பார்த்தது, கேட்டது, படித்தது! எல்லாமே மனித மனங்களின் ஆளுமையாக, பகிர்ந்து கொள்வதற்காக!
Saturday, July 4, 2020
#சீனப்பூச்சாண்டி குறித்தான இந்திய அரசின் அணுகுமுறை மாறுகிறது!
Wednesday, June 10, 2020
கொள்ளுப்பேரனுக்கு உலகசரித்திரம் சொல்லிக் கொடுக்க நேரு இப்போது இல்லையே!
Saturday, May 2, 2020
பார்த்தது! கேட்டது! படித்ததில் பிடித்தது!
குட்டி தமிழ்வாணன்
ஒரு எழுத்தாளர் பற்றி மிகையாக அந்த காலத்தில் கற்பனை கதைகள் சிறுவர்கள் மத்தியில் இருந்தது.
தமிழ்வாணனுக்கு ஒரு கண் கிடையாது. ஒரு கை கிடையாது. இப்படி.
பள்ளிக்கூட லைப்ரரிகளில் தமிழ்வாணன் துப்பறியும் கதைகள் புத்தகங்களுக்கு செம டிமாண்ட்.
சங்கர்லால் துப்பறிகிறார். அப்புறம் துப்பறியும் கதைகள் தமிழ்வாணன் துப்பறிகிறார்.
’கல்கண்டு’ தமிழ்வாணன் ஒரு pompous person.
தன்னைப்பற்றி எப்போதும் மிகப்பெரிய அளவில் பில்ட் அப் பண்ணுவார். எம்.ஜி.ஆர் காவல்காரன் படத்தில் நடித்ததற்கு பிறகு தொப்பியுடன் எப்போதும் பொது இடங்களுக்கு வர ஆரம்பித்தார். தொப்பி, கூலிங் க்ளாஸ் சகிதம் தான் எப்போதும் இருக்க ஆரம்பித்தார். கல்கண்டு பத்திரிக்கையில் தமிழ்வாணன் கேள்வி பதில்கள் பிரபலமானவை.
கேள்வி : எம்.ஜி.ஆர் இப்போது எப்படியிருக்கிறார்?
தமிழ்வாணன் பதில் : ’எம்.ஜி.ஆர் இப்போது ஒரு குட்டி தமிழ்வாணன் போல் இருக்கிறார். தமிழ்வாணன் தொப்பி வைத்திருப்பது போல அவரும் தலைக்கு ஒரு தொப்பி வைத்துக்கொண்டிருக்கிறார். தமிழ்வாணன் கறுப்பு கண்ணாடி போட்டிருப்பது போல எம்.ஜி.ஆரும் கண்ணுக்கு கறுப்பு கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார். மொத்தத்தில் அவர் ஒரு குட்டி தமிழ்வாணன் போல மாறியிருக்கிறார்.’
Worst Arrogance. Thinking too much of oneself. Superiority complex.
அன்று எம்.ஜி.ஆருக்கு இருந்த பிரமாதமான அந்தஸ்து தெரிந்தும் இப்படி ஒரு பீற்றல்.
எம்.ஜி.ஆர் என்ன, எம்.ஜி.ஆர் ரசிகர்களே இதைப்பார்த்து எரிச்சல் படாமல் இருக்க முடியுமா?
கல்கண்டு பத்திரிக்கையில் எப்போதும் எம்.ஜி.ஆர் மலையாளி, கிழவன் என்றெல்லாம் கிண்டல் செய்து கொண்டுமிருந்தார்.
உலகம் சுற்றும் வாலிபன் படத் தயாரிப்பு காலத்தில் எம்.ஜி.ஆர் ஹாங்காங்கில் தமிழ்வாணன் சட்டையைப் பிடித்து மிரட்டி எச்சரித்த போது மிரண்டு போய்விட்டார்.‘துணிவே துணை’ என்று முழங்கியவர் கல்கண்டு ஆசிரியர்.
“நூறு வயது வரை வாழ்வது எப்படி?” என்று விளக்கமாக ஒரு புத்தகம் எழுதினார்.
தமிழ்வாணனுக்கு அப்புறம் தான் ஐம்பது வயது முடிந்தது. அதன் பின் ஐம்பத்தொரு வயதும் முடிந்து ஒரு ஆறு மாதத்தில் செத்துப்போனார். ஐம்பத்தொன்றரை வயது தான் தமிழ்வாணனுக்கு லபித்தது.
