Showing posts with label சுய முன்னேற்றம். Show all posts
Showing posts with label சுய முன்னேற்றம். Show all posts

Tuesday, September 10, 2019

தடங்கல், தேங்கி நிற்பகெல்லாம் நம்முடைய சாய்ஸ் மட்டும் தான்!

TBR Joseph என்றொரு பதிவர்! முன்னாள் வங்கி மேலாளர், என்னுலகம் என்றொரு வலைப்பக்கத்தில் முன்பெல்லாம் வங்கித்துறை சார்ந்த பதிவுகளை எழுதிக்  கொண்டிருப்பார். சிலவருடங்களுக்குப் பிறகு அவருடைய இந்தப்பதிவில் மீண்டும் தொடர்பு கொள்கிற, பின்னூட்டமிடுகிற வாய்ப்பு நேற்றும் முன்தினமும் கிடைத்தது. ஈகோ, பிடிவாதகுணம் பற்றி ஒரு மேலோட்டமான பதிவு அது. அதேபோல எனக்குப் பிடித்த சேத் கோடின் (Seth Godin) பக்கங்களுக்கும் போய் வாசிக்கிற ஒரு அனுபவம் இன்று!  


  
யார் இந்த சேத் கோடின் என்று தெரிந்து கொள்ள விரும்புகிற நண்பர்கள் மேலே இந்த 56நிமிட வீடியோவைப் பார்க்கலாம் அவருடைய வலைப்பக்கத்தில் போய் வாசிக்கலாம்! தினசரி ஏதாவது உங்களுடைய சிந்தனையைக் கிளறுகிற மாதிரி ஒரு விஷயம் நிச்சயம் இருக்கும்!  நேற்றைய பதிவாக Being stuck is reasonable என்ற தலைப்பில், சுருக்கமாக நச் என்று வெறும் பதின்மூன்றே  வரிகளில் ஒரு வாழ்க்கை யதார்த்ததைப் புட்டு வைத்திருக்கிறார்.

தேங்கி நிற்பதெல்லாம் ஒரு காரணத்தோடுதான்! அப்படித் தேங்கி நிற்பதற்கு நீங்கள் எடுத்த ஒவ்வொரு முடிவும், இப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே என்று இழுத்து நிறுத்தி வைத்திருக்கிற அத்தனையும் எல்லாம் ஒரு காரணத்தோடு தான்! உங்கள் அனுபவத்தில்,பாதுகாப்பாக உணர்வதற்கு எச்சரிக்கையோடு, நீங்கள் எடுத்திருக்கிற முடிவுகளுக்குப் பாராட்டத் தான் வேண்டும், இல்லையா?

அப்படித் தேங்கி நிற்பதிலிருந்து விடுபட ஒரேவழி, முதலில். காரணம் காரியமென்று சாக்குப்போக்கு தேடிக் கொண்டிருப்பதில் இருந்து வெளியே வ்ருவது தான்.எப்படி? Reasonable என்று முதலில் நியாயப்படுத்திப் பார்த்ததற்கு நேரெதிராக unreasonable ஆகச்செய்து பார்ப்பதுதான்! அப்படிச் செய்யாததால் தானே முதலில் சிக்கிக் கொண்டீர்கள்?     
If you truly want to get unstuck, if you want to move to higher ground or do something more worthwhile, the first question to ask is, “Am I willing to be unreasonable, at least for a while? என்ற முத்தாய்ப்போடு இந்த விஷயத்தை முடிக்கிறார். 

ப்பூ! இதென்ன பிரமாதம் என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை! reasonable, unreasonable என்று இரு  வார்த்தைகளில் முடித்துவிடக்கூடிய எளிமையான தீர்வு இல்லை இது. ஒரு கதையாகப் பார்த்து விடலாமா? 

ஒரு முனிவருக்கு சாபம். பன்றியாகப் பிறக்க வேண்டுமென்று.

முனிவருக்குத் தாள முடியாத துக்கம், எவ்வளவு ஜபம், எவ்வளவு நியமத்தோடு காரியங்கள் ......கடைசியில் பன்றியாகப் பிறப்பதற்குத் தானா? மகனைக் கூப்பிட்டார்.

"மகனே, சாபத்தினால் பன்றியாகப் பிறக்க வேண்டியுள்ளது.அப்படிப் பிறந்தவுடன், தயவு தாட்சண்யம் பார்க்காமல் கொன்று விடு."

மகனும் தந்தைக்கு அப்படியே செய்வதாக வாக்களித்தான்.முனிவரும் பன்றியாகப் பிறந்தார். மகன், வாளை எடுத்துக் கொண்டு கொல்லப் போனான். புதிதாகப் பிறந்த குட்டிப் பன்றி சொன்னது, "மகனே, இப்போது தான் பிறந்திருக்கிறேன். ஆறு மாதம் கழித்து வா." மகனும் வாளை எடுத்துக் கொண்டு திரும்பிப் போனான்.

ஆறு மாதம் முடிந்தது. மகனும் வாளை எடுத்துக் கொண்டு பன்றியை வெட்டுவதற்காக வந்தான். பன்றி வளர்ந்து, பெண்பன்றி, குட்டிகள்எனப் பெருகி, குடும்பமாய் வாழ்வதைக் கண்டான். "நில்லடா, இப்போது தான் பன்றியாய் வாழ்வதிலும் ஒரு சுகம் இருக்கிறது எனத் தெரிந்து கொண்டிருக்கிறேன், சிறிது காலம் கழித்து வா."

மகனுக்குத் தாள முடியாத துக்கம். வேதம் படித்தவர். கல்வி, கேள்விகளில் சிறந்தவர்.ஏதோ, முன் வினை, இப்படி இழிபிறப்பாய்ப் பிறந்து, உழன்று கொண்டிருக்கிறாரே என்று வாளை ஓங்கி வெட்ட முனைந்தான்.

அவ்வளவுதான், முற்பிறப்பில் அவனுக்குத் தந்தையாய் இருந்த அப்பன்றி வெகுண்டெழுந்தது. கோபத்தோடு சொன்னது, "முட்டாளே, என்ன காரியம் செய்யத் துணிந்தாய்? பன்றி வாழ்க்கை என்றால் கேவலமா? இதில் எத்தனை சுகம் இருக்கிறது தெரியுமா உனக்கு? உனக்குத் தெரியவில்லை என்றால் ஒதுங்கிப்போய் விடு. எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன் தெரியுமா, அதைக் கெடுக்காதே, போய்விடு.வேண்டுமானால், வாளை உன் நெஞ்சில் பாய்ச்சிக் கொண்டு மடிந்து போ "

ஆக்ரோஷமாய் உறுமிவிட்டு, பன்றி தன் பெண்டு பிள்ளை குட்டிகளோடு ஓடி மறைந்தது. மகன் இந்த விநோதத்தைக் கண்டு விக்கித்து நின்றான்.
"செல்லடா! செல்க தீக்குணத் திழிஞ!
எனக்கிவ் வாழ்க்கை இன்பமுடைத் தேயாம்;
நினைக்கிதில் துன்பம் நிகழுமேல் சென்றவ்
வாளினின் நெஞ்சை வகுத்து நீ மடிக"
என்றிது கூறி இருந்தவப் பன்றிதன்
இனத்தோடும் ஓடி இன்னுயிர் காத்தது.

பாரதி கவிதை வரிகளில் இந்தக் கதையைக் கேட்டதுண்டு. கேட்ட பொழுதில், ஒரு வினோதமான கதை என்ற அளவிற்கு மேல் யோசிக்கத் தெரிந்ததில்லை.

நம்முடைய எண்ணங்கள் செயல்கள் எல்லாவற்றிற்கும் நாமே எஜமானர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். விருப்பமாக, ஆசையாக எழுபவை எல்லாம் நம்முடையவை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். கொஞ்சம் கூர்ந்து கவனித்துப் பார்த்தோமேயானால், எதுவெல்லாம் நம்முடையது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அத்தனையும் வெளியில் இருந்து வருவது, புலன்கள் வழி மனம் போகும் போது, ஏற்படுகிற மயக்கம், ஒரு விகாரம் அவ்வளவு தான்.

பழக்கம் எப்படி ஆரம்பிக்கிறது? முதலில், கொஞ்சம் சுகமாக, சௌகரியமாக இருப்பதாக நம்ப வைத்து, சமையல் அறைச் சுவற்றில், எண்ணைப் புகை அழுத்தமாகப் படிந்து போவது போல, நம்மிடம் ஒட்டிக் கொள்கின்றன. ஆரம்பத்தில், நாம் அதற்கு எஜமானர்களாக இருக்கிறோம். அல்லது அப்படி நம்மை நம்ப வைத்து, நம்மை அதனதன் போக்கில் அலைக்கழித்து, ஆட்டிவைக்கும் எதிரிகளாக ஆகி விடுகின்றன
.

காலையில் எழுந்தவுடன் சிலருக்கு காபி அல்லது டீ உடனே குடித்தாக வேண்டும். அப்புறம் செய்தித்தாள் படிக்கிற வேலை, வெண்குழல் வத்தியைப் பற்ற வைத்துக் கொண்டு சிந்தனை வருகிறதோ இல்லையோ, புகையை விட்டுக் கொண்டு, பெரிய சிந்தனாவாதி போல, ஒரு லுக்கு விட வேண்டியது. இப்படி ஒவ்வொருவரும், நம்மையே கூர்ந்து கவனித்துப் பார்த்தோமேயானால், நம்முடைய வாழ்க்கையின் பெரும் பகுதியைப் பழக்கங்களின் அடிமையாகவே இருந்து கழிப்பதை, உணர முடியும்.

நமக்குக் கற்பிக்கப் பட்டிருக்கிற பழக்கங்கள், நம்முடைய ஒவ்வொரு சிந்தனை இழையையும், செயலையும் தன்னுடைய கட்டுப்பாட்டில்வைத்திருப்பதைக் கூட நம்மால் உணர முடிவது இல்லை. நம்முடைய எண்ணங்களுக்கு, செயல்களுக்கு, நாம் எஜமானனாக இருப்பதற்குப் பதிலாக, பழக்கங்கள், மிக சாமர்த்தியமாக நம்மை அடிமையாக வைத்திருக்கின்றன.
ஸ்ரீ அரவிந்தர், தாயகத்திற்குத்திரும்பிய புதிதில் மும்பையில் சந்தித்த ஒரு யோகி, விஷ்ணு பாஸ்கர லீலே சொன்னபடி, எண்ணங்கள் ஆசைகள் எல்லாம் எங்கிருந்து வருக்கின்றன என்று ஆராய்ந்து, வெளியிலிருந்து என்றால், அவற்றைத் திருப்பி அனுப்பிவிடும் பயிற்சியில். மூன்றே நாட்களில், சித்தி பெற்றதை முந்தைய பதிவொன்றில் பார்த்திருக்கிறோம்.

ஸ்ரீ ரமண மஹரிஷி காட்டிய "நான் யார்" என்ற விசார மார்க்கமும் இதுவே.

Emptying the cup என்பதாக ஜென் கதைகளில் படிக்கும் போது, வடிவேலு மாதிரி 'அட, ஆமா இல்லே' என்று நம்மைப் பற்றிய ஞானம் கிடைத்து விட்டதாகத் தோன்றும்.ஆனால் து அவ்வளவு எளியது இல்லை. என்று மார்ச் 2009 இல் இந்தப் பக்கங்களில் எழுகியதையும் சேர்த்துப் பார்த்து யோசிக்க வேண்டியிருக்கிறது. 
சேத் கோடின் நடைமுறைப் பிரச்சினை ஒன்றுக்கு எளிமையாக ஒரு தீர்வைச் சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். உண்மையிலேயே அது அத்தனை எளிதானதுதானா?
கொஞ்சம் யோசித்து,பதில் ஏதாவது கிடைக்கிறதா என்று சொல்லுங்களேன்! மீண்டும் சந்திப்போம்.        

Thursday, July 19, 2012

ஆலமரமும் விழுதுகளும்!



(சு)வாசிக்கப் போறேங்க என்ற தலைப்பில் புத்தக வாசிப்பில் எனக்குக் கிடைத்ததை சொல்கிற வலைப்பக்கங்களாக கொஞ்சம் எழுத ஆரம்பித்ததில் கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளி!புதிய பதிவுகள் எதுவுமில்லாமல் இருந்தாலும்  இந்த ஒருவருடத்தில், வந்து எட்டிப்பார்த்துவிட்டு, அப்படியே கொஞ்சம் பழைய பகிர்வுகளை (சு)வாசித்துச் சென்றவர்கள் கொஞ்சம்பேர் இருக்கிறார்கள்!வாசிப்பனுபவம் உள்ளவர்களால் கவனிக்கப்படுவதில் மகிழ்ச்சியே! அவர்களுக்கு  என்னுடைய நன்றிகலந்த வணக்கங்கள்.

2009 இல் என்னுடைய மகன் சென்னைப் புத்தகக் கண் காட்சிக்குப் போய் விட்டு வந்த அனுபவத்தைத் தொட்டு ஆரம்பித்ததில், புத்தகங்களை வாசிப்பது என்பது ஒரு அனுபவமாக வளராமல், நானும் புத்தகக் கண்காட்சிக்குப் போனேன், இத்தனை ஆயிரம் ரூபாய்க்குப் புத்தகங்களை வாங்கினேன், மூன்றாம் வருடம் வாங்கிய புத்தகங்களே இன்னமும் வாசிக்கப்படாமல் இருக்கின்றன என்று பெருமையாக டம்பம் அடித்துக் கொள்கிற போக்கைப் பார்த்தபோது,(சு)வாசிப்பது எப்படி என்றே நமக்குத் தெரியவில்லை என்ற உண்மை மிகப்பலமாக உறைத்தது.

வலைப்பதிவுகளை வாசிப்பவர்களில் பெரும்பாலானோர்  நீளமான பதிவுகளை வாசிப்பதில்லை, அப்படியே வாசிக்கிற பதிவுகளிலும் மிக மேலோட்டமான வாசிப்புத்தான் என்பதும், வாசித்த விஷயத்தில் பாதியைக் கூட உள்வாங்கிக் கொள்வதில்லை. பின்னூட்டங்களில் பெரும் பாலானவை கூட, பதிவில் அங்கே இங்கே ஓரிரு வரிகளை உருவி எடுத்துப்போட்டு, ஆஹா! அருமை என்றோ இல்லை என்றோ முடித்து விடுகிற அவசரத்தின் அள்ளித்தெளித்த கோலம் தான்! 
எதையும் முழுமையாக வாசிப்பதில்லை என்பது போய், ஒரே நேரத்தில் ஒரு நூறு இடங்களில் எதையாவது பின்னூட்டமாக எழுதித் தங்களுடைய இருப்பைக் காட்டிக் கொள்வதென்பதே, வாசித்ததாகக்கருதப்படுகிறது! இதெல்லாம் நன்றாகத்   தெரிந்த விஷயம் தான் என்றாலும், இந்த போலித் தனத்தின் முழுப் பரிமாணத்தைக் காணும் போது நிறையவே அதிர்ச்சியாக இருக்கிறது.

தவிர, ஒரு வலைப்பதிவு என்பது, ஒரு மனிதன் தன்னுடைய எண்ணங்களைத் தன்னுடனும், பிறருடனும் ஒரேசேரப்பகிர்ந்து கொள்கிற ஒரு பொது வெளி! Open and Loud thinking!இந்தக் கருத்துடன் உடன்பட முடிகிறதோ இல்லையோ,பதிவுகள் நிச்சயமாக ஒரு கை ஓசை அல்ல!ஒரு கருத்துடன், உடன் படுகிறவர்கள் அல்லது முரண்படுகிறவர்கள் என்று எப்படியானாலும் ஒரு விவாதத்தை முன்வைப்பது தான் வலைப்பதிவுகளின் சாரமே!

ஏதோ ஒரு ஆவல் உந்த, ஒரு வலைப்பதிவைத் தொடர ஆரம்பித்து விடுகிறோம், சரி!இப்படிப் பின்தொடர்பவர்களாக இருந்து, அல்லது இத்தனை  நூறு அல்லது ஆயிரம் பின்தொடர்பவர்களைப் பெற்ற பதிவராக இருந்து விடுவதால் மட்டும் என்ன இருக்கிறது?பின்தொடர்கிறவர்கள் என்றால் எதில்? எதுவரை?

தொடர்பவர்களுக்கும் தொடரப்படுகிறவர்களுக்கும் ஒரு நேரடியான உரையாடல், ஒரு உயிரோட்டமான தொடர்புகள் இல்லாமல் இந்த ஃபாலோயர்ஸ்  பட்டியல் அல்லது எண்ணிக்கையில் ஒரு பயனும் இரு தரப்புக்குமே இல்லை!அப்படியானால், நாம் பதிகிற பதிவுகளால், ஒரு சிறிய சிந்தனை, உரையாடல், தாக்கத்தைக் கூட ஏற்படுத்த முடியவில்லை என்றால் எழுத்து நம் கைவசப் படவில்லை என்று ஒப்புக் கொண்டு, மௌனமாக இருந்து விடவேண்டியது தானா?

வால் நீளமாக இருப்பது நல்லது என்று ஆரம்பித்து ஒரு பதிவு, சுமார் முப்பது மாதங்களுக்கு முன்னால் எழுதியதை மீள்வாசிப்புச் செய்ததில், பல விஷயங்கள் தெளிவாகின.

எந்த ஒரு பெரிய சாதனை, முயற்சி, வெற்றி என்று சொல்லப்படுவதற்கும் பின்னால், இந்த மாதிரி ஆயிரம் உண்மையான பின்தொடர்ந்து வரும் நண்பர்களைச் சம்பாதிப்பதில் தான் ஆரம்பமாகிறது. ஆயிரம் என்பது ஒரு எண்ணிக்கை. இப்படிப்பட்டவர்களை உங்களோடு இணைத்துக் கொள்வதில் இருந்துதான், அவர்கள் நீங்கள் காட்டும் பாதையை ஏற்றுக்கொள்வதும், உங்களோடு கூட வருவதுமான வெற்றிப் பயணம் ஆரம்பிக்கிறது.

கெவின் கெல்லி தன்னுடைய பதிவில் இப்படி ஆரம்பிக்கிறார்:

"வால் நீண்டு கொண்டே போவது இரண்டு  விதமான தரப்பை ரொம்பவுமே மகிழ்ச்சியடையச் செய்யும். அதிர்ஷ்டக்காரர்களான சந்தையைக் கைப் பற்றுகிறவர்கள், சந்தையில் வாங்குகிறவர்கள் இப்படி இரண்டு தரப்பையுமே!"



வரப்புயர நீர்  உயரும்னு தானே நாமெல்லாம் படிச்சிருக்கோம்! கெவின் கெல்லி கொஞ்சம் வித்தியாசமா, வால் நீள, தலை நிமிரும்னு சொல்லியிருக்காரு! படத்தைப் பாருங்க!வாலைத் தேடவேண்டாம்!

இங்கே கெவின் கெல்லி சொல்வது தலை-வால் என்ற இரண்டு அம்சத்தைப் பற்றி! வேறு எதனோடும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்!

இப்படி ஆயிரம் உண்மையான நண்பர்களைச் சம்பாதிப்பது, முடியக் கூடிய ஒரு விஷயம் தான்! அவர்களுடைய நம்பிக்கையைப் பெறுகிற விதத்தில் உங்களுடைய தயாரிப்பு இருக்க வேண்டும்! இங்கே உதாரணத்துக்கு வலைப் பதிவுகளையே எடுத்துக் கொள்வோமே, அவர்களுடைய கனவுகளை நனவாக்கும் வழியைக் காட்ட உங்களால் முடியும் என்றோ, அவர்களுக்கு பயன் படுகிறவிதத்தில் உங்களுடைய பதிவுகளை அவர்களை அடையாளம் கண்டு கொள்கிற மாதிரியோ ஆரம்பித்து, அந்த நம்பிக்கையைத் தொடர்ந்து காப்பாற்றிக் கொள்ளவும் உங்களால் முடியுமானால், ஆயிரம் பேர் மட்டுமல்ல இன்னும் அதிகமாகவே உங்களைப் பின்தொடரத் தயாராக இருப்பவர்களாக மாற்ற முடியும்!

இப்படி உண்மையான நண்பர்கள் கிடைப்பது மிக மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்கும். இந்த மாதிரி நண்பர்களை சந்தோஷப்படுத்துவதே கூட ஒரு சந்தோஷகரமான அனுபவமாகவும், வாழ்க்கைக்கு உயிர் ஊட்டுவதாகவும் இருக்கும் இல்லையா!


புத்தகங்களைப் பேச வந்த தளத்தில் இதெல்லாம் எதற்காக என்கிறீர்களா? புத்தகங்களை என்ன செய்வது என்ற இந்தப்பக்கத்தை ஒருதரம்  வாசித்து விடுங்கள்!

புத்தக வாசகனுக்கு தான் வாங்கிய புத்தகங்களோடு உள்ள உறவு அது ஒரு புத்தகம் என்பதைத் தாண்டியது, அது  ஒரு விதமான தோழமை உணர்வு, படிப்பின் வழியாக உணர்ந்த நெருக்கம் அவனைப்பற்றிக் கொள்கிறது, அவன் புத்தகங்களை வெறும் அலங்காரப்பொருளாக நினைப்பதில்லை, ஒரு புத்தகம் திறக்கப்படும்போது ஒரு உலகம் திறக்கபடுவதை உணர்கிறான், அது தன் வாழ்வை புரட்டி போடுவதை தானே அனுபவிக்கிறான், ஆகவே அதை உயிருள்ள ஒன்றாகவே கருதுகிறான், புத்தகங்களை தன்னை மேம்படுத்த துணை செய்யும் ஆசானாக, நண்பனாகவே கருதுகிறான், ஆகவே புத்தக வாசகன் ஒரு புத்தகத்தை இழப்பதை எப்போதுமே தனது அந்தரங்க வலியாக உணர்கிறான்,

எஸ்.ராமகிருஷ்ணனின் இந்தவரிகளில், புத்தகம் என்ற இடத்தில் பின் தொடர்பவர்கள் என்று வைத்துப் பாருங்கள்! அப்படியான நெருக்கம், கைவரப் பெறுமானால், ஃபாலோயர்ஸ், எண்ணிக்கை, அதனால் சாதிக்க முடிந்தது என்று வாழ்க்கை ஒரு அர்த்தமுள்ள நதிப்பெருக்கு மாதிரி ஓடிக் கொண்டே இருக்கும்! இலக்கை அடையும் வரை ஓயவே ஓயாது!



ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் விழுதுகளாய் உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறதே,! கொஞ்சம் இந்தப் பக்கத்தையும் பாருங்களேன்!
 

Monday, December 13, 2010

மாற்றங்களுக்குத் தயாராவது! - 5

மாற்றங்களை எதிர்கொள்வது, மாற்றங்களுக்குத் தயார் செய்து கொள்வது குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம்.

ஜான் பி கோட்டர்
ழுதிய ஒரு புத்தகத்தை  அடிப்படையாக வைத்துக் கொண்டு, நாம் நம்முடைய அன்றாட வாழ்விலேயே பார்த்துக் கொண்டிருக்கிற, நடப்பு விஷயங்களோடும், நாம் அறிந்த சில நிறுவனங்களின் செயல்பாடுகள், அனுபவங்களில் இருந்தும் மாற்றம் என்பது என்ன, மாற்றத்திற்குத் தயார் செய்து கொள்வது என்றால் என்ன என்பதையும் சின்ன சின்ன உதாரணங்களோடும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

எனக்கு அதிகம் பரிச்சயமானது வங்கித் துறை என்பதால், நான் நன்கு அறிந்த ஒரு பொதுத்துறை வங்கி, புள்ளிராசா வங்கி என்று அதன் தன்மையை வைத்து அழைத்து, அதில் நடந்து கொண்டிருப்பதைப் பற்றியும் கொஞ்சம் இந்தத் தலைப்புக்குப் பொருத்தமான சம்பவங்களையும் சேர்த்துப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
மாற்றங்களுக்குத் தடையாக இருப்பதாக ஜான் பி கோட்டர் ஒரு எட்டுக் காரணங்களைப் பட்டியலிடுவதை, அதற்கு மாற்றாக, மாற்றத்தைத் திறம்பட நிர்வகிக்க வேறொரு எட்டு வழிகளையும் அவர் பரிந்துரைப்பதை முந்தைய பதிவுகளில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். 

அவர் தன்னுடைய புத்தகத்தின் மையக் கருத்தாக சொல்வது மூன்றே மூன்று அடிப்படையான விஷயங்கள் தான்! 

மாற்றங்களை சாதிக்கத் தெளிவான பார்வையும், தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தூண்டுதலாக இருக்கும் நல்ல ஒரு தலைமை, தலைமையின் தெளிவான பார்வையைப் புரிந்து கொண்டு செயல்படும் ஊழியர்கள், தலைவர்களும், அவர்களைப் பின்பற்றி நடப்பவர்க்களுமான ஒரு நல்ல நிறுவனப் பண்பு இப்படி மூன்றே விதமாக மாற்றத்தை எதிர்கொள்வது, மாற்றத்துக்குத் தயாராவது, மாற்றத்தை சாதிப்பது என்பது நிகழ்கிறது.
தலைமைப் பண்பு என்பதும், நிர்வாகத் திறன் என்பதும் வேறு வேறானவை என்பதை மனதில் வைத்துக் கொள்ளவேண்டும். ஒரு நல்ல தலைமை, என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவான பார்வையை உருவாக்கும் வல்லமை படைத்ததாக, தாங்கள் காணும் லட்சியத்தில் நம்பிக்கை உள்ளவர்களாக, அதை அடைய செயல் படுகிறவர்களாக, தங்களைப் பின்தொடர்பவர்களாக ஊழியர்களை உருவாக்க முடிந்தவர்களாக என்று தலைமையேற்று  நடத்துபவர்களின் மீதுதான் முதலாவதாக ஆதாரப்பட்டு நிற்கிறது.


"You can’t expect your employees to exceed the expectations of your customers if you don’t exceed the employees’ expectations of management. "

— Howard Schultz


இந்த வார்த்தைகளை விளக்குவதாக ,பிசினெஸ் ஓர்ல்ட் வார இதழில் ஓராண்டுக்கு முன்னால் வெளிவந்த ஒரு கேஸ் ஸ்டடியை இங்கே படிக்கலாம்.


மாற்றங்கள் எங்கிருந்தோ எவராலோ திணிக்கப்பட்டு நிகழ்வதல்ல. அப்படித் திணிக்கப்படும்போது ஊழியர்களை
கொல்வதற்கு சமமாக இருக்கும் என்பதை ஹார்வர்ட் பிசினெஸ் ரிவ்யூ வலைத் தளத்தில் சென்ற மாதம் வெளிவந்த ஒரு பதிவின் சுட்டியை முந்தைய பதிவில் கவனித்துப் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இல்லையென்றால், அதையும் படித்துப் பார்த்துவிடுங்களேன்!

ஸ்ரீ அரவிந்த அன்னை, தன்னிடம் வரும் அடியவர்களுக்கு சொன்னதன் ஒரு பகுதியை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்திக் கொள்வது பொருத்தமாகவும், உபயோகமாகவும்  இருக்கும்.


No Imposition

“The Mother once told this writer that she could effect the desired changes in the Ashram collectivity in a trice but she did not wish to do so. She preferred to wait for the change to come about spontaneously, from within.

That was her way and that is also the Divine's way.

Changes imposed from above or outside are not natural. They do not last. When the pressure is relaxed, things tend to swing back to their original rhythm. It is only when the necessity of a change is realised within oneself and the will is exerted accordingly that the change is accepted in the whole of the being and integrated with the general nature. Only so can the change cease to be artificial and superficial and become natural.

Besides it is a law of this manifestation to let everything evolve in full freedom.

Freedom is the law of growth. Even though all has issued from the Divine and is essentially maintained by the Divine, each is given full freedom to follow its own choice of direction and pace. The Oversoul never takes possession of the soul, it oversees, presides over its evolution but does not interfere with its liberty. It is the soul below that has to make the effort to come closer to the Oversoul, aspire for its union with the higher counterpart. The latter patiently waits for it to be ready and want to unite with it. Only so can the union be joyous culmination of a movement that proceeds spontaneously from the embodied soul. The initiative and the onus of the operation lies with the lower term.

So too with the world. The universe has indeed emanated the Being of the Supreme Lord. It has been released into manifestation with a purpose; to manifest the Divine Will. The details of the working out of the process, however, are left to the Soul in Becoming. And this Soul is multiple. There may be, and are, deviations from the main Intention, deformations in the process consequent on this departure from the central Truth. But the Divine does not interfere.

The Divine allows full scope for the consequences of such aberrations to be worked out; it waits for the movement—collective and individual—to correct itself and put itself in time with the higher Will. The Divine does not participate. The universe has to take steps to orientate its directs towards the Divine, feel the need to be restored to its Parent Divine, to be possessed by the Divine, before the Divine Lord responds by taking possession of it. The movement on the part of the universe or the individual has to be conscious, willed effort to become one with the Divine Lord.

In all this operation the Divine's help is of course there to be drawn upon; but it is not imposed. That would be contrary to the Law of manifestation. For the Divine is Freedom and any interference with the freedom of choice, freedom of action, of the evolving soul is against the Truth and Purpose of the manifestation.”


Excerpted from and acknowledged with thanks and gratitude:

“Commentaries on The Mother's Ministry” Part II 
by Sri M P Pandit, Published by Dipti Publications, Sri Aurobindo Ashram, Pondicherry.

மாற்றங்களை வலிந்து திணிப்பதால் பயனேதும் இருக்காது. மாற்றங்களுக்குத் தயார் செய்துகொள்ளவேண்டும், ஒருமித்துச் செயல் பட வேண்டும். வெறும் உத்தரவுகளால், அதை சாதிக்க முடியாது.

கொஞ்சம் யோசித்துப் பார்த்துவிட்டு உங்கள் மனதில் படுவதைப் பின்னூட்டமாக எழுதுங்கள். இங்கே மாற்றங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்திருப்பது, Change Management  என்ற தலைப்பிலான பாடங்களோ பரீட்சையோ அல்ல. 

மாற்றங்களுக்கு  நம்மைத் தயார் செய்துகொள்வதற்கான, மாற்றங்களுக்கான விதையாக நாமே மாறுவதற்கான அச்சாரமாகத் தான் இந்தத் தொடர்பதிவுகள்!

தயார் தானே!!



Saturday, December 11, 2010

மாற்றங்களுக்குத் தயாராவது - 4


மாற்றங்களை எதிர்கொள்வது, மாற்றங்களுக்குத் தயாராவது என்பது என்னவோ இமய மலை எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுவது போல சாத்தியமே இல்லாத ஒன்றாக  எண்ணி மயங்கும் போது, மலைத்து நிற்கும் போதுதான் கடினமான ஒன்றாக, சிக்கல்கள் நிறைந்ததாக ஆகிறது.

உண்மையில் மாற்றம் என்பது, நம்முடைய கற்பிதங்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தோமேயானால், மிகவும் இயல்பானதாக, எளிமையாகத் தான் இருக்கும்.

மாற்றம் என்பது ஒரு அடிப்படை விதி. எல்லாமே மாறிக் கொண்டு தான் இருக்கின்றன. இப்படிச் சொல்லும் போது சரி என்று தான் படுகிறது, ஆனாலும் மாற்றம் என்று ஒன்றைப் பார்க்கும்போது அதை உடனடியாக ஏற்றுக் கொள்வதற்கு நம்முடைய மனம் ஏனோ தயங்குகிறது. ஏனோ ஏற்றுக் கொள்ள மறுக்கிறது இல்லையா? 


கொஞ்சம் இதற்கான காரணம் என்னவென்று உற்றுநோக்கத் தெரிந்து கொண்டால், பழக்கங்களின் அடிமையாகவே மனம் உழலும் போது புதியதை ஏற்கத் தயங்குகிறது! தெரியாத ஒன்று எப்படி இருக்குமோ யார்கண்டது என்று, நான் பழையபடியே, எனக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருந்தால் கூட சகித்துக் கொள்கிறேன், என்னை விட்டு விடு என்று பிடிவாதம் செய்கிறது. 

ஆக மாற்றம் எப்படி இருக்குமோ என்ற கற்பனையான பயம் தான் மாற்றத்தை எதிர்க்க மூல காரணமாக இருக்கிறது.

மிகவும் பச்சையாக, நேரடியாக சொல்வதென்றால், எல்லோரும் உலகத்தை மாற்ற விரும்புகிறார்கள், முயற்சிக்கிறார்கள்; ஆனால் ஒருவர்கூடத் தங்களை மாற்றிக் கொள்ள விரும்புவதுமில்லை, முயசிப்பதுமில்லை!

நிறுவனங்களைப் பற்றிப் பேசும்போது, ஒரு உதாரணத்திற்காக, புள்ளிராசா வங்கியில் கோர் பாங்கிங் அறிமுகமானது. புதிய தொழில்நுட்பத்திற்கு ஊழியர்களும் தயாராக இல்லை, வாடிக்கையாளர்களும் புதிய முறைக்குத் தயாராகவில்லை. சின்ன சின்னக் காரணங்களுக்காகத் தாமதமான ஒவ்வொரு நிமிடமும் வாடிக்கையாளரின் அதிருப்திக்கு ஆளாக வேண்டி வந்தபோது, புதிய தொழில்நுட்பத்தைத் தான் அவர்களால் குற்றம் சொல்ல முடிந்ததே தவிர, தங்களிடம் இருந்த குறைகளைப் பார்க்க முடியவில்லை, தெரியவும் இல்லை! ஒரு கற்றுக் கொள்ளும் நிறுவனமாகப் புள்ளிராசா வங்கி எப்போதுமே இருந்ததில்லை என்பதும் கூட சேர்ந்து கொண்டது. இன்றைக்கும் கூட ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, யூனியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி போன்றவை டெபாசிட், கடன் மீதான வட்டி விகிதங்களை, சந்தை நிலவரங்களுக்குத் தகுந்தமாதிரி நிர்ணயம் செய்து அறிவிக்கும் வேகம், தைரியம் இந்தப் புள்ளிராசா வங்கிக்கு இன்றைக்கும் கூட இல்லை. மற்ற பெரிய வங்கிகள் அறிவித்து முடித்த பிறகு, அதைப் பார்த்து  தன்னுடைய வட்டி விகிதங்களை அறிவிக்கும் ஒரு வங்கியின் தலைமை எப்படிப் பட்டதாக இருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! உண்மை நிலவரம் உங்களால் கற்பனை செய்ய முடிவதை விட மிகக் கேவலமானது.

ஆமாம்-இல்லை, முடியும்-முடியாது, உடனடியாக-சற்று தாமதமாக என்று மிக எளிதாக பதில் சொல்லக் கூடிய கேள்விகளைக் கூட, மிக சிக்கலான பதிலாக மாற்றிப் பார்க்கும் கோளாறு நிறுவனங்களில் சர்வசாதாரணம். ஒரு தனிநபராக, வீண் கற்பனையான பயம், உண்மையைப் பார்க்கத் தடையாக இருப்பதைப் போல, நிறுவனங்களில் வேறுவிதமான கோளாறு ஆட்டிப் படைக்கிறது. பொறுப்பைத் தட்டிக் கழித்து, மற்றவர் தலையில் கட்டிவிடப்பார்க்கும் மனோபாவமாக, மிக மோசமான நிறுவனப் பண்பாக இத்தகைய கோளாறு உருவெடுக்கிறது.புள்ளிராசாவங்கியின் அடிப்படைக் கோளாறே, "தானாகவும் தெரியாது- பிறர் சொன்னாலும் ஏறாது" என்பது தான்!



"The basic idea is that people go to great lengths to repress awareness of mortality. Studies show that we create three existential buffers to protect us from this knowledge: Consistency allows us to see the world as orderly, predictable, familiar, and safe. Standards of justice allow us to establish and enforce a code of what's good and fair. Culture imbues us with the sense that we have contributed to, and are participating in, a larger and enduring system of beliefs.


Anything that threatens these buffers exposes us to the looming reality of death. Change an employee's routine, and you've undermined the consistency barrier. Tell a salesperson he'll no longer be evaluated on the basis of revenue and now must hit certain cross-selling and teamwork targets, and you've attacked his standard of justice. Alter the company's mission, and you've pierced the culture buffer by requiring him to reconstruct his worldview."

Change Management சம்பந்தமாக சமீபத்தில் படித்த   ஹார்வர்ட் பிசினெஸ் ரிவ்யூ தளத்தில் வெளியான பதிவு ஒன்றின் பகுதி

இந்தப் பதிவில் அழுத்தம் கொடுத்துச் சொல்லப்படுவது ஒரு நிறுவனத் தலைமை, மாற்றத்திற்குத் திட்டமிடும்போது எவ்வளவு கவனமாக இருக்கவேண்டும் என்பது தான்! முடிந்தால் இந்தப் பதிவிற்கு எழுதப்பட்ட பின்னூட்டங்களோடும் சேர்த்து வாசித்துப் பாருங்கள்! குறிப்பாக, நீல்சன் என்பவர் எழுதிய இந்தப் பின்னூட்டம்:
 
"Very interesting piece. Change is one of the most difficult challenges that we deal with on a regular basis. We are all comforted by knowing what to expect. This is especially true when our performance is being evaluated.

We have all heard the ubiquitous phrase that "change is constant," so why are most of us so bad at it? Moreover, whey are those of us who have been generally "successful" even more challenged by the prospect of change? One answer involves our lack of contextual awareness. The context within which most people work has changed or is changing. This means that the knowledge, skills, and abilities that led to success in the past may not lead to success in the future.

While this fundamental doctrine is easy to understand intellectually, it is very difficult for both individuals and organizations to apply. Changing the way we do things in order to continue our success in a new context is one of the most basic challenges that many of us face."


People -->Process -->Culture! இதுதான் மாற்றங்களுக்குத் தயாராவதில் உள்ள மூன்று அடிப்படை விஷயங்கள்! முந்தைய பதிவின் ஆரம்பத்தில் இதை அறிமுகப் படுத்துகிற மாதிரி ஒரு படம், நினைவு படுத்திக் கொள்வதற்காக மீண்டும் ஒருமுறை!



Wednesday, November 17, 2010

மாற்றங்களுக்குத் தயாராவது.....!Leading the Change!



மாற்றம் பற்றி நிறையப் பேசுகிறோம்! மாற்றம் வராதா என்று பல விஷயங்களில் ஏங்குகிறோம்! வேண்டுகிற மாற்றம் என்ன, அந்த மாற்றத்தை எப்படிக் கொண்டு வருவது, அதை எப்படி நிர்வகிப்பது என்பதே தெரியாமல் தான் இங்கே பெரும்பாலான தருணங்களில் மாற்றம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம் இல்லையா!
.
Change Management என்பதே மேலாண்மைத் துறையில் வளர்ந்துவரும் ஒரு துறை என்பது நிர்வாகம், மேலாண்மைத் துறையில் படிப்பவர்களைத் தவிர பரவலாகத் தெரியாத விஷயம். பாடமாகப் படிப்பவர்களே கூட செயல் முறையில் பயன்படுத்தி அதன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டவைகள் இங்கே கொஞ்சம் குறைவு தான்!தமிழில் இந்த விஷயத்தைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாகவே இருந்தது. இன்றைக்கு ஜான் பி. கோட்டர் எழுதிய புத்தகத்தைப் பற்றிய ஒரு பதிவைப் படித்துக் கொண்டிருந்த போது, இன்றைக்கே எழுதினால் என்ன என்று அதைப் பற்றி கொஞ்சம் குறிப்புக்களை எழுத ஆரம்பித்தேன். இதை ஒரு தொடர்பதிவாக எழுதும் உத்தேசமிருக்கிறது/

ந்தப் புத்தகம், முதலில் 1994 இல் ஹார்வர்ட் பிசினெஸ் ரிவ்யூ இதழில் Leading Change:Why Transformation Efforts Fail என்ற தலைப்பில் ஒரு கட்டுரையாகத் தான் வெளிவந்தது. அதற்கப்புறம் ஒரு 187 பக்கப் புத்தகமாக ஹார்வர்ட் பிசினெஸ் ஸ்கூல் ப்ரெஸ்வெளியீடாக  1996 இல் வெளி வந்திருக்கிறது.  இங்கே புத்தகத்தின் குறிப்பிட்ட பகுதிகளை கூகிள் புக்ஸ் தளத்தில் இணையத்திலேயே வாசிக்க முடியும். புத்தகம் வெளிவந்து பதினான்கு ஆண்டுகள் ஆன பின்னாலும் கூட, மிகவும் பயனுள்ள வாசிப்பாக, புத்தகமாக இருப்பது இதன் தனி சிறப்பு.

