Thursday, November 28, 2019

முதுகில் குத்தப்போவது முதலில் யார்? #மஹாராஷ்டிரா

மாலை மயங்கும் 6.40 மணிக்கு தொடங்குகிறது உத்தவ் தாக்கரே பதவியேற்பு நிகழ்வு.எந்த சிவாஜி பார்க்கில் 1966 இல் பால் தாக்கரே மராத்திய மக்களுடைய உணர்வுகளை தென்னிந்திய மக்களுக்கெதிராகத் திருப்பி விட்டு சிவசேனா கடையை ஆரம்பித்தாரோ அதே சிவாஜி பார்க்கில் இன்று தனது பதவியேற்பு நிகழ்வை மிக ஆர்ப்பாட்டமாக நடத்தவிருக்கிறார்.


டைம்ஸ் ஆப் இந்தியாவில் சந்தீப் அத்வர்யு வரைந்திருக்கும் கார்டூன் கனகச்சிதமாக விஷயத்தை சொல்லிவிடுகிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 5 வருடங்களில் ஊழலற்ற ஆட்சியைக் கொடுக்க முடிந்த தேவேந்திர ஃபட்னவிசுக்கு, ஊழலுக்குப் பெயர்போன  சரத் பவாரை, ஊசலாட்டத்துக்குப் பெயர் போன தாக்கரேக்களை சமாளிக்கிற சூது தெரியவில்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

      
ஹிந்து ஆங்கிலநாளிதழுக்காக சுரேந்திரா போட்ட கார்டூனில் ஒரு பகுதி மட்டும் உண்மை. முரண்பாடுகளின் மொத்த உருவமாக அமைந்திருக்கிற சிவசேனா கூட்டணி அந்த முரண்பாடுகளாலேயே முடிந்து விடும் என்பது வரை சரிதான்! 

  
இந்தப்படத்தைப் போட்டு ஹிந்துஸ்தான் டைம்ஸில் Sharad Pawar-Sonia Gandhi axis can revive Congress, NCP | Opinion எழுதியிருக்கிறார் அபய் வைத்யா.There was enormous hesitation in the Congress to ally with the Shiv Sena to stake claim to power in Maharashtra. That, however, became a reality, only because of Pawar’s political acumen, his persuasive skills and his ability to accommodate disparate interests. காங்கிரஸ் சார்பு ஊடகத்தில் இப்படிக் காங்கிரஸ் மீண்டும் உயிர்த்தெழுகிற மாதிரியான கற்பிதங்கள் தம்பட்டம் அடிக்கப்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை தான்! ஆனால் சரத் பவாருக்கு காங்கிரஸ் முடிந்து போனாலென்ன? பிழைத்தால் தான் என்ன? இருபது வருடங்களுக்கு முன்னால் சோனியாவின் பிரதமர் கனவுக்கு ஆப்பு வைக்கிற மாதிரி அவருடைய இத்தாலிய பூர்வீகத்தை எதிர்த்துக் கலக்க கொடி எழுப்பியவர் சரத் பவார். ராகுல் காண்டி மாதிரி ஒரு உதவாக்கரைப் பிள்ளையை வைத்துக் கொண்டிருக்கிற காங்கிரஸ் மறுபடியும் மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதென்பது குதிரைக் கொம்புதான்! அண்ணன் மகன் அஜித் பவாரை மஹாராஷ்ட்ரா அரசியலுக்கும் ஒரே மகள் சுப்ரியா சுவேவை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி மத்திய ஆட்சியில் பங்கெடுக்கிற பழைய நினைப்பெல்லாம் இப்போதும் சரத் பவாருக்கு இருக்கிறதா? இந்தக்கேள்விக்கு விடைதெரியாமல்  Opinion என்று எத்தையாவது எழுதிவிட்டால் சரியாகப் போய்விடுமா?  உத்தவ் தாக்கரேவின் பேராசையைப் பயன்படுத்திக் கொண்டு மஹாராஷ்டிராவில் மீண்டும் மறைமுகமாக ஆட்சியை பிடித்திருக்கிற சரத் பவார் இதேபோல இதர மாநிலங்களிலும் காங்கிரசை உயிர்த்தெழ வைத்து விட முடியுமா?  

Breaking: 6 ministers being sworn in Maharashtra: Balasaheb Thorat, Nitin Raut (Cong), Chaggan Bhujbal, Jayant Patil (NCP), Subhash Desai, Eknath Shinde (Shiv Sena).. DCM likely to be who will be sworn in next week after confidence vote.
3:12 PM · Nov 28, 2019 from New Delhi,

அஜித் பவாருக்கு இங்கே நம்மூர் ரெண்டு முருகன் மாதிரி ஆயுசு முழுக்க இரண்டாவது இடம்தானா? இந்தக் கேள்விக்கு சரத் பவார் தனக்கடுத்து மகள் சுப்ரியா சுலேவை நம்பர் 1 இடத்துக்குக் கொண்டு வரப் போகிறாரா?  இல்லையா? இதற்கு விடைதெரிய வேண்டுமே! 

உத்தவ் தாக்கரேவுக்கு தற்போதைய கூட்டாளிகள் முதுகில் குத்துகிற வாய்ப்புக் கிடைக்குமா? அல்லது கூட்டாளிகள் அவர் முதுகில் குத்துவார்களா? விடை தெரிவதற்கான countdown மாலை 6.40  மணிக்குத் தொடங்குகிறது!      

மீண்டும் சந்திப்போம். 

8 comments:

 1. பாஜக பேரை கெடுத்துக் கொண்டது தான் மிச்சம். வேடிக்கை பார்த்து இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஏன் மீண்டும் அவசரம் அவசரமாக பாஜக அதிகாலையில் பதவியேற்றக் காரணம் ஒன்று உண்டு. மோடியின் கனவு திட்டமான புல்லட் ரயில் திட்டத்திற்கு மகராஷ்டிரா மாநில அரசின் நிதி உதவியும் உண்டு. மாநில அரசின் மூலமாகவே மத்திய அரசு மற்றும் ஜப்பான் வழங்கும் நிதி ஒதுக்கப்படுகின்றது. சோனியின் திட்டம் அதைக் கெடுத்து குட்டிச்சுவராக்கியது. இவர்கள் ஒப்பந்தத்தில் இதனையும் பேசி உள்ளனர். இதை அறிந்த பாஜக (காங்கு இதற்கான நிதியை வாக்காளர்களை உடனே கவர விவசாயிகளுக்கு தள்ளுபடி திட்டத்தில் கொண்டு போய் சேர்க்க திட்டம் தீட்டியது) ஒரு நாள் பதவியில் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் கனகச்சிதமாக செய்து முடித்து விட்டு ராஜினிமா செய்து விட்டார்கள். இது தான் முக்கிய காரணம். எந்த ஊடகமும் இதைப் பற்றி மூச்சு கூட விடவில்லை.

  ReplyDelete
  Replies
  1. இங்கே ஊடகங்களுக்குப் பரந்த பார்வை இருக்கிறதென்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ஜோதி ஜி!?
   காசுக்கு விலைபோகிறவர்கள் எஜமானர்கள் விரும்புகிற செய்தியை மட்டுமே எழுதுகிறார்கள். பிஜேபி அரசு அமையவில்லையென்றால் புல்லட் ரயில்திட்டமும் வராது என்று ஊடகங்களில் ஒரு ஓரமாகச் செய்தி இருந்ததைப் பார்த்தேனே!

   Delete
 2. https://swarajyamag.com/insta/pm-modis-mumbai-ahmadabad-bullet-train-project-likely-to-halt-as-sena-ncp-congress-govt-finalised-in-maharashtra

  ReplyDelete
  Replies
  1. செய்தியை சரியாகப் படித்திருந்தீர்களானால், முதல் பின்னூட்டத்தில் சொன்னதற்கு நேர்மாறாக இருப்பதைப் பார்க்கலாமே ஜோதிஜி!

   According to the top NCP leadership, the three parties have decided that the money which is to be given by the state government for the Bullet Train will be diverted to the farmer welfare scheme as it is part of the common minimum programme they have agreed on.

   On 21 November, IANS had reported that Modi's Bullet train project, being implemented by the National High Speed Railway Corp Ltd (NHSRCL), may hit a barrier if the Congress-NCP-Shiv Sena combine comes to power in Maharashtra.
   புல்லெட் ட்ரெயினுக்காக முதலீடு செய்யவிருந்த மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டை விவசாயிகளுக்கு திருப்புவது என்று சிவசேனாவும் புதுக்கூட்டாளிகளும் முடிவு செய்திருப்பதாக அல்லவா செய்தி சொல்கிறது!

   Delete
 3. There are huge funds in Maharashtra government accounts, deposited as part of funds for Bullet train. Centre, Maharashtra and Gujarat control these funds. Sonia wanted to divert these funds for Farmer loan waiver though Japan wouldn't have agreed. But Japan cannot stop Maharashtra CM if he wants to go ahead. That would abort the Bullet train project. It will help Congress to siphon off funds in the name of waivers.

  Fadnavis was care taker CM till 22 and he could not have transferred the money to central funds. So he struck a deal with Ajit Pawar (Shah Modi gameplan) and produced letters of support of 159 MLAs through party chiefs. That's why the emergency swearing in. He has transferred almost all the money to central funds, making it impossible for new government to touch the funds.

  He will resign now but they have prevented the Congress from poaching into Bullet train project. Sonia's insistence in her CMP was Farmer's loan waivers (the easiest way to scam, like they did in Karnataka and MP) and stop Modi's dream project of Bullet train.

  So it was for a cause. Ajit Pawar didn't know all this and thought he can become Deputy CM. In the 3 days, Fadnavis has finished the designated job. Now the Triplets can screw themselves."

  ReplyDelete
  Replies
  1. அடுத்து சொல்லியிருப்பது அதீதக் கற்பனையாக இருக்கும் போலிருக்கிறதே ஜோதிஜி! ஒருலட்சம் கோடி ரூபாய் திட்டத்தில் மாநில அரசின் பங்கு வெறும் 5% மட்டுமே. அதைத் திசைதிருப்புவதில் என்ன அரசியல் லாபம்? திரை மறைவு விவகாரங்களை ஊடகங்கள் அறிந்ததுமில்லை, நாமும் அறியப்போவதுமில்லை!

   Delete
  2. உண்மை. யாராவது ஒரு காலத்தில் புத்தகம் எழுதுவார்கள்.

   Delete
  3. அப்படியே எழுதினாலும் எழுதப்பட்ட புத்தகங்களை யாராவது வாசிக்கப்போகிறார்களா? நடந்த தவறுகளுக்குப் பரிகாரம் தேடப்போகிறார்களா ஜோதிஜி!?

   Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#சீனப்பூச்சாண்டி குறித்தான இந்திய அரசின் அணுகுமுறை மாறுகிறது!

நேற்று வெள்ளிக்கிழமை நமது பிரதமர் நரேந்திர மோடி போர்ப்பதற்றம் தொற்றிக் கொண்டிருக்கிற லடாக் பகுதிக்கு நேரடியாகச் சென்று நமது வீரர்களைப் பார்த...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (310) அனுபவம் (239) நையாண்டி (98) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (71) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (42) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (22) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) புத்தக விமரிசனம் (14) விமரிசனம் (14) தேர்தல் சீர்திருத்தங்கள் (13) Change Management (12) அரசியல் களம் (12) ஊடகப் பொய்கள் (12) கமல் காசர் (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) திராவிட மாயை (11) ஊடகங்கள் (10) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) புனைவு (9) ஆங்கிலப் புதினங்கள் (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) இடதுசாரிகள் (7) காமெடி டைம் (7) சுய முன்னேற்றம் (7) பானாசீனா (7) எங்கே போகிறோம் (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) புத்தகம் (6) மீள்பதிவு (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீ அரவிந்த அன்னை (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) அன்னை எனும் அற்புதப் பேரொளி (5) இர்விங் வாலஸ் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) கண்டு கொள்வோம் கழகங்களை (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) தேர்தல் முடிவுகள் (5) நா.பார்த்தசாரதி (5) படித்ததில் பிடித்தது (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) Tianxia (4) உதிரிகளான இடதுகள் (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) கவிதை நேரம் (4) கூட்டணிப் பாவங்கள் (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மோடி மீது பயம் (4) அஞ்சலி (3) ஒளி பொருந்திய பாதை (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) சீனா (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) மாற்று அரசியல் (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) The Sunlit Path (2) அம்பலம் (2) உதிரிக் கட்சிகள் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராகுல் காண்டி (2) ராஜமுத்திரை (2) ராமச்சந்திர குகா (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) ஸ்ரீ அரவிந்தர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) February 21 (1) The R Document (1) Three C's (1) YSR (1) Yatra (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சுத்தானந்த பாரதியார் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) திரைப்படங்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)