அமெரிக்க அதிபர்களில் தகுதிநீக்கம் செய்யப்படுகிற அளவுக்குப் போனது 1868 இல் ஆண்ட்ரூ ஜான்சன் என்பதற்குப்பிறகு 1974 இல் ரிச்சர்ட் நிக்சன், தகுதி நீக்க நடவடிக்கைகள் தொடங்கியவுடனேயே ராஜினாமா செய்துவிட்டார் என்றவகையில் அவரே முதலாவது! நிக்சனுக்கு அப்புறம் 1999 இல் தகுதி நீக்க நடவடிக்கைகளுக்கு ஆளாகி செனேட் வாக்கெடுப்பில் காப்பாற்றப் பட்டு பதவிக்காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்தவர் பில் கிளிண்டன். அடுத்து 20 வருட காலத்தில் தகுதிநீக்க நடவடிக்கைகள் டொனால்ட் ட்ரம்ப் மீது தொடங்கியிருக்கின்றன என்பது கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரசியமான செய்தி.
டொனால்ட் ட்ரம்ப் தகுதிநீக்க நடவடிக்கைகளை கொஞ்சம் கூட சட்டை செய்யவில்லை என்பது டெமாக்ரட்டுகளுடைய எரிச்சலை அதிகப்படுத்தி இருக்கிறது.
தமிழக அரசியல்நிலவரமே சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லையே! இந்த லட்சணத்தில் அடுத்தவீடு ஆந்திரா, தெலங்கானா அரசியலைப் பற்றி என்னவென்று எழுதுவதாம்? ஹிந்து நாளிதழில் இன்று சுரேந்திரா வரைந்திருக்கிற இந்த ஒரு கார்டூன் அங்கேயும் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லையென்று வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.
அமேசான் எழுத்தாளர்கள் தமிழில் பெருகிப் போனதில் எழுத்தும் வாசிப்பும் வளர்ந்ததோ இல்லையோ, திமுக ஆதரவாளர்கள் உபயத்தில் அக்கப்போர்களுக்குப் பஞ்சமே இல்லை என்பது நன்றாகவே தெரிகிறது.
இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி நிறுவனர் ராம்நாத் கோயங்கா நினைவு உரையாக 48 நிமிடங்கள் பேசியதை The Print தளத்தின் சேகர் குப்தா, இந்த 25 நிமிட வீடியோவில் விளக்குகிறார். வெளியுறவுக் கொள்கையில் படிப்படியாக ஏற்பட்டு வரும் மாற்றங்கள் பற்றி அக்கம் பக்கம்! என்ன சேதி! தளத்தில் எழுதிவருவது நண்பர்களுக்கு நினைவு இருக்கும் என்று நம்புகிறேன். சேகர் குப்தா என்ன சொல்கிறார் என்பதை கொஞ்சம் கேளுங்கள், விரிவான பதிவாக பிறகு பார்க்கலாம்.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment