Tuesday, August 13, 2019

கொஞ்சம் செய்தி! கொஞ்சம் அக்கறை! விமரிசனம்!

காவேரி நியூஸ் சேனலைப் பற்றி சென்ற ஞாயிறு அன்று ஒரு பதிவு எழுதிய பிறகு அடுத்த இரண்டே நாட்களில் இப்படி ஒரு அதிரடித்திருப்பமாக ஒரு செய்தி வரும் என்று நிச்சயமாக நான் நினைத்திருக்கவில்லை. நிதிநிலையைச் சுட்டிக் காட்டி 146 ஊழியர்களை ஒரு மாத சம்பளம் கொடுத்து lay off செய்ய இருப்பதாக The News Minute தளம் சொல்கிறது.


The meeting with the employees was held by Managing Director Ilangovan on August 8. Cauvery news which has its main office at Guindy in Chennai, is owned by Cauvery Power, a captive power plant in Chennai. According to sources present at the discussion, Ilangovan cited lack of funds as a reason for the sudden decision. The management claimed that they were looking for investors to help meet the company's current needs but that till then they would have to stop production. Ilangovan, according to journalists present there, stated that if even if they found an investor or a buyer, there was no certainty that current employees would be retained.  

மாற்றத்தை நோக்கி என்ற tagline உடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேனல் போதுமான விளம்பரம் அல்லது ஸ்பான்சர்கள் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்ததும் இப்படி ஒரு சேனல் இருக்கிறதென்றே ஜனங்கள் மத்தியில் பரவலாகத் தெரியாமல் இருந்ததும் ஊடகத்துறை சந்தித்துவரும் சவால்களில் மிகச்சாதாரணமானவை. காங்கிரஸ்கட்சியின் காசுக்கார வக்கீல் கபில் சிபல் நடத்திவந்த திரங்கா டிவியும் கூட, சமீபத்தில் ஊழியர்களை இதே காரணத்தைச் சொல்லி ஒரு மாதசம்பளத்துடன் வீட்டுக்கனுப்பியது பரபரப்பான செய்தியானதே,  நினைவிருக்கிறதா?  இங்கே தமிழ்நாட்டில் பல சேனல்கள் சத்தமே இல்லாமல் இந்த மாதிரி ஆட்குறைப்பு, வேலைநீக்கம் என்று செய்து கொண்டுதான் இருக்கின்றன. அரசியல் பின்புலம் வலுவாக இருப்பதால் அங்கே நடப்பது வெளியே தெரிவதில்லை, அவ்வளவுதான்!


வாய்க்கொழுப்பு ஜாமீன் வாரிசு பேசுவதையெல்லாம் எடுத்துப் போடுகிற ஒரு நேரம் வருமென்று நான் ஒருபோதும்  நினைத்ததில்லை! 23 நிமிடம் என்பதால் பார்த்தேன்! என்ன ஒரு அமர்த்தலான பேச்சு!?

நம்பிக்கை ராஜ் கருத்து சரியா ?
ப.சிதம்பரம் அறிவு ஜீவி, பொருளாதார மேதை - திடீர் சிதம்பரம் ஃபேன்ஸ் புகழாரம்.
அந்த அறிவு ஜீவி தமிழ்நாட்டுக்கு செய்த கெடுதல்களை பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம். அதுல ஒன்னை மட்டும் இப்ப ஞாபகப்படுத்திப்போம்.
இந்தியாவில் வேளாண் விளைபொருட்களுக்கு வரி விதிக்கப்படுவதில்லை.
இந்நிலையில் திடீரென 2014 பிப்ரவரி 10ஆம் நாள் அரிசிக்கு 2.5% வரி விதித்தார் அறிவுஜீவி நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
அதற்கு அவர் கொடுத்த விளக்கம் அபாரம்.
"நெல்தான் வேளாண் விளைபொருள். நெல்லில் இருந்து உமி நீக்கப்பட்ட பிறகுதான் அரிசி கிடைக்கிறது என்பதால் அதை வேளாண் விளைபொருளாக கருத முடியாது" என்றார் ப.சிதம்பரம்.
அதாவது நெல்லுக்கு வரியில்லை. ஆனால் நெல்லிருந்து உமியை எடுத்துவிட்டு அரிசியாக்கினால் வரி கொடுக்க வேண்டும்.
நெல் மட்டும் வேளாண் விளைபொருள் அதிலிருந்து கிடைக்கும் அரிசி வேளாண்விலை பொருள் கிடையாது என்பது அவர் கண்டுபிடிப்பு.
மாட்டுக்குக்கூட முழு நெல்லையும் சாப்பிட கொடுக்க முடியாது எனும்போது மனிதர்கள் எப்படி உமி எடுக்காமல் முழு நெல்லை அவித்து சாப்பிடுவது?
அரிசிக்கு வரி விதித்ததே பைத்தியக்காரத்தனம் எனும்போது அதில் இன்னொரு கத்தியையும் சேர்த்து பாய்ச்சினார் ப.சி.
இந்த வரிவிதிப்பு முன்தேதியிட்டு 2012 டிசம்பர்முதல் செலுத்த வேண்டும் என அறிவிதத்து வரியையும் வசூலிக்க ஆரம்பித்துவிட்டார்.
இதேபோல அரிசியோடு சேர்த்து கோதுமைக்கும் வரி விதித்திருந்தால் டெல்லியில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் இருந்த இடம் தெரியாமல் சூரையாடப்பட்டிருக்கும்.
அதனால்தான் தான் பிறந்த தமிழகம் உட்பட அரிசியை உணவாக சாப்பிடும் மக்களின் சாப்பாட்டில் மண் அள்ளிப்போட அரிசிக்கு மட்டும் வரி விதித்தார் சிதம்பரம்.
தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்பு மற்றும் தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு அரிசிக்கு விதிக்கப்பட்ட வரியை நீக்கினார் அறிவு ஜீவி நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
ஆம் ப.சிதம்பரம் வாழ்வதே பூமிக்கு பாரம்தான். 
  
     
இது துக்ளக் அட்டைப்பட நையாண்டி 
 அப்படியானால் பிஜேபியைக் கிண்டல் செய்ய 
எதுவுமே இல்லையா?

 நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த பிறகும் கூட 
அமைச்சரவையை முடிவு செய்ய முடியாத 
சாதனையாளராக எடியூரப்பா இன்னமும் 
எத்தனைநாட்கள் தொடருவார்?

மீண்டும் சந்திப்போம். 

4 comments:

  1. காவேரி நியூஸ் சேனல் காசு கேட்க ஆரம்பித்ததால் என் பட்டியலில் சில மாதங்களாக அது இடம்பெறவில்லை! அது நீக்கும் ஊழியர் பட்டியலில் ம ர உண்டா?

    ReplyDelete
    Replies
    1. காவேரியை என்று மட்டுமில்லை எந்த ஒரு சேனலையும் நான் டிவியில் பார்ப்பதில்லை. யூட்யூப் லைவாக மட்டுமே பார்ப்பதாஎன்று தகவல் ல் எனக்கு அந்தப் பிரச்சினை இல்லை ஸ்ரீராம்! இப்போதுகூட மிக்க குறைந்த ஊழியர்களை மட்டுமே ( 8-15 பேர்) வைத்துக்கொண்டு சேனலை உயிரோடு வைத்திருக்கப்போகிறார்கள் போல. ம.ர. எந்த லிஸ்டில் என்பது தெரியவில்லை.

      Delete
  2. அரிசிப் பிரச்னை காரணமாகவே எ தமிழகத்தில் ஆட்சி இழந்த காங்கிரஸ் பற்றியே பசி மறந்து விட்டார் போல அப்போது!

    ReplyDelete
    Replies
    1. பணப் பசி மட்டுமே இருப்பவருக்கு வயிற்றுப்பசி, பிரச்சினை பற்றி என்ன தெரியும்? தெரிந்தால் தானே மறப்பதற்கு?

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)