Sunday, November 17, 2019

வருகிற பாதையும், தொடர்கிற பயணமும்!

இங்கே ப்ளாக்கரில் பதிவுகள் எழுதவந்த ஆரம்ப நாட்களில் அம்மன் பாட்டு என்று திருமதி கவிநயா அவர்களின் 2009 ஆம் வருடப் பதிவுகளில் அவர் எழுதுகிற அம்மன் பாட்டுக்கு நானும் எசப்பாட்டு அங்கேயே பலபதிவுகளில்  பின்னூட்டமாக பாடியதுண்டு.



அப்படிப் பாடிய எசப்பாட்டு ஒன்றைக் கொஞ்சம் விரிவு படுத்தி அப்போதே பதிவில் எழுதியது இங்கே.

வலிகளை மறக்கக் கவிதையில் வடித்து எழுதிப்பார்த்ததும் ஒரு காலம்
வலிகளைக் கூட்டின கவிதை வரிகளை மறந்துமிருந்தது ஒரு காலம்!
எனக்கு மட்டுமே இப்படி ஏன் என ஏங்கித் தவித்ததும் ஒரு காலம்
தனக்கு மட்டுமே தாயின் பரிவு முழுதாய் வேண்டின சவலைப் பிள்ளையாய்
அழுதால் உன்னைப்பெறலாமே என யாரோ சொன்னதை நம்பினபோதில்
அழுதுபுரண்டு கதறின நேரம் அவள் வரவில்லைஒரு பதில் தரவில்லை!


சவலையழுததுதிவலையளவும் வினையணுகாமல் காத்திடவேண்டும்!
கேட்டது எல்லாம் தந்திட வேண்டும்என்னைத் தனியன் ஆக்கிவிடாமல்
கூடவே இருந்தென்னைப் பார்த்திட வேண்டும்கேட்டதனைத்தும் அதிகம் தான்!
விடையாய்க் கிடைத்ததோ பொருள் பொதிந்தவோர் மௌனம்தான்!
பாராமுகமாய் இருந்தாள் எனப்பெரும் கோபமும் வந்தது வீம்பு வளர்ந்தது.
தாயேநீ இல்லைநீ வெறும் பொய் தான்அழுகை வெடித்தது ஆத்திரம் வந்தது!


நாத்திகம் பேசின காலமும் வந்ததுவாய் கூசாமல் ஏசின காலமுமானது
சாத்திரம்கோத்திரம் சொல்வது பொய்யெனத் தருக்கமும் வந்தது.
ராகுவின் பார்வையில் அப்படியிருக்கும் சோதிடம் சொல்லும் கணக்கு இது
சோதிடம் சொல்வதை நம்பவில்லை ஏளனம் செய்வதை நிறுத்தவில்லை
ஒவ்வொரு இருட்டும் பெருவெளிச்சம் வயிற்றில் சுமப்பதை அறிகிற
தருணமும் வந்தது ஒருநாள்இருளைக் கிழித்துப் புலரும் வைகறை வந்தது!


ஒளிவரும் முன்னால் துயிலெழும் தன்மை வைகறை சொல்லும் குறியீடு!
ஒளிவர வேண்டும் மனிதர்கள் உணர்வில் விழிப்புச் சொல்லும் குறிச் சொல்லே!
தனித்திருந்த ஒருபோதுஎதுநடந்தாலும் எனக்கென்ன என்று இருந்த பொழுதினிலே
என்னது என்பதைப் புரியச் சொன்னாள்! அப்போதெனக்கு ஒருசிறிதும் உறைக்கவில்லை!
பொறுத்துக்கொள்வது முதல்தேவை பொறுத்தால் அங்கே வரும் தீர்வு
பொறுமையிழந்தால் நோவும் வரும் வலிகூடும் பொறுத்திரு மகனேஎன்று சொன்னாள்


அன்னை சொன்னது அப்போதெனக்கு ஒருசிறிதும் புரியவில்லைஎப்பொழுதும்போல்
ஒரு ஆர்ப்பாட்டம்ஆடி அடங்கட்டும் என்றவள் காத்திருந்தாள்ஆடிமுடித்ததில்
சேர்ந்த வலி!தோற்றதில் விளைந்த அவமானம்! இரண்டும் சேர்ந்தால் என்ன வரும்?
திருப்புகழ் பாடத் தெரியவில்லைகுரைத்தல் தவிர்த்துத் தெருநாய்க்கு வேறென்ன வரும்?
தாயென்று நம்பியழைத்தேனே!நீயுமொரு தாய்தானோ? அடிமேலடி விழப்பார்த்திருந்தாயேதயவில்லாதவள்நில்லாதென்முன்போய்விடுபோய்விடு!


இததனைகோபம் ஏதுக்கடாஇரும்பாய் இருக்க ஆசைகொண்டால்
பழுக்கக் காய்ச்சி அடிமேல் அடிதான் மாற்றம் தரும்தங்கமாய் இருந்து
நெகிழ்ந்திருந்தால்இத்தனை வாட்டம் வேண்டாமேஉனக்கேன் இன்னமும்
புரியவில்லை?குறுநகையோடவள் சொன்னாள் எனக்கோ கோபம் குறையவில்லை!
வாட்டுதல் இங்கே எதற்காகஇந்தச் சாக்குகள்ஆறுதல் எதற்காக?
வாட்டுவதுனக்குப் பெருஞ்சுகமோபிள்ளையைப் படுத்தல் தாயாமோ?


அழகாய் இருக்கிறதே உன் நீதிஜாலம் செய்யவா இது நேரம்?
புரியவில்லை அம்மாபோய்விடு என்னைத் தனியாய் இருக்கவிட்டு!
பொறுமித் தீர்த்தவன் கண்களிலே வெள்ளத்தைப் பார்த்துப் பரிவுடனே
அருமை மகனேஎத்தனை நேரம் அழுதாலும்வருகிற அனுபவம் நில்லாது!
வளர்ச்சி என்பதுமே வலியில் தான் பிறக்கும் என்பது தெரியாதா?
இருளில் இருந்து வெளிச்சம் பெறுவதற்கு வலிதான் பாதை!அறியாயோ?
 

அழுவதும் உதவாதுஆற்றாமை உதவாது! புரிதல் இங்கே வேண்டுமென்றால்
அழுவதை உடனே நிறுத்திவிட்டு அனுபவம் சொல்வதைக் கேட்டுப் பார்!
வலியைத் தருபவள் தான் வலியையும் தாங்குகிறேன் இடையில் நீயேன் குழப்பம் கொண்டு
இது எனதுவலி எனதுஎன்பதும் எதற்காக? நீஎன்பதும் நானென்பதும் வெவ்வேறா?
விளையாட்டாய்ப் பிரபஞ்சம் இயங்கும் விதி இது தான்விளையாடப் பழகிக் கொள்!
ஒவ்வொரு இருட்டுக்குள்ளும் பெருவெளிச்சம் கருவினிலே இருப்பதைப் பார்!


ஒவ்வொரு உண்மையுமே வெளிப்படும் தருணம் எதிர்நோக்கி இருப்பதும் பார்
இவ்விதமாகப் புரிந்துகொண்டால் வலியேதுதுயரேதுசொல்லிவிட்டுப்போய் விட்டாள்!
சொன்னதென்பது  புரியாமல் என்னமோ ஏதோ செய்துவிட்டு அவத்தை கூடவுமே
என்னம்மேவிரைந்து நீ வாகதறி அழுதவன் குரல் கேட்டு ஓடிவந்தாள்
எது நடந்தாலும் எனக்கொரு அன்னை இருக்கின்றாள், அவள் அதை நலமாய்ப் பார்த்துக் கொள்வாள்
சும்மாயிருப்பதுமே பெருந்தவம்தான்! சும்மா இருக்கப் பழகிக் கொள்! ஒளியும் வரும்!


வருகிற வேளை வரும்வரை என் பெயர் சொல்லி காத்து இருஎன்று சொன்னாள்
வைகறைப் பொழுதில் இருள்விலகும்! அவள் பெயர் சொல்வது என் வேலை!
எனக்கென்று தனித்தவொரு அடையாளம் இங்கில்லை எல்லாம் இங்கே அவள் சித்தம்
வருவது எல்லாம்அவள்தரும் அனுபவம் தான்! வலியோ, வழியோ அவளே
இருப்பதனால் நான் சுமப்பதென்று எதுவுமில்லைஇதுதான் நான் வரும் பாதை
வருகிற பாதை தொடர்கிற பயணம் எல்லாம் என் அன்னை காட்டுவதே!

இது வேறோர் பதிவில் எழுதிய பின்னூட்டக் கவிதையின் விரிவு படுத்திய பதிவு

 
ஸ்ரீஅரவிந்த அன்னை மலர்ப்பதங்கள் வாழி!
என்நெஞ்சில் என்றென்றும் நிறைந்தே பொருந்துகவே!   

6 comments:

  1. மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள் இவ்வளவு அருமையான திறமையை மறைத்து வைத்து கொண்டு சும்மா அரசியயல் பதிவை அதிகம் பதிகிறீர்களே எதை பற்றி எழுதுவதும் எழுதாததும் உங்கள் உரிமை அதில் நான் தலையிடுவது தப்பு ஆனால் உங்களின் திறமை இந்த அரசியல் பதிவுகளில் வீணாகி விடுகிறதே இன்னும் இதை போல எழுதுங்கள் உங்களின் நண்பர் ஜோதிஜி போல பல புத்தகங்களை வெளியிடுங்கள் சார்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ம.த. !

      அடிப்படையில் நான் ஒரு வாசகன். அமேசான் எழுத்தாளர் ஆகத் தவித்துக் கொண்டிருப்பவன் இல்லை. நல்ல எழுத்தை நல்ல விஷயங்களை தேடிப் படிக்கிறவன். அதே நேரம் அரசியலைத் தவிர்த்துவிட்டு எதைப் பேசினாலும் அது பொய்யாகத்தான் இருக்கும் என்ற அனுபவ சத்தியத்தை என் மகன் வயதை ஒத்த இளைஞர்களுக்குச் சொல்ல வேண்டிய கடமையும் பொறுப்பும் இருக்கிறதே! ஊருக்கு உபதேசம் செய்ய எழுதவில்லை என்றாலும் இன்றைய தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை அவர்களுக்கு கவனப்படுத்த வேண்டியிருக்கிறதே!

      ஜோதி ஜி மாதிரி!? அவருடைய வீச்சும் திறமையும் வேற லெவல்.

      Delete

  2. அருமையாக எழுதி வெளியிட்டதற்கு பாராட்டுக்கள் அதுமட்டுமல்ல ஒரு நல்ல அம்மன் பாட்டு வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியற்கு உங்களுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. பதிவின் கடைசிவரியைக் கவனித்திருந்தீர்களானால் இதை எழுதியது பதிவிட்டது 2009 செப்டெம்பரில்! அம்மன் பாட்டு பக்கங்களில் 2009 வாக்கில் பார்த்தீர்களானால், அனேகமாக பல பதிவுகளில் என்னுடைய எசப்பாட்டு இருக்கும். அதற்கு ஒரு சாம்பிளாக மேலிருந்து இரண்டாவது வரியில் அம்மன் பாட்டுக்கு எசப்பாட்டு என்பதிலேயே ஒரு சுட்டி இருக்கிறது.

      Delete
  3. பொதுவாக கவிதையை மேற்போக்காக படித்து அர்த்தத்தை உள்வாங்காமல் தாண்டிவிடும் நான் நீங்கள் எழுதியதை வரிக்கு வரி அனுபவித்து படித்தேன். மறுபடி மறுபடி படிப்பேன். அன்னையை உங்கள் மூலம் எனக்கு காட்டியதும் அவள் அருள் அன்றி வேறேது?

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பந்து!

      நான் கவிஞனோ எழுத்தாளனோ இல்லை. மதுரை ராமநாதபுரம் மண்ணுக்கே உரித்தான எசப்பாட்டு எனக்கும் வந்திருக்கிறது. அவ்வளவுதான்! அந்த நாட்களில் திருமதி கவிநயா அம்மன் பாட்டு தளத்தில் தன்னுடைய சொந்த ஏக்கங்களை இன்னதென்று சொல்லாமல் பாட்டாய் எழுதிக் கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு எசப்பாட்டாய் எழுதியதைக் கொஞ்சம் விரிவு படுத்தி என் சொந்தக்கதை சோகங்களை எழுதிப் பார்த்தது இது. ஆனால் இது என்னுடைய கதை மட்டுமில்லை.

      ஸ்ரீ அரவிந்த அன்னையை அறிந்துகொள்வதற்கு, அவளையே தாயாகவும் எல்லாமாகவும் ஏற்றுக் கொள்கிற நிலை எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. ஸ்ரீ அரவிந்த அன்னை என்கிற ஹேஷ்டாகில் இந்தப் பக்கங்களில் கொஞ்சமும், Consent to be ....nothing! தளத்தில் எண்பது பதிவுகளுக்கும் கொஞ்சம் கூடுதலான பதிவுகள் இருக்கின்றன. கொஞ்சம் பொறுமை தேவைப்படும்.

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)