நக்கீரன் தளச் செய்தி, வீடியோக்களையோ, அதுபோல சிலரது பேச்சையோ ஒருபொருட்டாக எடுத்துக் கொண்டு பகிர்வதில்லை என்பதை ஒரு பாலிசியாகவே சில ஆண்டுகளாக வைத்திருப்பதை, கொஞ்சம் யோசனையுடன் இந்த ஒரு வீடியோவுக்காகத் தளர்த்திக் கொள்ள வேண்டிய நிலை வந்திருப்பதற்காக நிஜமாகவே வருந்துகிறேன்.
நெல்லை கண்ணன். தமிழ்க்கடல் என்று அவருடைய அபிமானிகளால் கொண்டாடப்பட்டவர். தமிழகத்தில் அறிஞர், கலைஞர், பேராசிரியர் என்ற அடைமொழிகள் எல்லாம் தகுதியில்லாதவர்களுக்குச் சுமத்தப்பட்டு அர்த்தமிழந்து போன மாதிரியே சாக்கடைக்குப்போய் கடல் என்று அடைமொழி கொடுத்ததும் ஆகிவிட்டதோ?
வீடியோ 22 நிமிடம். ஆனால் சொத்தைக்கடலையைக் கடித்த மாதிரியாகிப்போன அனுபவம் நீளுவது இன்னும் அதிக நேரம். கண்டனக்குரல்கள் எழுவதும் இயற்கைதானே!
மதிப்பிற்குரிய திரு.மரபின் மைந்தன் முத்தையா அவர்களுக்கு,
திரு.நெல்லை கண்ணன் என்கிறவர் தம்முடைய பேச்சில் நம் பாரத பிரதமர் முதல் பலரை மிக கீழ்த்தரமாக பேசுவதுடன் ஒரு குறிப்பிட்ட சாதியை வன்மத்துடன் பேசுகிறார். மாநில அரசின் அமைச்சரை நாய் என்றெல்லாம் ஏக வசனத்தில் குறிப்பிடுகிறார். இவர் உங்கள் நண்பர் என கேள்விப்படுகிறேன். இவர் மீதான நீதி நடவடிக்கைகளுக்கு எதிராக தங்கள் செல்வாக்கை எவ்விதத்திலும் பயன்படுத்த மாட்டீர்கள் என்றும், நட்பு, இனப்பற்று ஆகியவற்றுக்கு மேலாக அடிப்படை மனிதப்பண்பாடு முக்கியம் என கருதும் பண்பு கொண்டவர் நீங்கள் என நம்புகிறேன். ஏற்கனவே தரம் கெட்டு கீழே விழுந்து வரும் தமிழ்நாட்டின் பொதுப்பேச்சு பண்பாட்டில் வழிகாட்ட வேண்டியவர்கள் ஆபாச பேச்சுகள் மூலம் பொதுப்பண்பாட்டை சீர்குலைப்பவர்களுக்கு எவ்விதத்திலும் துணை போக மாட்டார்கள். நீங்கள் அப்படிப்பட்ட வழிகாட்டியாக இருப்பீர்கள் என கருதுகிறேன். Muthaiah Marudhavaanan
அரவிந்தன் நீலகண்டன் மிகநாகரிகமாக தன்னுடைய கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நெல்லை மண்ணின் வாசனையோடு வட்டார வழக்கில் பேசுவதாலேயே..அதன் பின் ஒளிந்து கொண்டு..நாய், பேய், என்றெல்லாம் பேசலாம் என்பது...தான் கற்று அறிந்த அறிவையும் , நெல்லை பண்பையும் அரசியலுக்காக விற்றதற்கு சமம்.
வட்டாரமொழியில் பேசுகிறேன் என்று.. ''ஏல சவத்த மூதி.. ஒரு பேட்டி கொடுல'' ...என்று யாராவது கேட்டால் சரியாகுமா ?
எதிர்கருத்துக்களாக இருந்தாலும்..பொதுவெளி பேட்டிகளுக்கு என்று ஒரு நாகரீகம் இருக்கிறது.
பேட்டியிலும்...ஏகப்பட்ட முன்பின் முரண்கள் .