முதலில் மாற்றம் ஏன், எதற்காக அவசியப் படுகிறது? தொழில், வர்த்தக நிறுவனங்களை, ஒட்டுமொத்தப் பொருளாதாரச் சூழல், தனக்குள் ஏற்படும் மாற்றங்களுக்குத் தக்கவாறு மாறும்படி நிர்பந்திக்கிறது என்பது வெளிப்படை. 

ரண்டாவது உலகப் போருக்குப் பின்னாலும், 1980 களுக்குப் பிறகும் நிறுவனங்கள், மாறிவரும் சந்தை, பொருளாதாரச் சூழலுக்கேற்றபடி, தங்களைத் தகவமைத்துக் கொள்ள வேண்டியது வெறும் நிர்பந்தம் என்று மட்டுமல்லாமல், நிறுவனங்கள் பிழைத்திருக்க வேண்டிய முக்கியமான காரணியாகவும் ஆனது.கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக மாற்றத்தை வலியுறுத்தும் மேக்ரோ எகனாமிக் காரணிகள், இன்னும் முப்பது நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் கூட மிக வலிமையானதாக ஆகும் வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கிறது.

தைப் புரியும்படி சொல்வதானால், உற்பத்தி அல்லது அடக்க விலைச் செலவினத்தைக் குறைப்பது, தயாரிப்பு மற்றும் சேவையின் தரத்தை  அதிகரிப்பது,  வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புக்களைக் கண்டறிவது, உற்பத்தித் திறனை அதிகரிப்பது என்ற விஷயங்களில் போதுமான மாற்றத்தைக் கொண்டு வரும் நிறுவனங்கள் மட்டுமே பிழைத்திருக்கும். ஆக, மேற்சொன்ன விஷயங்களில், ஒவ்வொரு நிறுவனமும் மாற்றத்தை சாதித்தே ஆக வேண்டி இருக்கிறது.

ப்படி மாற்றத்தை சாதிக்க முயலும் சில நிறுவனங்கள், முயற்சியில் வெற்றி பெறுகின்றன. வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்கின்றன. அதே நேரம், பல நிறுவனங்கள் இந்த முயற்சியில் தோல்வியை சந்திக்கின்றன. எதிர்பார்த்த அல்லது திட்டமிட்ட அளவுக்கு இந்த நிறுவனங்களில் மாற்றத்தைக் கொண்டு வர முடிவதில்லை. அது மட்டுமல்ல, மாற்றத்தைக் கொண்டுவருவதில் ஏற்படும் தோல்வி, அந்த நிறுவனத்தில் பணியாற்றும் மனிதர்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்குகிறது. மனித வளம் என்பது அங்கே வீணடிக்கப்படுகிற, பலிகடாக்களாக ஆக்கப் படுகிற சூழ்நிலையும் உருவாகிறது.

கொஞ்சம் நிதானித்துப் பார்க்கும்போது, இத்தனை வேதனை, விரையம், தோல்விகள் தவிர்த்திருந்திருக்கக் கூடியவையே என்பது தெரிய வரும். அப்படியானால், எதனால் இப்படி நிகழ்கிறது? என்ன செய்தால், இத்தனை துயரத்தைத் தவிர்க்க முடிந்திருக்கும்?

து தான் Change Management என்று சொல்லப் படுகிற, மாறியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில், எதைச் செய்தால் தோல்வியில் இருந்து வெளி வரமுடியும் என்ற சிந்தனை, ஒரு நல்ல தலைமையின், மிக முக்கியமான அம்சம்! தலைமைப் பண்புகளில் அவசியம் தேவைப்படுகிற ஒன்றும் கூட.!

ஜான் பி. கோட்டர் என்ன சொல்கிறார் என்பதைத் தொடர்ந்து பார்ப்பதற்கு முன்னால், அவரைப் பற்றிக் கொஞ்சம் விவரங்கள்!

ந்தத் துறையின் தலை சிறந்த சிந்தனையாளர், ஆசிரியராக இன்றைக்கு அறியப்படும் ஜான் பி. கோட்டர்,  1972 ஆம் ஆண்டு ஹார்வர்ட் பிசினெஸ் ஸ்கூலில், ஆசிரியராகச் சேருகிறார். 1980 வாக்கில் தனது முப்பத்து மூன்றாவது வயதில், பேராசிரியராகப் பதவி உயர்வைப் பெறுகிறார். அவ்வளவு இளம் வயதில் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் பேராசிரியராக ஆனதே மிகப் பெரிய சாதனை. இதுவரை பதினேழு புத்தகங்களை எழுதி இருக்கிறார். மேலாண்மை இயலின் குரு என்று அங்கீகரிக்கப் பட்டிருக்கிறார். ஏராளமான விருதுகள், பாராட்டுக்களைப்  பெற்றிருக்கும் ஒரு சிந்தனையாளர் என்ற அளவோடு, இன்னும் அதிக விவரங்கள் வேண்டுமானால் இங்கே
இந்தப்புத்தகத்தைப்பற்றிப் பேசும்போது Business World இதழில் இன்னும் கொஞ்சம் கூர்மையாக, சில கேள்விகள் முன்வைக்கப் பட்டிருந்தன.

தலைவர்கள் ஏன் தேவைப்படுகிறார்கள்?

தலைவர்கள், மேலாளர்களிடமிருந்து (Managers) எப்படி வித்தியாசப் படுகிறார்கள்?

தலைவர்களால் எப்போதுமே மாற்றங்களைக் கொண்டு வா முடிகிறதா?

மாற்றங்களுக்குத் தடையாக இருக்கும் காரணங்களாக ஒரு எட்டு விஷயங்களை ஜான் பி.கோட்டர் சொல்கிறார்.

தில் முதலாவதாக, Complacency- இதற்கு மேல் எதையும் செய்து விட முடியாது என்றிருக்கும் மெத்தனம்! இத்தனை செய்ததே பெரிது என்று அதனுடனேயே நின்று விடுகிற சுயதிருப்தி!

து எந்த அளவுக்கு சரியாக இருக்கிறது என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பின்னூட்டங்களில் எழுதுங்கள்! தொடர்ந்து பேசுவோம்!

 

Sunday, August 15, 2010

தோல்விகளும் கூட வேண்டியவை தான்.......!


தோல்வி நிலையென நினைத்தால்-மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?


ஊமை விழிகள் படத்தில் கொஞ்சம் யோசிக்க வைத்த பாடல் வரிகள் இவை!

எந்த ஒரு மனிதனுமே தோல்வியை விரும்புவதில்லை, தோல்வியை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதில்லை! இப்படித் தயாராக இல்லாத நிலையில் தான் தோல்வி என்பது ஒரு அச்சமூட்டுகிற, நடுங்கச் செய்கிற, துவண்டுபோகச் செய்கிற அனுபவமாகிப் போய்விடுகிறது.

சாதாரணமாக, நம்மைப் பொதுவாக இரண்டே இரண்டு பிரிவுகளுக்குள் ஏதேனும் ஒன்றில் அடங்கி இருப்பதைப் பார்க்க முடியும்.

முதலாவதாக, ஒரு குறைந்தபட்ச உத்தரவாதத்தை நிலையாக வேண்டுகிற இயல்பு! கிடைப்பது குறைவாக இருந்தால் கூட, அது நிரந்தரமாக இருக்க வேண்டும். ரிஸ்க் எடுப்பது கூடுமான வரை தவிர்க்கப் படவேண்டும். இப்படி ஒரு மனோ நிலையில் கிடைப்பதை ஏற்றுக் கொள்வது, அது கொஞ்சம் குறைவாக இருந்தாலுமே கூட!

இரண்டாவதாக, வாய்ப்புக்களைத் தேடி அலைகிற ரகம்! தோல்வியை சகஜமாக எடுத்துக் கொள்கிற இயல்பு! ரிஸ்க் எடுப்பதற்குக் கொஞ்சமும் தயங்காத மனப்பக்குவத்தோடு, உலகத்தையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட வேண்டும் என்ற வேகம் இருக்கும்.

