Showing posts with label உளறுவதே அரசியலாக. Show all posts
Showing posts with label உளறுவதே அரசியலாக. Show all posts

Wednesday, June 10, 2020

கொள்ளுப்பேரனுக்கு உலகசரித்திரம் சொல்லிக் கொடுக்க நேரு இப்போது இல்லையே!

மரம் சும்மா இருக்க விரும்பினாலும், காற்று அதை சும்மா  விடுவதாய்  இல்லை! இதை நண்பர் நெல்லைத் தமிழனுக்கு அன்புடன்/வம்புடன் சொல்லிக்கொண்டு இன்றைய அரசியல் கச்சேரியை ஆரம்பிக்கிறேன்!😂😁😈


இந்திய சீன உரசல்களைக் காட்டிலும் மிக அதிக சத்தமாக காங்கிரஸ் காலித்தகர டபபாக்களின் சத்தம் இருப்பதைக் கவனிக்கிறீர்களா? சோனியா பெற்றெடுத்த மக்குப்பிள்ளை ராகுல் காண்டிக்கு உள்ளூர் அரசியலே தெரியாது! அவருக்கு சர்வதேச அரசியலோ பிரச்சினைகளைக் கையாளுவதோ தெரிந்திருக்கும் என்று நினைப்பதே மிகக்கொடுமையான ஜோக் தான்!  எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் நேருவின் மகளே கூட  சீனாவைப் பற்றி அதிகம் பேசியதில்லை. அவருடைய அடாவடிகளெல்லாம்  காங்கிரசில இருந்த கிழடு கட்டைகளிடம் மட்டுமே அனேகமாக இருந்தது.

மேலே இருக்கும் 23 நிமிட வீடியோவில் சேகர் குப்தா என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் கவனமாகக் கேட்டுப் பாருங்களேன்! சேகர் குப்தா மிகவும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்தான்! ஆனாலும் கூடத்  தன்னை எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாகக் காட்டிக் கொள்ளவில்லை! இந்த மாதிரி விவகாரங்களில் அதிகப்பரிச்சயமும் கருத்துச் சொல்வதில் மிகக்கவனமாகவும் இருக்கிற C ராஜமோகன் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் நேற்று எழுதியிருக்கிற கட்டுரையை வைத்தே சேகர் குப்தா இந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

China now has the military power to alter territorial status quo இது கட்டுரையின் தலைப்பு. 
The real challenge for Delhi in managing its expansive territorial dispute with Beijing, then, is to redress the growing power imbalance with China.
இது கட்டுரையில் என்ன சொல்ல வருகிறார் என்பதன் சுருக்கமான உபதலைப்பு.  

இன்றைய நிலவரப்படி சீனாவின் ராணுவ வலிமை மிகப்பெரிது. மறுப்பதற்கில்லை! ஆனால் ராணுவபல்ம்  மட்டுமே எந்தவொரு நிலைமையையும்  முடிவு செய்வதில்லை. பொருளாதாரம், சர்வ தேச உறவுகள் முதலானவைகளும் ஒரு சூழ்நிலையை எப்படி அணுகுவது என்பதில் முக்கியமான காரணிகளாக இருக்கும்.

நரேந்திர மோடி அரசு வெர்ஷன் .2.0, ஏற்கெனெவே ஆர்டிகிள் 370, CAA, இப்படி மிகவும் சிக்கலான விஷயங்களில் எடுத்த முடிவை சர்வதேச அரங்கு ஏற்றுக்கொள்கிற விதத்தில், பல நாடுகளுடனும் ஒரு வெற்றிகரமான உரையாடலை நடத்தி இருக்கிறது. சர்வதேச உறவுகளைக் கையாளுவதில் மிகுந்த கவனத்துடன் இந்திய அரசின் வெளியுறவுக்கொள்கை மிகவும் இணக்கமாக இருப்பதைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் பார்த்து வருகிறோம். ஒரு சிக்கலான நிலைமை உருவாகுமே ஆனால் நம்முடைய பலத்தை அதிகரித்துக்கொள்ள force multipliers கிடைக்கும் விதத்தில் ஒரு ProActive ஆன உறவுகளை வளர்த்துக் கொண்டு வருகிறோம். ஒரு குடும்பத்துக்காக மட்டுமே என்ற பழைய குழப்பங்கள் மாறி, தேசநலனே முதலில் என்கிற மாதிரியான அணுகுமுறையோடு அ ரசின் செயல் பாடுகள் இருப்பதையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். 

