Showing posts with label ஆர்டிகிள் 370. Show all posts
Showing posts with label ஆர்டிகிள் 370. Show all posts

Sunday, August 18, 2019

ஆர்டிகிள் 370! ஜாகீர் நாயக்! பீட்டர் அல்போன்ஸ்!

ஆர்டிகிள் 370 abrogate செய்யப்பட்ட பிறகு பலவிதமான செய்திகள், இணையத்திலிருந்து கொட்டிக் கொண்டே இருப்பதில் டிசம்பர் 2013 இல் NDTV நிகழ்ச்சி ஒன்றில் சுனந்தா புஷ்கர் (திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசி தரூரின் 3வது மனைவி & vice versa) பர்கா தத்துடன் உரையாடிய சுவாரசியமான  ஒளித்துண்டை யூட்யூப் தளம் நான் தேடாமலேயே என்னுடைய ஸ்ட்ரீமில் வந்து நிறுத்துகிறது!


ஒமர் அப்துல்லாவுக்கு ஆர்டிகிள் 370 கொடுக்கும் அதே உரிமையை அவருடைய சகோதரி சாரா அப்துல்லாவுக்குத் தருகிறதா?சாரா அப்துல்லா 2004 இல் காங்கிரசின் இளம் தலைவர் சச்சின் பைலட்டைத்  திருமணம் செய்து கொண்டிருப்பது அவருடைய சொத்துரிமை உட்பட எல்லா உரிமைகளையும் பறிக்கிறது என்ற செய்தி
தான் இந்த விவாதத்துக்கான அடித்தளம் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு இந்த 14 நிமிட வீடியோவை பாருங்கள்!


The Print தளத்தில் நேற்றைக்கு வெளியான 11 நிமிட வீடியோ.
வீடியோ கொஞ்சம் காங்கிரஸ் குழப்பத்தைவிட கூடுதலாகக் குழப்புகிறது என்பது ஒருபக்கம். ஆனால் யூட்யூப் தளத்தில் இதற்கு வந்திருக்கிற கமென்ட்டுகள் இதனுடைய நம்பகத்  தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிற வேடிக்கையைப் பாருங்கள்! சாம்பிளுக்கு ஒன்று.

Karunakar Mohan Jha
Really 😑 did the instrument of accession mentioned the 370 in it  

ஆனால் நம்மூரில் மட்டும்தான் அச்சு ஊடகங்களும் சேனல்களும் ஜனங்களைக் கேணையர்களாக்குகிற மாதிரி வரலாற்றைத் திரித்து மனம்போனபோக்கில் சொல்ல முடிகிற சுதந்திரத்தோடு இருக்கின்றன போல!

 
  
ஜாகீர் நாயக்! வெறுப்பை விதைக்கும் வகையில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியே பிரபலமான இசுலாமியப்பேச்சாளர்! இந்திய நீதிமன்றங்களில் தனக்கு நியாயம் கிடைக்காது என்று மலேசியாவில் தஞ்சம் புகுந்த இந்தப்பெருச்சாளியை வெளியேற்ற வேண்டுமென்று மலேசியாவிலேயே எதிர்ப்புக்குரல்கள் கிளம்பி இருப்பதில் கதை கந்தலாகிக் கொண்டிருக்கிறது. இங்கே  உள்ளூரிலும் கூட இவர்மாதிரி வெறுப்புப்பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசுகிற சவடால் பேர்வழிகள் மீது கடும் நடவடிக்கை பாயவேண்டிய நேரம்  நெருங்குகிறது.

ஒரு உள்ளூர்த் தமாஷாவையும் பார்த்து விடலாமா?


காங்கிரஸ் திமுக விசிக இடதுசாரிகள் இவர்களெல்லாம் மத சார்பில்லாத செகுலர் சிங்கங்கள் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருப்பவர்களுக்காக! ஞாயிற்றுக் கிழமை பொழுது போக ஒரு 56 நிமிட வீடியோ!

மீண்டும் சந்திப்போம்.
   
   

Friday, August 16, 2019

ஆர்டிகிள் 370 abrogation : இன்றைய செய்திகள் சொல்வதென்ன?

இந்தப்பக்கங்களுக்கு வரும் நண்பர்களுக்கு முன்பே பலமுறை சொன்னமாதிரி, எந்த ஒரு அரசியல் செய்தியையும் இங்கே எடுத்துப் போடுவதற்கு முன்னால், அதை அரசை அல்லது பிஜேபியை ஆதரிக்காத தரப்பிலிருந்து என்ன சொல்கிறார்கள் என்பதைத் தான் சிந்திப்பதற்காக எடுத்துக் கொளகிறேன். என் கருத்தை உருவாக்கிக் கொள்வதற்கு, இரண்டுதரப்பையும் கவனித்து அதன் பிறகே முடிவு செய்கிறேன்.  



Another Pakistan's most loyal media channel after the wire and the quint. என்று இந்த வீடியோவைப்பற்றி ஒரேவரியில் முடித்துக் கொள்கிறார் ஆகாஷ் ஸ்ரீவத்சவா! நான் பார்த்தவரையிலும் பாகிஸ்தானுக்கு விசுவாசிகள் என்பதை விட , காசுக்குத்தான் விசுவாசம், காங்கிரசுக்கு அந்தநாட்களிலிருந்தே விசுவாசம் என்பது எனது கருத்தாக கிருந்தாலும், இந்த 9 நிமிட வீடியோ ஒரு முக்கியமான செய்தியை விவாதிக்கிறது. ஆர்டிகிள் 370 abrogate செய்யப்பட்டதை வைத்து காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசப்பிரச்சினையாக்க முயலும்  பாகிஸ்தான்  கோரிக்கையை  ஐநா பாதுகாப்புசபை  நிராகரித்துவிட்டாலும், P 5 நாடுகளில் ஒன்றான சீனா காஷ்மீர் விவகாரத்தைப் பாதுகாப்பு சபை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றதை, பாதுகாப்புசபையின் நிரந்தர உறுப்பினர்களான இதர 4 நாடுகள் ஏற்றுக்கொள்ள சம்மதிக்காத நிலையில், நிரந்தர உறுப்பினர் நாடுகளின் ரகசியக்கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. ஐயையோ, இதைத்தானே உலக அரசியல் எல்லாம் தெரிந்த மேதை வைகோ அன்றைக்கே ராஜ்யசபாவில் எச்சரித்தார் என்று கொடியைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள்! P5 நாடுகளின் InCamera கூட்டத்தில் முடிவு செய்யப்பட இருப்பது, இதைப்  பொதுவெளியில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பது மட்டும் தான்! அதுதொடர்பான செய்தியைத்தான் மேலே 9 நிமிட வீடியோவில் ஒரு கோடி காட்டுகிறார்கள், அவ்வளவுதான்!


இந்தியா அணு ஆயுதம் வைத்திருந்தாலும் அதை முதலில் உபயோகம் செய்யாது என்று முடிவெடுத்தது நாம் தான்! ஆனால் சூழ்நிலைகள்  மாறும்போது அதேதான் இப்போதும் எங்கள் நிலை என்றே இருக்க முடியுமா? இன்றைக்கு நமது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பொக்ரானில் அதைத்தான் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். பாகிஸ்தானுக்கு மட்டும் விடுக்கப்பட்ட  எச்சரிக்கை தானா இது? பாகிஸ்தானைத் தனது கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளும் சீனாவுக்கும் சேர்த்துத்  தான் என்று எடுத்துக் கொள்ள முடியாதா? இது 2019! 1962 அல்லது 1965 இல்லை என்று சொல்கிற மாதிரித்தான் எடுத்துக் கொள்ள முடியும். வாஜ்பாய் மறைந்து ஓராண்டாகிற இன்றைக்கு, அணு ஆயுதத்தை இந்தியா முதலில் பயன்படுத்தாது என்று சுயகட்டுப்பாடு விதித்துக் கொண்ட அவரது பெருந்தன்மை இப்போதும் பொருந்துமா என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!
      
   
பொதுவாக குடியரசுத்தலைவராக இருப்பவர், இருந்தவர் எவரையும் பொதுவெளியில் சர்ச்சைக்குள்ளாகிற விதத்தில் பேசக்கூடாது எழுதக்கூடாது என்பது           நான் கடைப்பிடிக்கும் ஒரு மரபு. அதனால் பிரணாப் முகர்ஜி குடியரசுத்தலைவராகப் போட்டியிட்ட தருணத்தில் எழுதிய இந்தப் பதிவை ஒருதரம் வாசித்துவிடுங்கள்! சோனியா அந்த நாளிலிருந்து இன்றுவரை அவரை ஏன்நம்பியதே இல்லை என்பதற்கு இந்திராவைப்போலவே மருமகளுக்கும் இருந்த insecurities ஒரு காரணமாக இருக்கலாம்!  இந்திராவுக்கு மிக விசுவாசமாக இருந்த ஒருவருக்கும் சோனியா மற்றும் வாரிசுகளுக்கும் இடையிலான உறவு அந்த அவநம்பிக்கையினால் முற்றிலும் அறுந்துவிட்டது என்கிறது dailyO தளச் செய்தி.   The rumouredly cracked relationship between Pranab Mukherjee and the Gandhis, that was concealed under the paint of niceties, finally came to an end this week, in the dazzling hall of Rashtrapati Bhawan, when Pranab babu received the Bharat Ratna for his contribution to India, courtesy the Modi sarkar.

A relationship that was always apparently plagued with insecurities saw a trust deficit grow when Narendra Modi took over as the Prime Minister of India in May 2014.  கொஞ்சம் இணைப்பில் படித்துப் பார்க்க வேண்டிய செய்தியாக.

மீண்டும் சந்திப்போம்.
  

Tuesday, August 6, 2019

பதிவர வட்டமும் சாமியாடுவதும்! ஆர்டிகிள் 370 காமெடிகள்!

சேனல்களில் ஆர்டிகிள் 370 ஐ விட தயாநிதி மாறன் ஃபரூக் அப்துல்லாவைக் காப்பாற்றும்படி இன்று சபாநாயகரிடம் முறையிட்ட காமெடி அப்புறம் TR பாலு முதுகெலும்பு பற்றிப் பேசிய காமெடி இவைகள்தான் அதிகமாகப் பேசப்பட்டிருக்க வேண்டும்! ஆனால் அது காமெடிதான் என்று புரியாத வடக்கத்தி சேனல்கள் தான் புறக்கணித்தன என்றால் நம்மூர் சேனல்களும் கூட உரிய இடம் கொடுத்துப் பேசவில்லை என்பதைப் பார்க்கும்போது அந்தநாளைய கருணாநிதி மாதிரி ஏ! தாழ்ந்த தமிழ் ஊடகமே! என்று பொங்கியிருக்கலாம் தான்! என்னமோ யோதனைகளில் விடுபட்டுப்போய்விட்டது!  


சேகர் குப்தா! காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் காசுக்காகக் கூவுவது எதனாலே என்று அனுபவித்தவர் தான்! அவர்கூட இன்றைக்கு காங்கிரஸ்கட்சியை headless chickens என்று சொல்கிற அளவுக்கு காங்கிரஸ் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி, கட்டெறும்பும் சிறுத்து சிற்றெறும்பாகி, இன்று சிற்றெறும்பும் தேய்ந்து.....கிடக்கிறதே! NDTV, The Wire, scroll in என்று காங்கிரசைக் காசுக்காகத் தாங்கிப்பிடிக்கிற ஊடகங்கள் கூட, தூக்கி நிறுத்த முடியவில்லையே!  வீடியோ 12 நிமிடங்கள் தான்!


Behind the scenes திரைக்குப் பின்னால் /திரைமறைவில் என்னமோ நடந்திருக்குப்பா என்று ஆவலோடு தகவல் தெரிந்து கொள்ள விரும்புவது மனித இயல்போ இல்லையோ அப்படி ஒரு பில்டப் கொடுத்துத் தங்கள் ஊகங்களையே செய்திகளாக மாற்றுவது ஊடகங்களுக்கு வாடிக்கை என்றால் அப்படியே அதை நம்பி அடடே! இத்தனை நடந்திருக்கா என்று ஏமாறுவது ஜனங்களுக்கு வாடிக்கை! வீடியோ 9 நிமிடம்தான்.


சரத் பவாருடைய மகள் சுப்ரியா சுலே மக்களவையில் இன்று தனது பக்கத்து இருக்கையில் இருந்த ஃபரூக் அப்துல்லாவைக் காணோமே என்று உருகினார். உள்துறை அமைச்சர் அமித் ஷா அவருக்கு ஒன்றும் ஆகவில்லை சுயவிருப்பத்தின் பேரில்  வீட்டில் இருக்கிறார் என்று பதில் சொன்னார், உள்துறை அமைச்சர் பொய் சொல்கிறார் என்று இங்கே ஊடகங்களிடம் அதுவும் ANI மற்றும் NDTV மட்டும் தான் - அதிலேயே கொஞ்சம் உறுத்துகிறது -நாடாளுமன்றத்தில் அமைச்சர் பேசியதைக் குறித்துப் பொங்குகிறார், அழுகிறார்! ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்னால்கூட  இந்த ஊழல் மன்னனை கைது செய்வது, தடுப்புக் காவலில் வைப்பது இவை எதையுமே கற்பனை செய்து கூடப் பார்த்திருக்க முடியாது!  இந்த அழுவாச்சி காவியத்தை NDTV சேனலில் நாலைந்து முறை பார்த்தேன். ஒரே ஒரு கேள்வி, வீட்டுச் சிறை அல்லது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கிற ஒருவரை இப்படி ஊடகங்கள் பேட்டி எடுக்க முடியுமா? ஒளிபரப்பத்தான் முடியுமா? பொய்சொல்வது யார்? அமித் ஷாவா? அல்லது ஃபரூக் அப்துல்லாவா? #அரசியல்லஇதெல்லாம் சாதாரணமப்பா!


வளைகுடாநாடுகளில் UAE என்கிற அமீரகம் ஆர்டிகிள் 370 இல் செய்யப்பட்டிருக்கும் திருத்தங்களை இன்று ஆதரித்திருக்கிறது. சவூதி அரேபியாவுமே கூட இதை இந்தியாவின் உள்நாட்டு விவகாரமாக மட்டுமே பார்க்கும் என்று ஊகிப்பதும்  கடினமானது இல்லைதான்! ஆனால்  நம்மூரில் இருந்து அங்கே போன பதிவுலக நண்பர்கள் என்ன மாதிரி சாமியாடுவார்கள்  என்பது கூட ஊகிப்பதற்கு கடினமா என்ன?  

மீண்டும் சந்திப்போம்.
         
           

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)