Saturday, August 31, 2019

செய்திகளோடு கொஞ்சம் உலாவரலாம் வாங்க!

சீன அரசியலைப்பற்றியோ சீன அதிபராக இரண்டாவது முறையாகவும் தொடருகிற ஜி ஜின்பிங் பற்றியும் நாம் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறோம்? என்ன கிண்டலா? பேசினால் காங்கிரசைப்பற்றியே பேசுவது இல்லாவிட்டால் ஏதாவது சீனா கொரியா அமெரிக்கப் பூச்சாண்டி காட்டுவது! இதெல்லாம் சரியில்லை என்று முனகுகிறீர்களா?



நேற்று முன்தினம் பிபிசி 2 சேனலில் ஒளிபரப்பான China: A New World Order என்கிற டாகுமென்டரியின் முதல் பகுதியை  (60 நிமிடம்) பார்க்கிற வாய்ப்பு இன்றைக்குக் கிடைத்தது. 

Rarely has the word-of-mouth surrounding a new Chinese star differed so dramatically from his official résumé. Xi Jinping was anointed in October as the likely successor to President Hu Jintao as party chief in 2012, and his canned bio says little about his family history. But China's gossip mills have been churning overtime. Turns out Xi's dad, revolutionary hero Xi Zhongxun, was purged three times by Mao Zedong and later became a pro-market reformer. He was also one of the few leaders to defend Hu Yaobang, a progressive party chief sacked in 1986, and to condemn the 1989 Tiananmen Square massacre—after which he was rarely seen in public again இப்படி 2012 இல் ஜி ஜின்பிங் கம்யூனிஸ்ட்  கட்சியின் பொதுச்செயலாளராகவும் அதனாலேயே by default சீன அதிபராகவும் ஆன கதையை ஜோனாதன் ஆன்ஸ்ஃபீல்ட் ஆரம்பிக்கிற  விதத்தை இப்போது திரும்பிப் பார்த்தால், அடுக்கடுக்கான பொய்களால் கட்டப்பட்டது சீன அரசியல் என்பது தெளிவாகவே புரிகிறது. சந்தேகமிருந்தால் நீலவண்ணத்தில் இருக்கிற பகுதியை இன்னொருமுறை படித்துப் பாருங்கள்!

ஜி ஜின்பிங் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு அரசின் பிடி (கம்யூனிஸ்ட் கட்சியின் பிடி என்று வாசித்துக் கொள்ளவும்) நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் இறுகிக் கொண்டே வரும் விதத்தை இந்த டாகுமெனடரி கொஞ்சம் எளிமையாகவே சொல்கிறது. அதிபர் பொறுப்புக்கு வந்தவுடனேயே ஊழலுக்கெதிரான நடவடிக்கை என்று பல்லாயிரக்கணக்கான ஜனங்களைச் சித்திரவதை செய்த நாடகம் என்று ஆரம்பித்து கட்சிக்குள்ளும் வெளியிலும் தனக்கு எதிரான குரலை ஒடுக்க ஆரம்பித்ததில் இருந்து,   ஹாங்காங்கில் வலுத்துவரும் போராட்டங்கள், ஜின் ஜியாங் பகுதியில் உய்கர் முஸ்லிம்கள் மீதான அடக்கு முறைகள், என்று ஒருமணிநேரத்தில் கிடைத்த காணொளிகள், அதிருப்தியாளர்கள், சீன விவகார எக்ஸ்பெர்ட்களின் கருத்து என்று ஒரு நல்ல தொகுப்பாக இருந்தது. இதன் 2ஆம் பகுதி செப்டெம்பர் 5 அன்றும், 3வதும் இறுதியுமான எபிசோட் செப்டெம்பர் 12ஆம் தேதியும் ஒளிபரப்பாகிறதாம்! பார்க்க மனமிருப்பவர்களுக்கு மார்க்கமும் உண்டே!


ரிசர்வ் வங்கியின் உபரி இருப்பான 6.8% இலிருந்து 1.3# ஐ மத்திய அரசுக்குக் கொடுத்தது சுரேந்திராவுக்கு பொறுக்க முடியவில்லை என்றால் கீழே இவருக்கு வேறு மாதிரி!   


ங்கி ஊழியர் சங்கத்தலைவராக இருந்தால் காமெடிப் பீசாக இருக்கக்கூடாதென்று யார் சொன்னார்கள்? AIBEA வின் CHV என்று இனிஷியலால் அழைக்கப்படுகிற C H வெங்கடாசலம், "இந்த வங்கி இணைப்பு மூலம் எந்தவிதமான பலனும் கிடைக்காது. மாறாக, 5 துணை வங்கிகளை ஸ்டேட் வங்கியுடன் இணைத்த பின், வங்கியின் வாராக்கடன்தான் அதிகரித்துள்ளது.நிரவ் மோடியின் மோசடியை கண்டுபிடிக்க பஞ்சாப் நேஷனல் வங்கி தவறிவிட்டது, அப்படியிருக்கும் வங்கிகள் எவ்வாறு மிகப்பெரியதாக மாற்றும் போது, எவ்வாறு சிறந்த கண்காணிப்பில் ஈடுபடமுடியும்?". இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் வங்கி இணைப்பைக் கண்டித்து இன்று பிற்பகலில் சென்னையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். மேலும் தனியார் மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் மத்திய அரசின் முடிவை எதிர்த்து கறுப்பு பட்டை அணிந்து பணிக்கு வருவார்கள் என்றும் வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார் என்று இந்துதமிழ் திசை நாளிதழ் தகவல் சொல்கிறது. CHVயால் முடிந்தது ஆர்ப்பாட்டமும், அதிகபட்சம் ஓரிருநாள் வேலைநிறுத்தம் என்ற அடுத்தகட்ட காமெடி மட்டும் தான்!


இந்தவிவகாரத்தில் எனக்கொரு கருத்துமில்லை! ஆனால் முகநூலில் ஏதோ புகைந்து கொண்டே இருக்கிறது போல!
             

இந்த செய்தியைப் ஒட்டு பதிவர் வால் பையன் தனக்குத்தானே ஈரோட்டு Tao என்று பட்டம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்! ஈரோடு என்றால் சாதாரணமாக நினைவுக்கு வருவது வெங்காயம் தானே! இது என்ன புதுசா?


துரை புத்தகத்திருவிழா நேற்றைக்கே ஆரம்பித்து விட்டது போல! எனக்குப் போய்வருகிற வாய்ப்பில்லை. யாராவது புத்தக அபிமானம் உள்ள மதுரைப்பதிவர் எவராவது தினசரி நிகழ்வுகளைப் பதிவு செய்கிறார்களா என்று பார்க்கலாம்! அதெல்லாம் சென்னைப் புத்தகக்  கண்காட்சிக்குத்தான் என்று சொல்கிறீர்களா?  டெல்லி அப்பளம் கான்டீன் அங்கே மட்டும்தானா?