இப்படி இரண்டு நிலைகளும் இயற்கையானது தான்! என்ன, முதல் ரகத்தில் நிறையப்பேர் இருப்பார்கள்! இப்படி இரண்டு நிலைகளிலும் இருப்பவர்களுக்கு உலகம் அவரவர் இயல்புக்குத் தகுந்தபடி தான்  வாழ்க்கையை அமைத்துத் தருகிறது. நமக்கு எந்த மனநிலை, இயல்பு பொருத்தமாக இருக்கிறதோ, அதற்குத் தகுந்த மாதிரி வேலை, வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் சேதாரம் ஏற்படுவதில்லை. பொருந்தாத நிலைக்குள் தலையைக் கொடுக்கும்போது, தோல்வி நிச்சயம்! பொருந்தாததை  மாற்றிக் கொள்ளவும் தெரிய வேண்டும்.

தோல்வி என்ற போது அதன் பக்கவிளைவுகளாகத் தன்னம்பிக்கையை இழப்பது, துவண்டுபோய்ச் சுருள்வது என்பதுமே கூட வரும், இல்லையா! வாய்ப்புக்களைத் தேடி ரிஸ்க் எடுப்பேன், ஆனால் தோல்வியை எதிர்கொள்ளமாட்டேன் என்ற இரண்டும் கெட்டான் நிலை நிச்சயமாக இல்லை. 

ஆகத் தோல்வியை விட, தோல்வியைக் குறித்த அச்சமே மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது, இல்லையா?

இப்படி மனித இயல்புகளைப் பற்றி என்னை வைத்தே எடை போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தபோது, லாரி ரூட்டிமான் என்ற மனித வளத் துறையில் இருக்கும் ஒரு பெண்மணியின் வலைப்பக்கங்களைப் பார்க்க நேர்ந்தது. ஒரு குறிப்பிட்ட பக்கம் என்னை யோசிக்கவும் வைத்தது.

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே என்று திருநாவுக்கரசர் பாடின மாதிரி, இந்தப் பெண்மணி தோல்விகளும் வேண்டியதே என்று ஒரு ஐந்து காரணங்களை முன்வைத்து  அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்! 

என்ன சொல்கிறார், அது சரியாக இருக்குமா என்று பார்த்து விடலாமா?

முதலாவதாக, தோல்விகள் உங்களை வெளிச்சத்திற்குக்  கொண்டுவருகிறது, உங்களைக் கவனிக்க வைக்கிறது! நீங்கள் இடறி விழும்போது உங்களை நிறையப்பேர் கவனிக்கிறார்கள். நீங்கள் எப்போது மறுபடியும் இடறி விழுவீர்கள் என்பதைப் பார்ப்பதற்காக! அப்படி உங்கள் தோல்வியைப் பார்க்க விரும்புகிறவர்கள் மூக்கில் ஒரு குத்து விடுவதுபோல ஜெயித்துக் காட்ட வேண்டுமென்ற உங்களுக்குள் ஒரு உத்வேகத்தை எழுப்புமானால், முதலில் ஏற்பட்ட தோல்வி, சறுக்கல் மிகவும் நல்லது, வேண்டியதும் கூட!

இரண்டாவதாக, தோல்விகள் உங்கள் திறமையை வெளியில் கொண்டு வருகின்றன. உங்களைத் திறம்படச் செயல்படும்படி ஊக்குவிக்கின்றன. முதலில் ஏற்பட்ட தோல்வியில் கற்றுக் கொண்ட பாடம், மறுபடியும் அதே தவறைச் செய்யாமலிருக்க உதவுகிறது, வேறெந்தத் தவறும் நிகழாதபடி கவனமாக இருக்கவும் சொல்லிக் கொடுக்கிறது.

மூன்றாவதாக, தோல்விகள் உங்களை விரும்பக் கூடிய நபராக மாற்றுகின்றன. குறைகள், தோல்விகள் மனித இயல்பில் மிகவும் சகஜம். அது இல்லவே இல்லாத மாதிரி காட்டிக் கொள்ள முனைந்தால் அடுத்தவருக்கு சந்தேகமும் அவநம்பிக்கையும் தான் வரும்! அப்படியில்லாமல், எல்லோரையும்போல தோல்வியைச் சந்தித்தவர் என்கிறபோது, இயல்பாகவே ஒரு பொதுத்தன்மை, விரும்பக் கூடிய நபராகப் பார்க்கப்படுவதும் சேர்ந்தே நிகழ்கிறது.

நான்காவதாக, தோல்விகள் புதிய கதவுகளைத் திறக்கின்றன! நாம் நினைப்பது போலத் தோல்வி என்பது, நாம் எதிர்பார்த்த கதவு அடைக்கப் பட்டிருக்கிற நிலை என்பது உண்மைதான் என்றாலும், அதுவே வேறு கதவுகளையும் திறந்துவைப்பதாக இருப்பதையும் பார்க்க முடிந்தால், தோல்வி மிகவும் நல்லது, வேண்டியதும் கூட!

ஐந்தாவதாக, தோல்வி என்பது கொஞ்சம் ஜாலியாக எடுத்துக் கொள்ளக் கூடியதும் கூட! நாம் பயப்படுவது போல தோல்வி என்பது துவண்டுபோகச் செய்வதான அனுபவம் என்பதை விட, ஒரு வினோதமான அனுபவம் என்பதைப் பார்க்க முடிந்தால் தோல்வி என்பது சோர்வடையச் செய்யும் பயங்கரம் அல்ல என்பதும், நம்மைச் சரி செய்து கொள்வதற்குத் தேவைப்படுகிற அவசியமான ஒன்று என்பதையும் பார்க்க முடியும்!

ஆகத் தோல்வி என்பது, அதை நாம் எப்படி எதிர் கொள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது! பயந்து துவளும்போது, நம்மை முன்னேற விடாத இருட்டாக இருக்கிறது. துணிந்து எதிர்கொள்ளும்போது, கற்றுக் கொடுக்கும் ஆசானாகவும், நம்மைப் பக்குவப்படுத்துகிற துணையாகவும் இருக்கிறது.

எதனால் ஜெயித்தோம் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல், வெற்றி கூடக் கண்ணை மறைத்துவிடலாம்!  ஆனால் தோல்வி, நம்மை ஒரு விஷயத்தை முழுமையாகப் பார்க்க வைக்கிறது, முழுமையாகப் பார்க்கத் தயார் செய்கிறது!

இதையும் கொஞ்சம் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்!

Failure is not an option - it's a lifestyle


Failure is not falling down, it is not getting up again.

"Failure is simply the opportunity to begin again, this time more intelligently" - Henry Ford

Failure teaches success!



என்ன சொல்கிறீர்கள்?



Saturday, August 14, 2010

ஏன் தோற்கிறோம்..? ஒரு பத்துக் காரணங்கள்.....!


வலைப்பக்கங்களில் தேடிப் படிக்கிற சில விஷயங்கள், நமக்குக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களாகவும், வழிகாட்டுவதாகவுமே ஆகிவிடுவதுண்டு. மொக்கை போடுவதற்கும், பின்னூட்டங்களில் கும்மியடிப்பதாகவுமே வெறும் பொழுதுபோக்குக் கருவியாக நாம் பயன்படுத்தும் இணையம், கற்றுக் கொள்வதற்கான எளிமையான சாதனமாகவும் இருக்கிறது!

தட்டுங்கள் திறக்கப்படும்
! கேளுங்கள் கொடுக்கப்படும் என்று கிறித்தவ வேதாகமம் சொல்வது இணையத்தில் மட்டுமே நூறு சதவிகிதம் சாத்தியம்! ஆம்! நீங்கள், எதைத் தேடுகிறீர்களோ, எதைத் தட்டுகிறீர்களோ அது நிச்சயமாகக் கிடைக்கும் இடம் இந்த இணையம்
மட்டும் தான்!

டோனி மோர்கன் என்றொரு வலைப் பதிவர்! இவருடைய வலைப் பதிவுகள் பெரும்பாலும் கிறித்தவ சர்ச்சுகளின் நிதி நிர்வாகத்தைப் பற்றியது, கிறித்தவ சர்ச்சுக்களால் ஸ்பான்சர் செய்யப்பட்ட பதிவுகள்  என்றாலும் கூட, பதிவுகளில், மனிதவளம், மேலாண்மை, நிர்வாகம் குறித்த சில விஷயங்களைப் பற்றிய கருத்துக்கள்  கொஞ்சம் யோசிக்க  வைப்பதாக இருக்கும். அப்படிப் படித்த நல்ல  பதிவுகளில் ஒன்று, எப்படித் தோற்கிறோம் என்பதைப் பற்றியது.

