காவேரி நியூஸ் தொலைக்காட்சியில் தடம் நிகழ்ச்சியை நடத்தி வரும் துணை ஆசிரியர் மதன் ரவிச்சந்திரன் இன்னமும் அந்தத் தொலைக்காட்சியில் தான் நீடிக்கிறாரா என்பதை பார்ப்பதற்காகவே காவேரிநியூஸ் என்னுடைய கவனத்தில் சேர்ந்துகொண்டிருக்கிறது. சுபவீ செட்டியார் ஒரு நிகழ்ச்சியில் சொதப்பியதற்கு ஆசிரியர் ஜென் ராமும் வேறு சில சக ஊழியர்களும் அவருக்கெதிராக கலகக்குரல் எழுப்பிய விஷயத்தில் தொலைக்காட்சி நிர்வாகம் கலகக்குரல் எழுப்பியவர்களை வெளியேற்றிவிட்டதாகச் சொல்லப் பட்டது. சுபவீ செட்டியார் தனது முகநூல் பதிவில் விரைவில் நல்ல செய்தி வரும் என்று பூடகமாகச் சொல்லி இருந்ததில் காவேரி நியூஸ் நிர்வாகத்தின் மீது எங்கிருந்தோ அழுத்தம் வரும் என்பது போல இருந்தது நடந்ததா அல்லது எடுபடவில்லையா என்பதில் என்னுடைய கவனம் இன்னும் இருக்கிறது.
ஒரு வழியாக 77 நாட்கள் நீடித்த காங்கிரஸ் தலைவர் யார் என்கிற ரிலே ரேசை உப்புச்சப்பில்லாமல் முடித்து விட்டு ராகுல் காண்டி இன்று பிற்பகலுக்கு மேல் கோழிக்கோடு வந்து வயநாடு தொகுதியில் வெள்ளநிவாரணப் பணிகளைப் பார்வையிடுகிறாராம்! SPG பாதுகாப்பில் இருக்கிற ஒருத்தர் களத்துக்கு வந்து மேற்பார்வையிடுவது உண்மையிலேயே ஜனங்களுக்கு உதவியாக இருக்கும் என்றா நினைக்கிறீர்கள்?
சுபவீ செட்டியாருக்கு அடுத்து இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத், அதற்கடுத்து நேற்றைக்கு மதிமுகவின் மல்லை சத்யா என்று மதன் ரவிச்சந்திரன் காவேரி நியூஸ் சேனலில் தொடர்ந்து தடம் நிகழ்ச்சியில் தடம் மாறாமல் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பது நல்ல விஷயம்!
மற்றபடி வைகோ பேசியதும், மல்லைசத்யா அவருக்கு வக்காலத்து வாங்கிப் பேசுவதும் தமிழக அரசியலின் தொடரும் காமெடிப் பரிதாபம்! வீடியோ 40 நிமிடம். பொதுதுபோக்க வேறு நல்ல விஷயங்களே இல்லையென்றால் அவசியம் பாருங்கள்.
For the next few days I will be based in my Lok Sabha constituency, #Wayanad that has been ravaged by floods. I will be visiting relief camps across Wayanad and reviewing relief measures with District & State officials.
12:00 PM · Aug 11, 2019
பதிவு முடிந்த பிறகு நிறைய வெற்றிடம்!
ReplyDeleteமதன் ரவிச்சந்திரன் கவனம் பெறத் தொடங்கி இருக்கிறார் போல... நானும் அவர் நிகழ்ச்சி ஒன்றுபார்த்தேன். நீங்கள் சொல்லியிருப்பதுபோல அப்புறம் நேரம் கிடைக்கும்போது ஒவ்வொன்றாகப் பார்க்கவேண்டும். காவேரி நியூஸ் தொலைகாட்சி அதிகாரம் அவருக்கு உறுதுணையாய் நிற்பது பாராட்டத்தக்கது.
வெற்றிடத்தை நீக்க நானும் என்னுடைய லேப் டாப்போடு நிறைய மல்லுக்கட்டிப் பார்த்தேன் ஸ்ரீராம்! ஒத்துழைக்கவில்லை!
Deleteஊடகங்களில் மதன் ரவிச்சந்திரன் கொஞ்சம் நம்பிக்கை தருகிறார். இன்னும் அதிக கவனத்துக்கு வராத காவேரி நியூஸ் சேனல் அவர்பக்கம் நிற்பது ஆச்சரியம் ஒன்றுமில்லை. செய்தி வணிகத்தில் அதுவும் ஒரு உத்தி என்பதற்குமேல் என்னால் வேறெதுவும் இப்போதைக்கு சொல்ல முடியவில்லை.