மீண்டும் சந்திப்போம்.
                          

Friday, August 30, 2019

ச்சும்மா ஜாலிக்கு! கொஞ்சம் சினிமா! கொஞ்சம்போல விமரிசனம்!

ச்ச்சும்மா ஜாலிக்கு என்று ஆரம்பித்தாலும், பதிவின் முக்கியமான செய்தியே வேறு! என்னவென்று கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள்! இன்றைக்கு இரண்டு படங்கள், அதுவும் மிகப்பழைய படங்களை விமரிசனத்துக்கு எடுத்துக் கொள்ளப்போகிறோம்! விமரிசனம் என்றால் மிகச்சிறியதாக மட்டுமே! பயம் வேண்டாம்! 😂😱🙏  


ரிலீசாகி 71 வருடங்களை நிறைவு செய்யப்போகிற சபாபதி என்கிற நகைச்சுவைப் படத்தை இன்று பார்த்தாலும் கூட, வாய்விட்டுச் சிரிக்காமல் இருக்க முடியாது என்பது நான் தரும் காரண்டீ! மேலே சாம்பிளுக்குக் காட்டுகிற 39 நிமிட ஒளித் துண்டைப் பார்த்தீர்களானால் என்னைப்போல நீங்களும் கூட காரண்டீ கொடுப்பீர்கள்! 

சபாபதி! இது கதாநாயகன் TR ராமச்சந்திரன், அவரது வேலைக்காரன் காளி N ரத்தினம் இருவருக்கும் ஒரே பெயர்! கதாநாயகன் வசதியான, படிப்பில் கொஞ்சமும் அக்கறை காட்டாத, நண்பர்களோடு சீரியஸாக  லூட்டி அடிக்கிற ரகம்! வேலைக்காரன் படிப்பறிவே இல்லாத சொன்னதைச் சொன்னபடி செய்கிற தற்குறி! சொற்படி கேட்பது நல்லது தானே என்கிறீர்களா? சோடா உடைத்துக் கொண்டுவா என்று எஜமானன் சொன்னால் குண்டு சோடா பாட்டிலை சுத்தியலால் உடைத்துத் தட்டில் வைத்துக் கொண்டு வருகிற ரகம்! இப்படிக் கதாநாயகனும் வேலைக்காரனுமாக லூட்டி அடித்துக் கொண்டிருந்தால் எப்படி? கூடவே காமெடி லூட்டி அடிப்பதற்காக தமிழாசிரியர் சின்னசாமி முதலியாராக வரும்  K சாரங்கபாணி முதல் தோசை ராமன் என்கிற சின்னக் கேரக்டர் (நடித்தவர் பெயர் தெரியவில்லை) வரை ஒரு சின்னப் பட்டாளமே காமெடி செய்து கலக்குகிறது. 

படிப்பில் மந்தமான அம்மா செல்லம் கொடுத்துக் கெடுத்த மந்தபுத்தியுள்ள கதாநாயகனுக்கு கல்யாணம் செய்து வைக்கிறார்கள். பெண் சிவகாமு (R பத்மா)   நன்றாகப் படிக்கிறவள். கதாநாயகன் திருமணமான பின்னும் கூட அதே மாதிரிப் பொறுப்பில்லாதவனாகத் தான் இருக்கிறான். கதா     நாயகி வீட்டு வேலைக்காரி குண்டுமுத்து (CT ராஜகாந்தம்) வேலைக்காரன் சபாபதியோடு காதலாகிறாள். இந்த இருபெண்களும் எப்படித் தங்கள் கணவன்மார்களை common sense உள்ளவர்களாக மாற்றுகிறார்கள் என்பதுதான் கதை. கதாநாயகன் வெற்றிகரமாக பள்ளிப்படிப்பை பாஸ் .செய்து முடித்து விடுகிறான். வெறும் நாற்பதாயிரம் ரூபாய் பட்ஜெட்டுக்குள் மொத்தப்படமும் முடிந்து AV மெய்யப்ப செட்டியாருக்குக் காசை அள்ளிக்  கொடுத்த படம் இது. படத்தில் PA பெரியநாயகி பாட வயலின் மிருதங்கம் இவற்றையும் பெண்களே வாசிக்கிற மினிகச்சேரி படத்தின் இன்னொரு ஸ்பெஷல் பம்மல் சம்மந்த முதலியார் 1908 இல் எழுதிய முதல் கதை என்பது கூடுதல் விசேஷம். யூட்யூபிலேயே தேடினால் முழுப்படமும் நல்ல பிரிண்டில் கிடைக்கும். 


சபாபதி படம் கொடுத்த வெற்றி, தெம்பில் AV M செட்டியார் அதேபோல இன்னொரு காமெடிப்படத்தைத் தயாரிக்க விரும்பி எடுத்த படம்  என் மனைவி 1942 இல் வெளியான படம் K சாரங்கபாணி மனைவி மீது சந்தேகம் கொள்வதில் எழுகிற சம்பவங்களைக் காமெடியில் கோர்த்து எடுத்த படம். ஒரு மராத்தி கதையை பட இயக்குனரே திரைக்கதை எழுதி எடுத்த படம்  12 பாடல்கள் என்று வஞ்சனையே இல்லாமல் பாடல்களோடு வந்த படம்.

  
சங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப்போறேன் என்ற இந்தப்படப்பாடல் மிகவுமே பிரபலமானதாக இருந்ததாம்.


அறுபது வயது முதியவரான இந்தப் பழம்பெரும் கிழம் சாரங்கபாணி எந்தச் சிங்காரியை ஒய்யாரியை மயக்க இப்படித் தன்னை அலங்கரிக்கிறது என்று தான் தெரியவில்லை! என்ற குறிப்போடு நாம் இருவர் படத்திலிருந்து இந்த அரைநிமிட வீடியோவை வலையேற்றிய Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI அதிசயிக்கிறார் பாருங்கள்! அதுதான் இந்தப்பதிவில் பேச வந்த முக்கியமான சங்கதி!

கும்பகோணத்துக்காரரரான கே சாரங்கபாணி 1904 இல் பிறந்தவர். இசை வேளாளர். நாடகத்துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர்.கலைவாணர் NS கிருஷ்ணனைப் போல பன்முகத்திறமை கொண்டவர். 1935 இல் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை தயாரித்த பக்த ராம்தாஸ் படத்தில் தான் திரைப்பட அறிமுகம். பெரும்பாலும் நகைச்சுவை பாத்திரங்களிலேயே நடித்திருந்தாலும், சில படங்களில் கதாநாயகனாகவும், வில்லனாகவும் கூட  நடித்திருக்கிறார். எண்பது வயது வரை வாழ்ந்த கே சாரங்கபாணி நடிகர் தியாகுவின் தாத்தா என்பது தெரியுமோ? 


தில்லானா மோகனாம்பாள் படத்தின் இந்த கிளிப் சாரங்க பாணி பாவத்தோடு தவில் வாசிப்பதில் இருந்துதான் ஆரம்பம்.

Randor Guy என்ற புனைபெயரில் சினிமா விஷயங்களை மிக சுவாரசியமாக எழுதுகிற எழுத்தாளர் கே  சாரங்கபாணி பற்றியும்  சில  தகவலைச் சொல்கிறார். 

Sarangapani played 10 roles in a short film known in those days as ‘farces,’ which was screened along with the main movie. In some cases, the farces were more interesting than the main film! Sarangapani even played female roles in the ‘Milagaipodi’ farce! (Milagaipodi means red chilli powder!) His very first appearance in the farce was a hit, as he was already a noted theatre comedian.   

ஒரு நல்ல கலைஞனை நினைவு படுத்திக் கொள்வதற்காக.

மீண்டும் சந்திப்போம். 
  

Thursday, August 29, 2019

ஓடி வாங்க! பூச்சாண்டி பார்க்கலாம்!

டொனால்ட் ட்ரம்ப்புக்குப் பிடித்தமான அரசியல் பொழுது போக்கு, சீனாவுடன் மட்டுமல்ல, எல்லாநாடுகளுடனும் ஒரு வர்த்தகப் போரில் இறங்குவதுதான்! America First என்ற தேர்தல் கோஷத்தை இன்னமும் விடாமல் பிடித்துக்கொண்டு மல்லுக கட்டிக்கொண்டே இருக்கிறார். சீனா வருகிற  செப்டெம்பரில் அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையைப்பற்றி விவாதித்துக் கொண்டிருக்கையில் The US trade agency has confirmed President Donald Trump's higher tariffs on $US300 billion worth of Chinese goods will proceed as previously announced.என்ற செய்தியும் வந்தால் என்ன செய்வார்கள்? 



சீனத்துச் சண்டியர் யார் யாரிடம் தன்னுடைய உதார் எடுபடும் அல்லது எடுபடாது என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்! வெட்டி உதாரெல்லாம் அமெரிக்காவிடம் பலிக்காது என்பதால் மிகவும் பொறுமையாகப் போகிறமாதிரியே போக்குக்காட்டி அப்புறம் வாய்ப்புக் கிடைக்கிற நேரத்தில் நிதானமாக வைத்துச் செய்வார் .பூச்சாண்டி காட்டுவதில் அமெரிக்கர்களை விடச் சீனர்கள் அனுபவசாலிகள்!

இது அக்கம் பக்கம்! என்ன சேதி! தளத்துக்காக இன்று எழுதிய பதிவின் ஒருபகுதி!  

இங்கே விரிவாகப்படிக்கலாம்.

இந்தப்பக்கங்களை புக்மார்க் செய்துகொள்வதுடன் நண்பர் குழாத்துக்கும் பரிந்துரை செய்வீர்கள் தானே!

நன்றி. மீண்டும் சந்திப்போம்.
   
  

Wednesday, August 28, 2019

காமெடிப்பீசாகும் சிதம்பரம்! காங்கிரஸ்!

சிதம்பரத்திடம் சிபிஐ கேட்டதாக தினமலர் இப்படி ஒரு வீடியோவில் ஸ்லைடு போட்டுச் சொல்கிறது! நிஐமாகவே இதெல்லாம் சிபிஐ கேட்டதுதானா அல்லது வெற்று ஊகங்களா என்றெல்லாம் கேட்காதீர்கள்! செட்டி நாட்டு ராஜபரம்பரை (செட்டிநாடென்று சொல்வது நிஜமா கற்பிதமா?) மிதமிஞ்சிய வாய்க்கொழுப்பால் ஒரே நாளில் தலைமறைவாக ஓடி ஒளிந்து காமெடிப் பீசாகி நின்றதுதான் மிச்சம்! 



செட்டிநாட்டரசு  வாரிசு ஏ சி முத்தையா சிண்டிகேட் வங்கியில் 103 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சிபிஐ கடந்த ஜூன் மாதமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டது. எப்படிச் செய்தார்கள் என்ற விவரணையை லிங்கில் பாருங்கள்! இந்த லட்சணத்தில் ஊழல் மோசடி செய்து சம்பாதிக்கவேண்டிய அவசியம் எங்கள் குடும்பத்துக்கு இல்லையென்று மாயாண்டி குடும்பத்தார் மாதிரி சிதம்பரம் குடும்பத்தார் அறிக்கையைப் பார்த்து எத்தால் சிரிப்பது? போதாக்குறைக்கு காங்கிரசை அழிக்க சிதம்பரம் கைது நடவடிக்கையைப் பயன்படுத்துகிறார்கள் என்ற காமெடி வேறு!

காங்கிரஸ் கதை ஏற்கெனெவே கந்தல்கந்தலாகிக் கொண்டு இருப்பதில் சிதம்பரம் கைதும் ஒரு கந்தல்தான்! முக்கியமான கந்தல் சோனியாG & வாரிசுகள் மட்டுமே! நரேந்திர மோடியை எதிர்க்கிறேனென்று இந்தக்குடும்பம் எதிரிகளுக்கு இடம் கொடுத்துப் பேசிவந்தது இப்போது அவர்களைச்சுற்றிச்சுற்றி வந்து பாம்பாய்க் கொத்துகிறது.

காஷ்மீர் குறித்த... காங்கிரஸ் கட்சி + ராகுல்காந்தியின் அறிக்கைகளை ..
பாகிஸ்தானின் பொதுமேடைகளிலும், நாடாளுமன்றத்திலும், தொலைக்காட்சிகளிலும், ரேடியோவிலும்.... உதாரணமாக காட்டிக் காட்டி இம்ரானும், அங்குள்ள கட்சிகளும் பேசிக் கொண்டிருந்த வரை ...மேலும் மேலும் அதே தொனியில் பேசிக் கொண்டிருந்த ராகுல் காந்தி..
தன்னுடைய டீவீட்டை ஆதாரமாக இணைத்து..ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் பாகிஸ்தான் புகார் அளித்த பிறகு தான்...
இந்திய மக்களிடம் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஏற்படும் அரசியல் விளைவு புரிய ஆரம்பித்திருக்கிறது போலும் !
அவசரஅவசரமாக ட்வீட் மூலம் மறுப்பு வெளியிடுகிறார் ராகுல் .ஏற்கனவே ...காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு எம் பி.யை பாராளுமன்றத்தில் 'காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானிற்கும் உரிமை உண்டு' என்று பேச வைத்து. அதையும் ஒரு ஆதாரமாக பாகிஸ்தான் உலக அரங்கிற்கு எடுத்து சென்றது.
இப்போது ராகுல் .
குதிரை வெளியே ஓடிப் போன பிறகு லாயத்தின் கதவை பூட்டிய கதை தான்.      


நாடாளுமன்றத்துக்கோ காங்கிரஸ் திமுக சேக்காளிகளுக்கோ கூடச் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை! கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யாவுக்கு மட்டுமாவது பிளான் என்னவென்பதைச் சொல்லி விடுங்கள்! மனிதர் இப்படிப் புரியாத கார்டூனாகப் போட்டுக் கொல்லுகிறார் என்று பிரதமர் உள்துறை அமைச்சர் இருவருக்கும் ஆன்லைன் பெட்டிஷன் ஒன்று போட்டு விடலாமா?


போகன் சங்கர் எப்போதாவதுதான் அரசியல் பேசுவார்! அதனால் இதில் எந்தக் குறியீட்டையும் தேடாதீர்கள்! 


பாகிஸ்தான ராகுல் காண்டியை அப்பட்டமாக மேற்கோள் காட்டி  ஐநா சபை வரை கொண்டுபோனபிறகுதான் யாரோ எச்சரிக்கைமணி அடிக்கப்போய்தான் ராகுல் காண்டி U turn அடித்திருக்கிறார்! மற்றப்படி  ஜனங்களுடைய உணர்வையோ அரசியலையோ புரிந்துகொள்கிற அளவுக்கு  சோனியாG & வாரிசுகளுக்கு அம்புட்டு அறிவு பத்தாது என்பது ராஜா காது கழுதைக் காது கதைதான்! அந்தக்கதை என்னவென்று இங்கே! 
  


கதையில் வருகிற ராஜா புரிந்துகொள்கிறான்! அனால் வாரிசுகள்......? புரிந்துகொள்வதைக் கூட அடிமைகள் செய்ய வேண்டிய ஒன்றாக நினைப்பது நேரு பாரம்பரிய மேட்டிமைத் தனம்!

மீண்டும் சந்திப்போம்.
   

ச்சும்மா ஜாலிக்கு! ஒரு முழுநீள திமுக காமெடி! ஒரு போனஸ் காமெடி!

நேற்று முன்தினம் நியூஸ் 7 சேனலில் கேள்விநேரம் நிகழ்ச்சியில் இந்தக் காமெடியை நேரலையில் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, வேறு சில விஷயங்கள் படிக்க வேண்டிய பட்டியலில் குவிந்து விட்டதால், முக்கியமான விஷயங்களில் கவனம் மாறியதில் இந்தக் காமெடியை மிஸ்பண்ணி விட்டோமோ என்ற சந்தேகம் உறுத்திக் கொண்டிருந்ததால் இன்றைக்குப் பார்த்தாகிவிட்டது. 



இசுடாலின் திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்று இன்று ஓராண்டு நிறைவு செய்திருப்பதை ஒட்டி தினத்தந்தி இந்த ஓராண்டில் இசுடாலின் என்னசாதித்தார் என்று விளக்கமாக ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது.மிக முக்கியமான சாதனைகளான. அண்ணன் அழகிரியை ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டியது, உதயநிதியை இளைஞரணிச் செயலாளராக ஆக்கி அடுத்தவாரிசு இவர்தான் என்று சூசகமாக  அறிவித்ததை விட்டு விட்டார்களே என்பதுதான் கொஞ்சம் வருத்தம்! அந்த வருத்தத்தைப் போக்கிக் கொள்ள இந்தக் காமெடியை உடனே பார்த்தாகவேண்டுமென்று முடிவு செய்த வரலாற்றுச்சிறப்பு மிக்க அந்தத்தருணம் வந்தது இப்படித்தான்! வீடியோ 56 நிமிடம்! ஒருமுழுநீளக் காமெடிக்கு  நான் காரண்டீ!



காவேரி நியூஸ் சேனலைப் பிரபலமாக்கிக் கொண்டிருக்கும் அதன் இணை ஆசிரியர் மதன் ரவிச்சந்திரன் இதற்கு முன்னால் நியூஸ் 7 சேனலில் இருந்த நாட்களிலும் கூட இப்போது இருக்கிற மாதிரித்தான் இருந்திருக்கிறார்! ஒரு 10 நிமிடக் காமெடி கூடுதலாக! இந்த வீடியோவுக்கு வந்த நச் கமெண்டுகளில் 2 மட்டும் 


நிருபர் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. ஓம் ஓம் ஓம்

91


Hide replies

Prem Kumar

Ippo neenga sonnathu unmai aagiduchu...Carvery news la mass kaatraru

போனவருடமே இந்த வீடியோவில் இசுடாலின் எதிர்காலம் எப்படி என்று  கி வீரமணி ஆரூடம் சொல்லியிருப்பது  தற்செயல்தான்! 

இரண்டு காமெடிகளையும் பார்த்துவிட்டு எப்படி இருந்தது என்பதைச் சொல்வீர்களா?

மீண்டும் சந்திப்போம்.
            

Tuesday, August 27, 2019

#அரசியல் இன்று! செய்திகளின் அரசியல்!

ஹினா ரப்பானி கர்! இங்கே சோனியாG காங்கிரஸ் கட்சி ஆட்சியில் எஸ் எம் கிருஷ்ணா வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது அம்மணி பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை ராஜாங்க அமைச்சராக (MoS) இருந்தார்! நினைவுகள் பின்னோக்கிப் பறந்ததில் ஒரு பழைய செய்தி உடனடியாக நினைவுக்கு! இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினார்  -- செய்தி! 
டம்மிப் பீஸ் மன்மோகன் சிங்குக்கு எஸ்எம் கிருஷ்ணா மாதிரி லோ கிளாஸ் அமைச்சர்களைத் திருத்தும் உரிமை மட்டும் தான் காங்கிரசில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது போல!

ஓட்டை வாய் திக்விஜய் சிங், கபில் சிபல் அல்லது வாய்க்கொழுப்பு பானாசீனா முதலானோர் உளறுவதற்கெல்லாம் விளக்கம் அல்லது திருத்தம் செய்வதற்கு அனுமதி இல்லையாமா?! இப்படி இங்கும் வேறு இரண்டல்லது மூன்று பதிவுகளில் எஉடனடியாக ஸ் எம் கிருஷ்ணா பற்றிப் பேசியிருப்பது நினைவுக்கு வருகிறது. 



