இந்தப்பக்கங்களுக்கு வரும் நண்பர்களுக்கு முன்பே பலமுறை சொன்னமாதிரி, எந்த ஒரு அரசியல் செய்தியையும் இங்கே எடுத்துப் போடுவதற்கு முன்னால், அதை அரசை அல்லது பிஜேபியை ஆதரிக்காத தரப்பிலிருந்து என்ன சொல்கிறார்கள் என்பதைத் தான் சிந்திப்பதற்காக எடுத்துக் கொளகிறேன். என் கருத்தை உருவாக்கிக் கொள்வதற்கு, இரண்டுதரப்பையும் கவனித்து அதன் பிறகே முடிவு செய்கிறேன்.
Another Pakistan's most loyal media channel after the wire and the quint. என்று இந்த வீடியோவைப்பற்றி ஒரேவரியில் முடித்துக் கொள்கிறார் ஆகாஷ் ஸ்ரீவத்சவா! நான் பார்த்தவரையிலும் பாகிஸ்தானுக்கு விசுவாசிகள் என்பதை விட , காசுக்குத்தான் விசுவாசம், காங்கிரசுக்கு அந்தநாட்களிலிருந்தே விசுவாசம் என்பது எனது கருத்தாக கிருந்தாலும், இந்த 9 நிமிட வீடியோ ஒரு முக்கியமான செய்தியை விவாதிக்கிறது. ஆர்டிகிள் 370 abrogate செய்யப்பட்டதை வைத்து காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசப்பிரச்சினையாக்க முயலும் பாகிஸ்தான் கோரிக்கையை ஐநா பாதுகாப்புசபை நிராகரித்துவிட்டாலும், P 5 நாடுகளில் ஒன்றான சீனா காஷ்மீர் விவகாரத்தைப் பாதுகாப்பு சபை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றதை, பாதுகாப்புசபையின் நிரந்தர உறுப்பினர்களான இதர 4 நாடுகள் ஏற்றுக்கொள்ள சம்மதிக்காத நிலையில், நிரந்தர உறுப்பினர் நாடுகளின் ரகசியக்கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. ஐயையோ, இதைத்தானே உலக அரசியல் எல்லாம் தெரிந்த மேதை வைகோ அன்றைக்கே ராஜ்யசபாவில் எச்சரித்தார் என்று கொடியைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள்! P5 நாடுகளின் InCamera கூட்டத்தில் முடிவு செய்யப்பட இருப்பது, இதைப் பொதுவெளியில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பது மட்டும் தான்! அதுதொடர்பான செய்தியைத்தான் மேலே 9 நிமிட வீடியோவில் ஒரு கோடி காட்டுகிறார்கள், அவ்வளவுதான்!
இந்தியா அணு ஆயுதம் வைத்திருந்தாலும் அதை முதலில் உபயோகம் செய்யாது என்று முடிவெடுத்தது நாம் தான்! ஆனால் சூழ்நிலைகள் மாறும்போது அதேதான் இப்போதும் எங்கள் நிலை என்றே இருக்க முடியுமா? இன்றைக்கு நமது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பொக்ரானில் அதைத்தான் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். பாகிஸ்தானுக்கு மட்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை தானா இது? பாகிஸ்தானைத் தனது கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளும் சீனாவுக்கும் சேர்த்துத் தான் என்று எடுத்துக் கொள்ள முடியாதா? இது 2019! 1962 அல்லது 1965 இல்லை என்று சொல்கிற மாதிரித்தான் எடுத்துக் கொள்ள முடியும். வாஜ்பாய் மறைந்து ஓராண்டாகிற இன்றைக்கு, அணு ஆயுதத்தை இந்தியா முதலில் பயன்படுத்தாது என்று சுயகட்டுப்பாடு விதித்துக் கொண்ட அவரது பெருந்தன்மை இப்போதும் பொருந்துமா என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!
பொதுவாக குடியரசுத்தலைவராக இருப்பவர், இருந்தவர் எவரையும் பொதுவெளியில் சர்ச்சைக்குள்ளாகிற விதத்தில் பேசக்கூடாது எழுதக்கூடாது என்பது நான் கடைப்பிடிக்கும் ஒரு மரபு. அதனால் பிரணாப் முகர்ஜி குடியரசுத்தலைவராகப் போட்டியிட்ட தருணத்தில் எழுதிய இந்தப் பதிவை ஒருதரம் வாசித்துவிடுங்கள்! சோனியா அந்த நாளிலிருந்து இன்றுவரை அவரை ஏன்நம்பியதே இல்லை என்பதற்கு இந்திராவைப்போலவே மருமகளுக்கும் இருந்த insecurities ஒரு காரணமாக இருக்கலாம்! இந்திராவுக்கு மிக விசுவாசமாக இருந்த ஒருவருக்கும் சோனியா மற்றும் வாரிசுகளுக்கும் இடையிலான உறவு அந்த அவநம்பிக்கையினால் முற்றிலும் அறுந்துவிட்டது என்கிறது dailyO தளச் செய்தி. The rumouredly cracked relationship between Pranab Mukherjee and the Gandhis, that was concealed under the paint of niceties, finally came to an end this week, in the dazzling hall of Rashtrapati Bhawan, when Pranab babu received the Bharat Ratna for his contribution to India, courtesy the Modi sarkar.
A relationship that was always apparently plagued with insecurities saw a trust deficit grow when Narendra Modi took over as the Prime Minister of India in May 2014. கொஞ்சம் இணைப்பில் படித்துப் பார்க்க வேண்டிய செய்தியாக.
மீண்டும் சந்திப்போம்.
A relationship that was always apparently plagued with insecurities saw a trust deficit grow when Narendra Modi took over as the Prime Minister of India in May 2014. கொஞ்சம் இணைப்பில் படித்துப் பார்க்க வேண்டிய செய்தியாக.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment