Showing posts with label தரிசன நாள். Show all posts
Showing posts with label தரிசன நாள். Show all posts

Friday, April 24, 2020

அன்னை என்னும் அற்புதப் பேரொளி! நிலையாகத் தங்க வந்த நாளின் நூற்றாண்டு நிறைவு!

இன்று ஸ்ரீ அரவிந்த அன்னை பாண்டிச்சேரியில் நிலையாகத் தங்கத்  திரும்பிய நாளின் நூற்றாண்டு நிறைவு .ஒவ்வொரு ஆண்டுமே ஏப்ரல் 24 பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்த ஆசிரம தரிசனநாளாக இருக்கிறது. ஸ்ரீ அரவிந்த அன்னையை தியானிக்க உதவியாக ஒரு வீடியோ 25 நிமிடம் 

 

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன் திருவடிகளைச் சரணடைகிறேன். எங்கள் ஹ்ருதயத்திலும் நிரந்தரமாகத் தங்கியிருந்து திருவருள் செய்யவேண்டும்! தாயே! உனது பிரியத்துக்குத் தகுதியானவர்களாக எங்களை ஆட்கொள்ள வேண்டும். 

மா மிரா சரணம் மம  ஸ்ரீஅரவிந்த சரணம் மம   

Thursday, December 5, 2019

The Sunlit Path! பூமிக்கு வந்த பொன் ஒளி!

மரணத்தை வெல்லவேண்டும்!இதுவே மனித குலத்தின் நீண்டநாள் கனவாகவும், தவிப்பாகவும், தவமாகவும் இருக்கிறது. ஆனால், மரணம் என்றால் என்ன, ஜனனம் என்றால் என்ன என்பதை ஒரு தெளிவான விசாரணையாகவும், உள்ளார்ந்த தேடலாகவும் இந்தப்  புண்ணிய பூமியிலன்றி உலகில் வேறெங்கும் நிகழ்ந்ததில்லை. மரணத்தை வெல்ல முடியும் என்பது ஒட்டு மொத்த மனித குலத்தின் கனவாகவும், லட்சியமாகவும் இருந்தபோதிலும், அதை வென்று காட்டியவர்கள் வெகு சிலரே.

மகாபாரதத்தில் சத்தியவான்-சாவித்ரி கதை கொஞ்சம் சுருக்கமாக, இந்த விஷயத்தைத் தொட்டுச் செல்கிறது.அதே மாதிரி கடோபஷநித்தில் நசிகேதஸ் என்ற சிறுவன், தர்ம தேவதையிடம் இதைத் தெரிந்து கொள்வது விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது.


பகவான் ஸ்ரீ அரவிந்தர்,உரை,மனம் கடந்து அரைசு செய்தோங்கும் அருட்பெரும் ஜோதியை இந்த மண்ணில் கொண்டு வருவதற்காகத் தன்னுடைய உடலைத் தியாகம் செய்த நாள் இன்று. டிசம்பர் 5.


Remember and Offer! எப்படிப் பட்ட பிரச்சினையானாலும், உள்ளது உள்ளபடி ஸ்ரீ அன்னையிடம், ஸ்ரீ அரவிந்தரிடம் ஆத்ம சமர்ப்பணமாகச் செய்ய முற்படும்போது, எனக்குள் ஏதோ ஒன்று பழக்கத்தின் அடிமையாகவோ அல்லது, சமர்ப்பணம் முழுமையடைய விடாமலோ தடுத்துக் கொண்டிருப்பதை கடந்த சில மாதங்களாகவே கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

பகவான் ஸ்ரீ அரவிந்தர்,உரை,மனம் கடந்து அரைசு செய்தோங்கும் அருட்பெரும் ஜோதியை இந்த மண்ணில் கொண்டு வருவதற்காகத் தன்னுடைய உடலைத் தியாகம் செய்த நாள் இன்று. டிசம்பர் 5.
ஓம் நமோ பகவதே ஸ்ரீஅரவிந்தாய 