சீனாவுடனான எல்லைப்பிரச்சினையைசுமுகமாகத்  தீர்த்துக் கொள்வதற்கு ஒரு நல்லவாய்ப்பு நேருவுக்கு கிடைத்தும் கோட்டை விட்ட கதையை சீனாவில் பணிபுரிந்த கே நட்வர்சிங் தனது My China Diary புத்தகத்தில் பூடகமாக ஒப்புக் கொண்டு இருப்பது ராகுல் காண்டி மாதிரியான மேதாவிகளுக்கு எந்தக் காலத்திலும் புரியாது! மகளுக்கு சிறையிலிருந்தபடியே நேரு உலக சரித்திரத்தைகே கடிதங்களில் சொல்லிக் கொடுத்தார் என்று கதை சொல்வார்கள். மகள் இந்திரா என்னத்தைக் கற்றுக் கொண்டாராம்? கொள்ளுப்பேரன் ராகுலுக்கு அப்படிச் சொல்லிக் கொடுக்க யாருமே இல்லையா? அப்படியே யாராவது சொல்லிக்கொடுக்க முன்வந்தாலும் .....!   😨😰😰

மீண்டும் சந்திப்போம்.  

தொடர்புடைய பதிவு



Sunday, April 26, 2020

பார்த்தது! கேட்டது! படித்ததில் பிடித்தது!

நேற்றைக்குப் பார்த்த வீடியோக்களில் சாணக்யா தளத்தில் பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீனிவாஸ் சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று குறித்த பல புதிய தகவல்களைச் சொல்லும் 38 நிமிட வீடியோவும் ஒன்று. எப்படி வூஹான் ஆய்வுக்கூடத்தில் இருந்து இந்தப் புதிய 
கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது. எப்படிப் பரவியிருக்கக் கூடும் என்ற பல புதிய தகவல்கள் இந்த உரையில் இருக்கிறது.
 
 

ரவீந்திரன் துரைசாமி போன்ற அரசியல் விமரிசகர்களுடன் பேசிப் பேசி ஆதன் தமிழ் மாதேஷுக்கும் கூட அகில இந்திய அரசியல் பற்றி பேசுகிற ஆசை வந்துவிட்டது போல! தமிழக அரசியல் களத்தில் இப்போதைக்கு பேசக்கூடியதாக எந்தவொரு அசைவும் இல்லை என்பதால் மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் பற்றி மாதேஷ் கேள்வி கேட்க ரவீந்திரன் துரைசாமி தன்னுடைய எக்ஸ்பெர்ட் ஒப்பீனியனைச் சொல்கிற காமெடிக் கொடுமையையும் பார்த்தேன்.


வீடியோ 25 நிமிடம். கொரோனா காலத்தில் வீட்டிலேயே அடைந்து கிடப்பதில் பொழுதுபோக்கச் சிறந்த காமெடியாக இந்த விவாதத்தை சிபாரிசு செய்கிறேன்.

இன்றைக்குப் படித்ததில் பிடித்ததாக 

மற்ற எல்லா துறைகளைப் போலவும் ஊடகத்துறையும் கொரோனா விளைவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அச்சு ஊடகம் ஏற்கெனவே தள்ளாட்டத்தில் இருந்தது. இப்போது அந்த வீழ்ச்சி ஒரு புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.

காட்சி ஊடகங்களைப் பொருத்தவரை டி.வி. பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், விளம்பர வருமானம் இல்லை. அதேபோலதான், டிஜிட்டல் மீடியாவிலும் பார்வையாளர் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் விளம்பர வருவாய் இல்லை.