இது அம்மணி பாகிஸ்தானின் தேசிய அசெம்பிளியில் பேசியது::  "Our PM went to lengths to explain Japan and Germany are neighbours. Geography tells us that Japan is in East Asia and Germany is in Europe. He claims Japan and Germany were adversaries during World War 2, but history has it that they were both, in fact, collaborators,"

"We are not worried about ourselves but we can no longer see you making Pakistan a laughing stock in the world. You can't expect us to support you when you make stupid statements," Rabbani continues."We cannot show our faces to the world anymore. If you're immature and need training in statecraft, first get yourself trained and then become an elected PM," என்று இந்த வீடியோவில் பாகிஸ்தானிய பிரதமரைச் சுடுகிறார். மிகச் சமீபத்தையதுதான் என்று இந்த ட்வீட்டர் செய்தியில் தெரிய வருகிறது. 


அழைப்பு விடுக்கப்பட்டது எவரால் என்று இங்கே தெளிவாகச் சொல்கிறார்கள். எங்கே போனாலும் கூடவே  துண்டுச்சீட்டு இல்லாமலா? ஜமாய்க்கட்டும்!  ஆனால் ஹரன் பிரசன்னா வேறு மாதிரி தகவல் சொல்கிறாரே!
) //தந்தி செய்தியும் ஐநா கடிதமும் தெரியப் Uடுத்தும் தகவல்களில் எவ்வளவு பெரிய வித்யாசம் பாருங்க.//


படித்ததில் பிடித்தது! 


காட்சி #1

”ஊடகங்களில் ஒரு ஊடகவியலாளர் நடுநிலையாக இருந்து கருத்துரைக்க வேண்டுமென்பது தான் அறம் .அதனாலேயே அவருக்குச் சொந்த கருத்தோ அல்லது அரசியல் பார்வையோ இருக்கக் கூடாது என்பது தவறானது. இதர குடிமக்களுக்கு உள்ள அனைத்து அரசியல் உரிமைகளும் ஊடகவியலாளர்களுக்கும் உண்டு.”

- இது 2013-ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் பணிபுரிந்த வீரபாண்டியன் என்பவர் தொடர்ந்து ஹிந்து மதம் மீது பகிரங்க தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்பின் காரணமாக அவர் நடத்திய நிகழ்ச்சி சன் டிவியில் நிறுத்தப்பட்ட போது விடுதலைச் சிறுத்தைகள் தொல்திருமா, சுபவீரபாண்டியன், கி. வீரமணி, எஸ்ரா சற்குணம் உள்ளிட்டோர் வெளியிட்ட அறிக்கையில் வந்தது.

***
காட்சி #2
சமீபத்தில் காவேரி தொலைக்காட்சியில் மதன் என்பவர் தொல்திருமா, எஸ்ரா சற்குணம், சுபவீ ஆகியோரிடம் பேட்டி எடுத்தார். அதில் பல கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளிக்க முடியாமல் திணறிப் போனார்கள்.
சுபவீ பேட்டி வெளியிடப்படக்கூடாது என்று அந்த தொலைக் காட்சியில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஜென்ராம் என்பவர் எதிர்ப்பு தெரிவித்திருந்திருக்கிறார். அங்கே பணியாற்றிய மிகச் சிலரும் கூட எதிர்ப்பு தெரிவித்து கருப்பு உடை அணிந்து சென்றார்களாம். இப்போது காவேரி தொலைக்காட்சிக்கு பல விதங்களில் நெருக்கடி கொடுத்து அந்த தொலைக்காட்சி சானலையே இழுத்து மூட வைக்குமளவிற்கு ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதுதான் இந்த ஆட்களின் கருத்து சுதந்திர லட்சணம். 


திமுகவை தனி ஒருவனாக நின்று அம்பலப்படுத்தி எழுதியும் வீடியோ பகிர்வுகளுமாகச் செயல்பட்டு வந்த M மாரிதாஸ் மீது திமுக அவதூறு புகார் அளித்திருப்பதில் ஆச்சரியமில்லை.

இவர் திமுக ஐடி விங்கின் மாநில துணை செயலாளராக இருப்பதாக முகநூல் சுவற்றில் விவரம் இருக்கிறது.


ஆட்சியில் இல்லாதபோதே இப்படி!

மீண்டும் சந்திப்போம்.
      

Monday, August 26, 2019

பதிவர் குணாதிசயங்கள்! ஒரு மீள்பதிவு!




இப்போதைக்கு  இது போதும் - இன்ஸ்டால்மென்டு   2  இன் மீள்பதிவு இது இப்போதைக்கு இது போதும் - இன்ஸ்டால்மெண்டு 1 

இதிலேயே பதிவுகளைப் பற்றி டாக்டர் பட்ட ஆராய்ச்சியெல்லாம் பண்ணி முடிச்ச பிறகு, இப்ப வந்து, நான் ஆராய்ச்சி பண்ணப் போறேன், உதவி செய் என்றால் நக்கல் அடிக்கிற  மாதிரி  இருக்குமா, இருக்காதா?!  வால் பையன் வேறு கூட சேர்ந்து நக்கலடிக்கிறார்! நான் ஆறு வருஷமாக் கழட்ட முடியாத பாட்டில் மூடியை, அவரை மாதிரி யூத்துங்கல்லாம் ஆறு வினாடிகளிலேயே கழட்டிடராங்களாம்! அவரால பாட்டில் மூடியைக் கழட்ட முடிஞ்சது.....

வால் பையனுக்கு உலக மகா டாக்டர் பட்டம் கொடுக்கப் பரிந்துரை செய்ய, உங்கள் ஆதரவைப் பின்னூட்டங்களில் சொல்லுங்கள்!

 
................நம்மால கழட்ட முடிஞ்சது  இங்கே!!

"ஏதோ வலைப் பதிவுகளைத் திரட்டுற திரட்டிகளைப் பத்திக் கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்த மாதிரி இருந்ததே! அதுக்காக இரண்டு திரட்டிகளில் கூட இணைஞ்ச மாதிரி இருந்ததே? புதிதாக ஏதாவது தெரிஞ்சதா, இல்லை, எல்லோரும் பாடும் பதிவுப் பாட்டுத்தானா?"

புள்ளிராஜா வங்கி தந்த புள்ளிவிவரச் சிங்கம், புள்ளி வைத்தவுடனேயோ, வைப்பதற்கு முன்னாலேயோ, புள்ளிக்கே புள்ளி வருமா, எப்பெப்போ என்னென்ன கலர்களில் வரும் என்பதையெல்லாம் புட்டுப் புட்டு வைக்கும் நண்பர், 
இன்றைக்கு என்னவோ நேரடியாகவே, விஷயத்திற்கு வந்து விட்டார்.

"அது என்ன பதிவுப் பாட்டு? பதியாதபாட்டு??"
 என்றேன் நான். வந்ததும் வராததுமாக புள்ளிவிவரங்களில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. எதற்கு வம்பு?

"எந்த ஒலகத்துல இருக்கே நீ? சினிமாவெல்லாம்பாக்குறதே இல்லையா?"
 

நண்பர் கொஞ்சம் அதிர்ச்சியுடனேயே கேட்ட மாதிரி இருந்தது. அவர் நினைத்த உலகத்தில் இல்லாமல் போய்விட்டால், அப்புறம் யாரிடம் புள்ளிவிவர மூட்டையை அவிழ்த்து விடுவது என்று பயத்துடனேயே கேட்ட மாதிரியும் இருந்தது.

"அதுதான் நிறைய சினிமாவுல கதாநாயகன் குடும்பத்துக்கு மட்டும்னு ஒரு குடும்பப் பாட்டு இருக்கும், காணாமப் போனவுங்க,
 இங்க ஒத்தர் அண்ணா சாலையில அந்தப் பாட்டபடிச்சாருன்னா, அமெரிக்காவுல இருக்குற இன்னொருத்தர் அதைக் கேட்டு "அண்ணா"ன்னு ஓடிவந்து கட்டிப் புடிச்சுச் சேந்துக்குவாங்களே ....அந்தமாதிரி, ஏதோ ஒரு திரட்டியில, ஒருத்தரோட பதிவுக்கு முக்கியத்துவம் கிடைக்கலைன்னாலும், அல்லது வேறு யாரோட பதிவுக்கு ரொம்ப முக்கியத்துவம் கிடைச்சாலும், தன்னோட பதிவுல ஒரு பாட்டுப் படிப்பாங்களே, அது தான் பதிவுப் பாட்டு! 

இதுகூடத் தெரியாம, நீங்க எல்லாம் என்ன பதிவு போடறீங்க, என்னத்த எழுதறீங்க?"

நண்பரை மேலும் பேச விட்டால் நக்கல் கொஞ்சம் அதிகமாகி விடும் என்பது தெரியும், இருந்தாலும் நான் என்ன செய்ய முடியும்? விதி வலியது என்பதை நினைத்து ஆறுதல் கொள்ளலாம் என்றால், நண்பர் விடுவதாகவே இல்லை.
 

லாப்டாப்பை எடுத்துக் கொண்டார். கணக்குப் போட ஆரம்பித்தார். சரி இன்னைக்கும் கிளிஞ்சது கிருஷ்ணகிரின்னு வாயை மூடிக் கொண்டு நண்பர் உதிர்க்கப் போகும் புள்ளி விவரத்தை பயபக்தியுடன் கேட்பது போல பாவனை செய்யக் கஷ்டப்பட்டு முயற்சி செய்து கொண்டிருந்தேன்.
 

"அது ஏன் எப்பவுமே கிருஷ்ணகிரியே கிளிஞ்சிட்டிருக்கனும்னு தானே நினைக்கிறே? வேற ஊர் எதுவும் மாட்டலையானும் நினைக்கிற இல்லே?"
 

எதுவோ முன்னால போனாக் கடிக்கும், பின்னால வந்தா உதைக்கும்னு சொல்வாங்க இல்லையா?அதேமாதிரித் தான், இந்தப் புள்ளி விவர ஆசாமிங்களும்னு தெரியும்
 

வெளியில சொல்லிற முடியுமா? பாருங்க! ஏறின விலைவாசி அப்படியே ஏறினபடிக்கே இருக்கும், ஆனாக்க நம்ம அரசாங்கம் வெளியிடுற புள்ளிவிவரம் பாத்தாக்க, பண வீக்கம் கொறஞ்சுகிட்டே இருக்கும், ஆனாக்க விலைவாசிப் புள்ளி கூடுற மாதிரிக் கூடி, அப்புறம் கொறயும்!
 எல்லாம் அந்தப் புள்ளிவிவரத்தோட மகிமை அது! 

புள்ளிவிவரமும் கூடக் கடவுள் மாதிரி! மணியாட்டிக் கற்பூரம் காட்டி இருக்குங்கிற மாதிரியும் காட்டலாம்! இல்லேன்னாக்கப் பகுத்தறிவுப் பகலவனாகி, கிளிப்பிள்ளை மாதிரி இல்லை இல்லைன்னு சொல்லிக் கிட்டே இருந்தாக்க, இல்லைன்னும் ஆக்கிப்புடலாம்!!

இதுனாலதான், புள்ளிராஜா வங்கியில, தினப்படி, வாராந்திர, மாதாந்திர, அப்புறம் நிமிஷத்துக்கொரு தரம் ஸ்டேட்மென்ட் போடற வேலையை அவ்வளவு பயபக்தியோட, எவ்வளவு தப்பாச் செய்ய முடியுமோ அவ்வளவு தப்போட இன்னிக்கும் செஞ்சு கிட்டே இருக்காங்க  போல!
 

நண்பர் நல்ல மூடில் இருந்தார் என்பது, ஜோசியம் பார்க்கிற மாதிரிக் கை விரல்களை நீட்டி மடக்கிக் கணக்குப் போடுவது போல ஒரு பாவனையில் சுகமாக இருப்பதிலேயே தெரிந்தது.
 

"எல்லாஞ்சரிதான் அண்ணாச்சி, சொல்ல வந்ததைச் சொல்லிப்புடுங்க! அதுக்கு ஏன் குடும்பப் பாட்டு, பதிவுப் பாட்டுன்னு பாட்டுப் பாடிப் பயமுறுத்தறீங்க?" என்றேன். என்னுடைய திடீர் தைரியத்தைக் கண்டு நண்பர் கொஞ்சம் அசந்துபோயிருக்க வேண்டும்!
 

"சமீப காலமாத் தமிழ்ப் பதிவர்கள் ஒலகத்துல, ஹிட்ஸ் பத்தின கணக்கு, அது சும்மா கள்ளக் கணக்குல்லேன்னு அதன் மேல கமென்ட், அப்புறம், இந்தத் திரட்டி இன்னாருக்குச் சார்பாவே போயிட்டிருக்கு, இல்லே எனக்கு எதிரா சதிபண்ணுது , இப்படிப் பரபரப்பா எத்தையாவது கிளப்பிக் கொண்டே இருக்கறது தான் ஃபேஷன், தெரியுமா ஒனக்கு?"
 

"அத்தைத் தெரிஞ்சு நான் என்ன செய்யப்போறேன் அண்ணாச்சி, நீங்க என்ன சொல்ல வாரீங்கங்கறதை மட்டும் பேசுங்க."
  

என்னுடைய தைரியத்தைக் கண்டு, இப்ப எனக்கே ஆச்சரியம் வந்திட்டது!

"இப்ப ஒன்னோட பதிவையே எடுத்துக்குவமே! போன ஜூன் மாசத்தில நடுவுல தான் ஒன்னோட பதிவத் திரட்டிகளில் இணைச்சிருக்கே இல்லையா?"
 

