Saturday, November 23, 2019

ஆட்டமென்ன சொல்லுவேன் தோழி நான்! பாட்டு கேட்டதுண்டா?

மஹாராஷ்டிரா அரசியலில் இன்று காலை நிகழ்ந்த அதிரடி மாற்றம், ஊடகங்களை மட்டுமல்ல, காங்கிரஸ் காரர்களையும் கிறுக்குப் பிடிக்க வைத்திருக்கிறதென்பது அங்கங்கே வெளிப்படும் மனக் குமுறல்களில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது. நேற்று வரை சரத் பவாரை இந்திய அரசியலின் சாணக்கியர் என்று கொண்டாடித் தீர்த்தவர்கள் , இன்று சரத் பவாரும் வாயடைத்துப் போகிற மாதிரி ஒரு அதிரடி ஆட்டத்தில் சிவசேனா அண்ட் காங்கிரஸ் கம்பனி கலகலத்துப் போயிருப்பதைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருக்கிறது. ரொம்பவும் காமெடியாக இருக்கிறதென்றும் கூடச் சொல்லலாம்! தவறே இல்லை!


பொதுவாக மீடியாக்களுக்கே அலட்டல், அலப்பறை எல்லாமே ரொம்ப ஜாஸ்தி! ஆக்கவும் அழிக்கவும் எங்களால் மட்டுமே முடியும் என்கிற மிதப்பும் கூட! காசுக்குக் கூவுகிற ஊடகங்களாய்க் குறுகிப் போன பிறகும் கூட நம்மூரில் ஊடகங்களுடைய திமிர் கொஞ்சமும் குறைந்ததே இல்லை! இன்றைக்கு செய்தியை முன்கூட்டித் தருகிற பவுசில் வெளியிட்ட மிதப்பு என்னாயிற்று? நடந்து முடிந்தபிறகுதான் அது செய்தி! எலெக்ட்ரானிக் மீடியா அல்லது சேனல்களிலாவது சிறிது நேரத்திலேயே சரிசெய்து கொண்டு விடமுடியும்! அச்சு ஊடகங்கள்?
சிவசேனாவைப் போல முகத்தில் அச்சுமையைப் பூசிக் கொள்ள வேண்டியதுதான்! 

நேற்று நள்ளிரவிலிருந்து இன்று காலைவரை என்ன நடந்ததாம்? டைம்லைன் சொல்கிறார்கள்!   IANS செய்திகளை மேற்கோள்காட்டி டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட infograph இது  நன்றி :TOI


துக்ளக்கில் சத்யா என்கிற சத்ய நாராயணன் நையாண்டி செய்து எழுதிய வாசகங்கள் நிஜமாகவே ஆகிப்போனதை என்னவென்று சொல்வீர்கள்? பரட்டை வசனம் பேசுகிற மாதிரிச் சொல்வதென்றால், அதிசயம், ஒரு அற்புதம் நிகழ்ந்தே விட்டது என்றா?😂😃





சிவசேனா மதசார்பற்ற கட்சி என்று எதிர்கட்சிகளால் அறிவிக்கப் பட்ட நாள் ! 

நாளையே சிவசேனா ஓடிப்போய் பிஜேபி யுடன் சேர்ந்து கொள்ளக் கூடும்.
அப்போது.. reference-க்கு எதிர் கட்சிகளின் இந்த quote உதவும். 
எது எப்படியோ..
போரடித்துக் கொண்டிருந்த இந்திய அரசியல் களத்தை... பரபரவென நகரும் ஆங்கில political thriller திரைப்படங்கள் போல படு த்ரில்லிங்காக மாற்றி இருக்கிறார்கள் மோடி-அமித்ஷா !  



சோனியா காண்டியின் ஆலோசகர் அகமது படேல் என்ற கோமாளி  ஃபட்னவிஸ் பதவி ஏற்றதை அரசியல் ரீதியாகவும் சட்டரீதியாகவும் எதிர் கொள்வோம் இப்படி வீரவுரை என்றபெயரில் காமெடி செய்திருக்கிறார்.


அமித் ஷாவையும் மிஞ்சிய அரசியல் சாணக்கியர் என்று நேற்று வரை சரத் பவாரை கொண்டாடியவர்கள் முன்னால் முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள இப்போது ஊடகங்களுக்கு முன்னால் விளக்கம் மதியம் 12.30 மணி வீடியோ 27 நிமிடம்.ஆனால் இதற்குச் சரியான பொழிப்புரையை முகநூலில் பார்த்தேன் ரசித்தேன்!

ஆட்டம் Deuce இல் போய்க் கொண்டிருந்தது.
Advantage – NCP, Advantage – Sena என்று ஆட்டம் தொடர்ந்து கொண்டிருந்த போது திடுதிப்பென்று Match Point ஐ BJP Score செய்து விட்டது.
இந்த Dramatic Twist இல் நிறைய ரசனையான விஷயங்கள் உண்டு.
சிவசேனாவின் வால் நறுக்கப்பட்டது முதல் திருப்தி. அவர்களின் கொள்கைகளில் சில எனக்கு முற்றிலும் ஏற்பு இல்லாதது. மஹாராஷ்டிராவில் வெளி மாநிலத்தவர்கள் யாரும் இருக்கக் கூடாது என்று துரத்தியடிக்கும் மோசமான பிராந்திய மனப்பாங்கு அவர்களுடையது. மும்பைத் தமிழர்களின் எதிரிகள்.
அடுத்தது, மீண்டும் BJP ஆட்சி வேண்டும் என்று வாக்களித்த மக்களை ஏமாற்றாமல் அதைச் செய்து முடித்தது.
எல்லாவற்றையும் விட அதைச் செய்து முடித்த விதம் ரொம்ப சுவாரஸ்யமானது. காலை ஐந்தரை மணிக்குக் கூட மீடியாக்கள் அந்த மூவர் கூட்டணி ஒப்பந்தத்துக்கு வந்து விட்டது என்றும் உத்தவ் தாக்கரே முதல்வர் ஆகிறார் என்றும் சொல்லிக் கொண்டிருந்தன.
பா. ஜ. க தலைவர்கள் எல்லாரும் இது சந்தர்ப்பவாதக் கூட்டணி, கிச்சடி கேபினட் என்றும், நித்தின் கட்கரி இந்த ஆட்சி 8 மாசத்தில் கவிழும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்படிப் போய்க் கொண்டிருந்த நேரத்தில் இந்த முடிவு வந்தது மட்டுமில்லை, வெடுக்கென்று பதவி ஏற்பும் முடிந்து விட்டது!
அமித்ஷாவுக்குள் இருக்கும் அற்புதமான திரைக்கதை ஆசிரியரை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது! டயலாக்கே இல்லை, ஒன்லி ஆக்ஷன்!  

சிவாஜி கணேசனுக்காக அந்த நாட்களில் பாடிய ஒரு  பாட்டின் நடுவில் ஆட்டமென்ன சொல்லுவேன் தோழி! ஆடிடுவேன் கொஞ்ச நாழி! என்றொரு அருமையான வரிகள் வரும்! கேட்டிருக்கிறீர்களா?

   
கேட்டுவிட்டு நிம்மதியாக வேறுவேலை பார்க்கப் போகலாமா?

மீண்டும் சந்திப்போம்.         

2 comments:

  1. இந்த 'மதச்சார்பின்மை'யை உபயோகப்படுத்தும் திருமாவளவன் போன்ற கோமாளிகளின் ஸ்டேட்மெண்டை புறம்தள்ளுங்கள். அரசியல் நெறி என்பது சிறிதும் அவரிடம் கிடையாது. அவரிடம் இருப்பது கட்டப்பஞ்சாயத்து, சிறுபான்மையினர் ஆதரவு, இந்துக்களுக்கு எதிரான அரசியல்.

    ஆனாலும் பாஜக மஹாராஷ்டிராவில் செய்த செயலை யாருமே ஜஸ்டிஃபை செய்ய இயலாது. அரசியல் நெறிமுறைகளைச் சிறிதும் பாஜக மதிக்கவில்லை.

    மு.க.ஸ்டாலினுக்கு வேறு வேலை கிடையாது. இதே வேலையை இவருடைய அப்பா செய்துகொண்டிருந்தபோது ஸ்டாலின் என்ன செய்தாராம்?

    ReplyDelete
    Replies
    1. திருமாவளவன்களைப் புறந்தள்ளுவது அரசியல் ரீதியாகத்தான் இருக்க வேண்டும், அதற்கு அவரை அம்பலப்படுத்தியாக வேண்டியிருக்கிறதே சார்!

      பிஜேபி நிறையவே வித்தியாசமான கட்சி என்று வாஜ்பாய் காலத்தில் சொல்லப்பட்டது. ஆனால் அது அந்தக்கட்சிக்கு எந்தவிதத்திலும் உதவவில்லை. இப்போது ஒண்டவந்த பிடாரிகளை விரட்ட ஊர்ப்பிடாரிகளை அழைக்கவேண்டிய கட்டாயமிருப்பதாக பிஜேபி நினைக்கிற மாதிரித் தோன்றுகிறது

      //மு.க.ஸ்டாலினுக்கு வேறு வேலை கிடையாது// எனக்கும் தான்! நானொரு வேலைவெட்டி இல்லாத ரிடையர்ட் .ஆசாமி!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)