அவர் இறந்து நாற்பத்தியொரு வருடங்கள் இப்போது ஓடி விட்டது. நூறு வயதாக இன்னும் எட்டு வருடங்கள் இருக்கிறது.
The advise you tell others is the advice you need to follow.
இவருக்கும் கண்ணதாசனுக்கும் ஏதோ மனஸ்தாபம் இருந்திருக்கிறது.
’கண்ணதாசன்’ மாதப் பத்திரிக்கையில் ‘அடுத்த இதழில் மாஸ்டர் ஆஃப் ஆல் ஃப்ராட்ஸ் பற்றி ‘ என்று அறிவித்து ஒரு குறிப்பு இருந்தது.தமிழ் வாணன் தான் அது என்று பரவலாக ஹேஸ்யம்.
அப்போது தமிழ்வாணன் அகால மரணம் .
அடுத்த கண்ண தாசன் இதழில் மாஸ்டர் ஆஃப் ஃப்ராட்ஸ் கட்டுரை எதுவும் வெளியாகவில்லை. கப்சிப்.
Friday, April 10, 2020
அக்கம் பக்கம்! இன்று என்ன சேதி?
As Marion Smith wrote in these pages on Sunday, China’s first response was to clamp down on reports of the then-new disease that had appeared in Wuhan. The brave doctor, Li Wenliang, who first reported the disease to fellow physicians was silenced by police. Chinese media reports of the disease were censored by the government. So were ordinary citizens reporting on social media.
As Smith writes: “Beijing denied until Jan. 20 that human to human transmission was occurring. Yet at the same time, Chinese officials and state-owned companies were urgently acquiring bulk medical supplies — especially personal protective equipment like masks and gloves — from Australia, Europe, and around the world. Put simply, Beijing hoarded the world’s life-saving resources while falsely claiming that people’s lives weren’t at risk.” இங்கே நீலவண்ணத்தில் இருப்பவை தொடர்புடைய சுட்டிகள். சீனாவில் வைரஸ் தொற்று பரவிக்கொண்டிருந்த தருணத்தில், அவர்கள் PPE என்கிற பாதுகாப்பு உபகரணங்களை வாங்கிப் பதுக்கிக் கொண்டிருந்தார்கள் என்றும் குற்றம் சாட்டுகிறார் மரியோன் ஸ்மித். சீனர்களுக்குப் பாடம் புகட்டியே ஆகவேண்டும் என்கிற ரீதியில் போகிற இந்தச் செய்திக் கட்டுரையைப் படிக்க.
அதிபர் ஷி ஜின்பிங் தலைமையின் பலவீனம், சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் சறுக்கல் என்று இந்தக் குளறுபடிகளுக்குப் பின்னால் நிறையக் காரணங்கள் இருக்கின்றன. ஒபாமாவின் எட்டு ஆண்டுகள், அதற்கப்புறம் டொனால்ட் ட்ரம்பின் நான்கு ஆண்டுகள் எனத்தொடர்ந்து 12 ஆண்டுகள் அமெரிக்கா சீனத்துச் சண்டியர்கள் எதிர்ப்பார் எவருமில்லாமல், கொம்புசீவி வளர விட்டுவிட்டது. இரண்டாம் உலகப்போருக்குப்பிந்தைய நூற்றாண்டு அமெரிக்காவுடையதாக இருந்தது, அடுத்து வருகிற நூற்றாண்டு சீனாவுடையதாகத் தானிருக்கும் என்கிற கற்பிதத்தின் மீதே ஷி ஜின்பிங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிமீதும், சீனாமீதும் தன்னுடைய பிடியை இறுக்கிவைத்திருந்த நிலைமை மாறக் கூடியதான சூழ்நிலை இப்போது உருவாகியிருக்கிறதென்றே சொல்ல வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கைகள், திட்டங்கள் எல்லாம் கனவுகாண்பதற்கு வேண்டுமானால் உதவியாக இருக்கலாம்! நடைமுறைக்கு உதவுமா? நம்பிக்கரை சேர முடியாது என்பதை சோவியத் யூனியன் சிதறியதில் நிரூபணமானது நினைவிருக்கிறதா?
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட அதேமாதிரி நிரூபணத்தைத் தரப்போகிறதா என்ன?!
இது இன்று இந்தப்பக்கங்களில் எழுதப்பட்டதன் சுருக்கம் நண்பர்கள் இந்தப்பக்கமும் வந்து வாசிக்கலாமே! மீண்டும் சந்திப்போம்.
Saturday, April 4, 2020
பீலா ராஜேஷ்! பானு கோம்ஸ்! சீனர்களை நம்பவேண்டாம்!
சீன வைரஸ் ஆரம்பித்தது முதல் உலகம் முழுவதும் பரவியது வரையிலான தேதி குறிப்பிட்டு வெளிப்படுத்தும் காணொளி. இரண்டு பாகங்களாக இருக்கிறது.
காணொளியை வெளியிட்டிருப்பவர் பெயர் Jennifer Zeng. சீனாவின் labour camp-லிருந்து தப்பித்து அமெரிக்காவில் சரணடைந்திருப்பவர். இப்போது நியூயார்க்கில் வாழ்ந்து வருகிறார்.
வைரஸ் விவகாரத்தில் சீனாவின் மர்மமான நடவடிக்கைகள், அடக்குமுறைகள், உயிர் பலிகள் குறித்த அனைத்தையும் உலக மக்களின் பார்வைக்கு தொடர்ந்து கொண்டுவருவதில் ஜென்னிபரின் பங்கு மிக மிக முக்கியமானது.
Saturday, February 22, 2020
இன்று படித்ததில் முக்கியமான சில செய்திகள்! #Covid-19
Thursday, August 29, 2019
ஓடி வாங்க! பூச்சாண்டி பார்க்கலாம்!
இது அக்கம் பக்கம்! என்ன சேதி! தளத்துக்காக இன்று எழுதிய பதிவின் ஒருபகுதி!
இங்கே விரிவாகப்படிக்கலாம்.
இந்தப்பக்கங்களை புக்மார்க் செய்துகொள்வதுடன் நண்பர் குழாத்துக்கும் பரிந்துரை செய்வீர்கள் தானே!
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
இப்போது பார்த்துக் கொண்டிருப்பது
#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!
செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...
முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்
-
சி ல மாதங்களுக்கு முன்பாக உடுமலைடாட்காமில் தி.ஜானகிராமன் புத்தகங்கள் சிலவற்றுக்கு ஆர்டர் கொடுத்திருந்தேன். ஆர்டர் கொடுத்ததில், மலர் மஞ்சம்...
-
செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...
-
மஹாபாரதக் கதை மாந்தர்களில் சகுனி கொஞ்சமல்ல நிறையவே வித்தியாசமானவன் என்பது தெரிந்ததுதான். உண்மையைச் சொல்லப்போனால் பாரதக்கதையில் வரும் பாத்திர...
-
2010 ஜூனில் அமெரிக்க எழுத்தாளர் ராபர்ட் லட்லம், இன்னொரு எழுத்தாளரோடு சேர்ந்து எழுதிய The Hades Factor புதினத்தை அறிமுகப்படுத்துகிற மாதிரி எ...
-
கார்டூனிஸ்ட் அடடே!மதி தினத்தந்தியில் வரைந்த ஒரு கார்டூனை வைத்து தீராவிடங்கள் ஒரு விஷபிரசாரத்தை முடுக்கிவிட்டிருக்கின்றன. அந்தக் கார்டூனில் ...
-
வலைப்பக்கங்களில் தேடிப் படிக்கிற சில விஷயங்கள் , நமக்குக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களாகவும் , வழிகாட்டுவதாகவுமே ஆகிவிடுவதுண்டு . மொக்கை போ...
-
நம்மூர் ஆனந்த விகடன் தளத்தில் கூட அபூர்வமாக ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் உருப்படியான செய்தி, அதுவும் இந்தக்காலச் சூழ்நிலைக்குப் பொருத்தமாக வ...
-
இன்றைய அரசியல் செய்திகளில் ஒரு ஓரத்தில் ராகுல் காண்டி நடத்திவரும் ராஜினாமா போராட்டம் அவ்வளவு கவனத்தைப் பெறவில்லையோ? இதற்கு கடந்த 70+ ஆண்டு...
-
இங்கே முந்தைய பதிவுக்கு நண்பர் ரஹிம் கொஞ்சம் விரிவாகவே ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தார். பின்னூட்டங்களில் பதிலாக எழுதுவதும் கூடப் பல சமயங்க...

