Wednesday, November 17, 2010

மாற்றங்களுக்குத் தயாராவது.....!Leading the Change!



மாற்றம் பற்றி நிறையப் பேசுகிறோம்! மாற்றம் வராதா என்று பல விஷயங்களில் ஏங்குகிறோம்! வேண்டுகிற மாற்றம் என்ன, அந்த மாற்றத்தை எப்படிக் கொண்டு வருவது, அதை எப்படி நிர்வகிப்பது என்பதே தெரியாமல் தான் இங்கே பெரும்பாலான தருணங்களில் மாற்றம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம் இல்லையா!
.
Change Management என்பதே மேலாண்மைத் துறையில் வளர்ந்துவரும் ஒரு துறை என்பது நிர்வாகம், மேலாண்மைத் துறையில் படிப்பவர்களைத் தவிர பரவலாகத் தெரியாத விஷயம். பாடமாகப் படிப்பவர்களே கூட செயல் முறையில் பயன்படுத்தி அதன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டவைகள் இங்கே கொஞ்சம் குறைவு தான்!தமிழில் இந்த விஷயத்தைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாகவே இருந்தது. இன்றைக்கு ஜான் பி. கோட்டர் எழுதிய புத்தகத்தைப் பற்றிய ஒரு பதிவைப் படித்துக் கொண்டிருந்த போது, இன்றைக்கே எழுதினால் என்ன என்று அதைப் பற்றி கொஞ்சம் குறிப்புக்களை எழுத ஆரம்பித்தேன். இதை ஒரு தொடர்பதிவாக எழுதும் உத்தேசமிருக்கிறது/

ந்தப் புத்தகம், முதலில் 1994 இல் ஹார்வர்ட் பிசினெஸ் ரிவ்யூ இதழில் Leading Change:Why Transformation Efforts Fail என்ற தலைப்பில் ஒரு கட்டுரையாகத் தான் வெளிவந்தது. அதற்கப்புறம் ஒரு 187 பக்கப் புத்தகமாக ஹார்வர்ட் பிசினெஸ் ஸ்கூல் ப்ரெஸ்வெளியீடாக  1996 இல் வெளி வந்திருக்கிறது.  இங்கே புத்தகத்தின் குறிப்பிட்ட பகுதிகளை கூகிள் புக்ஸ் தளத்தில் இணையத்திலேயே வாசிக்க முடியும். புத்தகம் வெளிவந்து பதினான்கு ஆண்டுகள் ஆன பின்னாலும் கூட, மிகவும் பயனுள்ள வாசிப்பாக, புத்தகமாக இருப்பது இதன் தனி சிறப்பு.

முதலில் மாற்றம் ஏன், எதற்காக அவசியப் படுகிறது? தொழில், வர்த்தக நிறுவனங்களை, ஒட்டுமொத்தப் பொருளாதாரச் சூழல், தனக்குள் ஏற்படும் மாற்றங்களுக்குத் தக்கவாறு மாறும்படி நிர்பந்திக்கிறது என்பது வெளிப்படை. 

ரண்டாவது உலகப் போருக்குப் பின்னாலும், 1980 களுக்குப் பிறகும் நிறுவனங்கள், மாறிவரும் சந்தை, பொருளாதாரச் சூழலுக்கேற்றபடி, தங்களைத் தகவமைத்துக் கொள்ள வேண்டியது வெறும் நிர்பந்தம் என்று மட்டுமல்லாமல், நிறுவனங்கள் பிழைத்திருக்க வேண்டிய முக்கியமான காரணியாகவும் ஆனது.கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக மாற்றத்தை வலியுறுத்தும் மேக்ரோ எகனாமிக் காரணிகள், இன்னும் முப்பது நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் கூட மிக வலிமையானதாக ஆகும் வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கிறது.

தைப் புரியும்படி சொல்வதானால், உற்பத்தி அல்லது அடக்க விலைச் செலவினத்தைக் குறைப்பது, தயாரிப்பு மற்றும் சேவையின் தரத்தை  அதிகரிப்பது,  வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புக்களைக் கண்டறிவது, உற்பத்தித் திறனை அதிகரிப்பது என்ற விஷயங்களில் போதுமான மாற்றத்தைக் கொண்டு வரும் நிறுவனங்கள் மட்டுமே பிழைத்திருக்கும். ஆக, மேற்சொன்ன விஷயங்களில், ஒவ்வொரு நிறுவனமும் மாற்றத்தை சாதித்தே ஆக வேண்டி இருக்கிறது.

