதாவது 'நான்கு வகை வேலைப் பிரிவுகளை நானே உண்டாக்கினேன்'- என்று கிருஷ்ணன் கூறுவது நமது கழகத்துக்கு அப்படியே பொருந்துவதைக் கண்டாயா?
சிந்திப்பவன், அறிவுத் துறையில் ஈடுபடுபவன் எவன் ஆயினும் பிராமணன் - இன்று ஆங்கிலமும் இந்தியும் பயின்று சரளமாகப் பேசுபவர்களே நமது பல வேட்பாளர்கள்! இவர்கள் கழக அளவில் பிராமணர்கள்!
டீக்கடை, பஜ்ஜிக் கடை, அழகு நிலையம்... எல்லாவற்றிலும் புகுந்து, CCTV காமிரா இருப்பதையும் கவனிக்காமல், தங்கள் வீரத்தைக் காட்டும் நமது 'செயல் வீரர்கள்' - அவர்களை ரவுடிகள் எனக் கூறுவது ஆரிய சூழ்ச்சி - அந்த வீரமிக்க உடன்பிறப்புகள் நமது கழக அளவீடுகளின்படி சத்ரியர்கள்!
கட்டுக்கட்டாகப் பணம் பிடிபடுகிறதே - வோட்டு வியாபாரத்தில் சிறந்து விளங்குகிறார்களே - அவர்கள் கழக அளவிலான வைசியர்கள்!
எனது மூன்றாம் தலைமுறை இளவட்டம் பிரசார ஊர்திக்குள் சொகுசாக அமர்ந்திருக்க, வெளியே கம்பியைப் பிடித்தபடி தொங்கி அடிமை ஊழியம் புரிபவன் முதல், ஐந்தாவது தலைமுறையாக போஸ்டர் ஒட்டியபடியே உள்ளானே அந்த உடன் பிறப்பு - அவனே நமது கழகத்தின் சூத்திரதாரி!
நான்கு வர்ணங்களை நானே படைத்தேன் - சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் - என்ற மகா வாக்கியத்தின் அடியில், 'அதையே நாமும் படைத்தோம்'- என்று பெருமை பொங்க எழுதிடு தம்பி! 'நமக்கு நாமே - சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்!'
கல்லறையில் இருந்து
இசுடாலின் அம்பூட்டு திறமைசாலியா? சந்தேகமே வேண்டாம் என்கிறார் ஒருவர்!
ஊழலைத் தவிர வேறொன்றும் தெரியாத கூட்டணிதர்மம்! திமுக காங்கிரஸ் விசிக மதிமுக இடதுசாரிகள் எவருக்கும் வாக்களிக்காமல் இருப்பதொன்றே தேசம் காக்கும் வழி!
நாம் தப்பிப் பிழைத்திருக்க உதவுகிற வழியும் கூட!
>>> ஊழலைத் தவிர வேறொன்றும் தெரியாத கூட்டணிதர்மம்! திமுக காங்கிரஸ் விசிக மதிமுக இடதுசாரிகள் எவருக்கும் வாக்களிக்காமல் இருப்பதொன்றே தேசம் காக்கும் வழி!
ReplyDeleteநாம் தப்பிப் பிழைத்திருக்க உதவுகிற வழியும் கூட!...<<<
அருமை.. அருமை...
Sooper! sooooopper!
ReplyDelete