சிம்புவை வைத்துப் படமெடுத்தால் அது தானாகவே ஒரு விடலைத்தனமான காதல் படமாக ஆகிவிடும் என்பதை நிரூபித்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா! ஒரு எல்லைக்குள் நின்றால் மட்டுமே சிம்பு படங்களில் விடலைத் தனம் இருக்கும். எல்லைதாண்டினால் அதுவே வில்லங்கமான அல்லது விவகாரமான படமாகிவிடும் என்பதற்கு சிம்பு நடித்த பலபடங்களைச் சொல்லலாம். அந்தவகையில் VTV படத்தில் சிம்புவின் விடலைத்தனம் ஒரு அளவோடு இருந்ததால் மிகவும் ரசிக்கப்பட்ட படமாகவும் ஆகிப்போனது. இதன் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டால் எப்படியிருக்கும்? அதுவும் 12, 13 நிமிடங்களுக்குள்! கௌதம் வாசுதேவ் மேனன் தனது ஒன்றாக தளத்தில் வீடியோவை நேற்று ரிலீஸ் செய்த ஒரே நாளில் 11 லட்சம் பார்வைகளைக் கடந்து இருக்கிறதென்றால்....!
VTV நாயகன் கார்த்திக் தனது முன்னாள் காதலி ஜெஸ்ஸிக்கு போன் செய்கிறான். என்னமாக கதை போகிறதென்று வீடியோவைப் பாருங்கள்! ஆனால் நம்மூர் மீம்ஸ் க்ரியேட்டர்களுடைய கற்பனைத்திறன் இருக்கிறதே அது கௌதம் வாசுதேவ் மேனன்களை விட மிகத்திறமையாக இருக்கிறதென்றே சொல்ல வேண்டும்! ஒரே படத்தில் இந்த 12 நிமிட வீடியோவைச் சொல்லி இருக்கிறார் ஒரு திறமையாளர்!
இன்னொருத்தர் இதை அடுத்தகட்டத்துக்கே எடுத்துப் போய்விட்டார்!
நம்மூர் தொலைகாட்சி சீரியல் தயாரிப்பாளர்கள் இதுபோல எட்டிப் பிடிக்க எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?
மீண்டும் சந்திப்போம்.
ஹ தவறுதலான தட்டச்சு . மன்னிக்கவும்.
ReplyDeleteசிம்புவின் படங்களுள் ரசிக்க கூடியது விண்ணைத்தாண்டி வருவாயே.
ReplyDeleteகௌதம் வாசுதேவ் மேனனுடைய இயக்கத்தில் சிம்பு நடித்த படங்கள் விண்ணைத்தாண்டி வருவாயா மட்டுமல்ல அச்சம் என்பது மடமையடா கூட நன்றாகத்தான் இருந்தது. நல்ல திறமையான நடிகன் தான்! பிஞ்சிலேயே பழுத்ததால் சரிவைச் சந்திக்க வேண்டிவந்தது.
Deleteஇங்கே கொஞ்சம் கிண்டலுக்காக எழுதப்பட்டது. சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்!