அசுரன் திரைப்பட விமரிசனமாக நிறைய வந்து விட்டன. படத்தைப் பார்ப்பதற்கு முன்னால் இந்தப் பக்கங்களிலேயே திரைப்படத்தைப் பற்றியும் அதன் மூலக்கதையான வெக்கை நாவலைப் பற்றியும் பதிவர் வால்பையனுடைய சேக்காளி ராஜன் ராதாமணாளன் நாவலையும் படத்தையும் ஒப்பிட்டு எழுதியிருந்த விமரிசனம், வெக்கை நாவலை எழுதிய பூமணியின் ஆதங்க வீடியோ இரண்டையும் இங்கே பதிவிட்டிருந்தது நினைவு இருக்கிறதா?
அவருடைய பார்வையில் படம் எடுக்கப்பட்டிருந்தால் உலகத்தரத்துக்குப் போயிருக்கும் என்று பூமணி சொல்வது சரிதானா?
இன்றைக்கு முகநூலில் சிவகாசிக்காரன் என்று பதிவுகள் எழுதிக் கொண்டிருந்த ராம்குமாருடைய நாவல் விமரிசனத்தைப் படத்துடன் ஒப்பிட்டு சுருக்கமான பதிவாக எழுதியிருந்ததைப் படித்தேன்.
'வெக்கை' ஒரு வழியாகப் படித்து முடித்தாகி விட்டது.. அசுரனுக்கும் வெக்கைக்கும் அத்தனை வித்தியாசம் உள்ளன.. எத்தனை வித்தியாசம் என்றால், அட்லீக்களும் முருகதாஸ்களும் நினைத்தால் இது வெக்கை கதையே அல்ல என்று எளிதாகத் தப்பித்துவிடலாம், அத்தனை வித்தியாசம்.. ஆனாலும் மூலக்கதைக்கு வெற்றிமாறன் கொடுத்திருக்கும் இந்த அங்கீகாரம் நிச்சயம் பாராட்டுதலுக்குரியது..
பெரும்பாலும் நாவல்கள் படமாக எடுக்கப்படும் போது பிச்சைக்காரன் வாந்தி எடுத்து வைத்ததைப் போலவே இருக்கும்.. எனக்குத் தெரிந்து நாவலையே மிஞ்சிய (of course சினிமாத்தனங்களின் அதீதங்களும் காம்ப்ரமைஸ்களுமே அதற்குக் காரணம்) ஒரு திரைவடிவம் என்றால் அது அசுரன் தான்..
சொல்லப்போனால் அந்த நாவலுக்கே மிகப்பெரிய அடையாளத்தையும் கொடுத்திருக்கிறது அசுரன்.. இந்த 37 வருடங்களில் விற்பனையான பிரதிகளை விட கடந்த சில மாதங்களில் விற்பனையான பிரதிகள் தான் அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன்..
சாகித்திய அகதமி விருதால் கூடப் பெரிதாக அறியப் படாத பூமணி அவர்களுக்கு, அசுரன் ஒரு நல்ல அடையாளத்தைக் கொடுத்திருக்கிறான்.. அவருடைய எழுத்துக்களைத் தேடிப் படிக்க வேண்டிய அவசியமே இல்லாத அளவிற்கு ரத்னவேல் சாரிடம் கொட்டிக்கிடக்கின்றன அவரது படைப்புகள்.. கொஞ்சம் கொஞ்சமாக நுகர வேண்டும் அந்தக் கரிசல் மண்ணின் வாடையையும் வெக்கையையும்..
அசுரன் - அப்பன், வெக்கை - அப்பனின் சுப்பன்..
நாவலில் வரும் “சின்னப்பய வெட்டிப்புட்டான் நமக்கு வக்கில்லாமப் போச்சே” என்ற அப்பனின் கழிவிரக்கமும், தன் அய்யாவின் மீது சிதம்பரத்திற்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் அசுரனில் இல்லை. சுவாரசியமான இருமைக்காகவும் ப்ளாஷ்பேக் பில்டப்புக்காகவும் “அண்ணனுக்கு பதில் நீ செத்திருந்தாலாச்சும் குடும்பம் உருப்பட்டிருக்கும்” என்று அப்பனின் முகத்துக்கு நேரே சொல்லக் கூடியவனாக சிதம்பரத்தை மாற்றியிருக்கின்றனர்.
நாவலில் டீட்டெய்லாகச் சொல்லப்படும் கரிசல் நிலத்தின் வெக்கை, காட்டுக்குள் இறங்குவதன் கஷ்டம், சோற்றுக்குப் படும் பாடு, படிக்கும் போதே கால் வலிக்கக் கூடிய பெரு நடையெல்லாம் சினிமாவில் சாத்தியமும் இல்லை எடுத்தால் பார்க்கவும் ஆளிருக்காது என்பதால் அவற்றை விலக்கியதைக் குறை சொல்ல முடியாது. ஆனால் ஏனோ அய்யா புகைக்கும் பீடிப்புகையிலிருந்து அத்தை - மகள் என்ற மாமன் குடும்பம் வரை காணாது போயிருக்கிறது. அதே சமயம் மகன்களைப் பாதுகாப்பதில் சிவசாமியின் குணவார்ப்பு சினிமாவில் சற்று விரிந்திருக்கிறது என்று ராஜன் ராதாமணாளன் விமரிசிப்பதையும் சேர்த்துப் பார்த்தால் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் ஒரு நாவல் எப்படி அசுரன் ஆகப் பரிணமித்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
நாவலும் தெரியாத அது திரைப்படமாக உருமாறுவதும் தெரியாத, குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுகிற மாதிரி அரசியல் செய்துவரும் ஒரு அரசியல்வாதி இந்தப் படத்தைப் பார்த்தால் என்ன சொல்லியிருப்பார்?
#Asuran - படம் மட்டுமல்ல பாடம்!
பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்!
கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும்
-க்கும் வாழ்ந்து காட்டியிருக்கும்
-வுக்கும் பாராட்டுகள்
Translate Tweet
இந்த ட்வீட்டுக்கு வந்திருக்கிற ஏராளமான எதிர் ட்வீட்டுக்கள் மிக மிக சுவாரசியமான கேள்விகளை முன்வைத்திருக்கின்றன!
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் ஒரு எதிர்க் கேள்வியை இப்படிக் கொளுத்திப் போட்டு விட்டார். முரசொலி இடத்தின் மூலப்பத்திரம் எங்கே என்ற கேள்வி இன்று வரை சமூக வலைத்தளங்களில் திரும்பத்திரும்ப திமுகவிடம் கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
சினிமாவுக்குப் போன சித்தாளு என்று ஜெயகாந்தன் அந்த நாட்களில் கதை எழுதினார். அதைவிடப் பெரிய கதையாக இசுடாலின் சினிமாவுக்கு போய்ப்பார்த்து கருத்து சொன்ன விவகாரம் இன்னும் நீண்டுகொண்டே போகிறது.
ஆக ...ஆக .......ஆக......ஆக ,,,,,,ஆக ......ஆக .....ஆக ...
மீண்டும் சந்திப்போம்.
அநேகமாக அவர் அதற்குப்பின் சினிமாவே பார்த்திருக்க மாட்டார். அல்லது பார்த்தாலும் வெளியே காட்டிக்கொள்ளமாட்டார்!
ReplyDeleteஇது என்ன, ஆரூடமா ஸ்ரீராம்? அசுரன் படத்துக்கு முன்னால் பார்த்த படங்களைப் பற்றியெல்லாம் கருத்து சொன்னாராமா? இசுடாலின் மாதிரி அரசியல்வாதிகளுக்கு ஆரூடம் சொல்லிப் பயனில்லை! :-)))
Delete