இந்த நிலைமையில், இந்தியாவில் புகழ்பெற்ற பல ஊடகங்கள் ஊதியவெட்டு, ஆட்குறைப்பு என்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய வெட்டின்படி, ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்களுக்கு சிக்கலில்லை. 5 முதல் 7.5 லட்சம் ஆண்டு சம்பளம் வாங்குவோருக்கு 10% சம்பள வெட்டு. 10 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 15% சம்பள வெட்டு. 20 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 20% சம்பள வெட்டு… என்று போகிறது.

’’தற்போதைய நிலைமையில் நாள் ஒன்றுக்கு 3.5 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாக’’ குறிப்பிடும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு, ஆண்டு ஊதியம் 6 லட்சம் வரை வாங்குவோருக்கு சம்பள வெட்டு செய்யவில்லை. அதைவிட அதிக ஊதியம் வாங்குவோருக்கு 5% முதல் 15% சதவிகிதம் வரை ஊதியவெட்டை அறிவித்துள்ளது.

News Nation Network நிறுவனம், தனது இங்கிலிஷ் டிஜிட்டல் டீம் 15 பேரை மொத்தமாக வேலையை விட்டு அனுப்பி, அந்த பிரிவையே கலைத்துவிட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸ் போலவோ, ஹிந்துஸ்தான் டைம்ஸ் போலவோ இவர்கள் அதிக ஊதியம் பெற்றவர்கள் அல்ல. பெரும்பாலும் 25 ஆயிரம், 30 ஆயிரம் சம்பளம் வாங்கியவர்கள். அந்த வேலையும் போய்விட்டது.

புகழ்பெற்ற டிஜிட்டல் செய்தி ஊடகங்களில் ஒன்றான The Quint, தனது 45 ஊழியர்களை காலவரையற்ற; ஊதியமற்ற கட்டாய விடுப்பில் அனுப்பியிருக்கிறது. இவர்களுக்கு ஒரு மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. நிலைமை சரியான பிறகு மீண்டும் வேலை வழங்கப்படலாம். அது அப்போதைய சூழலை பொருந்தது. இப்போதைக்கு வேலை இல்லை.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டின், ஞாயிறு இணைப்புகளில் ஒன்றான The Life பிரிவில் பணிபுரிந்த 3 ஊழியர்கள் வேலையை விட்டு அனுப்பப்பட்டுள்ளனர்.

தி இந்து குழுமத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய வெட்டின்படி…. ஆண்டு ஒன்றுக்கு… 10 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 8%, 15 லட்சம் வரை சம்பளம் வாங்குவோருக்கு 12%, 25 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 16%, 35 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 20%, 35 லட்சத்துக்கும் அதிகமாக சம்பளம் வாங்குவோருக்கு 25% என்ற ஊதிய வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஊடகங்களின் நிலைமை தெரியவில்லை. நிச்சயம் அங்கும் இத்தகைய கெட்டசெய்திகளை எதிர்பார்க்கலாம்.

இதை எழுதுவதற்குத்தரவாக இந்தச் சுட்டியில் உள்ள செய்தி 

மீண்டும் சந்திப்போம்.   

Tuesday, April 21, 2020

இரண்டு கார்டூன்கள்! பின்னாலிருக்கும் அரசியல்!

கார்டூனிஸ்ட் அடடே!மதி  தினத்தந்தியில் வரைந்த ஒரு கார்டூனை வைத்து தீராவிடங்கள் ஒரு விஷபிரசாரத்தை முடுக்கிவிட்டிருக்கின்றன. அந்தக் கார்டூனில் எந்தவிதமான அரசியலும் உள்நோக்கமும் இல்லாதபோதே இப்படி! சுபவீ செட்டியார் ரொம்பவுமே குதித்திருக்கிறார். இசுடாலின் தினத்தந்தி ஓனருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். தினத்தந்தியும் கார்டூனுக்காக வருத்தம் தெரிவித்து விஷயத்தைக் கைகழுவி விட்டது. ஆனால் சுபவீ செட்டியார் குதித்ததற்கு அண்ணாதுரையின் பழைய கதைகள் எல்லாம் வெளியே வர ஆரம்பித்திருப்பது மட்டும்தான் மிச்சம்..  

   
S Shanmuga Nathan பெறுநர் 

**திராவிட பயங்கரவாதம்**

ஒரே ஒரு கார்ட்டூன், திராவிட பயங்கரவாதிகளின் சகிப்புத்தன்மையை தோலுரித்துக் காட்டி இருக்கிறது.

இத்தனைக்கும் அது கேலிச்சித்திரம் அல்ல, அது ஒரு கருத்துப்படம். அந்தக் கருத்துப் படத்தில் "அவரையோ", அவர் கொள்கையையோ எதுவும் சொல்லாமல் ஏதோ ஒரு சிலை என்கிற கருத்தில் தான் வரைந்திருக்கிறார் ஓவியர்.

உடனே அவரை "பார்ப்பனப் பாம்பு" என்று வசை பாடி விஷம் கக்கி இருக்கிறது திராவிடத் தேள் சுப வீ. திராவிட பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்கள் பிராமணர்கள் மட்டும் தான் என்ற 1960/70 மன நிலையில் இருக்கிறார் "பேராசிறியர்". பாவம் களநிலவரம் தெரியவில்லை அவருக்கு,

இதிலும் கூட ஓவியர் பிராமணர் அல்ல. இருந்தாலும் வேறு யாரையும் திட்டுவதற்கு தைரியம் இல்லாத கோழைகள், பிராமணனை தேர்ந்தெடுத்து வசை பாடுகிறது.

மீசை வைப்பதல்ல வீரம். எந்த நிலையிலும் உண்மை பேசுவதுதான் உண்மையான வீரம். பிணத்திலும், தோசையிலும் சாதி பார்க்கும் பேடிக்கூட்டதுக்கு ஓவியர் மதி என்ன சாதி என்று தெரியாமலா இருக்கும்? தெரிந்தும் அவர் "சாதியை" சொல்லாமல் "பார்பனப் பாம்பு" என்கிறது இந்த விஷத்தேள். அவ்வளவு வீரம் அவருக்கு.

ஓவியர் மதி மன்னிப்பு கேட்காவிட்டால் காலம் செருப்படி கொடுக்கும் என்று பேசுகிறார். இவருக்கு ஒன்று புரியவில்லை, இவர் சுட்டிக்காட்டும் இதே காலம் தான் இவர்களுக்கு இப்பொழுது செருப்படி கொடுத்துக் கொண்டிருக்கிறது, இவர்கள் முன்னம் செய்த, இன்னும் செய்து கொண்டிருக்கின்ற பாவத்திற்கு. அந்த அடி தாங்காமல் கத்துகிறார்.

திராவிட பயங்கரவாதிகள் எத்தனை வகையான கேலிச்சித்திரங்கள் வரைந்திருப்பார்கள்? இனிய உளவாக இன்னாதது எத்தனை பேசி இருப்பார்கள்? அவர்கள் கொடுத்த மருந்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு திருப்பிக் கொடுத்தால் கசக்கிறது, இவர்களுக்கு.

திராவிடம் என்பதே ஒரு சகிப்புத்தன்மையற்ற, அறிவற்ற முரட்டுக்கூட்டம் என்பதை மீண்டும் தெளிவு படுத்துகிறார் இவர்.

நேத்து சொன்னேன்ல... அண்ணாதுரையின் வரலாறு இனி இணையம் பூராம் நாறும்னு... இதோ ம.வெ ஜி(Ma Venkatesan) சின்ன சாம்பிள் அவிழ்த்து விட்டிருக்கிறார்....

பாரதிதாசனை எப்போது செருப்பால் அடிக்கப் போகிறார் சுபவீ செட்டியார்? - 1

தினத்தந்தியில் அண்ணாதுரையின் சிலையின் தலையில் கொரானோ படம் வைத்து வரைந்ததற்கு நாய் என்றும் அவரை செருப்பால் அடிக்கும் காலம் வரும் என்றும் சுபவீ செட்டியார் சொல்லியிருக்கிறார்.