லாப்டாப்பைத் திறந்து, அண்ணாச்சி தேட ஆரம்பித்தார். நான் பேசாமல் இருந்தேன்.
 

"ஜூன் மாசம் திரட்டிகளில் இணைக்கிறதுக்கு முன்னாடி, கிட்டத்தட்ட ஒம்போது மாசம், அறுபது பதிவுகள்னு எழுதியிருந்தும் கூட ஹிட்ஸ் பாத்தா வெறும் மூவாயிரம் தான் இல்லியா? அதுலயும், நீ வந்து பாத்தது, கமெண்ட்ஸ் ஏதாவது இருந்தா பதில் சொல்ல வந்தது இப்படி அப்படின்னு ஒரு 25 பெர் சென்ட் கழிச்சாக் கூட, ஒரு ரெண்டாயிரம், ரெண்டாயிரத்து இருநூறுன்னுதான் தேறும் இல்லியா?"
 

"சரிதான். அதுக்கென்ன இப்போ?"
 

"
 ஜூலை மாசம் 15 ஆம் தேதி வேணும்னே ஒரு தலைப்பை வச்சு விளையாட ஆரம்பிச்ச பொறவுதானே சூடு பிடிக்க ஆரம்பிச்சுது இல்லியா?"

"இப்படி இன்னும் எத்தனை தடவ இல்லியா, இல்லியான்னே கேட்டுகிட்டே இருக்கப் போறீங்க அண்ணாச்சி? புள்ளிவிவரம் இந்தச் சின்னக் கணக்குப் பாக்கிறதுக்குத் தானா? இல்ல, வேற உருப்படியான சோலி எதுனாச்சும் இருந்தாப் பாப்பமா?" என்றேன்.

உள்ளூர எனக்கு அழுகை அழுகையாக வந்தது. பிரபலப் பதிவர், பரபரப்பான பதிவர் ஆகுற யோக்கியதை, எனக்கில்லே, சொக்கா, எனக்கில்லேன்னு திருவிளையாடல் நாகேஷ் மாதிரியோ, வேற வீராவேசமான பதிவருங்க மாதிரியோ கோவில் பிரகாரம், பார்க், பீச்சுன்னு திரிய முடியுமா? 


பத்தாக் குறைக்கு, பார்க்,பீச்செல்லாம் கூடத் தமிழ் நாட்டுல இட ஒதுக்கீட்டின் கீழ் வந்து விட்டதாக பதிவர் டோண்டு ராகவன் கேள்வி பதில் பகுதியில் சொல்லியிருக்கார்! பைனான்ஸ் கம்பனியில எமாந்தவங்களுக்குப் பனகல் பார்க், இப்படி அப்படின்னு!

நண்பருக்கு உள்ளே நான் அழ முடியாமல் அழுது கொண்டிருந்தது தெரிந்திருக்க வேண்டும். பொம்பளை அழுதா இரக்கப் படுவாங்க. ஆம்பளை அழுதா, அடச்சீ, நீயெல்லாம் ஒரு ஆம்பிள்ளையா, இப்படி மூசுமூசுன்னு அழுதுகிட்டு என்று திட்டுவாங்க.
 

பதிவு எழுதறவன் அழுதா......நண்பர் மாதிரி ஊரே கூடி வேடிக்கை பாக்க ஆரம்பிச்சுடாதா? அதுவும் புள்ளி விவரம்லாம் பாக்குறவங்களுக்கு இன்னும் கொஞ்சம் நக்கலாகிப்போய் விடாதா?
 


அழுகை கோபமாக மாறி, நண்பரைக் கடுப்புடன் பார்த்துக் கொண்டே, "சரி அண்ணாச்சி, உண்மைதான், பதிவ ஆரம்பிச்ச முதல் ஒம்போது மாசங்கள்ல வந்ததை விட ஜுலை 15 இற்கும் இப்பத்தைக்கும் வந்தவுங்க எண்ணிக்கை தான் அதிகம். அதுக்கு என்ன இப்போ?" என்றேன்.

என்னுடைய கோபம் நண்பருக்கு வேடிக்கையாக இருந்திருக்க வேண்டும். சிரித்துக் கொண்டே நண்பர் சொல்ல ஆரம்பித்தார்.
 

"முன்னாடியே பேசினது தான் நண்பா! அப்பப் பேசினது அப்போதைக்குப் போதும்னு சொன்னேன். இப்ப மிச்சத்தையும் பாத்துடலாமில்லியா?"
 

"பேசவேண்டாமின்னு சொன்னாக் கேக்கவா போறீங்க அண்ணாச்சி! பேசணும்னு தானே முடிவெடுத்து வந்திருக்கீங்க, பேசிடுங்க!" என்றேன். வேறென்னத்தச் சொல்ல?
 

"நண்பா! இந்தப் பதிவுலக நுண்ணரசியல், நுணுக்கமான அரசியல்னு சொல்றாங்க பாரு, அது ஒண்ணுமே இல்லை! உரிக்க உரிக்கக் காணாமப் போயிடும் வெங்காயம்! அவ்ளோதான்!"
 

"என்ன தத்துவமா? வெங்காயமெல்லாம் உரிக்கறீங்க ?" 

வெங்காயம்னு சொன்ன உடனேயே ஒரு தெம்பு வருது பாருங்கஅதை அனுபவிச்சுத் தான் தெரிஞ்சுக்கணும்!

"கொஞ்சம் வெங்காயத் தொலிய ஓரங்கட்டி வச்சுட்டு, சொல்றதைக் கேளு! பதிவு எளுத ஆரம்பிக்கிற எல்லாருமே, தன்னை அடையாளம் காட்டிக்கத் தான் எளுதறாங்கன்னு சொன்னேன் இல்லியா? அப்படி ஆரம்பிக்கும்போது அங்கே இங்கே மத்தவுங்க எழுதறதைப் பாத்துட்டு, தன்னோட சொந்த அடையாளத்தை மறந்துடறாங்க! இது தான் ஒரிஜினல் பிரச்சினை!"
 

"யாருக்காகவோ எழுதணும்னு நெனைக்கிறதை விட்டுட்டு, தனக்காகவே எழுதணும்னு நெனைச்சிருந்தாங்கன்னா, திருவிழாக் கூட்டத்துல தொலஞ்சுபோற பிள்ளைமாதிரி ஆகாம இருக்கலாம். நீ கூட, திருவிழாவுல தொலைஞ்சுபோன பிள்ளை மாதிரி ஃபீல் பண்ணி ஒரு பதிவு எழுதியிருந்தே, இல்லியா? 
 

தனக்காக, தான் ரசிக்கிறதுக்காகவுன்னே எளுத ஆரம்பிச்சா, உன்னையும் இந்த உலகம் தேடி வந்து ரசிக்கும்! நெசம்! தனக்குன்னு எளுதும்போது, கொஞ்சம் வக்கணையா, பொய்க் கலப்பு இல்லாம, ருசியா இருக்கணும்னு நினைப்போமில்லியா, அதுதான் சூட்சுமம்!"

என்னதான் மூச்சடக்கி, கஷ்டப்பட்டு முத்துக் குளிச்சாலும், நல்ல வெலை கெடைக்க ஒரு செட்டியார் தயவு வேணுமில்லியா?

அங்கே தான், இந்தத் திரட்டிகளுடைய அவசியமே வருது!

திரட்டிங்க பண்றதெல்லாம், ஷோக்கா டிபார்ட்மென்ட் ஸ்டோரில் டிஸ்ப்ளேல, சரக்குகளை வெளிச்சம் போட்டு வச்சிருப்பாங்கள்ள, அதே மாதிரித்தான்! நீ அவங்க கிட்டஇணைஞ்சப்புரம் பதிவுகளை சமர்ப்பிக்கும்போது, வாசகர் பரிந்துரைங்கற  பேர்ல கொஞ்சம் ஓட்டுக் கிடைக்கும்! யாருடா, நம்மையும் மதிச்சு ஓட்டுப் போட வந்தவுங்கன்னு பாத்தா, அதுக்குன்னே சில பேர் இருப்பாங்க. பெரும்பாலும் இவங்க அடையாளத்துக்கும், இவங்க எழுதற பதிவுக்கும் முடிச்சே இல்லாத மாதிரித் தான் மேலோட்டமாத் தெரியும்.
 

ஏதோ ஒரு அளவுகோல் வச்சு, குறிப்பிட்ட சரக்குகளை மட்டும் கொஞ்சம் கூடுதலா வெளிச்சம் போட்டு, இது தான் சூடான பதிவு, அதிகம் பரிந்துரைக்கப் பட்ட பதிவுன்னு காமிப்பாங்க.
அப்படிக் காமிச்சதைப் பாத்தே, கொஞ்சம் கூட்டம் அங்கே போய் மொய்க்கும்!
ஆறிப் போன முந்தாநாள் இட்லி  மேல, கொதிக்கக் கொதிக்க சாம்பாரை ஊத்தி சூடாக் காமிக்கிற மாதிரித் தான் இதுவும்னு வச்சுக்கோயேன்!

இப்பப் புதுசு புதுசாத் திரட்டிகள் வந்துட்டதால, ஏற்கெனெவே மணம் பரப்பிக் கோலோச்சிக் கொண்டிருந்த ஒரு திரட்டி, வலியவே போய், உங்களோட பதிவை எங்கள் திரட்டியில் 
4000, 4500, 5000, 5500, 6000 ஆவது பதிவாக இணைத்திருக்கிறோம் என்று பரிவட்டம் கட்டி ஆளை இழுத்து வருகிற வேலையை ஆரம்பித்ததும் நடந்து கொண்டிருக்கிறது. மற்றவர்கள் சும்மா இருப்பார்களா என்ன? அவர்களும் பின்னூட்டம் இடுகிற சந்தடி சாக்கில், உங்கள் பதிவை எங்கள் வளையத்தில், எலி வலைக்குள் சேர்த்திருக்கிறோம் என்று சொல்ல ஆரம்பித்ததில், ஒரு அறிவிக்காத யுத்தமே நடந்து கொண்டிருக்கிறது.

இப்படி வெளிச்சம் போட்டுக் காமிக்கறதுல  சில பதிவுகளும், பெரும்பாலான நேரங்களில் பதிவர்களுமே பிரபலமாகிப் போவது ஜஸ்ட் ஒரு ஆக்சிடென்ட் அவ்வளவுதான்! இதுல வேறு மோடி வித்தை, சூட்சுமம் எதுவுமே இல்ல. இப்படி 
அதிகம் வெளிச்சம் பட்ட பதிவர்கள் எல்லாருமே சரக்கோட எப்பவுமே எழுதறதும் இல்லஇதையும் மனசுல வச்சுக்கோ.

உன்கிட்ட இருக்கிறது நத்தைக் கூடா, நல்ல முத்தான்னு தேடறவங்களுக்குத்  தெரியாதுல்ல! நல்ல முத்தைப் பிரிச்சுத் தாரேன்னு தான் ஒவ்வொரு திரட்டியை உருவாக்கி நடத்துறவங்களும் சொல்றாங்க. ஒரு அளவுக்கு, அதே மாதிரி பிரிச்சும் தராங்க!ஆனாக்க ஒரு அளவுக்கு மேல போனப்புறம், திரட்டிஙகறது புரட்டுன்னு ஆகிப் போவதை, அவ்வப்போது நடக்கும் சர்ச்சைகள், சூடான வம்பு, சூடான இடுகை, சூடான வாக்குவாதம், சூடான கண்ணீர்னு வரிசையாக் காட்டிக் கொடுத்துடுது!
 

திரட்டிகளில் சேருவது என்பது உன்னோட பதிவை வாசகருக்குக் கொண்டு சேர்ப்பதுல இருக்கிற பல வழிகளில் ஒரு வழி, அவ்வளவுதான்! இதைக் கொஞ்சம் மனசுல வச்சுக்கோ."
 

மூச்சு விடாமல் நண்பர் சொல்லிக் கொண்டே போனதில் நான் தான் அதிகக் களைப்பாகிப் போனேன்.
 

இப்போதைக்கு இது போதும்!
 

புள்ளிவிவரச் சிங்கமே, மனமுவந்து மிச்சத்தை அடுத்த இன்ஸ்டால்மென்டுல பாத்துக்கிடலாம்னு பெருந்தன்மையா நிறுத்திக் கொண்டார்!



சர்வே, கேள்வி-பதில் என்ற வடிவத்தில் பதில் சொல்வதை விட, ஆராய்ச்சி செய்ய முனைந்திருக்கும் அந்த மாணவிக்கு  உதவியாக இருக்கும் என்றுதான் நம்புகிறேன்! தமிழ்ப்பதிவர்கள், பதிவர் குணாதிசயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டுமென்றால், போலி டோண்டு, குச்சிக்காரி இந்த வார்த்தைகளை வைத்து கூகுளில் தேடினால், இன்னும் நிறையத் தகவல்கள் கிடைக்கும்! படித்துப் பார்த்த பிறகு பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கற டாக்டருக்கே பைத்தியம் பிடிச்சா.......குடும்பம் ஒரு கதம்பம் திரைப்படத்தில் வரும்  விசுவுடைய  இந்த வசனம் நிஜமாகிப் போனால்,  அதற்கு நான் பொறுப்பல்ல!



மீண்டும் சந்திப்போம்

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)