Showing posts with label 2019 தேர்தல் முன்னோட்டம். Show all posts
Showing posts with label 2019 தேர்தல் முன்னோட்டம். Show all posts

Friday, April 26, 2019

கேள்விக்கென்ன பதில்?

நரேந்திர மோடி Vs Who கேள்விக்குப் பதில் என்ன?  என்று சாதாரணமாகக் கேட்டாலே பதில் சொல்லத் தயங்குகிற ஒரு வினோதமான தமிழ் இணையம் இது. இங்கே பரீட்சை எதுவும் வைக்கவில்லை, ஒரு கருத்துக் பரிமாற்றத்துக்காக எழுதுவது தான் என்று மறுபடியும் வலியுறுத்தி ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்தாக வேண்டுமோ? 


இப்படி நெற்றிப்பொட்டில் அறைகிற மாதிரி பதில் சொல்வது ஒருவகை என்றால் HTN சேனலில் பர்கா தத் பம்முகிற மாதிரிப் பதுங்குவது இன்னொரு வகை! Rahul Gandhi has walked into a trap by centering his Lok Sabha campaign on anti-Modi narrative, not real issues என்று  FirstPost தளத்தில் தினேஷ் உன்னிகிருஷ்ணன்  நேற்று எழுதிய செய்திக்கட்டுரையை இப்போதுதான் வாசித்தேன். தீக்கதிர் குமரேசன்கள் வாதிடுவதுபோல இது நரேந்திர மோடியோ பிஜேபியோ திட்டமிட்டுச் செய்ததல்ல. மோடி வெறுப்பு என்ற ஒற்றைப் புள்ளியிலேயே  தேங்கிப்போன காங்கிரஸ் முதலான அத்தனை எதிர்க்கட்சிகளும் சிக்கிக் கொண்ட படுகுழி அது.


சதீஷ் ஆசார்யா கிண்டல் செய்வதுபோல ஊடகங்களோடு பேட்டி என்பது கத்திகள் மீது படுப்பது அல்ல. முந்தைய பதிவில் விஜய் சேதுபதி லாவகமாக ஊடகக்காரர்களை சமாளிக்கிற விதத்தை வியந்து வீடியோ போட்டிருந்தது கூட விஜய் சேதுபதி புகழ் பாடுவதற்காக அல்ல. பொறுப்பில் இருப்பவர்கள் ஊடகங்களோடு பேசுவதென்பது எப்போதுமே scripted தான்! எல்லோருமே இசுடாலின் போல, ஆக வாய் புளித்ததோ ஆக மாங்காய் புளித்ததோ என்று பேசமாட்டேன் ரகத்தில் பேசுவதுமில்லை. அல்லது ராகுல் காண்டி மாதிரிப் பொறுப்பே இல்லாமல் பேசுவதும் இல்லை.

பர்க்கா தத் பாகவதை:
நிற்கவில்லையெனில் ஏன் சொன்னாய்
பிரியங்கா நிற்கவில்லை எனில் அடியே
நமோவிற் கெதிரில் காசியில் (நிற்க)
ஒருமுறையல்ல இருமுறைகள் ஏன் உறுதி சொன்னாய் மவளே
நமோவிற் கெதிரில் காசியில் (நிற்க)
ஸாகரிகா கோஸ் பெங்காலிப் பாகவதை:
அமேடி போய் விடுமோ தோழி
அமேடி போய்விடுமோ
பரந்து பரந்து எங்கும் நின்றதில்
இரந்த இடம் தோற்றிடுமோ அடியே இடதுடன் மோதி என்ன பலன்
உடன் பிறந்த டெல்லியில் தோற்றிட
அமேடி போய் விடுமோ!
ரோஹிணி சிங் பாகவதை:
அந்தரங்கம் சொன்ன தென்ன மானே
காங்கிரஸ் அந்தரங்கம் சொன்னது என்ன
பிரியமானவள் மோடியுடன் மோதுவள் என்று
அந்தரங்கம் சொன்ன தென்ன தோழி
ஆணிடம் பயந்தாளோ அன்றித் தேருதல்
கணிப்புடன் பயந்தாளோ தோழி, அடீ
மரியா சக்தி - கிறிஸ்தவப் பாகவதை:
துண்டைத் துவள விட்டாரே சகியே
-இந்தத்
தேர்தலில் துண்டைத் துவள விட்டாரே
கொண்ட குடும்பம் என்று வந்திட்டால்
பண்டு உடனிருந்தோர் யாரும் இல்லார்
பின்னும் வெளி மனிதர் மற்றும்
என்றும் அரசியலில் இல்லாதார்
மட்டும் உண்மை அறிவார் இன்று (துண்டை)
ஸபா நக்வி - முஸ்லீம் பாகவதை:
எதற்கு இடங் கொடுத்தீர் வேறு
விதத்தில் நடக்கும் என்று ஏன்
கதைகள் சொன்னீர் காங்கிரஸே நீர்
எதிரியை நோகத் தரமோ பிரியே
விதியை வேகத் தகுமோ பின்னும்
வீட்டின் உள்முற்றம் பாதுகாப்பு என்று
போட்டியென்ற பின்விதியை நோகத் தரமோ!
(மற்ற பாகவதர்களின் கீர்த்தனைகளை வசதிப்படி வாசகர்களே மனசு போல மொழிபெயர்த்துக் கொள்ளலாம்) என்று முகநூலில் நக்கலாக எழுதுகிறார் Kp கள்ளபிரான்!


 மீண்டும் சந்திப்போம்!       

Wednesday, April 17, 2019

தலைவனைத் தேர்ந்தெடுப்பது எப்படி? #தமைமைப்பண்பு

தலைமை, தலைமைப் பண்பு என்பது ஏதோ உச்சியில் மட்டுமே இருப்பது அல்ல! எட்டுத்திசைகளோடு, மேலே, கீழே என்று பத்துத் திசைகளிலும் பரவியிருந்தால் மட்டுமே அங்கே ஒரு நல்ல தலைமை இருக்கிறதென்று சொல்ல முடியும். 

தவிர, தலைமைப் பண்பு என்பது ஏதோ ஒரு நபருடன் நின்று விடுவது மட்டும் அல்ல! உடலெங்கும் ரத்தம்பாயும்போது, ஒவ்வொரு திசுவுக்கும் தேவையான பிராண வாயுவையும், க்ளூகோசையும் கொடுத்துவிட்டு, கழிவுகளைக் கொண்டு வந்து அதை அகற்றுகிற இடங்களுக்குக் கொண்டு சேர்க்கிற மாதிரி, ஒரு நல்ல தலைவன், தன்னுடன் பணி புரிபவர்களுக்கு ரத்தமாக இருக்கிறான். 
உயிரோட்டமாக எங்கும் பரவி நிற்பது தான்,  நல்ல தலைமைப் பண்பு!

தலைவர்கள், நிர்வாகிகள்  என்றால் உத்தரவு போடுகிறவர்கள், மேஸ்திரிகள், கங்காணிகள்  மாதிரிப் பழைய நினைப்புக்களிலேயே இங்கே நிறைய நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 


ஒரு புதிய சிந்தனை, ஒரு பண்பாக வளர்ந்து வருவதை, மேலாண்மை, நிர்வாகம், தலைமைப் பண்பு என்ற தலைப்புக்களிலேயே
 இங்கே எழுதியது தான்! மனித வளம் குறித்த சிந்தனைகளை ஒரே இடத்தில் தொகுத்து வைக்க வேண்டும் என்பதற்காக இங்கே மீள்பதிவாக! எனக்கும், மறுவாசிப்பு, அதைத் தொடர்ந்து எழும் சிந்தனையின் விரிவுக்காக!

ஜான் மாக்ஸ்வெல் என்பவர் எழுதிய , The 360° Leader என்ற புத்தகத்தைப் பற்றிய ஒரு சிறு குறிப்பை ஒரு வலைப்பதிவில் படித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு தலைவனுக்குரிய குணங்களை, தலைமைப் பண்பைப் பற்றிய புத்தகம், அதில்  இருந்து சுவாரசியமான ஒரு பகுதியைப் படிக்க நேர்ந்தது.  

ஆயிரம் உண்மையான நண்பர்களை, பின்தொடர்ந்து வருபவர்களைப் பற்றி, அப்படிப்பட்ட நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்வது வெற்றிக்கான உத்தரவாதமாக எப்படி இருக்கும் என்பதை சேத் கோடின் பதிவைத் தொடர்ந்து எழுந்த சிந்தனையாகச் சொல்லியிருந்தேன் இல்லையா! 


வெற்றிக்குப் பல படிகள், ஒன்று மட்டுமே போதுமானது அல்ல என்பதை இன்னொரு கோணத்தில் இந்த நூலில் ஜான் மாக்ஸ்வெல் சொல்கிறார். அவர் சொல்லும் ஒரு கதை இது.


ஒரு நாள் ஒரு காட்டு வான்கோழியும், எருதும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தன.

எதிரே தெரிந்த உயரமான மரத்தை ஏக்கத்துடன் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டே வான்கோழி சொன்னது: "அந்த மரத்தின் உச்சிக்குப் போய்விட வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது! ஆனால் அதற்குத் தேவையான சக்தியோ, சத்தோ என்னிடம் இல்லை."

எருது சொன்னதாம்! "என்னுடைய சாணியை கொஞ்சம் சாப்பிட்டுத் தான் பாரேன்! அதில் ஏகப்பட்ட சத்து இருக்கிறது!"

வான்கோழியும், நம்பிக்கையோடு சாணியைச்  சாப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்ததாம்! எருது சொன்ன மாதிரியே  அது ஊட்டச்சத்து மிகுந்ததாகத் தான் இருந்தது. மரத்தின் அடிவாரம் வரை போகக் கூடிய தெம்பு வந்து விட்டது. மறுநாள், இன்னும் கொஞ்சம் சாணியைச் சாப்பிட மரத்தின் கீழ்க் கிளை வரை போக முடிந்தது. அடுத்தநாள், அதற்கும் அடுத்த நாள் என்று சாணியைச் சாப்பிட்டு, நான்காவது நாள் ஒருவழியாக மரத்தின் உச்சிக் கிளைக்குப் போய் உட்கார முடிந்தது.

உச்சிக்குப்போய் உட்கார்ந்த பெருமிதத்தோடு வான்கோழி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சந்தோஷத்தில் குரல் எழுப்பியதாம்! காட்டில் வேட்டையாட வந்த ஒருவன்  கண்ணில் பட, துப்பாக்கியால் சுட்டானாம்..

வான் கோழி பணால்! உசரத்திலேயிருந்து, ஒரே தோட்டாவில் கீழே வந்தாயிற்று!

வான்கோழி படத்தைத் தேடும்போது கிடைத்த ஹோலிஸ்டிக் ஹீலிங் என்ற தலைப்பில் வான்கோழியை பற்றிய இன்னொரு சுவாரசியமான  தகவலைப்   பார்க்க  

உச்சிக்குப்போவது அவ்வளவு பெரிதான விஷயமில்லை! தொடர்ந்து முயற்சிக்கும் எவருமே உச்சிக்கு ஒரு நாள் போய்விட முடியும். 

கடினமானது எதுவென்றால், உச்சியிலே தொடர்ந்து இருக்க முடிவது தான்!

இந்த ஒரு கருத்தை நகைச்சுவையோடு தன்னுடைய புத்தகத்தில் ஜான் மாக்ஸ்வெல் சொல்லியிருப்பதாகப் படித்த போது, தலைமைப் பண்பு பற்றிய ஒரு சித்திரம் முழுமையடைந்து வருவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இங்கே இதை எழுதுவது  தலைவர்களாக எல்லோருமே ஆகிவிட முடியும் என்ற கற்பனையை விதைப்பதற்காக இல்லை!.தலைவனாக இருப்பதற்கு, இன்னொரு அடிப்படையான தேவை, ஒரு குறிக்கோளுடன் கூடிய குழுவை உருவாக்குவது தான்! குழுவாகச் செயல்படும் கூட்டுறவுமே மிகவும் அவசியம். 

ஒரு குழுவில், ஒரு தலைவனுக்குக் கீழே இருக்கும் நிலையிலும், தலைவனாவதற்குத் தேவையான தகுதிகளை வளர்த்துக் கொள்வதே கூட, ஒவ்வொரு தனிமனிதனும் சமூகத்துக்குச் செய்கிற மிகப்பெரிய உதவிதான்!

எம்ஜியார் பாட்டில் வருவது போல தனக்கொரு பாதையை வகுக்காமல் தன் தலைவன் வழியிலே நடப்பான் என்பதும்  கண்மூடித்தனமாகக் கேள்வியே கேட்காமல் பின் பற்றுவது, கொடி பிடிப்பதும், தீக்குளிப்பதும் அல்ல!

ஒரு சாதாரணமான மனிதனாக இருந்து கொண்டே, நம்மால் நம்பிக்கையை விதைக்க முடியும்! நம்மைச் சுற்றி உள்ளவர்களுடைய வாழ்க்கையில் தேவைப் படுகிற உந்து சக்தியாகவும், மகிழ்ச்சியைத் தருபவர்களாகவும் இருக்க முடியும்!

ஒரு நல்ல தலைவனுடைய தலைமைப் பண்பு அவன் எத்தனை ஆயிரம், லட்சம், கோடி நபர்களுக்குத் தலைமை தாங்குகிறான் என்ற எண்ணிக்கையில் இல்லை. ஜனங்களிடமிருந்து சுரண்டிக் கொழுப்பவன் ஒருபோதும் அவர்களுடைய தலைவனாக முடியாது.

ஒரு நல்ல தலைவன் என்பவன், தன்னிடமிருந்து நம்பிக்கை, எதிர் காலத்தைப் பற்றிய ஒரு தெளிவான கனவு, செயல் திட்டம், செயல்படுத்துவதில் உற்சாகம் என்று நல்ல விஷயங்களைக் கொடுக்கிறான். 

சமூகம் அவனிடமிருந்து ஒரு கனவை, ஆதர்சத்தை, நாளைய பொழுது நம்முடையதே என்ற தெளிவைப் பெறும்போது, அங்கே ஒரு நல்ல தலைவன் மட்டுமல்ல, ஒரு நல்ல சமுதாயமும் கூடவே உருவாகிறது! 

இது 2010 மார்ச்சில் இந்தப்பக்கங்களில் எழுதியதன் மீள்பதிவு தான்! இந்தப்பக்கங்களிலேயே மிக அதிகமாகப் படிக்கப்பட்ட பதிவும் இதுதான்! இதெல்லாம் ஒரு தகவலுக்காக மட்டுமே.

ஒரு பொருளை வாங்கும்போது எத்தனை கேள்விகள் கேட்டு எத்தனை ஒப்பீடுகள், விலை எல்லாவற்றையும் பார்த்து வாங்குகிறோம்? ஆனால் நம்மை ஆளப்போகிறவர்கள் யார் என்பதற்கான வாக்குச்சீட்டைப் பயன்படுத்தும்போது மட்டும் ஏன் அவ்வளவு தெளிவாகப் பார்த்து உண்மையிலேயே நம்மை ஆளத்  தகுந்த தலைவர்  இவர் தானா, நம்பித் தேர்ந்தெடுக்கலாமா என்றெல்லாம் கேள்விகள் கேட்டு,  அதன்பிறகு முடிவெடுக்காமல் காமாசோமாவென்று வாக்கு அளிக்கிறோம்? 

வாக்களிப்பது உங்கள் கடமை! கடமை என்று சொல்லும் போதே, அது எத்தனை பொறுப்புடன் செய்யவேண்டியது  என்பதும் சேர்ந்தே வருகிறது இல்லையா?            

Thursday, February 28, 2019

கூட்டணி என்றால் குழப்பம்தான்! அரசியல் இன்று!

விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானியர்களிடம் சிக்கி இருப்பது குறித்து சமூக வலைத்தளங்களில் படு கேவலமான பகிர்வுகள், சமாதானப் புறாக்கள் வேடத்தில் வந்து கொண்டிருக்கும் போது நடிகர் மாதவனின் ட்வீட்டர் பகிர்வு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது! எங்கள்Blog டிவிட்டரில் கூட, கொஞ்சம் வாயை மூடிக் கொண்டிருந்தால் நல்லது என்ற மாதிரி ஒரு செய்தி!
கிருஷ்ண மூர்த்தி STweet text
 
 

    
அங்கேயும் கொஞ்சம் கலப்படமான பின்னூட்டங்கள்!

கலப்படம் என்றால் கழகங்கள் நினைவு வராமல் இருக்குமா என்ன?   

இன்றைய செய்திகளில் தமிழக அரசியல் நிலவரம் படு கலவரமாக இருப்பதைப் பார்த்துச் சிரிப்பதா? அழுவதா? என்று ஒரே குழப்பம்! ஊடகங்களைப் பார்த்து வேறென்ன வரும்?



மதுரைக்கே உண்டான வெள்ளந்தித்தனம், தெனாவட்டு மிகுந்த விஜய காந்தை இந்தத் தேர்தல் களத்தில் ரொம்பவும் மிஸ் பண்ணுகிறோமோ? இந்தப் பழைய வீடியோ தொகுப்பைப் பார்த்த பிறகு அப்படித்தான் ஒரு எண்ணம் எழுந்தது.

அதிக தொகுதிகள், அதிக டிமாண்ட் வைப்பதால் தேமுதிகவை திமுக நிராகரிக்க உள்ளதாக திமுக வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளது. நாளை ஸ்டாலின் பிறந்த நாளில் தொகுதி பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்கிறது ஹிந்து நாளிதழ்    பழம் நழுவிப் பாலில் விழும் என்று அந்தநாளில் கருணாநிதி காத்திருந்து ஏமாந்தது போல இல்லாமல் இந்தமுறை திமுக ரொம்ப விழிப்போடு இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா?
முக அழகிரி கொடுப்பது ஸ்டாலினுக்கு சாபமா? தமிழக மக்களுக்கு ஆசீர்வாதமா? எதுவானாலும்  அதை ஜனங்களாகிய நாம்தானே முடிவு செய்ய வேண்டும்!  

இது கேப்டனோட  2014 கூட்டணி அறிவிப்பு! ச்சும்மா ட்டமாஷுக்கு! எப்படியிருந்தவரைப் போய் இப்படி நாலுக்கும் அஞ்சுக்குமா அலைய விடறாங்க?  

அது யாரு அடக்க ஒடுக்கமா பின்னால? டாக்டர் யக்கோவ் தானா?!



Friday, February 15, 2019

எல்லோரும் இந்நாட்டு மன்னர்! விரலில் மை வைக்கும் வரை!

இங்கே மாற்று அரசியல் , அரசியல் மாற்று என்ன என்ற தெளிவான புரிதல் இல்லாமலேயே, அரசியல் களம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமாக மாறிக் கொண்டே வருவதில், புதிய மாற்றங்கள் என்ன வந்து விடுமென்று நினைக்கிறீர்கள்?
மாற்றத்தை நோக்கி என்று தலைப்பு வைத்ததனாலே மட்டும் மாற்றத்துக்கான வழிமுறைகள் பேசப்படும் என்று எதிர்பார்ப்பதே கூட இங்கே தவறாகத்தான் இருக்கிறது.இங்கே ஒரு பத்திரிகையாளர், ஓட்டு வாங்கி ஜெயித்ததனாலேயே அவருக்குத்தான் மொத்தகுத்தகை என்று சொல்வது ஏற்புடையதுதானா?

ஒருவிரல் புரட்சி என்று சொல்லப்படுகிற winner takes all  வாக்குச் சீட்டு ஜனநாயகத்தில் தான் எத்தனை எத்தனை கோளாறுகள்? ஒருமுறை ஒருத்தனுக்கு ஓட்டு போட்ட பாவத்துக்காக, ஐந்துவருடங்கள் அந்தநபர் என்ன செய்தாலும் சகித்துக் கொண்டே இருக்க வேண்டுமா? சில காலத்துக்கு முன்னால் right to recall தேர்ந்தெடுத்த நபரைத் திரும்ப அழைக்கும் உரிமை வேண்டுமென்கிற குரல் இங்கேயும் எழுந்தது நினைவு இருக்கிறதா?
எப்போது இந்தக்கூத்தெல்லாம் நடந்தது என்கிறீர்களா? இங்கே அதைப்பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். ஆனால். இங்கே  முதலில் வாக்களிக்கிற மகாஜனம், என்ன தெரிந்து, நல்லவனைத்தான் தேர்ந்தெடுக்கிறோமா என்று புரிந்துதான் ஓட்டுப் போடுகிறார்களா? பெரும்பாலான தருணங்களில், இங்கே ஓட்டுப்போடுவதே, அவனைப் பிடிக்காது அதனால் இவனுக்குப் போடுகிறேன் என்கிற நெகடிவ் ஓட்டாகத் தான் இருக்கிறது, கவனித்திருக்கிறீர்களா? 

இன்னார் வரவேண்டும் என்று தெளிவாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை குறைவு. கணிசமான பகுதி,யார் ஜெயிப்பார்கள் என்று படுகிறதோ, அங்கேயே கண்ணை மூடிக் கொண்டு ஓட்டுப் போடுகிற ரகம்! ஆக எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று எல்லோருக்கும் ஓட்டுரிமை கிடைத்தும் எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாமலேயே 1952 முதல் இதோ எதிர்வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் என்றிருக்குமானால் யாரை நொந்து கொள்வது? 
தேர்தல் என்றால் இதுமாதிரி காமெடிகள் இல்லாமல் இருக்குமா?   
மாற்றுக்கருத்துகளைத் தேடிப் படிப்பவன் நான்! எழுத்தாளர் ஜீவி சொன்னாரே என்பதற்காக கமென்ட் மாடரேஷனை விலக்கிவைத்திருந்தது தவறு என்று காண்பித்துக் கொடுத்த மணிவண்ணன் மாதிரி ஆசாமிகளுக்கு நன்றி.  

பதிவின் உள்ளடக்கத்துக்கு சம்பந்தமில்லாதவை, வெட்டி ஓட்டுகிற போஸ்டர்கள், பின்னூட்டங்களில் கறாராக நிராகரிக்கப்படும்..

               

Thursday, January 31, 2019

கீச்சுகளில் உலா! செய்திகள்! சொல்ல விடுபட்டவை!