தத் சவிதுர் வரம் ரூபம் ஜ்யோதிர் பரஸ்ய தீமஹி
யன்ன சத்யேன தீபயேத் 



Remember and Offer! எப்படிப் பட்ட பிரச்சினையானாலும், உள்ளது உள்ளபடி ஸ்ரீ அன்னையிடம், ஸ்ரீ அரவிந்தரிடம் ஆத்ம சமர்ப்பணமாகச் செய்ய முற்படும்போது, எனக்குள் ஏதோ ஒன்று பழக்கத்தின் அடிமையாகவோ அல்லது, சமர்ப்பணம் முழுமையடைய விடாமலோ தடுத்துக் கொண்டிருப்பதை கடந்த சில மாதங்களாகவே கவனித்துக் கொண்டிருக்கிறேன். 
வம்பு, வழக்குகள் -அதனால் எழும் குழப்பங்களையும், சோர்வையும் ஸ்ரீ அரவிந்த அன்னையே, உன்னிடம் சமர்ப்பிப்பதைத் தவிர வேறென்ன  செய்ய முடியும்? இப்படி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது ஸ்ரீ அரவிந்தரின் இந்த அமுத மொழி, நம்பிக்கையளிப்பதாக இருப்பதையும், திருவருள் துணை இருப்பதையும் மீண்டும் மீண்டும் கண்டுகொள்ள ஒரு வாய்ப்பாக இருப்பதையும் பார்த்தேன். 
"Imperfect capacity and effect in the work that is meant for thee is better than an artificial competency and a borrowed perfection."

Sri Aurobindo 
 
Thoughts and Aphorisms
அருட்பெரும் ஜோதியாக இறைவனது கருணை இந்த மண்ணில் இறங்கி  வரும் தருணத்தை விரைவுபடுத்தும் பொருட்டு, ஸ்ரீ அரவிந்தர் தனது உடலையே தியாகம் செய்த நாள் டிசம்பர் 5. தொடர்ந்து ஐந்து நாட்கள் அந்தப் பொன்னொளி ஸ்ரீ அரவிந்தரின் உடலில் தங்கி இருந்ததைக் கண்டுகொள்ளும் அற்புத வரம் பலருக்கும் அறுபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கிடைத்தது.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய
என்று இருகரம் கூப்பி, சிரம் தாழ்த்தி வணங்குவதைத் தவிர வேறென்ன செய்து  விட முடியும்?
 *2011 டிசம்பர் 5 அன்று அங்கே எழுதியதன் மீள்பதிவு.
முதலிரண்டு படங்களும் புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் இன்று வழங்கப்பட்ட தரிசன நாள் செய்தி.   

Sunday, November 17, 2019

வருகிற பாதையும், தொடர்கிற பயணமும்!

இங்கே ப்ளாக்கரில் பதிவுகள் எழுதவந்த ஆரம்ப நாட்களில் அம்மன் பாட்டு என்று திருமதி கவிநயா அவர்களின் 2009 ஆம் வருடப் பதிவுகளில் அவர் எழுதுகிற அம்மன் பாட்டுக்கு நானும் எசப்பாட்டு அங்கேயே பலபதிவுகளில்  பின்னூட்டமாக பாடியதுண்டு.



அப்படிப் பாடிய எசப்பாட்டு ஒன்றைக் கொஞ்சம் விரிவு படுத்தி அப்போதே பதிவில் எழுதியது இங்கே.

வலிகளை மறக்கக் கவிதையில் வடித்து எழுதிப்பார்த்ததும் ஒரு காலம்
வலிகளைக் கூட்டின கவிதை வரிகளை மறந்துமிருந்தது ஒரு காலம்!
எனக்கு மட்டுமே இப்படி ஏன் என ஏங்கித் தவித்ததும் ஒரு காலம்
தனக்கு மட்டுமே தாயின் பரிவு முழுதாய் வேண்டின சவலைப் பிள்ளையாய்
அழுதால் உன்னைப்பெறலாமே என யாரோ சொன்னதை நம்பினபோதில்
அழுதுபுரண்டு கதறின நேரம் அவள் வரவில்லை! ஒரு பதில் தரவில்லை!


சவலையழுதது! திவலையளவும் வினையணுகாமல் காத்திடவேண்டும்!
கேட்டது எல்லாம் தந்திட வேண்டும்! என்னைத் தனியன் ஆக்கிவிடாமல்
கூடவே இருந்தென்னைப் பார்த்திட வேண்டும்! கேட்டதனைத்தும் அதிகம் தான்!
விடையாய்க் கிடைத்ததோ பொருள் பொதிந்தவோர் மௌனம்தான்!
பாராமுகமாய் இருந்தாள் எனப்பெரும் கோபமும் வந்தது வீம்பு வளர்ந்தது.
தாயே! நீ இல்லை! நீ வெறும் பொய் தான்! அழுகை வெடித்தது ஆத்திரம் வந்தது!


நாத்திகம் பேசின காலமும் வந்தது! வாய் கூசாமல் ஏசின காலமுமானது
சாத்திரம், கோத்திரம் சொல்வது பொய்யெனத் தருக்கமும் வந்தது.
ராகுவின் பார்வையில் அப்படியிருக்கும் சோதிடம் சொல்லும் கணக்கு இது
சோதிடம் சொல்வதை நம்பவில்லை ஏளனம் செய்வதை நிறுத்தவில்லை
ஒவ்வொரு இருட்டும் பெருவெளிச்சம் வயிற்றில் சுமப்பதை அறிகிற
தருணமும் வந்தது ஒருநாள்! இருளைக் கிழித்துப் புலரும் வைகறை வந்தது!


ஒளிவரும் முன்னால் துயிலெழும் தன்மை வைகறை சொல்லும் குறியீடு!
ஒளிவர வேண்டும் மனிதர்கள் உணர்வில் விழிப்புறச் சொல்லும் குறிச் சொல்லே!
தனித்திருந்த ஒருபோது! எதுநடந்தாலும் எனக்கென்ன என்று இருந்த பொழுதினிலே
என்னது என்பதைப் புரியச் சொன்னாள்! அப்போதெனக்கு ஒருசிறிதும் உறைக்கவில்லை!
பொறுத்துக்கொள்வது முதல்தேவை பொறுத்தால் அங்கே வரும் தீர்வு
பொறுமையிழந்தால் நோவும் வரும் வலிகூடும் பொறுத்திரு மகனே! என்று சொன்னாள்


அன்னை சொன்னது அப்போதெனக்கு ஒருசிறிதும் புரியவில்லை! எப்பொழுதும்போல்
ஒரு ஆர்ப்பாட்டம்! ஆடி அடங்கட்டும் என்றவள் காத்திருந்தாள். ஆடிமுடித்ததில்
சேர்ந்த வலி!தோற்றதில் விளைந்த அவமானம்! இரண்டும் சேர்ந்தால் என்ன வரும்?
திருப்புகழ் பாடத் தெரியவில்லை! குரைத்தல் தவிர்த்துத் தெருநாய்க்கு வேறென்ன வரும்?
தாயென்று நம்பியழைத்தேனே!நீயுமொரு தாய்தானோ? அடிமேலடி விழப்பார்த்திருந்தாயே! தயவில்லாதவள்! நில்லாதென்முன்! போய்விடு! போய்விடு!


இததனைகோபம் ஏதுக்கடா? இரும்பாய் இருக்க ஆசைகொண்டால்
பழுக்கக் காய்ச்சி அடிமேல் அடிதான் மாற்றம் தரும்! தங்கமாய் இருந்து
நெகிழ்ந்திருந்தால், இத்தனை வாட்டம் வேண்டாமே! உனக்கேன் இன்னமும்
புரியவில்லை?குறுநகையோடவள் சொன்னாள் எனக்கோ கோபம் குறையவில்லை!
வாட்டுதல் இங்கே எதற்காக? இந்தச் சாக்குகள், ஆறுதல் எதற்காக?
வாட்டுவதுனக்குப் பெருஞ்சுகமோ? பிள்ளையைப் படுத்தல் தாயாமோ?


அழகாய் இருக்கிறதே உன் நீதி! ஜாலம் செய்யவா இது நேரம்?
புரியவில்லை அம்மா! போய்விடு என்னைத் தனியாய் இருக்கவிட்டு!
பொறுமித் தீர்த்தவன் கண்களிலே வெள்ளத்தைப் பார்த்துப் பரிவுடனே
அருமை மகனே! எத்தனை நேரம் அழுதாலும், வருகிற அனுபவம் நில்லாது!
வளர்ச்சி என்பதுமே வலியில் தான் பிறக்கும் என்பது தெரியாதா?
இருளில் இருந்து வெளிச்சம் பெறுவதற்கு வலிதான் பாதை!அறியாயோ?
 

அழுவதும் உதவாது! ஆற்றாமை உதவாது! புரிதல் இங்கே வேண்டுமென்றால்
அழுவதை உடனே நிறுத்திவிட்டு அனுபவம் சொல்வதைக் கேட்டுப் பார்!
வலியைத் தருபவள் தான் வலியையும் தாங்குகிறேன் இடையில் நீயேன் குழப்பம் கொண்டு
இது எனது! வலி எனது! என்பதும் எதற்காக? நீஎன்பதும் நானென்பதும் வெவ்வேறா?
விளையாட்டாய்ப் பிரபஞ்சம் இயங்கும் விதி இது தான்! விளையாடப் பழகிக் கொள்!
ஒவ்வொரு இருட்டுக்குள்ளும் பெருவெளிச்சம் கருவினிலே இருப்பதைப் பார்!


ஒவ்வொரு உண்மையுமே வெளிப்படும் தருணம் எதிர்நோக்கி இருப்பதும் பார்
இவ்விதமாகப் புரிந்துகொண்டால் வலியேது? துயரேது? சொல்லிவிட்டுப்போய் விட்டாள்!
சொன்னதென்பது  புரியாமல் என்னமோ ஏதோ செய்துவிட்டு அவத்தை கூடவுமே
என்னம்மே! விரைந்து நீ வா! கதறி அழுதவன் குரல் கேட்டு ஓடிவந்தாள்
எது நடந்தாலும் எனக்கொரு அன்னை இருக்கின்றாள், அவள் அதை நலமாய்ப் பார்த்துக் கொள்வாள்
சும்மாயிருப்பதுமே பெருந்தவம்தான்! சும்மா இருக்கப் பழகிக் கொள்! ஒளியும் வரும்!


வருகிற வேளை வரும்வரை என் பெயர் சொல்லி காத்து இரு! என்று சொன்னாள்
வைகறைப் பொழுதில் இருள்விலகும்! அவள் பெயர் சொல்வது என் வேலை!
எனக்கென்று தனித்தவொரு அடையாளம் இங்கில்லை எல்லாம் இங்கே அவள் சித்தம்
வருவது எல்லாம்அவள்தரும் அனுபவம் தான்! வலியோ, வழியோ அவளே
இருப்பதனால் நான் சுமப்பதென்று எதுவுமில்லை! இதுதான் நான் வரும் பாதை
வருகிற பாதை தொடர்கிற பயணம் எல்லாம் என் அன்னை காட்டுவதே!

இது வேறோர் பதிவில் எழுதிய பின்னூட்டக் கவிதையின் விரிவு படுத்திய பதிவு

 
ஸ்ரீஅரவிந்த அன்னை மலர்ப்பதங்கள் வாழி!
என்நெஞ்சில் என்றென்றும் நிறைந்தே பொருந்துகவே!   

Wednesday, April 24, 2019

ஸ்ரீ அரவிந்த அன்னை! நம்முடன் நிலையாகத் தங்க வந்த நாள்!

ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அரவிந்த அன்னையை வணங்கும் அடியவர்களுக்குச் சில நாட்கள் ஒவ்வொரு வருடமும் மிக விசேஷம்! 

திருவிழா மாதிரித் தான், ஆனால் கொஞ்சம் கூட ஆரவாரம், ஆர்ப்பாட்டம் இல்லாமல், தரிசன நாட்கள் என்று கொண்டாடப் படும் இந்த நாட்களில், ஆன்மீக அனுபவத்தை மிகச் சிறப்பாக அனுபவிக்கும் தினங்களாக இருக்கிறது.

ஒவ்வொரு புத்தாண்டு தினமும், அதை அடுத்து பெப்ருவரியில் ஸ்ரீ அரவிந்த அன்னையின் அவதார தினமும் (February 21), லீப் வருடமாக இருந்தால், பெப்ருவரி இருபத்தொன்பதாம் தேதி, அதிமானசப் பேரொளியின் வருகை தினமாகவும், (Golden Day-the manifestation of the Supramental Light upon earth) கொண்டாடப் படுகிறது.

அதை அடுத்து, ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி ஸ்ரீ அரவிந்த அன்னை, பாண்டிச்சேரியில் நிலையாகத்  தங்கிய நாள், ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் தரிசன நாளாகவும், அன்பர்கள் அன்னையின் அருளில் திளைக்கும் நாளாகவும் வருகிறது. 
இன்றைய தரிசனநாள் செய்தி 

அதே மாதிரி, அன்னை என்னும் அற்புதப் பேரொளியாக அடியவர்கள் கொண்டாடும் ஸ்ரீ அரவிந்த அன்னை, பாண்டிச்சேரியில் நிலையாகத் தங்க வந்த நாளுடைய 99 ஆண்டுகள் நிறைவான தருணமாகவும், இன்றைய தினம் இருக்கிறது. ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் இன்றைக்கு தரிசன நாள். அன்னையைத் தேடி வரும் அவளுடைய குழந்தைகள் ஒன்று கூடி அவளை வணங்கிப் பிரார்த்தனை செய்யும் சிறப்பான தருணமாகவும் இருக்கிறது

ஸ்ரீ அரவிந்த அன்னையைத் தேடி இந்தப் பக்கங்களுக்கு வரும் நண்பர்களுக்கு, சுருக்கமாக இந்த நாளின் விசேஷம் என்ன என்பதை கொஞ்சம் பார்ப்போமா?

ஸ்ரீ அரவிந்தர், இறைவனது கட்டளையை ஏற்று, பாண்டிச்சேரிக்கு வந்த நூறாவது ஆண்டு, 2010 ஏப்ரல் 4 அன்று நிறைவடைந்தது  

ஸ்ரீ அரவிந்தர் பாண்டிச்சேரிக்கு வந்தவுடனேயே, அவரை அரசியல் தலைவராகவும், சுதந்திரப் போராட்டத்தின் தளபதியாகவும் அறிந்திருந்தவர்கள் தேடி வர ஆரம்பித்தார்கள். "இந்தியாவின் அரசியல் விடுதலை என்பது ஏற்கெனெவே நிச்சயமான ஒன்று, நீ உனக்கிடப் பட்ட பணியை மேற்கொள்வாய்" என இறைவன் விதித்தபடியே, அரசியலை விட்டு விட்டு, ஆன்மீக சாதனையைத் தொடங்கின நேரம், அங்கேயிருந்து ஆரம்பித்தது.

"He who chooses the Infinite has been chosen by the Infinite" என்று ஸ்ரீ அரவிந்தர் சாவித்ரி மகா காவியத்தில் சொல்கிறார். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி எனச் சிவ புராணத்தில் மணிவாசகப் பெருமான் சொல்வது போல, ஸ்ரீ அரவிந்தரோடு, ஸ்ரீ அரவிந்தரது பூரண யோகத்தில் பங்கு பெற விதிக்கப் பட்டவர்கள், ஒவ்வொருவராகப் பாண்டிச்சேரிக்கு வர ஆரம்பித்ததும் தொடங்கியது.

"Without Him I exist not;without me he is unmanifest" என்று ஸ்ரீ அரவிந்த அன்னை தானும் ஸ்ரீ அரவிந்தரும் ஒருவரே என்றும், ஒருவரில்லாமல் மற்றொருவர் இல்லை என்பதாக ஓரிடத்தில் சொல்கிறார்.

1878 இல் பாரிஸ் நகரத்தில் பிறந்து, சிறிய வயதிலேயே தான் மிகப் பெரிய ஒன்றைச் சாதிக்க வந்தவர் என்கிற விழிப்பு நிலையுடன் இருந்து, வெவ்வேறு ஆன்மீகப் பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் போது, ஒரு இந்தியர், மிக மோசமாக பிரெஞ்சில் மொழி பெயர்க்கப் பட்ட பகவத் கீதையின் பிரதி ஒன்றை அன்னைக்கு அளிக்கிறார். 

இந்த கால கட்டத்தில், கனவு நிலையில் தன்னை ஒருவர் வழிநடத்துவதை ஸ்ரீ அன்னை உணர்கிறார்-அவரை கிருஷ்ணா என்ற பெயரிலேயே ஸ்ரீ அன்னை குறிப்பிடுகிறார்.

மிரா ரிச்சர்ட் என்று அறியப்பட்ட அந்த காலத்தில், அவருடைய கணவர் பால் ரிச்சர்ட், 1910 ஆம் ஆண்டு வாக்கில் பாண்டிச்சேரிக்கு வந்த போது ஸ்ரீ அரவிந்தரைப் பற்றிக் கேள்விப் பட்டுத் தெரிந்து கொண்ட விஷயங்களை மிராவிடம் சொல்ல, அவரை சந்திக்க வேண்டும் என்கிற எண்ணம் வலுவடைகிறது. அரசியல் கனவுகளோடு இருந்த பால் ரிச்சர்ட், 1914 ஆம் ஆண்டு பாண்டிச்சேரிக்கு வந்து ஆதரவு திரட்ட முடிவு செய்து, மிராவுடன், காக மோரு என்கிற ஜப்பானியக் கப்பலில், காரைக்காலுக்கு வந்து சேர்கிறார்.

1914 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி மதியம், மிரா, ஸ்ரீ அரவிந்தரை முதன் முதலாக சந்திக்கிறார். கிருஷ்ணா என்ற பெயரில் அறிந்ததும், தன்னைக் கனவில் வழிநடத்தி வந்தவரும் ஒருவரே என்பதை அறிந்து கொண்டு அவரை வணங்குகிறார்.

"உடலின் ஒவ்வொரு அணுவிலும் பரிபூரணமான சரணாகதி இருக்கமுடியும் என்பதை அப்போது தான் நேரடியாகக் கண்டு கொண்டதாக" இதைப் பற்றி ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடுகிறார். 

பால் ரிச்சர்டும், மீராவும் பாண்டிச்சேரியிலேயே தங்கி இருந்தது சில காலம். பால் ரிச்சர்ட், ஸ்ரீ அரவிந்தர் நடத்திய "ஆர்யா" பத்திரிகையின் பொறுப்பேற்றுக் கொண்டு செயல் படுகிறார்.

1915 ஆம் ஆண்டு மிரா பாரிசுக்குத் திரும்புகிறார், அங்கிருந்தே1916 ஆம் ஆண்டு ஜப்பானுக்குப் பயணப் படுகிறார். நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு, முதல் உலகப் போரின் தாக்கங்கள் குறையத் தொடங்கிய பிறகு, 1920 ஆம் ஆண்டு மிரா, பாண்டிச்சேரிக்கு மறுபடி திரும்பிய நாள் ஏப்ரல் 24.

ஸ்ரீ அரவிந்தருடைய யோக சாதனையில் பங்கு பெறுவதற்காக, மிரா ரிச்சர்ட் என்று அன்று அறியப்பட்ட ஸ்ரீ அரவிந்த அன்னை,பாண்டிச்சேரியில் நிலையாகத் தங்கிய நாளாக ஏப்ரல் 24இருப்பதனால், இது ஆசிரமத்தின் தரிசன நாட்களில் ஒன்றாக ஆனது. 

மிரா ரிச்சர்ட் என்றறியப்பட்ட இந்த பிரெஞ்சு மாது, தங்களைப் போலவே ஸ்ரீ அரவிந்தரின் மற்றொரு சீடர் என்றே ஸ்ரீ அரவிந்தரோடு அன்றைக்கு அணுக்கமாகவே இருந்த சாதகர்கள் கூட, நினைத்துக் கொண்டிருந்தபோது, "மானுட வடிவம் தாங்கி வந்திருக்கிறாளே என்று மயங்கி விடாதே, தெய்வீக அன்னையே இவள்" என்று ஸ்ரீ அரவிந்தரால், ஸ்ரீ அன்னை என்று அழைக்கப் படுகிற காலமும் விரைவிலேயே வந்தது.1926 இல் ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் என்ற அமைப்பு ஸ்ரீ அன்னையினாலேயே சாத்தியமானது.

அன்னையும் தங்களைப் போல சாதகர் தானோ  என்ற சந்தேகம் டி வி  கபாலி சாஸ்திரியாருக்கும் வர, ஸ்ரீ அரவிந்தர் "அன்னையின் நான்கு சக்திகள்" என்ற விளக்கமான கட்டுரையை அவர் படிக்கக் கொடுக்கிறார். ஸ்ரீ அரவிந்த அன்னையைப் பராசக்தியின் வடிவமாகவே, தேவி உபாசகரான கபாலி சாஸ்திரியார் உணர்ந்து கொண்டதையும், தன்னுடைய குரு காவ்ய கண்ட கணபதி முனியையும் ஆசிரமத்திற்கு அழைத்து வந்து, அன்னையை அறிந்து கொண்டதையும் சின்ன நாயனா என்றே அழைக்கப் பட்ட கபாலி சாஸ்திரியாரை பற்றி முந்தைய சில பதிவுகளில் பார்த்திருக்கிறோம்! நாயனா, சின்ன நாயனா, ரமணர் என்ற குறியீட்டுச் சொற்களை வைத்து, இந்தப் பக்கங்களில்  தேட, மேற்சொன்ன பதிவுகள் படிக்கக் கிடைக்கும்.

ஸ்ரீ அரவிந்த அன்னையை எப்படி தியானிப்பது, எப்படி அவரது அருளைப் பெறுவது என்பதை ஸ்ரீ அரவிந்தருடைய வார்த்தைகளிலேயே பார்க்கலாம்!

The sadhana of inner concentration consist in:
 
1. Fixing the consciousness in the heart and concentrating there on the idea, image or name of the Divine Mother, whichever comes easiest to you.

2. A gradual and progressive quieting of the mind by this concentration

3. An aspiration for the Mother's presence in the heart and the control by her of mind, life and action. But to quiet the mind and get the spiritual experience it is necessary first to purify and prepare the nature.

Sri Aurobindo 

இந்த நல்ல நாளில் ஸ்ரீ அரவிந்த அன்னையே, நீ எங்கள் இதயத்திலும் நிலையாகத் தங்கியிருப்பதை உணர்ந்து, உனது பிரியத்துக்கு உகந்த குழந்தைகளாகும் தகுதியை வரமாக அருள்வாய்!

ஓம் ஆனந்தமயி, சைதன்யமயி, சத்யமயி பரமே!

இன்னொரு வலைப்பக்கத்தில் 2009 இல் எழுதி, சில திருத்தங்களுடன் 2019 இல் எழுதியதன் மீள்பதிவு. 

Tuesday, January 1, 2019

இன்று தரிசனநாள்! செய்தி!

(சு)வாசிக்கப்போறேங்க என்று வாசிப்பு அனுபவம் ஒன்றை மட்டுமே பேச வந்த பக்கங்களில் எழுதுவதே நின்றுபோய், மீண்டும் எழுத ஆரம்பித்ததில் வேறுசில விஷயங்களும் கலந்து போனதை நண்பர்கள் கவனித்திருப்பீர்கள்.நம் சுவாசத்தில் என்னென்னவோ கலந்துபோய் இருப்பதைப் போல, புத்தக வாசிப்புடன் வெவ்வேறு ஊடகங்களைக்கவனிப்பதும் இப்போது தவிர்க்க  இயலாதது ஆகிவிட்டது போலத்தான் என்று சகித்துக் கொள்ளவும் வேண்டுகிறேன்.   

புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் ஜனவரி 1, தரிசன நாள் செய்தி!  இறையருள் நம்முடன் இரவு பகல் என எல்லாநேரத்திலும் கூடவே இருப்பதை . அமைதியாக, உள்முகமாகப் பார்க்கப் பழகினால் கண்டு கொள்ள முடியும். இந்த வருடம் முழுவதும் இதுவே நம்முடைய அனுபவமாகவும் இருக்கட்டும் என அன்போடு ஆசி வழங்குகிறார் ஸ்ரீஅரவிந்த அன்னை        
     




ஸ்ரீ அரவிந்த அன்னையின் செய்தியோடு இன்றைய நாள் தொடங்குகிறதே! இதைவிட   அற்புதமான துவக்கம் வேறு உண்டா என்ன?! நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளுடன்!



இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)