தோல்வி எதனால் ஏற்படுகிறது, என்பதைக் கொஞ்சம் நன்றாகவே ஒரு பத்து அம்சமாக யோசித்திருக்கிறார். தான் யோசித்ததை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு, அதன் மீது ஒரு ஆரோக்கியமான விவாதத்தை எதிர்பார்த்து ஒரு பத்து விஷயங்களாகச் சொல்கிறார்.


என்னவென்று பார்ப்போமா?

முதலாவதாக, செய்வதில் ஆர்வமும் ஈடுபாடும் உண்மையாக, முழுமையானதாக இருக்க வேண்டும்.சமீபத்தில் டைம்ஸ் நவ் தொலைக் காட்சியில், சச்சின் டெண்டுல்கருடைய பேட்டி ஒன்று, அவர் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து இருபது ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி ஒளிபரப்பானது. வெறும் விளையாட்டு, கொஞ்சம் அதிகமான ஆர்வம் என்பதையும் மீறி, அதுவே அவரது வாழ்க்கையும், தவமுமாகிப் போனதை அந்தப் பேட்டி மிகவும் அழகாகச் சொன்னது. அதன் ஒருபகுதியைக் கீழே பார்க்கலாம்.





இரண்டாவதாக, ஒரு தெளிவான திட்டம் உங்களுக்கு இருக்க வேண்டும். என்னவாக வேண்டும் என்பதைக் குறித்து ஒரு கனவு, அந்தக் கனவு மெய்ப்பட என்னென்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்த தெளிவான பார்வை. நிதியாதாரங்கள் திரட்டுவதும் அதன் ஒரு முக்கியமான பகுதியாக இருக்க வேண்டும்.


மூன்றாவதாக, எல்லாவகையிலும் அது முழுமையானதாக இருக்கவேண்டும் என்று காத்திருக்காமல்,சோதனை ஓட்டத்திற்குத் தயாராக வேண்டும். சோதனை முயற்சிகளில் கிடைக்கும் படிப்பினைகளில் இருந்தே உங்களுடைய ஒரிஜினல் ஐடியாவைச் சரி செய்து கொள்ள முடியும். முதல் நாளில் இருந்தே அது முழுமையாக, சரியானதாக இருக்க வேண்டும் என்று நினைப்பது கடைசியில் ஒன்றுமே செய்யாமல் நின்று விடுவதான செயலாற்ற தன்மைக்குக் கொண்டு விட்டு விடும்.


நான்காவதாக, கடுமையாக உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். கட்டுப்பாடுடனும், பொறுமையுடனும் செயல்படுவது நம் வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாக இருப்பது நல்லது.

ஐந்தாவதாக, வளர வேண்டும் என்ற விருப்பமிருந்தால் கற்றுக் கொள்வதை நிறுத்தி விடாதீர்கள். கற்றுக்கொள்வது நிற்கும் போது, வளர்ச்சியும் தேக்கமடைந்து போய் விடுகிறது. முக்கியமாக, தலைமைப் பண்புடன் கூடியவர்களைக் கொண்ட ஒரு குழுவை நிறுவ முயற்சி செய்யுங்கள். குழுவாக செயல்படும்போது, உங்களிடமில்லாத திறமைகளும் சேர்ந்து வெளிப்படும்.

ஆறாவதாக, நேற்றைய வெற்றிகளில், சாதனைகளில் தேக்கமடைந்து நின்று விடாதீர்கள்.

அப்படித் தேக்கமடைந்துவிடுவதில், காலம் செல்லச் செல்ல, வேகமும் குறைந்து விடும். அப்படி ஒரு நிலை வருமானால், பழையதை விட முடியாமலும், புதியதற்குத் தயாராக முடியாமலும் அந்தரத்தில் தொங்கும் நிலைக்கு ஆளாக நேரிடலாம்.


ஏழாவதாக, ஏதோ ஒன்றைச் செய்யாமல் இருப்பது உங்களுக்கு விருப்பமில்லாமல் இருக்கிறதென்றால் அதைக் கவனியுங்கள். உதாரணத்துக்கு, சிகரெட், மது, பெண்பித்து, பேராசை, நாணயக் குறைவு, எதிலும் காலதாமதம் இது போன்ற பலவீனங்கள், கவனத்தைத் திசை திருப்புபவைகளாக, இப்படி எது உங்களுடைய முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கிறது?  

அப்படித் தடையாக இருப்பதை மாற்றிக்  கொள்வதில் என்ன தயக்கம் என்பதைக் கவனியுங்கள். படுமுடிச்சுக்கு மேல் படுமுடிச்சாகப் போட்டுக் கொண்டிருப்பது எளிது. முடிச்சுக்களே இல்லாமல், எளிமையாக இருப்பதற்கு, ஒரு ஒழுங்கும் கட்டுப்பாடும் அவசியம். எளிமையாக, ஒழுங்கோடு இருப்பவைகளே வெற்றிக்கு அஸ்திவாரம்.


எட்டாவதாக, நீங்கள் உருவாக்கும் குழுவில் இருப்பவர்கள், உங்களுடைய நண்பர்களாக ஏற்கெனெவே இருப்பவர்களாகவோ, அல்லது நண்பர்களாக ஆகப் போகிறவர்களாகவோ இருக்கட்டும்! வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பது எளிது. ஆனால், உங்களுடைய வாழ்க்கையை உங்களோடு பகிர்ந்து கொள்பவர்களாகவும், காலப்போக்கில், மிகச் சிறந்த உறவுகளாகவும் நண்பர்கள் தான் இருக்க முடியும்! வேலைக்காரர்கள் அல்ல.

சுருக்கமாக, குழுவை உருவாக்குங்கள், ! குழுவில் இருப்பவர்களை உங்களுடைய நல்ல நண்பர்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்!

ஒன்பதாக, உற்றார் உறைக்கச் சொல்வார்கள் ஊரார் சிரிக்கச் சொல்வார்கள் என்ற சொலவடையை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய சோதனையான தருணங்களில், கடுமையாகப் பேசினாலும், சோதனைகளில் இருந்து மீள்வதற்கு உதவும் வகையில் இருக்கும் ஒருவர் அல்லது பலருடைய துணையைக் கைக்கொள்ளுங்கள்.

பத்தாவதாக, "அச்சமே கீழ்களது ஆச்சாரம்" என்று சமுதாய வீதி நாவலில் எழுத்தாளர் நா.பார்த்த சாரதி சொல்வது போல, தோல்வியைக் குறித்த பயமே, அடுத்தடுத்த முட்டாள் தனங்களுக்கு அடிகோலுவதாக இருப்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எதிர்மறையான எண்ணங்கள் எதிர்மறையான விளைவுகளைத் தான் தரும்.நமக்குத் தெரிந்த அளவோடு நிறுத்திக் கொண்டாலோ, சராசரியாக அல்லது அதற்கும் கீழே இருந்து விடுவதில் ஒரு சௌகரியத்தைக் கற்பித்துக் கொள்வதிலோ நின்று விடாமல் எவ்வளவுக்கு எவ்வளவு தோல்விகளை எதிர் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு வெற்றியையும் நம்மால் பெற முடியும்!

ஆமாம்! கொஞ்சம் கூடப் பொய்யில்லை, உண்மையாகவே வெற்றியை நம்மால் பெற முடியும்!

இப்படி, கொஞ்சம் குறிப்பிட்டும், பொதுமைப் படுத்தியும் சில கருத்துக்களை டோனி மார்கன் முன்வைத்திருக்கிறார். இதில் நான் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்களுடைய அனுபவங்களில் இருந்து நீங்கள் இவற்றில் எவை எவை பொருத்தமாக இருக்கும், அல்லது பொருந்தாது என்றோ, மாற்றுக் கருத்தாக எதை முன்வைக்கிறீர்கள், வைக்கப் போகிறீர்கள்  என்பது தான்!

உங்களுடைய அனுபவங்களையும் கருத்துக்களையும் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளலாமே!



இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)