Friday, May 8, 2020

#கொரோனாடைம்ஸ் டைம் பாசுக்கு என்ன செய்வது? டாவின்சி கோட்! விஷ்ணுபுரம்!

கொரோனா தொற்று ஏற்பட்டுவிடும்! வீட்டிலேயே இரு என்று அரசின் மிகக்கனிவான வேண்டுகோளை ஏற்று வீட்டிலேயே முடங்கி கிடக்கிற காலம் இது! பொழுதைக் கடத்துவது என்பது வரவர மிகவும் கடினமாகிக் கொண்டே வருவதில் டிவி பார்ப்பது முதலில் கசந்து அதன்பின் நெட்பிலிக்ஸ் முதலானவையும் கசந்ததில் எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்று என்னிடம் யாரும் வந்து கேட்கவில்லைதான்! அவர்களுக்கும் அதே மாதிரிப் பிரச்சினை தான் போல என்று முடிவு செய்துகொள்ளலாமா என்பது கூட சரியாகத் தெரியவில்லை!  லோகோ பின்ன ருசி! அவரவர் அவஸ்தை அவரவருக்கு என்று வேறு சொல்லியிருக்கிறார்களே!

வலதுபக்கம் சொல்லியிருக்கிறமாதிரி முதல் இரண்டுவாரங்கள் ஓடிப்போயின.  அதற்காக Money Heist  அல்லது Narcos மாதிரிக்கு காவியங்களைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்க முடியுமா? காய்ச்சல் கண்டவனுக்கு வாய்கசந்துபோல வெப் சீரீஸ் பார்ப்பதும் ஆகிவிட்டது . இருக்கவே இருக்கிறது புத்தக வாசிப்பு என்று ஆரம்பித்தால் நம்முடைய ராசிக்கு ஹரிகேசநல்லூர்க்காரர் ஜோசியம் சொல்கிற மாதிரி ஆகிவிடும் என்று கண்டேனா?


டாவின்சி கோட்!  தமிழில் இருக்கிறது வாசிக்கிறாயா என்று நண்பர் பரம கருணையோடு கொடுத்த புத்தகம்! நண்பருக்கு என்மீது தீராதவஞ்சம் எதோ இருக்கப்போய், வசமாகத் தீர்த்துக் கொண்டு விட்ட மாதிரி அப்படி ஒரு கரடு முரடான மொழிபெயர்ப்பு. மேலே பார்த்தீர்களானால் இரா செந்தில், பெரு முருகன் என்று இரண்டுபேர் கூட்டாக முழிபெயர்த்திருக்கிறார்கள். டான் ப்ரவுன் அல்லது அவருடைய பதிப்பாளரிடமிருந்து முறையான அனுமதி பெற்று மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதான அறிகுறி எதுவும் சொல்லப்படவில்லை. 700+ பக்கங்கள் தானே என்று எடுத்துக் கொண்டதில், என்னுடைய பொறுமை அளவுக்கு மீறியே சோதிக்கப்பட்டதுதான் மிச்சம்.

மதம் மதம் சார்ந்த குறியீடுகள் என்று பேசவரும் அயல்மொழிப் புத்தகங்களை அவை ரொம்ப பிரபலம் என்பதாலேயே  மொழிபெயர்த்து விடுவதில் உள்ள முதல்தடையே வாசிப்பவருக்கு அதைப்பற்றிய பரிச்சயம் ஏதோ கொஞ்சம் இருக்கும் என்று கற்பனை செய்துகொள்வதுதான்! அதேபோல மொழி பெயர்த்தவர்களுக்காவது அப்படிப் பரிச்சயம் இருந்ததா என்றால் அதுவும் படுசுத்தம். ஆக ஆங்கிலத்தில் ஏற்கெனெவே படித்து படமாகவும்  பார்த்த ஒரு  த்ரில்லர் ரக நாவலைத் தமிழில் படித்த அனுபவம் ஒரு சொத்தைக்கடலையைக் கடித்து நேரமானபின்னாலும்கூட ஒரு அடிக்கசப்பு இருக்குமே அதைவிடக் கொடுமையானது.  



தமிழில் டாவின்சி கோட் படித்து முடித்ததில் ஏற்பட்ட தைரியம், மகனுடைய புத்தக சேகரத்தில் இங்கே வந்து  சேர்ந்தவற்றில் ஜெயமோகனுடைய  விஷ்ணுபுரம் நாவலை நேற்றைக்குப் படிக்க எடுத்துக் கொள்கிற அளவுக்கு நெஞ்சுரத்தைக் கொடுத்திருக்கிறது.

கொரோனா சோதனைக்காலத்தை வெல்ல ஜெயமோகனை வாசிப்பது என்றாகியிருக்கிறதே, அது ஒன்று போதாதா?  மீண்டும் சந்திப்போம்.      

10 comments:

  1. ஆங்கிலக் கதைகளை தமிழில் மொழிபெயர்க்க பெரிய திறமை வேண்டும். அந்த மொழி இடியம்ஸ் வேறு, பெயர்கள் நமக்கு அந்நியம், கலாச்சாரம் அந்நியம். இதையெல்லாம் நாம் படிக்க முடியும்படி மொழிபெயர்க்கவேண்டும்.

    எனக்குத் தெரிந்து மொழிபெயர்க்கும் திறமை பெரும்பாலானவர்களிடம் கிடையாது. கண்ணதாசன் பதிப்பகத்தில் (?) வந்த அகதா கிரிஸ்டி.... மர்ம நாவல்களின் தமிழ் முழி பெயர்ப்பைப் படித்து நொந்துபோனவன் நான். இதில் காம்ப்ளிகேடட் டாவின்ஸி கோடை மொழிபெயர்ப்பதா? ஹா ஹா. யாராவது ஓசிக்கு புத்தகம் அனுப்பினால் படித்து விமர்சனம் செய்யலாம். இருந்தாலும் டான் ப்ரவுன் நாவல்களை மொழிபெயர்ப்பு செய்வது NEARLY IMPOSSIBLE என்பது என் எண்ணம் (நிறைய டெக்னிகல் சமாச்சாரங்கள்0

    ReplyDelete
    Replies
    1. ஆனானப்பட்ட ரஷ்ய நாவல்களையே அனாயாசமாகத் தமிழில் மொழிபெயர்த்த ஜாம்பவான்கள் இருந்தார்கள் என்பதையும் கொஞ்சம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் நெ.த. சார்! பள்ளிமாணவனாக தாகூரின் கோரா நாவலைத் தமிழில் படித்ததுண்டு.

      இங்கே டாவின்சி கோட் மொழிபெயர்ப்பில் இருந்த அடிப்படைக்கு கோளாறே, நாவலை வாக்கியத்துக்கு வாக்கியம் அப்படியே முழி பெயரும்படி மொழிபெயர்க்க முயற்சி செய்திருந்தது படு கோரம் . அதைப்படித்து முடிக்க எனக்கு 2 நாட்களானது. இத்தனைக்கும் ஆங்கிலத்தில் வெளியான நாவலையும் படித்து படத்தையும் பார்த்துப் புரிந்து கொண்டவன் தமிழ் மொழிபெயர்ப்பில் தடுமாறித்தான் போனேன்

      Delete
    2. டாவின்சி கோட் நாவலை நான் படித்துக்கொண்டிருந்தபோது, எனக்கு ஆபீஸ் வேலையாக பாரீஸ் செல்லும் வாய்ப்பு வந்தது. இரவு 8 மணி ஆனபோதும் அவசர அவசரமாக லூவருக்குச் சென்று அந்த ஓவியத்தைப் பார்த்தேன் (9 1/2க்கு மூடிவிடுவார்கள். லூவர் மியூசியம் முழுவதுமாக வெறும்ன பார்ப்பதற்கே ஒரு நாளுக்கு மேலாகும். புரிந்து பார்க்கணும்னா ஒரு வாரம்கூட பத்தாது). கடவுள் அருளால் அந்த டிரிப்லேயே ஒரு முழு நாள் எனக்குக் கிடைத்தது. காலை திறந்த நேரத்திலிருந்து மதியம் 3 1/2 மணி வரை என்னால் முடிந்த அளவு பார்த்தேன். கால்களால் அதற்கு மேல் நடக்க முடியவில்லை, அதனால் திரும்பினேன். ஒவ்வொரு முறையும் 17 யூரோ என்று நினைவு.

      Delete
  2. ததிழ் டாகோ மிக முன்னரே படித்து விட்டேன். விபு ஆரம்பித்தது அப்படியே நிற்கிறது!

    ReplyDelete
    Replies
    1. // ததிழ் //

      தமிழ்!!!

      Delete
    2. ஸ்ரீராம்! டாகோ புரிகிறது அதென்ன விபு? .

      Delete
    3. மகன் வாங்கி இங்கே அனுப்பிய புத்தகக்குவியலில் ஜெமோ புத்தகங்கள் ஏழெட்டு இருக்கிறது. விஷ்ணுபுரத்தை இப்போதுதான் கையில் எடுத்திருக்கிறேன். கொற்றவை அடுத்தது.

      Delete
  3. நான் ஜெயமோகன் புத்தகங்கள் படித்ததில்லை. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அப்படியே இருந்து விடலாம் போலிருக்கிறதே?

    ReplyDelete
    Replies
    1. ஜெயமோகன் அப்படிப் புறந்தள்ளிவிடக்கூடியவர அல்ல. சுயதம்பட்டம் அதிகம். அவரது எழுத்தைப் படிப்பது பலநேரங்களில் பொறுமையை மிகவும் சோதிக்கக்கூடியது..

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)