முந்தைய பதிவில் சேகர் குப்தா எப்படி முக்கியமான ஒரு கேள்வியை எடுத்துக்கொண்டு, விடையைத் தேட முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார் என்பதைக் கொஞ்சம் சொல்லியிருந்தேன். அத்துடன், டொனால்ட் ட்ரம்ப் மீதான தகுதிநீக்க விசாரணையின் மீதான வாக்கெடுப்பு அமெரிக்க செனேட் சபையில் நடந்து கொண்டிருப்பதன் நேரலை வீடியோவையும் பகிர்ந்து கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட எட்டுமணிநேர வீடியோ அது. யாரும் திறந்து பார்த்திருக்க மாட்டீர்களே! 😃😂
வீடியோ 17 நிமிடம்
ஏற்கெனெவே தெரிந்ததுதான்! மூன்றில் இருபங்கு வாக்குகள் இல்லை என்பதால் மட்டுமே டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப் பட்டிருக்கிறாரே தவிர, அவர் அந்தக் குற்றங்களைச் செய்யவே இல்லை, நிரபராதி என்பதால் அல்ல! 52 க்கு 48 என்ற வாக்குகளில் impeachment செய்யப்படுவதில் இருந்து டொனால்ட் ட்ரம்ப் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
பில் க்ளின்டன், டொனால்ட் ட்ரம்ப் இருவருமே impeach செய்யப்பட்டவர்கள் தான்! இருவர் சுமக்கும் கறைகளே வேறுவேறுதான்! இந்தப்பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள் டொனால்ட் ட்ரம்ப் பற்றியே இருந்தது என்பதில் ஆச்சரியம் இல்லை.
பில் க்ளின்டன், டொனால்ட் ட்ரம்ப் இருவருமே impeach செய்யப்பட்டவர்கள் தான்! இருவர் சுமக்கும் கறைகளே வேறுவேறுதான்! இந்தப்பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள் டொனால்ட் ட்ரம்ப் பற்றியே இருந்தது என்பதில் ஆச்சரியம் இல்லை.
-
இப்போது சேகர் குப்தா 17 நிமிட வீடியோவில் என்ன முடிவாகச் சொல்ல முடிந்தது என்பதைக் கவனியுங்கள்! இங்கே நரேந்திர மோடி என்கிற தனிநபர் மீது, (பிஜேபி என்ற கட்சி மீதல்ல) இந்தியவாக்காளர்கள் நம்பிக்கை வைத்திருப்பது 2024 தேர்தலிலும் தொடரும் என்பதான நிலைமை எதனால்?ReplyDelete
வெறும் வலதுசாரி தேசியவாதம் என்று வார்த்தைகளால் மட்டுமே விளக்கக் கூடிய விஷயமா இது?
உங்களுக்கு என்ன தோன்றுகிறது? கொஞ்சம் பதில் சொல்லத்தான் முயற்சித்துப்பாருங்களேன்!
மீண்டும் சந்திப்போம்
தொடர்புடைய பதிவுகள்:






என்னை பொறுத்தவரை, ட்ரம்ப் பின் மிகப்பெரிய சாதனைகள் -- ப்ரெசிடெண்ட் என்பவரும் சாதாரண மனிதர் தான் என்று காட்டியதும் பொலிடிக்கலி கரெக்ட் என்ற hypocrisy -ஐ உடைத்ததும் தான்!