சனிக்கிழமை கொஞ்சம் relaxed ஆக இருப்பதைக் கெடுக்காமல் கொஞ்சம் சின்னப்பதிவுதான்! அஞ்சற்க. சோனியா மற்றும் வாரிசுகளுக்கான SPG பாதுகாப்பை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. ஆனாலும் Z+ பாதுகாப்பு வழங்கப்படுமென்றும் தகவல்! வழக்கம்போல இதிலும் பழிவாங்கல் இருப்பதாகக் காங்கிரஸ் புலம்ப ஆரம்பித்து விட்டது.
SPG தப்பித்தது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் Z+ பாதுகாப்பு வழங்கவிருக்கும் வீரர்களுடைய பரிதாபமான நிலைமையை யாராவது கொஞ்சம் அனுதாபத்தோடு யோசித்தீர்களா?
இன்னைக்குப் போய்ட்டு நாளைக்கு வந்தாப் போதும்னு சொல்லிட்டாங்க! கோட்டான கோட்டி நன்றி யேசப்பா!
எது எதுக்குத்தான் ராஜதந்திரம்னு சொல்றதுன்ற விவஸ்தை கொஞ்சமாச்சும் வேணாமா? இருந்தாலும், திமுகவை அலற விட்டதுக்காச்சும் இந்த விவாதம், அக்கப்போரைக் கொஞ்சம் கவனிக்கலாம்! வீடியோ 53 நிமிடம்!
ரஜினி தன் எதிரியாக ஸ்டாலினை பார்க்கிறார் என்கிறார் ரவீந்திரன் துரைசாமி! அடடே! அப்படியா என்று கேட்டுக் கொள்வதைத் தவிர வேறென்ன செய்ய?வீடியோ 10 நிமிடம்.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment