சீன விவகாரங்களைத் தொடர்ந்து இங்கே மற்றும் இங்கே பார்த்துவருகிறோம்! சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுவின் முழு அளவிலான கூட்டம் கடந்த திங்கள் முதல் வியாழன் முடிய நான்கு நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது. எதிர்பார்க்கப் பட்டபடி சீனப் பொருளாதார மந்தம் குறித்தோ, அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் குறித்தோ எதையும் குறிப்பிடாமல் இந்தக் கூட்டத்தைப் பற்றிய செய்திக்குறிப்பு வெளியிடப் பட்டிருக்கிறது. அதற்கு முன் சென்ற வாரம் பொலிட்பீரோ (அரசியல்விவகாரத் தலைமைக்குழு) கூட்டத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங் பிளாக்செயின் டெக்னாலஜிக்குப் பச்சைக் கொடி காட்டியிருந்ததை முன்னாலேயே சொல்லியிருந்ததை இரண்டாவது வரியில் உள்ள சுட்டியில் பார்க்கலாம்.
Blockchain Technology பற்றி சீன அதிபருக்கு என்ன தெரியும்? அதில் உள்ள சிக்கல்கள் அவருக்குத் தெரிந்திருக்குமா என்ற ரீதியில் இரு அமெரிக்க ஊடகச் செய்திகளைப் பார்க்க முடிந்தது. அதற்கு முன்னால் ForeignPolicy டாட்காம் தளத்தில் வெளியாகி இருந்த ஒரு செய்தியைப் படவடிவில் பார்த்து விடலாம்.
கடந்த பத்தாண்டுகளில் எந்தெந்த நாடுகளில் 10% மிகப் பெரும் பணக்காரர்கள் இருக்கிறார்கள்? அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிவிட்டு சீனா வந்திருப்பதை பார்க்க முடிகிறதா? கிட்டத்தட்ட இத்தாலி, இங்கிலாந்துக்கு சமமாக இருந்த சீனா, நான்கு மடங்கு உயர்ந்திருப்பது புரிந்து கொள்ள முடிகிறதா?
ஐந்தாம் தலைமுறை 5G தொழில்நுட்பத்தில் சேவைகளை இன்று சீனாவில் 50 நகரங்களில் மூன்று தொலைதொடர்பு நிறுவனங்கள் அளிக்க ஆரம்பித்து விட்டன. China just switched on the world's largest 5G network.
The country's three state-run telecom operators launched services for the next generation wireless technology on Friday.
China Mobile (CHL), China Telecom (CHA) and China Unicom (CHU) are all offering 5G plans that start at 128 yuan ($18) for 30 GB of data per month, giving Chinese internet users access to the ultra fast service.
5G commercial services are now available in 50 cities, including Beijing, Shanghai, Guangzhou and Shenzhen, according to Chinese state news agency Xinhua. In Shanghai, nearly 12,000 5G base stations have been activated to support 5G coverage across the city's key outdoor areas. என்கிறது CNN.
கம்யூனிஸ்ட் கட்சிக்கு கூட்டத்தைப் பேச ஆரம்பித்து எங்கெங்கோ போகிறதே என்று நினைக்கிறீர்களா?
கூட்ட முடிவுகள் வெளியே அறிவிக்கப்படவில்லை தான்!ஆனால் வெளியே தெரிய வந்திருக்கிற இந்த விஷயங்களே அடுத்துவரும் காலங்களில் உலக நடப்பைப் புரட்டிப்போடக் கூடியவை என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்!
மீண்டும் சந்திப்போம்.
புதிய விஷயம் தெரிந்துகொண்டேன். நாம எங்கேயோ இருக்கோம். சைனா எவ்வளவோ முன்னேறிவிட்டது
ReplyDeleteவாருங்கள் நெ.த.!
Deleteஇங்கே ஒன்றுமில்லாத விஷயத்தையே பத்துநாட்களாக ஊடகங்கள் ஊதிப்பெரிதாக்குவதிலேயே நம்முடைய கவனத்தை செலுத்தி இந்தத் தலைமுறையும் வீணாகப்போகிறதா? அல்லது நம்மைச் சுற்றி என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருப்பதிலிருந்து,நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏதேனும் இருக்கிறதா என்பதில் கவனம் செலுத்தப் போகிறதா?
இந்த விசனத்தில் எழுதிய பதிவு இது.