WIN TV News சேனலுக்குப் போன பிறகும் கூட மதன் ரவிச்சந்திரனுக்கு திராவிடங்களிடமிருந்து மிரட்டல் வந்துகொண்டே இருப்பதைக் குறித்து ஒரு 3 நிமிட video
தனித்தவர்கள் மீதான திமுக அராஜகம்
கடந்த ஐந்து வருடங்களில் social mediaவில் ஒரு தீவிர பாஸிஸபோக்கைக் கடைப்பிடிப்பவர்கள் அனைவரும் dpயில் திராவிடத் தலைவர்களின் படங்களை வைத்துக்கொண்டிருப்பவர்கள்; திமுகவிற்கு எதிராக ஏதாவது கேள்வியை முன்வைத்தாலோ பகுத்தறிவு சார்ந்து எதிர்க்கருத்துகள் எழுதினாலோ கும்பலாகத் திரண்டு நம்முடைய comment boxஇல் மிரட்டல்களில் ஈடுபடுவதும் கேவலமான வார்த்தைகள் பேசுவதும் வழக்கமான ஒன்று. தொடக்க காலத்திலிருந்தே எல்லா நேரத்திலும் இந்த நான்காம்தர ரௌடியினருக்கு எதிர்நிலையில் நின்று ஏகப்பட்ட வசைகளும் மிரட்டல்களும் பெற்றிருக்கிறேன்.
இன்றைக்கு இதே நான்காம்தர கும்பல் நெறியாளர் மதனுக்கு தொலைபேசி வாயிலாகவும் பற்பல fake idக்களில் வந்தும் கொலைமிரட்டல் விடுப்பதையும் வன்மத்துடன் memes அனுப்புவதும் குடும்பத்தைக் கேவலமாகத் திட்டுவதையும் கடந்து அவரது twitterஇல் accountஐ முடக்கியுள்ளனர். இதில் பெரிய தமிழ்ச் செய்தி ஊடகங்களென அறியப்படும் திமுக சார்பு ஊடகங்களுக்கும் பெரும்பங்கு இருக்கின்றது. ஒருவர் ஒரு கொள்கைக்கு எதிராக கேள்வியை முன்வைத்தால் அவரது உடமை, உயிர் என்று அனைத்திற்கும் அச்சுறுத்தல் விடுப்பதும் மனவுளைச்சல் ஏற்படுத்த முயல்வதும் அவரைச் சார்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக மிரட்டுவதும்தான் சமூகநீதியா? இவ்வளவு மிரட்டல்கள் விடுப்பதற்கும் எல்லா பக்கமும் ஊம்..... என்று கமெண்ட்டில் வாய் வைப்பதற்கும் பதிலாகத் தூக்கிக் காட்டிய அந்த ஆவணத்தில் பக்கங்களை வெளியிடலாம்தானே?
மற்றொரு விஷயம் கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்தி விடக்கூடாது என இல்லீகல் இணைய அணி என்கிற பெயரில் fake idக்களாகச் சேர்ந்து இந்த நற்செயலை செய்கின்றனர். உண்மையாகவே ஸ்டாலின் நல்ல ஆளுமை கொண்ட தலைவராக இருப்பின் இந்த கும்பலை அழைத்துக் கண்டித்து அவரே தன்குறித்த ஆவணத்தை வெளியிட வேண்டும். மேலும் வழக்கமான பேக்கேஜ் வாங்குகின்ற ஊடகங்கள் வாங்கும் பேக்கேஜ்களுக்கு மட்டும் உழைத்தல் நலம். மற்றவர்களை அவர்களது பணியை செய்வதற்கு வழிவிட வேண்டும். மதன் திமுக சார்பு ஊடகவியலாளர்களைப் போல எதிர்தரப்பை வசைபாடியும் கேலிசெய்தும் இழிவுபடுத்தியும் நேர்காணல்கள் செய்ததில்லை. அவர் மக்களுக்காக மக்களின் கேள்விகளையும் சந்தேகங்களையும் மட்டும் முன்வைப்பவர். மதனுக்கு இத்தகைய மிரட்டல்கள் வருவதற்கு முன்பே என்னிடம் தனிப்பட்டமுறையிலும் தொலைபேசியிலும் நீங்கள் மதனுக்கு support செய்யாதீர்கள், இதன்மூலம் பெரும் ஆபத்துகளை சந்திக்க நேரும் என்று மென்மையான(?!) மிரட்டல்கள் வந்தவண்ணம் இருந்தன. நான் இத்தகைய கூச்சல்களை ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை. ஆனால் மதனை இந்த கும்பலிடமிருந்து பாதுகாப்பது காலத்தின் அறம். அராஜகங்கள் எல்லா காலத்திலும் உதவாது. அத்துடன் வாக்கிங் சென்ற காலமெல்லாம் இறந்தகாலம் என்பதை உடன்பிறப்புகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த முகநூல் பகிர்வுக்கு வந்த பல பின்னூட்டங்கள் நாராசம், ஆபாசத்தின் உச்சம்.
இவைகளைப் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் போகிற ஜனங்களாக இன்னும் எத்தனை காலத்துக்கு இருக்கப் போகிறோம்? #கருத்துசுதந்திரம் சாக்கடை நெல்லை கண்ணன்களுக்கும் திராவிடங்களுக்கும் மட்டும் தானா? அப்படியெல்லாம் இல்லை என்பதை எப்போது உரக்கச் சொல்லப் போகிறோம்?
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment