Thursday, December 31, 2020

விடைபெறும் #2020 வரவிருக்கும் #2021 #தேர்தல்களம்

2020 ஆம் ஆண்டு நிறையக் களேபரங்களுடன் ஒருவழியாக இன்றுடன் முடிகிறது. 2021 என்று புதிய ஆண்டு துவங்க இருக்கும் வேளையில், நாம் எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறோம்? நம்மில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான மனோநிலை, கருத்து இருக்கும். கார்டூனிஸ்ட் மஞ்சுள் இப்படித் தனது கருத்தைச் சொல்கிறார்.
கொரோனாதாக்கம், பாதிப்பு இன்னும் சிலகாலத்துக்கு நீடிக்கும் என்றுதான் சொல்கிறார்கள். அதற்காக இடிந்துபோய் உட்காரவேண்டியதும் இல்லை. முகக்கவசம், சானிடைசர், இப்படி சில முன்னெச்சரிக்கைகளோடு கொரோனாவுடன் வாழப்பழகிக் கொள்ளவேண்டியதுதான்! வேறு வழி? !! 

ஸ்டேன்லி ராஜன் வழக்கம் போலத் தனது கூர்மையான வார்த்தைகளில் என்ன சொல்கிறாராம்?

கொரோனாவின் பாதிப்பு விமான போக்குவரத்து சுற்றுலா போன்றவற்றை அடியோடு சாய்த்திருப்பதும், வாழ்வே புதிய இயல்புக்கு மாறி இருப்பதும் இந்த ஆண்டு கொடுத்த அதிர்ச்சிகள்
தமிழகத்தை பொறுத்தவரை 2020லும் எதிர்கட்சி வழக்கம் போல் காமெடி சொதப்பல்களை செய்தது, எந்த நெருக்கடியும் அவர்களால் கொடுக்கமுடியவில்லை
பழனிச்சாமி தன் 5ம் வருடத்தை பூர்த்தி செய்து தேர்தலுக்கும் வந்துவிட்டார்
2020ல் தமிழகம் கண்ட மிகபெரும் முடிவு ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்பது, ஒருவழியாக அந்த புயல் கரையினை கடக்காமலே கரைந்து விட்டது.
2021 தமிழகத்தில் தேர்தல் வருடம், அது என்னாக போகின்றது என்பதை காலமே காட்டும்
2020ல் பள்ளி விடுமுறை ஆண்டு முழுக்க தொடர்ந்ததில் மாணவ சமுதாயமும் முககவசம் மற்றும் சானிட்டைசர் தயாரிப்பாளர்கள் மட்டும் மகிழ்ச்சி, வேறு எந்த தரப்பும் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை எல்லாம் கொரோனா செய்த கோலம் உலகம் புதிய வாழ்வியல் முறைக்கு மாறிவிட்டது   முழுப்பகிர்வையும் படிக்க இங்கே  
 
இன்றைய ஹிந்து ஆங்கிலநாளிதழில் ரஜனிகாந்த் அறிவிப்பைக் கிண்டல் செய்து சுரேந்திரா வரைந்த ஒரு கார்டூனுடன் என் ராம் கும்பலுக்கு இந்த ஆண்டு விடைபெறுகிறதாம்! தினமலர் நாளிதழில் கூட ரஜனியைக் கிண்டல் செய்கிற மாதிரி கேலிப்படங்கள் வந்துகொண்டிருக்கிறதாம். அவர்களைக் குறை சொல்லிப்பயனில்லை! களிமண் கால்களுடைய ஒருவர் இப்படி வீராவேசமாக நான் அரசியலுக்கு வருவது உறுதி. இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்று டயலாக் பேசிவிட்டு , பின்வாங்கினால் வேறென்ன நடக்குமாம்?
சுத்திச் சுத்தி வந்தீக என்று ஜோடிபோட்டு டூயட் பாடியவருக்கு, இதெல்லாம் தேவைதான்! 

கொரோனா செய்த கொடுமைகள் நிறைய உண்டு என்றாலும் அது செய்த நல்ல விஷயம் இந்த ஆண்டு முழுக்க தமிழக சினிமா இம்சைகளை முடக்கி வைத்தது
இல்லையேல் இந்நேரம் இந்த ஆண்டின் சிறந்தபடம், சிறந்த இயக்குநர், சிறந்த புதுமுகம், சிறந்த புது மூக்கு, கண் என ஆளாளுக்கு பட்டியலிட்டு பெரும் களபேரம் செய்து கொண்டிருப்பார்கள்
கொரொனா அடித்த அடியில் எல்லோரும் மகா அமைதி
ஆக தியேட்டர்கள் அடைபட்டால் தமிழகத்தில் பெரும் அமைதி நிலவும் என்பது தெரிகின்றது, திராவிட கட்சி இம்சைகளுக்கு முன்பு தமிழக சினிமாவோடு தமிழகம் எவ்வளவு நிம்மதியாக இருந்தது என்பது இப்பொழுதுதான் புரிகின்றது.
இந்த கொரோனா ஒழியட்டும் ஆனால் சினிமா உலகத்தை மட்டும் முடக்கி வைக்கும் புதிய வகை கொரோனா உருவாகி வரட்டும், அப்படி ஒன்று வந்தால் நிச்சயம் வரவேற்கலாம் 

கொரோனாவால் விளைந்த நல்ல விஷயங்களில் ரஜனி ஜகா வாங்கியதைச் சொல்லாமல் விட்டுவிட்டாரே! அது இன்னமும் உறுத்தலாய்த் தான் இருக்கிறது.


திமுக எம்பி கிச்சுகிச்சு மூட்டுகிறார்! KDbrothers பற்றி அவருக்கு அவ்வளவாகத் தெரியாது போல இருக்கிறது. அவர்கள் திமுகவில் இருப்பதே விசுவாசத்தினால் அல்ல! வியாபாரத்துக்காகத்தான் என்பது கூடாது தெரியாத இவரெல்லாம் எப்படித் திமுக எம்பியானார்?

புதிய ஆண்டில் மீண்டும் சந்திப்போம்.    

Tuesday, December 29, 2020

அதிமுக -பிஜேபி கூட்டணி(??) எந்த லட்சணத்தில் இருக்கிறது?

மூன்று நாட்களுக்கு முன்னால் அதிமுகவின் கே பி முனுசாமி மிகவும் தெனாவட்டாக, பிஜேபிக்கு ஒரு சவாலைப் பொதுவெளியில் விடுத்திருக்கிறார். கீழே வீடியோவை முழுதாய்ப் பார்க்கமுடியாவிட்டாலும், எட்டாவது நிமிடத்திலிருந்தாவது பார்த்து விடுங்கள்! ஆட்சியில் பங்கு கூட்டணி ஆட்சி என்று யாராவது வந்தால் ....என முழங்குகிறார். வெறும் 96 MLA க்களை மட்டும் வைத்துக்கொண்டு மைனாரிட்டி அரசை நடத்திக் கொண்டிருந்த கருணாநிதி கூட இத்தனை வெளிப்படையாக, ஆட்சியில் பங்குக்கு ஆசைப்பட்ட காங்கிரஸ் MLA க்களைப் பார்த்து முழங்கியதில்லை. டில்லித் தலைமையிடம் பேசி அவர்களைத் தலையெடுக்க விடாமல் வைத்திருந்தார் என்பது மிகச் சமீபத்திய வரலாறுதான்! கேபி முனுசாமி அவராகவே இப்படிப் பேசினாரா அல்லது பேசிவைத்துக் கொண்டு இப்படிப் பேச வைத்தார்களா என்பது அனாவசியம் திமுக, அதிமுக இரு கழகங்களுமே தங்களுடைய அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்பியதே இல்லை! இந்த இரண்டு கழகங்களை விட்டால் தமிழனுக்கு வேறு கதியே இல்லை என்ற மிதப்பில் இருக்கிற கழகங்களைக் கண்டுகொள்வதற்கு தமிழக வாக்காளருக்குத் திறமை இல்லையா? அல்லது வேறெந்தக் காரணமாவது இருக்கிறதா?    

 


கே பி முனுசாமியின் எச்சரிக்கையை தமிழக பிஜேபி எப்படி எடுத்துக் கொண்டது என்ற விவரம் பரம ரகசியமாக இருக்கிறது போல! 


இந்த ரகசியத்தை எப்படியாவது வெளிப்படுத்தலாம் என்று இந்த 44 நிமிட இருதுருவம் நிகழ்ச்சியில் அதிமுக MLA செம்மலை, பிஜேபியின் நாராயணன் திருப்பதி இருவருடனும் ரங்கராஜ் முட்டி மோதிப் பார்க்கிறார். கூட்டணி உடைகிறதா, அல்லது வீரத்தழும்புகளுடன் நீடிக்கிறதா என்ற ரகசியத்தைக் கடைசிவரை இருவரும் சொல்லவே இல்லை.

😎
தேர்தல் செய்திகள்!
—————————-
சிம்பிளா, கூட்டணி கிடையாது போங்கடான்னு சொல்ல முடிஞ்சா அது வீரம்! மத்தபடி இதெல்லாம் ஒப்பாரி!

வசந்தன் பெருமாள் சொல்வது போல இதுதான் உண்மை நிலவரம் என்று எடுத்துக்கொள்ள முடியுமா?

என்னமோ போடா மாதவா! தமிழக அரசியள் களமும் கூட்டணிக் குழப்பங்களும் பிரிக்க முடியாத இரட்டை தானா? உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

மீண்டும் சந்திப்போம்.

Sunday, December 27, 2020

தமிழக அரசியல் களம்! சூடு பிடித்து விட்டதா? இன்னும் நாளாகுமா?

கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி ரங்கராஜ் பாண்டே இருந்தவரை தந்திடிவியில்  முத்திரை பதித்த நிகழ்ச்சி ஆக இருந்தது. அவர் சேனலை விட்டு வெளியேறிய பின் அந்த நிகழ்ச்சியை சலீம், ஹரிஹரன், அசோகவர்த்தினி இப்படிப் பலரும் நடத்திப்பார்த்தும் கூட, பழைய மாதிரி தூக்கி நிறுத்தமுடியவில்லையே, ஏன்?     


இந்தக் கேள்விக்கான பதில் நெறியாளர் என்ன கேள்வி கேட்டார், பதில் சொல்லவேண்டியவரிடமிருந்து சரியான கேள்விகளைக் கேட்டாரா, தனிப்பட்ட அஜெண்டாவுடன் கேள்வி கேட்காமல்  விஷயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்கிற மாதிரி இருந்ததா என்ற தெளிவோடு நடத்த முடியவில்லை தொடர்ந்து இந்த நிகழ்ச்சி FlopShow ஆகவே போய்க்கொண்டிருக்கிறது

தந்திடிவி யாரைவைத்து, என்ன அஜெண்டாவுடன் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு எந்த அக்கறையுமில்லை! ஆனாலும் தமிழக அரசியல்களம் இன்னும் சூடுபிடிக்கவில்லை என்கிற என்னுடைய அபிப்பிராயத்துக்கு பிஜேபியின் தமிழகத்தலைவர் Dr.L.முருகனுடன் ஹரிஹரன் நடத்தி நேற்றிரவு ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி வலுசேர்த்து இருப்பதாகவே பார்க்கிறேன். இந்த 42 நிமிட பேட்டியில் பிஜேபியின் மாநிலத்தலைவரிடமிருந்து என்ன தகவவலைப் பெற விரும்பினார்? ஒரு தெளிவில்லாமல்  வெறும் வதந்தி அல்லது ஊகங்களின் பேரிலேயே கேள்வி எழுப்பிக்கொண்டே போனால் என்ன பதில் கிடைக்கும்?


மேலே 42 நிமிட வீடியோவைப்பார்க்க நேரமில்லையா? கடந்த 21ஆம் தேதி தமிழக அமைச்சர் Mafoi பாண்டிய ராஜனுடன் நடத்திய நேர்காணலின் 6 நிமிடச் சுருக்கம் இதையாவது பார்த்துவிடுங்கள்! அதிமுக பாஜக கூட்டணிக்குள் விரிசல், அடிமை அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை பிஜேபி தான் முடிவு செய்ய வேண்டுமா போன்ற வதந்திகளைத் திமுகவின் சமூக ஊடகங்கள் எழுப்பிவரும் கேள்விகளையே ஹரிஹரனும் கேட்கிறார் ! என்பது தந்தி டிவி முதலாளிகளின் அஜெண்டாவாகக் கூட இருக்கலாம்! பாண்டியராஜனோ. முருகனோ கொஞ்சமும் மழுப்பவில்லை என்பது ஒருபுறம்! தேர்தல் களம் இன்னமும் தயாராகவில்லை, சூடு பிடிக்கவில்லை என்பதாலேயே இதுபோன்ற வதந்திகள்,பேட்டிகள் உலா விடப்படுகின்றன. 

அதே நேரம் ...!


இது நேற்றைக்கு திருச்சியில் வானதி சீனிவாசன் பேசியது. குழம்புவதற்கு எதுவுமில்லைதான்! மாநில NDA கூட்டணிக்கு அதிமுகதான்! ஆனால் மாநில NDA கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் முடிவு செய்யப்படவில்லை. அதிமுக தனது கட்சிக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளரை அறிவித்து விட்டது. NDA கூட்டணியில் அதிமுக நீடிக்கிறது என்றாலும் கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்துச் செயல்பட அதிமுக தலைமை முனைப்புக்காட்டவில்லை என்பதும் தெளிவு.  தமிழிசை காலத்தைப்போல தமிழக பிஜேபி, , செயல்படாமல், ஆளுக்கொரு பேச்சு என்றில்லாமல் செயல்பட்டாக வேண்டிய அவசியத்தை மட்டுமே இந்தப் பேட்டிகள் உணர்த்துவதாக எனக்குப் படுகிறது.

Fake news. Never did I say that Natta will announce our CM candidate !
Quote Tweet
Sun News
@sunnewstamil
·
#BREAKING | முதல்வர் வேட்பாளரை ஜே.பி நட்டா அறிவிப்பார் - அமைச்சர் மாபா பாண்டியராஜன் பேட்டி #SunNews | @mafoikprajan | #TNElections2021
Image

இதுவும் நேற்றைக்குத்தான்!
 
வெறும் ஊகங்கள் வதந்திகளை வைத்து மட்டுமே இங்கே ஊடகங்கள் தங்களுக்குப் படியளக்கிறவர்கள் அஜெண்டா என்னவோ அதற்கேற்றபடி தம்பட்டம் அடித்து வருவதே தமிழக அரசியல்களம் இன்னமும் சூடு பிடிக்கவில்லை என்பதற்கான அடையாளம்.

மீண்டும் சந்திப்போம்.    

Saturday, December 26, 2020

சின்னச் சின்னதாய்க் கொஞ்சம் செய்திகள்! #அரசியல்களம்

அரசியல் செய்தியா அல்லது செய்தியே அரசியலா என்று குழம்பும் அளவுக்கு, தமிழக அரசியல் களத்தில் நிறையக்  காமெடி சமாசாரங்கள் நடந்து கொண்டே இருக்கும்தான்! அதைமட்டுமே நம்பி, ஆஹா, அரசியல் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது என்று சொல்லிவிட முடியுமா என்ன?! நிகழ் நேர அரசியல் காமெடி அல்லது செய்திகளைக் கொஞ்சம் பார்த்துவிடலாமா?

#உதை_வாங்கிய_உதயநிதி கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!! 





இது நேற்றைக்கே தெரிந்த செய்திதான்! வீடியோ கிடைத்தால் போடலாமே என நினைத்தேன். அரியலூர் மாவட்டத்துக்கு இசுடாலின் மகன் உதயநிதி தேர்தல் பிரசாரம் செய்யப்போனார். G.K  மூப்பனார் தன தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டிக்க கொடுத்த ஒரு பொது அரங்கத்தில் மூப்பனார் பெயரைத் திமுக ஆசாமிகள் மறைத்துவிட்டார்கள் என்ற ஆதங்கத்தில்  தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவாளர்கள் உதயநிதி பயணித்த வாகனத்தை மறித்து, தங்கள் கோபத்தை ஒரு காட்டு காட்டியிருக்கிறார்கள். இதையடுத்து ட்வீட்டரில்  

#உதை_வாங்கிய_உதயநிதி என்ற ஹேஷ்டாக் போட்டு பரவலாகக் கலாய்த்திருப்பதாக இங்கே செய்தி 


சமீபத்தில் இதேமாதிரி பாமகவினரிடம் வாங்கி கட்டிக் கொண்ட தயாநிதி மாறனுக்கு இந்தச் செய்தி எப்படி இருந்திருக்குமோ?  ஊகிக்க முடிந்தால் நீங்களும் அரசியலில் பிஸ்தா தான்! அடுத்த செய்தி முகநூலில் பார்த்தது: பேக்கேஜ் டூர்! இதுவரை கேள்விப்படாத ஒரு விஷயம்.    

இன்னிக்கி அவனவன் குடும்பத்தோட கொஞ்சம் Wine குடிச்சமா, கேக், மட்டன் சாப்பிட்டமான்னு இருக்க விடாம புதுசா புதுசா என்னதடா கிளப்புறீங்க.
இன்று நண்பர் ஒருவர் ஒரு சர்ச் போர்டில் கண்டது :
கிருஸ்மஸ் இன்று சென்னையில் ஏசுவின் நவ க்‌ஷேத்திர யாத்திரை டூர் பேக்கேஜ் ஆரம்பம்!
மவுண்ட், லிட்டில் மவுண்ட், பெஸண்ட் நகர், சாந்தோம், மேரி மாதா சர்ச் (கோட்டை), (அரண்மனைக்காரத் தெரு) உட்பட 9 இடம்! ஒரே நாளில்! தவற விடாதீர்!
எஸ்ரா சற்குணம் சமீபத்தில் புலம்பித்தள்ளிய மாதிரி முந்தைய நாட்களை போல காசு,காணிக்கை இல்லாது ரொம்பவுமே தவிக்கிறார்களோ? 

இசுடாலினாக இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை யாராவது யோசித்துப் பார்த்திருப்போமா? இசுடாலின் சந்தித்து வரும் பிரச்சினைகள் கொஞ்சமா நஞ்சமா? ஆளுக்காள் கட்சி ஆரம்பித்து பயமுறுத்துவது போதாது என்று உடன்பிறந்த அண்ணனும் தனிக்கட்சி தொடங்க இருக்கிறாராம்! ரஜனி தரப்பில் அறிவிப்பு வருகிறதோ இல்லையோ, மு.க.அழகிரி முந்திக்கொள்வார் போல இருக்கிறதே!

வைகுண்ட ஏகாதசியன்று ஏதும் உண்ணும் விரதம் போன்றவற்றை வீரமணி மற்றும் திராவிட கும்பல் தொடுக்கும் என எதிர்பார்த்தால் சத்தமில்லை
இதுபற்றி நம் திராவிட அன்பர்களிடம் விசாரித்தால் நீண்ட அமைதிக்கு பின் தாங்கள் கடுமையாக போராடுவதாக சொல்லிவிட்டு ஓடுகின்றார்கள்
அப்படி என்ன போராட்டம்? என ஒருவனை பிடித்து விசாரித்தால் அவன் இப்படி சொல்லிகொண்டிருகின்றான்
"அண்ணே, வைகுண்ட ஏகாதசி அன்னைக்கு இரவெல்லாம் தூங்காம இருக்கணுமாம், அது மூட நம்பிக்கை
இரவுல மட்டும் அல்ல, பகலிலும் தூங்கினால் ஒன்றும் ஆகாதுண்ணே, அதை நிரூபிக்க எல்லோரும் தூங்கிட்டு இருக்கோம்ணே, போராட்டத்தை கெடுக்காதீங்க..."  

சின்னச் சின்னதாய்க் கொஞ்சம் செய்திகள்! இவ்வளவு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? 

மீண்டும் சந்திப்போம்.    

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)