அண்ணாதுரையை இதைவிட மிக கேவலமாக ஒருவர் விமர்சித்திருக்கிறார். அவர் பெயரில் இப்போதும் திமுக விருது கொடுக்கிறது. அவருடைய பிறந்தநாளை கொண்டாடுகிறது என்பது சுபவீக்கு தெரியுமா?

அண்ணாதுரையை மிக கேவலமாக விமர்சித்தவர் சாதி ஒழிப்புப் போராளி பாவேந்தர் பாரதிதாசன்தான்.

பாரதிதாசன் அண்ணாதுரையைப் பற்றி எழுதுகிறார் :

....அண்ணாத்துரையின் தமக்கையார் மகளை காஞ்சியில் செல்வந்தராயிருக்கும் (இன்னும் இருக்கின்றார்) பொன்னப்பாவிடம் இரவில் அழைத்துச் செல்வதும் இன்ப விளையாட்டு முடியும்வரைக்கும் வெளியில் காத்துக் கொண்டிருப்பதும் அண்ணாத்துரையின் வேலை. துண்டு இருந்தால் சட்டை வேண்டாம், சட்டை இருந்தால் துண்டு வேண்டாம் என்கிறாள் என் தொத்தா – அண்ணாத்துரையின் அப்போதைய புலம்பல் இது!

அன்னையோ சென்னையில் ஐயரோடு! காஞ்சிப் பூஞ்சோலைக்குத் தண்ணீர் இழுப்பும் பறிப்பும்.

பண்ணியம் ஏதேனும் உண்ண ஆசைப்பட்டால் அதற்காக அண்ணாத்துரைக்கு வருமானம் பொன்னப்பா தரும் சிறுதானம்.

இந்த நிலையில் எனக்குப் பொற்கிழியும் பொன்னாடையும் அண்ணாத்துரையா அளித்திருப்பார்? அதற்கு மாறாக அண்ணாத்துரை என்ன முயற்சியில் ஈடுபட்டிருந்தார் தெரியுமா அப்போது?

பெரியாரின் செல்வநிலை கண்டு மலைத்தார். அவரின் தொண்டராகி நிலைத்தார். குடும்பம் குலைத்தார். பெரியாரை அவர் அண்ணாரிடமிருந்தும், மக்களைப் பெற்றவரிடமிருந்தும் கலைத்தார்.

இன்னும் இதைச் சொல்வதென்றால் விரியும், திரு.குருசாமியைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்.

இந்த முயற்சியில் அண்ணாத்துரைக்குச் சாப்பாட்டுக் குறைவு நிறைவேறிற்று. ஆனால் அவர் கோட்பாட்டுக் குறைபாடு அப்படியே இருந்தது.

தமக்கொரு நல்ல நிலையை ஏற்படுத்துக் கொள்ள எவன் ஏமாறுவான் என்று அண்ணாத்துரைக் கழுகு முகத்தைத் தீட்டிக் கொண்டிருந்தது. ( குயில் இதழ், குரல்– – 1, (30-9-1958), இசை -18)
.............................

இதைவிட ஒருவர் அண்ணாதுரையை கேவலப்படுத்த முடியுமா? எப்போது செருப்பால் அடிக்கப் போகிறார் சுபவீ செட்டியார்?

Surya Ramadoss

சென்னையில் கொரானாவில் இறந்த மருத்துவரை அடக்கம் செய்யவிடாமல் வன்முறையில் ஈடுபட்ட கும்பலை, தமிழக மீடியாக்கள் "பொதுமக்கள்" என அழைக்க, அவர்கள் கிறித்தவ மதவாதிகள் என தற்போது தெரியவந்துள்ளது!

இதில் வருத்தப்படக்கூடிய விசயம் என்னவென்றால், இறந்தவரும் கிறித்தவ டாக்டர்தான்! இறந்தவர் RC கிறித்தவர், எதிர்த்தவர்கள் CSI கிறித்தவர்கள்.! கிறித்தவ மதத்திலிருக்கும் மோசமான மதசண்டையை இது பிரதிபலிக்கிறது!
எங்கேயாவது ஒரு குக்கிராமத்தில் ஒரு சிறிய கோவிலில் நடக்கும் சாதாரண பிரச்சனையை, கோவிலின் பெயரையும், மோதிய ஜாதிகளின் பெயரையும் பகிரங்கமாக வெளியிட்டு பிரச்சனையை தீவிரமாக்கும் தமிழக மீடியாக்கள், கிறித்தவ மதவெறியர்களின் மோசமான கோர தாண்டவத்தை செய்த வன்முறை கும்பலை "பொதுமக்கள்" என மறைத்து செய்தி வெளியிட்டுள்ளனர்.. டெல்லி மாநாட்டுக்கு சென்றுவந்தவர்களை இதே நபர்கள்தான் "தனியார் அமைப்பினர்" என அழைத்தனர்.
முதலில் இறந்த டாக்டரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டித்த அரசியல் தலைவர்கள், வன்முறை கும்பல் கிறித்தவர்கள் என்றதும் அப்படியே பின்வாங்கிக் கொண்டனர்..
சென்னை சம்பவம் கிறித்தவ மதத்திலிருக்கும் மோசமான பிரிவினையை காட்டுகிறது! அதே போல கிறித்தவ மதத்தில், வெள்ளை அங்கி பாதிரியாராக பெரும்பாலும் உயர்சாதியினரே வரமுடியும்!
கிறித்தவ மதத்திற்கு சென்றால் ஜாதி இல்லை என்பது, தாழ்த்தப்பட்ட மக்களை மதம்மாற்றம் செய்யும் வெற்று வார்த்தையே.. தமிழ் சினிமாக்களில் காட்டப்படும் "பாதர்கள்" போல, நிஜ வாழ்க்கை பாதர்கள் இல்லை.!
எந்த மதத்தை சேர்ந்தவராகிலும், கொரனாவால் இறந்தவர்கள் உடலை, இறந்த பிறகாவது நிம்மதியாக அடக்கம் செய்ய விடுங்கள்! கொரானாவில் இறந்தவர்களை எரித்தாலோ, அல்லது 12 அடி ஆழ குழியில் புதைத்தாலோ, அதனால் யாருக்கும் கொரானா பரவாது!
உங்கள் பிரிவு பாதிரியார்களின் பேச்சை கேட்டு, ஊரடங்கை மீறி, மசானங்களில் கூடி, கொரானாவை தடுக்கிறேன் பேர்வழி என்ற பெயரில், கொரானா தொற்று பரவ காரணமாகாதீர்கள்!

நன்றி ; Saravanan Swamy S

மீண்டும் சந்திப்போம். 

Sunday, December 8, 2019

உளறல் திலகமும் சால்வை அழகரும்! #அரசியல்

எகனாமிக் டைம்ஸில் ராகுல் காண்டியின் உளறல் ஒரு 38 செகண்ட் வீடியோவாகப் பார்த்தபோது, முதலில் இதையெல்லாம் ஒரு அரசியல் என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா என்ற ஒரு சலிப்பு, வெள்ளிக்கிழமைப் பதிவில்  KG கௌதமன் பின்னூட்டத்துக்குப் பதில் சொன்ன போதே எழுந்தது. 


இப்படி அவதூறுகளிலேயே அரசியல் செய்வதைக் காங்கிரஸ் 1980களின் மத்தியிலேயே ஆரம்பித்து விட்டது. அந்தக்கதையை இங்கே  கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.   அன்றைக்கு ராஜீவுக்கு Rediffusion போல ஒரு விளம்பர ஏஜென்சி மூளையைக் கசக்கிக் கொண்டு விளம்பரங்களை உருவாக்கிக் கொடுத்தது. ஆனால் மகன் ராகுல் காண்டிக்கு Rediffusion போல எதுவும் தேவையிருந்ததில்லை. வாய்க்கு வந்ததைப் பேசுவது, வாயிலேயே வடை சுடுகிற கலை போதும் என்று உளறுவது வாடிக்கையாகி விட்டது.

சேட்டைக்காரன் பதிவர் முகநூலில் இதைக்குறித்துப் பொங்கி விட்டார்: 
சர்வதேச சமூகம் இந்தியாவை ’கற்பழிப்பு தலைநகரம்,’ என்று ஏளனம் செய்வதாக, தனது வயநாடு தொகுதி விஜயத்தின்போது சொற்பொழிவாற்றியுள்ளார் பப்பு. நமக்குத் தெரிந்து வயநாட்டைத் தவிர்த்து வேறு எந்தப் பயநாட்டிலிருந்தும் இப்படியொரு பழிச்சொல் வந்ததாகத் தெரியவில்லை. ராகுல் காந்தியின் வாயிலிருந்து உண்மையை எதிர்பார்ப்பது, அறிவாலயத்திலிருந்து மூலப்பத்திரம் வருமென்று எதிர்பார்ப்பதற்கு ஒப்பாகும் என்றாலும், கொஞ்சம் பின்னோக்கிப் போனால், காங்கிரஸின் யோக்யதை எப்பேர்ப்பட்டது என்பதையாவது புரிந்து கொள்ளலாம் என்பதாலேயே இப்பதிவு.
ஹைதராபாத் கொடூரம் நிகழ்ந்தபிறகு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், ராஜஸ்தானில் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் என்ன கூறினார் தெரியுமா?
”சிறார்கள் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர்கள் கருணைமனு அளிக்க அனுமதிக்கக் கூடாது” இந்தச் செய்தி எல்லா ஊடகங்களிலும் பரவலாக பரப்பப்பட்டுள்ளதால் சுட்டி தரவேண்டிய நிர்ப்பந்தமில்லை.
சரி, தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இப்படி; காங்கிரஸ் ஆட்சியில் குடியரசுத் தலைவராக இருந்த பிரதீபா பாட்டீல் எப்படியென்பதையும் சற்றுப் பார்ப்போமா?
5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பண்ட்டூ…
6 வயது சிறுமியை நாசமாக்கிக் கொன்ற சதீஷ்..
10 வயது சிறுமியைக் கூட்டு வன்புணர்ச்சியில் சிதைத்துக் கொன்ற மோலாய் ராம் மற்றும் சந்தோஷ் யாதவ்…
சிறுமியைக் கெடுக்கிற முயற்சியில் அவளது குடும்பத்தையே கொன்று குவித்த தர்மேந்திர சிங் மற்றும் நரேந்திர யாதவ்…
மேற்கூறிய காமக்கொடூரர்களின் கருணை மனுவைப் பரிசீலித்த புண்ணியம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, காங்கிரஸால் நியமிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் திருமதி. பிரதீபா பாட்டீலுக்கு உண்டு.
(ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா-20-டிசம்பர்-2012-search: Presidential pardon saved rapists the noose)
அது மட்டுமா?
மறைந்த ஷீலா தீட்சித் டெல்லி முதலமைச்சராக இருந்தபோது, தில்லியில் சௌம்யா விஸ்வநாதன் என்ற ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டபோது, ‘அதிகாலை 3 மணிக்கு டெல்லியில் ஒரு பெண் தனியாக வெளியே வரலாமா?’ என்று கேட்டவர்தான் ஷீலா தீட்சித். அப்போது, பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். நடந்து கொண்டிருந்தது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி.
நிர்பயா கொடூர சம்பவம் நினைவிருக்கிறதா? தில்லியையும், இந்தியாவையும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கிப்போட்ட அந்தக் கோர நிகழ்வுக்குப் பிறகு, டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் சொன்னது என்ன தெரியுமா?
”ஒப்புக்கொள்கிறேன். உண்மையிலேயே டெல்லிதான் கற்பழிப்புத் தலைநகரம்.”
(ஆதாரம்:இந்தியா டுடே; 21 டிசம்பர் 2012 –search: Sheila Dikshit admits Delhi is rape capital, says 'no courage to meet the gangrape victim, I am ashamed')
ஆனால், பின்னாளில் ‘நிர்பயா சம்பவத்தை ஊதிப் பெரிது படுத்தி விட்டார்கள்,’ என்று சொன்னவரும் இவர்தான். (ஆதாரம்: டைம்ஸ் நௌ-5-மே-2019-search: '2012 Gang-rape was blown out of proportion by media', Former Delhi CM Sheila Dikshit)
பின்னாளில் இதே ஷீலா தீட்சித் ’டெல்லியில் வசிப்பது பாதுகாப்பற்றது என்று என் மகளே கருதுகிறாள்’ என்று என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
(ஆதாரம்: என்.டி.டிவி 08-மார்ச்-2013-search: My daughter feels insecure in Delhi: Sheila Dikshit to NDTV)
இந்த லட்சணத்தில்தான் முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு இருந்து வந்தது. இவனுகளுக்கெல்லாம் பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது என்றுதான் புரியவில்லை. (ராகுல் காந்தி மீதே உ.பியில் கூட்டு வன்புணர்ச்சி குற்றச்சாட்டு இருக்கிறது என்பது கூடுதலான செய்தி!)
காந்தியைப் பெயரில் சேர்த்துக்கொண்டிருக்கும் ராகுல் போன்றவர்களெல்லாம், பிரிவினை சமயத்திலும், நவகாளி சமயத்திலும், அஸாம் கலவரத்தின்போதும், நெருக்கடி நிலையின்போதும், சீக்கியர் கலவரத்தின் போதும் எத்தனை பெண்கள் சூறையாடப்பட்டனர் என்ற வரலாற்றைப் படித்துவிட்டுப் பேசுவது, மிச்சம் மீதமிருக்கிற அவர்களது மானத்துக்கு நல்லது. மொத்தமாக மானமில்லையென்றால், இது போன்று உளறுவதற்கு டிக்-டாக் வீடியோ போட்டு அரிப்பைத் தீர்த்துக் கொள்ளட்டும். 

பகிர்வுக்கு வந்த ஒரு பின்னூட்டம் 

Kavitha Hariharan வரலாற்றை படிக்கறதா?
பெண் டாய்லெட் ன்னு வாசிக்க தெரியாம நுழைந்த மேதாவி. அவ்ளோ புத்தி இருந்தா கண்டபடி உளற மாட்டான். 
இவனையும் தலைவர் னு கூவற கூமுட்டைகளை தான் எதாவது சொல்லனும்..

முகநூலில் இப்படி ஒரு வார்த்தை விளையாட்டு! 

  
ராகுல் உளறலுக்குப் பிறகு இப்படி ஒரு காமெடிக் கொடுமை! காங்கிரஸ் ஏன் தேறவே மாட்டேன் என்கிறது?  காரணம், கோளாறு எங்கே என்று புரிகிறதா?


அப்பச்சியின் வாய்க்கொழுப்பு எப்படிப்பட்டது என்பது தெரிந்த விஷயம் தான்! தெரியாதவர்கள் இந்த 15 நிமிட வீடியோவில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் பொய் சொல்வது, புள்ளிவிவரங்களைத் திரிப்பது சீனாதானாவுக்குக் கைவந்த கலை. ஊழல் குற்றத்தில் சிறைக்குப் போனதை வெட்கமே இல்லாமல் வஉசியுடன் எப்படித்  தன்னை ஒப்பிட்டுக் கொள்வார் எப்படி பாரதியாரின் கவிதை வரிகளைத் தனக்குச் சாதகமாக்கிக்  கொள்வார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?        அப்பச்சி எப்படித் தேனொழுக வாயில் வடை சுடுவார் என்ற கலையை அவரிடமிருந்து தான் ராகுல் காண்டி கற்றுக் கொள்ள வேண்டுமோ? 

மீண்டும் சந்திப்போம். 
  

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)