இன்னமும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் இங்கே ஒவ்வொரு ஊடகத்துக்கும் ஒருவிதமான தேர்தல் சுரம்  தொற்றிக் கொள்ளும்! அவர்களுக்குத் தொற்றியதை நமக்கும் தொற்றிக்கொள்ள விடத்தான் வேண்டுமா? இது KDbrothers சேனலுக்கு ஓசி விளம்பரம் இல்லை!  
இனி செய்திகளை ஒவ்வொன்றாக அலசலாமா?
முதல் கீச்சைக் கொஞ்சம் கவனியுங்கள்! நாட்டின் எதிர்காலத்துக்கு சிறந்தது கூட்டணி ஆட்சியா? தனிக் கட்சி ஆட்சியா என்று கேட்பதிலேயே மாநிலத்தில் தனிக்கொள்ளை! மத்தியிலே கூட்டுக் கொள்ளை என்று சோனியாவோடு கூட்டணி அமைத்து 10 ஆண்டுகள் வளமாகக் கொழித்த பழையகதையை நினைவு படுத்துகிறார்களோ? நாட்டுக்கு நல்லது ஏன் தமிழ்நாட்டுக்கும் நல்லதாக இருக்கக் கூடாது?

கழகத்தின் முன்னோடி கருணாநிதி 2006 வாக்கிலேயே இந்தலாஜிக்கை அறிமுகப்படுத்தி, கூட்டாளிகளை வாயடைக்கச்  செய்துவிட்டார் என்பதை அறியாயோ கண்மணியே!அப்போது யார் யார் எந்த அணியில், எத்தனை சீட்டை ஜெயித்தார்கள் என்பதையும் அங்கே சுட்டியில் பார்த்துக் கொள்ளலாம்! கருணாநிதியால் செய்ய முடிந்ததை, ஸ்டாலினும் செய்ய முடியுமா என்பது 9 ரூபாய் நோட்டு போல கேள்விக் குறியாக இனிமேல்தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்! 

அந்தக்கணிப்பு இந்தக்கணிப்பு என்று ஸ்டாலினை முன்னிறுத்தி வருகிற எந்தக்கணிப்புமே நம்பத் தகுந்ததுதானா? இதையும் இரண்டாவது கீச்சில் கொஞ்சம் உரசிப்பார்த்து விடலாமா? 

இங்கே வயது வாரியாகப் பிரித்து சொல்லி இருப்பதிலுமே கொஞ்சம் தெளிவில்லை! முதல் முறையாக வாக்களிக்கப் போகிறவர்கள் எண்ணிக்கை 19வயதுக்கு உட்பட்டவர்கள் வெறும் எட்டு லட்சத்துச் சொச்சம் தானா? அடுத்த பிரிவு 20 முதல் 29 வயதுக்குள் இருப்பவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 18 லட்சம்! இந்த இரண்டு பிரிவையும் சேர்த்தால் 1.27 கோடி! இதில் ஒருமுறை அல்லது இருமுறை வாக்களித்தவர் எண்ணிக்கை சரியாகப் புலப்படவில்லை என்றாலும் தி மு கழகம்  இந்தப்பிரிவினரில் எத்தனை சதவீத வாக்குகளை வாங்கிவிடும் என்கிறீர்கள்? இங்கே தான் கருத்துக் கணிப்புகள் முழுக்கத் தவறுகிறதாகவும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. காங்கிரஸ் உள்ளிட்டு எல்லா உதிரிக் கட்சிகளையும் சேர்த்து மெகாகூட்டணி அமைத்தாலும் சரியான விடை சொல்ல முடியாதபடி தான் களநிலவரம் இன்னமும் இருக்கிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டபிறகு  இருமுனைப்போட்டியா, பலமுனைப்போட்டியா என்பதில் இப்போது வரும் ஆரம்பகட்ட  கருத்துக்கணிப்பு எல்லாம் வாக்காளருடைய ஒரு விரல் பட்டனை அழுத்தும் போது என்னமாதிரி எதை நாடி அழுத்தும் என்கிற ஒரே தருணத்தில் பொய்யாகிப்போகுமா? 

களம் தயாராகிக்கொண்டே வருவதில் கொஞ்சம் பொறுத்திருந்துதான், கணிப்புகளின் வேர் எங்கே இருக்கிறது என்று தேடிப் பார்க்கப் பழகுவோமே!

என்ன அவசரம்? 

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)