Point of No Return என்று சரிசெய்யவே முடியாத அளவுக்கு சிவசேனாவின் பேராசை அந்தக் கட்சியின் அழிவுக்கே இட்டுச் செல்லப்போகிறதா? சிவசேனா முதலில் பிஜேபியை டைவர் செய்துவிட்டு விலகி வரட்டும் என்று சரத்பவார் விதித்திருக்கும் புதிய நிபந்தனையை சிவசேனாவால் ஏற்றுக்கொள்ளத் தான் முடியுமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகளுடன் மகாராஷ்டிராவில் அதிகாரத்துக்கான இழுபறி ஆன்டி கிளைமேக்ஸை நெருங்கிக் கொண்டிருக்கிறதோ? ஆனால் இன்றைய துக்ளக் அட்டைப்பட நையாண்டி இந்தக் கூத்தை வேறொரு கோணத்தில் சொல்கிறது!
ஆனால் காங்கிரஸ் கட்சி கொடுக்கிற செகுலர் பில்டப் இருக்கிறதே,அது வேறு ரகம்! பந்தியில் உட்காராதே என்று துரத்தப்பட்ட நிலையில் மன்மோகன் சிங்கை பிரதமர் நாற்காலியில் டம்மிப்பீசாக உட்காரவைத்து விட்டு தியாகசிகரம் ஆகத்தன்னைக் காட்டிக் கொண்ட பழைய பில்டப்புக்குப் பக்கத்தில் கூட வராது!
அவரவருக்கு அவரவர் கவலை! ட்வீட்டரில் பொன்னப்பா மகாராஷ்டிரா பிரச்சினையைத் தொட்டு கர்நாடக அரசியலையும் காலை வாரியிருப்பது மிகவும் ரசிக்கிற மாதிரி யோசிக்கிற மாதிரி இருக்கிறது.
ஆனால் ஹிந்து நாளிதழின் சுரேந்திராவுக்கு என்னமோ இன்னமும் நம்பிக்கை வரமாட்டேன் என்கிறதாம்!
தமிழ்நாட்டு நிலவரம் என்னவாம்?
திருவள்ளுவரை வைத்து வெட்டி அக்கப்போர் வளர்ப்பதே இதையெல்லாம் மறக்கடிக்கத்தானே!
மீண்டும் சந்திப்போம்.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment