Showing posts with label சீன வால். Show all posts
Showing posts with label சீன வால். Show all posts

Sunday, April 26, 2020

பார்த்தது! கேட்டது! படித்ததில் பிடித்தது!

நேற்றைக்குப் பார்த்த வீடியோக்களில் சாணக்யா தளத்தில் பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீனிவாஸ் சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று குறித்த பல புதிய தகவல்களைச் சொல்லும் 38 நிமிட வீடியோவும் ஒன்று. எப்படி வூஹான் ஆய்வுக்கூடத்தில் இருந்து இந்தப் புதிய 
கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது. எப்படிப் பரவியிருக்கக் கூடும் என்ற பல புதிய தகவல்கள் இந்த உரையில் இருக்கிறது.
 
 

ரவீந்திரன் துரைசாமி போன்ற அரசியல் விமரிசகர்களுடன் பேசிப் பேசி ஆதன் தமிழ் மாதேஷுக்கும் கூட அகில இந்திய அரசியல் பற்றி பேசுகிற ஆசை வந்துவிட்டது போல! தமிழக அரசியல் களத்தில் இப்போதைக்கு பேசக்கூடியதாக எந்தவொரு அசைவும் இல்லை என்பதால் மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் பற்றி மாதேஷ் கேள்வி கேட்க ரவீந்திரன் துரைசாமி தன்னுடைய எக்ஸ்பெர்ட் ஒப்பீனியனைச் சொல்கிற காமெடிக் கொடுமையையும் பார்த்தேன்.


வீடியோ 25 நிமிடம். கொரோனா காலத்தில் வீட்டிலேயே அடைந்து கிடப்பதில் பொழுதுபோக்கச் சிறந்த காமெடியாக இந்த விவாதத்தை சிபாரிசு செய்கிறேன்.

இன்றைக்குப் படித்ததில் பிடித்ததாக 

மற்ற எல்லா துறைகளைப் போலவும் ஊடகத்துறையும் கொரோனா விளைவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அச்சு ஊடகம் ஏற்கெனவே தள்ளாட்டத்தில் இருந்தது. இப்போது அந்த வீழ்ச்சி ஒரு புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.

காட்சி ஊடகங்களைப் பொருத்தவரை டி.வி. பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், விளம்பர வருமானம் இல்லை. அதேபோலதான், டிஜிட்டல் மீடியாவிலும் பார்வையாளர் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் விளம்பர வருவாய் இல்லை.

இந்த நிலைமையில், இந்தியாவில் புகழ்பெற்ற பல ஊடகங்கள் ஊதியவெட்டு, ஆட்குறைப்பு என்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய வெட்டின்படி, ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்களுக்கு சிக்கலில்லை. 5 முதல் 7.5 லட்சம் ஆண்டு சம்பளம் வாங்குவோருக்கு 10% சம்பள வெட்டு. 10 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 15% சம்பள வெட்டு. 20 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 20% சம்பள வெட்டு… என்று போகிறது.

’’தற்போதைய நிலைமையில் நாள் ஒன்றுக்கு 3.5 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாக’’ குறிப்பிடும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு, ஆண்டு ஊதியம் 6 லட்சம் வரை வாங்குவோருக்கு சம்பள வெட்டு செய்யவில்லை. அதைவிட அதிக ஊதியம் வாங்குவோருக்கு 5% முதல் 15% சதவிகிதம் வரை ஊதியவெட்டை அறிவித்துள்ளது.

News Nation Network நிறுவனம், தனது இங்கிலிஷ் டிஜிட்டல் டீம் 15 பேரை மொத்தமாக வேலையை விட்டு அனுப்பி, அந்த பிரிவையே கலைத்துவிட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸ் போலவோ, ஹிந்துஸ்தான் டைம்ஸ் போலவோ இவர்கள் அதிக ஊதியம் பெற்றவர்கள் அல்ல. பெரும்பாலும் 25 ஆயிரம், 30 ஆயிரம் சம்பளம் வாங்கியவர்கள். அந்த வேலையும் போய்விட்டது.

புகழ்பெற்ற டிஜிட்டல் செய்தி ஊடகங்களில் ஒன்றான The Quint, தனது 45 ஊழியர்களை காலவரையற்ற; ஊதியமற்ற கட்டாய விடுப்பில் அனுப்பியிருக்கிறது. இவர்களுக்கு ஒரு மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. நிலைமை சரியான பிறகு மீண்டும் வேலை வழங்கப்படலாம். அது அப்போதைய சூழலை பொருந்தது. இப்போதைக்கு வேலை இல்லை.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டின், ஞாயிறு இணைப்புகளில் ஒன்றான The Life பிரிவில் பணிபுரிந்த 3 ஊழியர்கள் வேலையை விட்டு அனுப்பப்பட்டுள்ளனர்.

தி இந்து குழுமத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய வெட்டின்படி…. ஆண்டு ஒன்றுக்கு… 10 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 8%, 15 லட்சம் வரை சம்பளம் வாங்குவோருக்கு 12%, 25 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 16%, 35 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 20%, 35 லட்சத்துக்கும் அதிகமாக சம்பளம் வாங்குவோருக்கு 25% என்ற ஊதிய வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஊடகங்களின் நிலைமை தெரியவில்லை. நிச்சயம் அங்கும் இத்தகைய கெட்டசெய்திகளை எதிர்பார்க்கலாம்.

இதை எழுதுவதற்குத்தரவாக இந்தச் சுட்டியில் உள்ள செய்தி 

மீண்டும் சந்திப்போம்.   

Friday, August 16, 2019

ஆர்டிகிள் 370 abrogation : இன்றைய செய்திகள் சொல்வதென்ன?

இந்தப்பக்கங்களுக்கு வரும் நண்பர்களுக்கு முன்பே பலமுறை சொன்னமாதிரி, எந்த ஒரு அரசியல் செய்தியையும் இங்கே எடுத்துப் போடுவதற்கு முன்னால், அதை அரசை அல்லது பிஜேபியை ஆதரிக்காத தரப்பிலிருந்து என்ன சொல்கிறார்கள் என்பதைத் தான் சிந்திப்பதற்காக எடுத்துக் கொளகிறேன். என் கருத்தை உருவாக்கிக் கொள்வதற்கு, இரண்டுதரப்பையும் கவனித்து அதன் பிறகே முடிவு செய்கிறேன்.  



Another Pakistan's most loyal media channel after the wire and the quint. என்று இந்த வீடியோவைப்பற்றி ஒரேவரியில் முடித்துக் கொள்கிறார் ஆகாஷ் ஸ்ரீவத்சவா! நான் பார்த்தவரையிலும் பாகிஸ்தானுக்கு விசுவாசிகள் என்பதை விட , காசுக்குத்தான் விசுவாசம், காங்கிரசுக்கு அந்தநாட்களிலிருந்தே விசுவாசம் என்பது எனது கருத்தாக கிருந்தாலும், இந்த 9 நிமிட வீடியோ ஒரு முக்கியமான செய்தியை விவாதிக்கிறது. ஆர்டிகிள் 370 abrogate செய்யப்பட்டதை வைத்து காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசப்பிரச்சினையாக்க முயலும்  பாகிஸ்தான்  கோரிக்கையை  ஐநா பாதுகாப்புசபை  நிராகரித்துவிட்டாலும், P 5 நாடுகளில் ஒன்றான சீனா காஷ்மீர் விவகாரத்தைப் பாதுகாப்பு சபை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றதை, பாதுகாப்புசபையின் நிரந்தர உறுப்பினர்களான இதர 4 நாடுகள் ஏற்றுக்கொள்ள சம்மதிக்காத நிலையில், நிரந்தர உறுப்பினர் நாடுகளின் ரகசியக்கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. ஐயையோ, இதைத்தானே உலக அரசியல் எல்லாம் தெரிந்த மேதை வைகோ அன்றைக்கே ராஜ்யசபாவில் எச்சரித்தார் என்று கொடியைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள்! P5 நாடுகளின் InCamera கூட்டத்தில் முடிவு செய்யப்பட இருப்பது, இதைப்  பொதுவெளியில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பது மட்டும் தான்! அதுதொடர்பான செய்தியைத்தான் மேலே 9 நிமிட வீடியோவில் ஒரு கோடி காட்டுகிறார்கள், அவ்வளவுதான்!


இந்தியா அணு ஆயுதம் வைத்திருந்தாலும் அதை முதலில் உபயோகம் செய்யாது என்று முடிவெடுத்தது நாம் தான்! ஆனால் சூழ்நிலைகள்  மாறும்போது அதேதான் இப்போதும் எங்கள் நிலை என்றே இருக்க முடியுமா? இன்றைக்கு நமது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பொக்ரானில் அதைத்தான் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். பாகிஸ்தானுக்கு மட்டும் விடுக்கப்பட்ட  எச்சரிக்கை தானா இது? பாகிஸ்தானைத் தனது கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளும் சீனாவுக்கும் சேர்த்துத்  தான் என்று எடுத்துக் கொள்ள முடியாதா? இது 2019! 1962 அல்லது 1965 இல்லை என்று சொல்கிற மாதிரித்தான் எடுத்துக் கொள்ள முடியும். வாஜ்பாய் மறைந்து ஓராண்டாகிற இன்றைக்கு, அணு ஆயுதத்தை இந்தியா முதலில் பயன்படுத்தாது என்று சுயகட்டுப்பாடு விதித்துக் கொண்ட அவரது பெருந்தன்மை இப்போதும் பொருந்துமா என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!
      
   
பொதுவாக குடியரசுத்தலைவராக இருப்பவர், இருந்தவர் எவரையும் பொதுவெளியில் சர்ச்சைக்குள்ளாகிற விதத்தில் பேசக்கூடாது எழுதக்கூடாது என்பது           நான் கடைப்பிடிக்கும் ஒரு மரபு. அதனால் பிரணாப் முகர்ஜி குடியரசுத்தலைவராகப் போட்டியிட்ட தருணத்தில் எழுதிய இந்தப் பதிவை ஒருதரம் வாசித்துவிடுங்கள்! சோனியா அந்த நாளிலிருந்து இன்றுவரை அவரை ஏன்நம்பியதே இல்லை என்பதற்கு இந்திராவைப்போலவே மருமகளுக்கும் இருந்த insecurities ஒரு காரணமாக இருக்கலாம்!  இந்திராவுக்கு மிக விசுவாசமாக இருந்த ஒருவருக்கும் சோனியா மற்றும் வாரிசுகளுக்கும் இடையிலான உறவு அந்த அவநம்பிக்கையினால் முற்றிலும் அறுந்துவிட்டது என்கிறது dailyO தளச் செய்தி.   The rumouredly cracked relationship between Pranab Mukherjee and the Gandhis, that was concealed under the paint of niceties, finally came to an end this week, in the dazzling hall of Rashtrapati Bhawan, when Pranab babu received the Bharat Ratna for his contribution to India, courtesy the Modi sarkar.

A relationship that was always apparently plagued with insecurities saw a trust deficit grow when Narendra Modi took over as the Prime Minister of India in May 2014.  கொஞ்சம் இணைப்பில் படித்துப் பார்க்க வேண்டிய செய்தியாக.

மீண்டும் சந்திப்போம்.
  

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)