நரேந்திர மோடி Vs Who கேள்விக்குப் பதில் என்ன? என்று சாதாரணமாகக் கேட்டாலே பதில் சொல்லத் தயங்குகிற ஒரு வினோதமான தமிழ் இணையம் இது. இங்கே பரீட்சை எதுவும் வைக்கவில்லை, ஒரு கருத்துக் பரிமாற்றத்துக்காக எழுதுவது தான் என்று மறுபடியும் வலியுறுத்தி ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்தாக வேண்டுமோ?
இப்படி நெற்றிப்பொட்டில் அறைகிற மாதிரி பதில் சொல்வது ஒருவகை என்றால் HTN சேனலில் பர்கா தத் பம்முகிற மாதிரிப் பதுங்குவது இன்னொரு வகை! Rahul Gandhi has walked into a trap by centering his Lok Sabha campaign on anti-Modi narrative, not real issues என்று FirstPost தளத்தில் தினேஷ் உன்னிகிருஷ்ணன் நேற்று எழுதிய செய்திக்கட்டுரையை இப்போதுதான் வாசித்தேன். தீக்கதிர் குமரேசன்கள் வாதிடுவதுபோல இது நரேந்திர மோடியோ பிஜேபியோ திட்டமிட்டுச் செய்ததல்ல. மோடி வெறுப்பு என்ற ஒற்றைப் புள்ளியிலேயே தேங்கிப்போன காங்கிரஸ் முதலான அத்தனை எதிர்க்கட்சிகளும் சிக்கிக் கொண்ட படுகுழி அது.
சதீஷ் ஆசார்யா கிண்டல் செய்வதுபோல ஊடகங்களோடு பேட்டி என்பது கத்திகள் மீது படுப்பது அல்ல. முந்தைய பதிவில் விஜய் சேதுபதி லாவகமாக ஊடகக்காரர்களை சமாளிக்கிற விதத்தை வியந்து வீடியோ போட்டிருந்தது கூட விஜய் சேதுபதி புகழ் பாடுவதற்காக அல்ல. பொறுப்பில் இருப்பவர்கள் ஊடகங்களோடு பேசுவதென்பது எப்போதுமே scripted தான்! எல்லோருமே இசுடாலின் போல, ஆக வாய் புளித்ததோ ஆக மாங்காய் புளித்ததோ என்று பேசமாட்டேன் ரகத்தில் பேசுவதுமில்லை. அல்லது ராகுல் காண்டி மாதிரிப் பொறுப்பே இல்லாமல் பேசுவதும் இல்லை.
பர்க்கா தத் பாகவதை:
நிற்கவில்லையெனில் ஏன் சொன்னாய்
பிரியங்கா நிற்கவில்லை எனில் அடியே
நமோவிற் கெதிரில் காசியில் (நிற்க)
நிற்கவில்லையெனில் ஏன் சொன்னாய்
பிரியங்கா நிற்கவில்லை எனில் அடியே
நமோவிற் கெதிரில் காசியில் (நிற்க)
ஒருமுறையல்ல இருமுறைகள் ஏன் உறுதி சொன்னாய் மவளே
நமோவிற் கெதிரில் காசியில் (நிற்க)
நமோவிற் கெதிரில் காசியில் (நிற்க)
ஸாகரிகா கோஸ் பெங்காலிப் பாகவதை:
அமேடி போய் விடுமோ தோழி
அமேடி போய்விடுமோ
பரந்து பரந்து எங்கும் நின்றதில்
இரந்த இடம் தோற்றிடுமோ அடியே இடதுடன் மோதி என்ன பலன்
உடன் பிறந்த டெல்லியில் தோற்றிட
அமேடி போய் விடுமோ!
அமேடி போய்விடுமோ
பரந்து பரந்து எங்கும் நின்றதில்
இரந்த இடம் தோற்றிடுமோ அடியே இடதுடன் மோதி என்ன பலன்
உடன் பிறந்த டெல்லியில் தோற்றிட
அமேடி போய் விடுமோ!
ரோஹிணி சிங் பாகவதை:
அந்தரங்கம் சொன்ன தென்ன மானே
காங்கிரஸ் அந்தரங்கம் சொன்னது என்ன
பிரியமானவள் மோடியுடன் மோதுவள் என்று
அந்தரங்கம் சொன்ன தென்ன தோழி
ஆணிடம் பயந்தாளோ அன்றித் தேருதல்
கணிப்புடன் பயந்தாளோ தோழி, அடீ
காங்கிரஸ் அந்தரங்கம் சொன்னது என்ன
பிரியமானவள் மோடியுடன் மோதுவள் என்று
அந்தரங்கம் சொன்ன தென்ன தோழி
ஆணிடம் பயந்தாளோ அன்றித் தேருதல்
கணிப்புடன் பயந்தாளோ தோழி, அடீ
மரியா சக்தி - கிறிஸ்தவப் பாகவதை:
துண்டைத் துவள விட்டாரே சகியே
-இந்தத்
தேர்தலில் துண்டைத் துவள விட்டாரே
கொண்ட குடும்பம் என்று வந்திட்டால்
பண்டு உடனிருந்தோர் யாரும் இல்லார்
பின்னும் வெளி மனிதர் மற்றும்
என்றும் அரசியலில் இல்லாதார்
மட்டும் உண்மை அறிவார் இன்று (துண்டை)
-இந்தத்
தேர்தலில் துண்டைத் துவள விட்டாரே
கொண்ட குடும்பம் என்று வந்திட்டால்
பண்டு உடனிருந்தோர் யாரும் இல்லார்
பின்னும் வெளி மனிதர் மற்றும்
என்றும் அரசியலில் இல்லாதார்
மட்டும் உண்மை அறிவார் இன்று (துண்டை)
ஸபா நக்வி - முஸ்லீம் பாகவதை:
எதற்கு இடங் கொடுத்தீர் வேறு
விதத்தில் நடக்கும் என்று ஏன்
கதைகள் சொன்னீர் காங்கிரஸே நீர்
விதத்தில் நடக்கும் என்று ஏன்
கதைகள் சொன்னீர் காங்கிரஸே நீர்
எதிரியை நோகத் தரமோ பிரியே
விதியை வேகத் தகுமோ பின்னும்
வீட்டின் உள்முற்றம் பாதுகாப்பு என்று
போட்டியென்ற பின்விதியை நோகத் தரமோ!
விதியை வேகத் தகுமோ பின்னும்
வீட்டின் உள்முற்றம் பாதுகாப்பு என்று
போட்டியென்ற பின்விதியை நோகத் தரமோ!
(மற்ற பாகவதர்களின் கீர்த்தனைகளை வசதிப்படி வாசகர்களே மனசு போல மொழிபெயர்த்துக் கொள்ளலாம்) என்று முகநூலில் நக்கலாக எழுதுகிறார் Kp கள்ளபிரான்!
மீண்டும் சந்திப்போம்!
No comments:
Post a Comment