ப்படி மாற்றத்தை சாதிக்க முயலும் சில நிறுவனங்கள், முயற்சியில் வெற்றி பெறுகின்றன. வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்கின்றன. அதே நேரம், பல நிறுவனங்கள் இந்த முயற்சியில் தோல்வியை சந்திக்கின்றன. எதிர்பார்த்த அல்லது திட்டமிட்ட அளவுக்கு இந்த நிறுவனங்களில் மாற்றத்தைக் கொண்டு வர முடிவதில்லை. அது மட்டுமல்ல, மாற்றத்தைக் கொண்டுவருவதில் ஏற்படும் தோல்வி, அந்த நிறுவனத்தில் பணியாற்றும் மனிதர்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்குகிறது. மனித வளம் என்பது அங்கே வீணடிக்கப்படுகிற, பலிகடாக்களாக ஆக்கப் படுகிற சூழ்நிலையும் உருவாகிறது.

கொஞ்சம் நிதானித்துப் பார்க்கும்போது, இத்தனை வேதனை, விரையம், தோல்விகள் தவிர்த்திருந்திருக்கக் கூடியவையே என்பது தெரிய வரும். அப்படியானால், எதனால் இப்படி நிகழ்கிறது? என்ன செய்தால், இத்தனை துயரத்தைத் தவிர்க்க முடிந்திருக்கும்?

து தான் Change Management என்று சொல்லப் படுகிற, மாறியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில், எதைச் செய்தால் தோல்வியில் இருந்து வெளி வரமுடியும் என்ற சிந்தனை, ஒரு நல்ல தலைமையின், மிக முக்கியமான அம்சம்! தலைமைப் பண்புகளில் அவசியம் தேவைப்படுகிற ஒன்றும் கூட.!

ஜான் பி. கோட்டர் என்ன சொல்கிறார் என்பதைத் தொடர்ந்து பார்ப்பதற்கு முன்னால், அவரைப் பற்றிக் கொஞ்சம் விவரங்கள்!

ந்தத் துறையின் தலை சிறந்த சிந்தனையாளர், ஆசிரியராக இன்றைக்கு அறியப்படும் ஜான் பி. கோட்டர்,  1972 ஆம் ஆண்டு ஹார்வர்ட் பிசினெஸ் ஸ்கூலில், ஆசிரியராகச் சேருகிறார். 1980 வாக்கில் தனது முப்பத்து மூன்றாவது வயதில், பேராசிரியராகப் பதவி உயர்வைப் பெறுகிறார். அவ்வளவு இளம் வயதில் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் பேராசிரியராக ஆனதே மிகப் பெரிய சாதனை. இதுவரை பதினேழு புத்தகங்களை எழுதி இருக்கிறார். மேலாண்மை இயலின் குரு என்று அங்கீகரிக்கப் பட்டிருக்கிறார். ஏராளமான விருதுகள், பாராட்டுக்களைப்  பெற்றிருக்கும் ஒரு சிந்தனையாளர் என்ற அளவோடு, இன்னும் அதிக விவரங்கள் வேண்டுமானால் இங்கே
இந்தப்புத்தகத்தைப்பற்றிப் பேசும்போது Business World இதழில் இன்னும் கொஞ்சம் கூர்மையாக, சில கேள்விகள் முன்வைக்கப் பட்டிருந்தன.

தலைவர்கள் ஏன் தேவைப்படுகிறார்கள்?

தலைவர்கள், மேலாளர்களிடமிருந்து (Managers) எப்படி வித்தியாசப் படுகிறார்கள்?

தலைவர்களால் எப்போதுமே மாற்றங்களைக் கொண்டு வா முடிகிறதா?

மாற்றங்களுக்குத் தடையாக இருக்கும் காரணங்களாக ஒரு எட்டு விஷயங்களை ஜான் பி.கோட்டர் சொல்கிறார்.

தில் முதலாவதாக, Complacency- இதற்கு மேல் எதையும் செய்து விட முடியாது என்றிருக்கும் மெத்தனம்! இத்தனை செய்ததே பெரிது என்று அதனுடனேயே நின்று விடுகிற சுயதிருப்தி!

து எந்த அளவுக்கு சரியாக இருக்கிறது என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பின்னூட்டங்களில் எழுதுங்கள்! தொடர்ந்து பேசுவோம்!

 

4 comments:

  1. //அதில் முதலாவதாக, Complacency- இதற்கு மேல் எதையும் செய்து விட முடியாது என்றிருக்கும் மெத்தனம்! இத்தனை செய்ததே பெரிது என்று அதனுடனேயே நின்று விடுகிற சுயதிருப்தி!//

    இந்த திருப்தி ஆளாளாளுக்கு வித்தியாசப்படும் இல்லையா? தனி நபர் சாமர்த்தியம், அந்த விஷயத்தில் அவர் பெற்றிருக்கும் திறமை இவற்றின் அடிப்படையில் இது தீர்மானமாகிறதா இல்லை இதற்கு இவ்வளவு போதும் என்று ஏதாவது அளவுகோலின் அடிப்படையில் இது நிர்ணயம் ஆகிறதா?..

    ReplyDelete
  2. வாருங்கள் ஜீவி சார்!

    இந்த சுயதிருப்தி என்ற தமிழ் மொழிபெயர்ப்பு, நடைமுறையில் உள்ள சொல்லாக்கம், காம்ப்லாசன்சி என்பதன் முழு அர்த்தத்தையும் தருவதாக இல்லை. திருப்தி என்ற வார்த்தை இந்த இடத்தில் அலட்சியம் சோம்பேறித்தனத்தின் அளவைக் குறிப்பதாக இருக்கிறது. இதை இப்படிப் பார்க்கலாமே! ஆதியில் மனிதன் பனை ஓலை, மண் குடிசையில் தான் இருந்தான்!அத்துடன் திருப்தி அடைந்துநின்றிருந்தால் இன்றுள்ள வளர்ச்சி இல்லை. இன்னும் இன்னும் என்ற உந்துதல், இதைப் பேராசை என்று தவறாகக் கொள்ள வேண்டாம், இந்த உந்துதல் தான் வளர்ச்சியின் அடிப்படையாக இருக்கிறது. ஈடு கொடுக்க முடியாதவை சிதைந்து போவதன் ஆரம்பமாகவும் இருக்கிறது.

    மாற்றம் என்பது இரண்டு திசைகளிலும் நிகழக் கூடியது! அதை சரியாகப் புரிந்து கொண்டு, ஆக்கபூர்வமான, வளர்ச்சிக்கான மாற்றத்தைத் திட்டமிடுவது எப்படி என்பது தான் Change Management என்ற இந்தத் துறையின் அடிப்படைக் கருவே!

    ReplyDelete
  3. தொடர்ந்து எழுதுங்கள். தங்களுடைய உள்வாங்கிக் கொண்டு எழுதும் அர்ப்பணிப்பு பலவற்றை தெரிந்து கொள்ளும் ஆவலைத் தூண்டுகிறது. 'உற்பத்தி அல்லது அடக்க விலைச் செலவினத்தைக் குறைப்பது, தயாரிப்பு மற்றும் சேவையின் தரத்தை அதிகரிப்பது' போன்ற சிக்கலான உருப்படியான யோசனைகளையும் நடைமுறை சாத்தியப்படுத்தினால் ஏட்டில் மட்டுமே காணக்கூடிய வார்த்தைகளாக இல்லாது பலன் இரு சாரார்களுக்கும் -- உற்பத்தியாளருக்கும், உபயோகிப்பாளருக்கும் -- மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கும் என்பது உண்மை.

    கட்டுரைத் தொடருக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. வாருங்கள் ஜீவி சார்!

    ஒரு பக்கம் மாற்றம் வேண்டும் என்று ஏங்குவதும், மறுபக்கம் மாற்றத்தைக் கண்டு அஞ்சுவதும் மனித இயல்பின் மிக அடிப்படையான முரண்பாடு. ஆத்ம சாதனமாகத் தத்துவ ரீதியில் இதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், இன்னொரு வலைப்பக்கத்தில். Creature of habits, பழக்கங்களின் அடிமையாகவே என்ற வார்த்தைகளை வைத்துத் தேடினால், ஸ்ரீ அரவிந்த அன்னை இதைப் பற்றிப் பேசிய சில அருமையான விஷயங்களைப் பார்க்க முடியும்.

    லௌகீக வாழ்க்கையில், நிறுவனங்கள், தலைமைப் பண்பு, நிர்வாகவியல் என்று பார்க்கும்போது, காலத்துக்கேற்றபடி தன்னைத் தகவமைத்துக் கொள்ள முடியாத எந்த ஒரு நிறுவனமும், அமைப்பும் டைனோசார்களைப் போல வழக்கொழிந்து போய்விடவேண்டியது தான் என்பதைக் கூர்மையடைந்து வரும் பொருளாதாரக் காரணிகள், குறிப்பாக இரண்டாவது உலகப் போருக்குப் பின்னால், முக்கியத்துவம் உள்ளவையாக ஆகிக் கொண்டிருக்கின்றன. பல இந்திய நிறுவனங்களிலும், இதன் அவசியம் படிப்படியாக உணரப்பட்டு வருகிறது.

    நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த காலத்தில் பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கட்டாயமாக ஏற்றுக் கொண்டே ஆக வேண்டியிருந்தது. அதை அமல் படுத்தியபோது, மாற்றங்களுக்குத் தயாராக வேண்டிய கால அட்டவணையும் கூடவே வந்தது. அப்புறம், வாக்கு வங்கியைக் குறி வைத்து நடத்தப்பட்ட இலவசங்கள் என்ற மாயை முன்னுக்கு வந்து, சீர்திருத்தங்களின் பலனைத் திசை திருப்புகிற கூத்தும் நடந்து கொண்டிருக்கிறது.

    Change Management என்பதை இந்த தேசத்தின் அரசியல், பொருளாதாரம், தலைவர்கள் என்று உள்ளூர் நிலவரத்தோடு கூடிய ஒரு கேஸ் ஸ்டடியாக எழுதலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஊக்கத்திற்கு மிகவும் நன்றி!

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)