மரம் சும்மா இருக்க விரும்பினாலும், காற்று அதை சும்மா விடுவதாய் இல்லை! இதை நண்பர் நெல்லைத் தமிழனுக்கு அன்புடன்/வம்புடன் சொல்லிக்கொண்டு இன்றைய அரசியல் கச்சேரியை ஆரம்பிக்கிறேன்!😂😁😈
இந்திய சீன உரசல்களைக் காட்டிலும் மிக அதிக சத்தமாக காங்கிரஸ் காலித்தகர டபபாக்களின் சத்தம் இருப்பதைக் கவனிக்கிறீர்களா? சோனியா பெற்றெடுத்த மக்குப்பிள்ளை ராகுல் காண்டிக்கு உள்ளூர் அரசியலே தெரியாது! அவருக்கு சர்வதேச அரசியலோ பிரச்சினைகளைக் கையாளுவதோ தெரிந்திருக்கும் என்று நினைப்பதே மிகக்கொடுமையான ஜோக் தான்! எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் நேருவின் மகளே கூட சீனாவைப் பற்றி அதிகம் பேசியதில்லை. அவருடைய அடாவடிகளெல்லாம் காங்கிரசில இருந்த கிழடு கட்டைகளிடம் மட்டுமே அனேகமாக இருந்தது.
மேலே இருக்கும் 23 நிமிட வீடியோவில் சேகர் குப்தா என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் கவனமாகக் கேட்டுப் பாருங்களேன்! சேகர் குப்தா மிகவும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்தான்! ஆனாலும் கூடத் தன்னை எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாகக் காட்டிக் கொள்ளவில்லை! இந்த மாதிரி விவகாரங்களில் அதிகப்பரிச்சயமும் கருத்துச் சொல்வதில் மிகக்கவனமாகவும் இருக்கிற C ராஜமோகன் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் நேற்று எழுதியிருக்கிற கட்டுரையை வைத்தே சேகர் குப்தா இந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
China now has the military power to alter territorial status quo இது கட்டுரையின் தலைப்பு.
The real challenge for Delhi in managing its expansive territorial dispute with Beijing, then, is to redress the growing power imbalance with China.
இது கட்டுரையில் என்ன சொல்ல வருகிறார் என்பதன் சுருக்கமான உபதலைப்பு.
இன்றைய நிலவரப்படி சீனாவின் ராணுவ வலிமை மிகப்பெரிது. மறுப்பதற்கில்லை! ஆனால் ராணுவபல்ம் மட்டுமே எந்தவொரு நிலைமையையும் முடிவு செய்வதில்லை. பொருளாதாரம், சர்வ தேச உறவுகள் முதலானவைகளும் ஒரு சூழ்நிலையை எப்படி அணுகுவது என்பதில் முக்கியமான காரணிகளாக இருக்கும்.
நரேந்திர மோடி அரசு வெர்ஷன் .2.0, ஏற்கெனெவே ஆர்டிகிள் 370, CAA, இப்படி மிகவும் சிக்கலான விஷயங்களில் எடுத்த முடிவை சர்வதேச அரங்கு ஏற்றுக்கொள்கிற விதத்தில், பல நாடுகளுடனும் ஒரு வெற்றிகரமான உரையாடலை நடத்தி இருக்கிறது. சர்வதேச உறவுகளைக் கையாளுவதில் மிகுந்த கவனத்துடன் இந்திய அரசின் வெளியுறவுக்கொள்கை மிகவும் இணக்கமாக இருப்பதைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் பார்த்து வருகிறோம். ஒரு சிக்கலான நிலைமை உருவாகுமே ஆனால் நம்முடைய பலத்தை அதிகரித்துக்கொள்ள force multipliers கிடைக்கும் விதத்தில் ஒரு ProActive ஆன உறவுகளை வளர்த்துக் கொண்டு வருகிறோம். ஒரு குடும்பத்துக்காக மட்டுமே என்ற பழைய குழப்பங்கள் மாறி, தேசநலனே முதலில் என்கிற மாதிரியான அணுகுமுறையோடு அ ரசின் செயல் பாடுகள் இருப்பதையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
சீனாவுடனான எல்லைப்பிரச்சினையைசுமுகமாகத் தீர்த்துக் கொள்வதற்கு ஒரு நல்லவாய்ப்பு நேருவுக்கு கிடைத்தும் கோட்டை விட்ட கதையை சீனாவில் பணிபுரிந்த கே நட்வர்சிங் தனது My China Diary புத்தகத்தில் பூடகமாக ஒப்புக் கொண்டு இருப்பது ராகுல் காண்டி மாதிரியான மேதாவிகளுக்கு எந்தக் காலத்திலும் புரியாது! மகளுக்கு சிறையிலிருந்தபடியே நேரு உலக சரித்திரத்தைகே கடிதங்களில் சொல்லிக் கொடுத்தார் என்று கதை சொல்வார்கள். மகள் இந்திரா என்னத்தைக் கற்றுக் கொண்டாராம்? கொள்ளுப்பேரன் ராகுலுக்கு அப்படிச் சொல்லிக் கொடுக்க யாருமே இல்லையா? அப்படியே யாராவது சொல்லிக்கொடுக்க முன்வந்தாலும் .....! 😨😰😰
மீண்டும் சந்திப்போம்.
தொடர்புடைய பதிவு:
காலி தகர டப்பாக்கள்...
ReplyDeleteஅதுவும் ஓட்டை டப்பாக்கள்...
அவ்வளவு தான்...
துருப்பிடித்து உதிர்ந்து காணாமல் போய்க் கொண்டிருக்கிற ஓட்டை டப்பாக்கள் என்றுகூட சொல்லலாமே துரை செல்வராஜூ சார்! :-)))
Deleteகாங்கிரஸ் பற்றி கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள் கலைந்து கொண்டிருக்கின்றன. பாவம் ராகுல். வில கவோ, ஓடவோ கூட முடியாத சூழல்.
ReplyDeleteநீங்கள் எந்தக் காங்கிரசைச் சொல்கிறீர்கள் ஸ்ரீராம்? வெள்ளையர்களோடு இணக்கமாக மன்றாடி சில சலுகைகளை வாங்கித்தரத் துவங்கப்பட்ட காங்கிரஸ் இல்லை இப்போதிருப்பது. ஒரிஜினல் காந்தி இருந்த காலத்துக் காங்கிரசும் இல்லை இது. நேரு மகள் இந்திரா தன்னுடைய சுயநலத்துக்காக உடைத்துத் தனது ஏவலடிமைகளாக வைத்திருந்த அந்த இண்டிகேட் காங்கிரசும் இல்லை. ராஜீவ் காலத்து வழவழா காங்கிரசும் இல்லை இப்போதிருப்பது.
Deleteராஜீவ் மரணத்துக்குப் பிறகு கட்சியின் பெயரைக் கைப்பற்றிய சோனியாG தன்னுடைய பிரைவேட் லிமிடெட் கம்பனியாக வைத்திருக்கிற கும்பல் மட்டும் தானே இன்றிருப்பது? தலீவர்கள் என்று தங்களை நினைத்துக் கொண்டிருக்கிற கும்பல் சரி, கட்சி அமைப்போ தொண்டர்களோ இருக்கிற அடையாளம் தெரிகிறதா என்ன?
புலிமேல் சவாரி போல ஆகிப்போனது ராகுலின் காங்கிரஸ் தலைமைப் பதவி. விட்டாலும் முக்கியத்துவம் போயிடும், மதிக்க ஆள் இருக்காது. விடவில்லை என்றால் தேர்தல் தோல்விகள், திறமையைச் சந்தி சிரிக்க வைக்கிறது. ஆகமொத்தம் சொந்த வாழ்க்கையை இழந்ததுதான் மிச்சம்.
ReplyDeleteஆனால் அவருக்கும் ஒரு காலம் வரும். சோனியா இல்லாம முதலைகளைச் சமாளிக்க முடியுமா?
ராகுல் காண்டி அப்படி என்ன சுகத்தை, வாழ்க்கையை இழந்துவிட்டார் என்று பரிதாபப்படுகிறீர்கள் நெ.த சார் ? அடிக்கடி வெளிநாடுகளுக்குபோய்வருவது எதற்காகவாம்?
Delete/ஆனால் அவருக்கும் ஒரு காலம் வரும்/ இனிமேல் இது வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன என்ற தமிழ் சினிமா வசனம் ஞாபகம் வருகிறதா? .
என்ன...இப்படிச் சொல்லிட்டீங்க? மோடி அவர்கள் பதவிக்கு வந்தபோது அவருடைய வயதைவிட ராகுலுக்கு அதிகமாகவில்லையே.
Deleteதிருமணம் செய்ய முடியாது என்ற நிலை பரிதாபம் இல்லையா?
நெ.த. சார்! நேரு பாரஃம்பரையை இந்த விஷயத்தில் ரொம்பவுமே குறைத்து மதிப்பிடுகிறீர்கள் போல! பப்புவும் பப்பியும் பாட்டியைப் போலவே பிஞ்சிலேயே பழுத்த கேசுகள்!
Delete/திருமணம் செய்ய முடியாது என்ற நிலை பரிதாபம்/
இது என்ன புதுக்கதை? நான் எதையாவது சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா?