Showing posts with label சிவசேனா. Show all posts
Showing posts with label சிவசேனா. Show all posts

Monday, September 28, 2020

கூட்டணி தர்மம்! அரசியலில் சாபங்கள் விலகும் நேரம் இது!

கூகிள் ப்ளஸ் இருந்த நாட்களில் வலைப்பதிவுகள் எழுதத் தோன்றியதே இல்லை. முக்கியமான காரணமாக, கூகிள் பிளஸ்சில் நடப்புச் செய்திகளின் மீது சுருக்கமான விமரிசனங்களை எழுத முடிந்ததுதான்! ஒரேநாளில் இருபது, முப்பது  விமரிசனக் குறிப்புக்களைக் கூட நடப்பு செய்திகளின் மீது சுடச் சுட எழுத முடிந்ததும் இன்னொரு காரணம். எதற்காக இந்த பழைய கூகிள் ப்ளஸ் புராணம் என்கிறீர்களா?  காரணம் இருக்கிறது. 

 

சிவசேனா, அகாலி தளம் இரண்டுமே பிஜேபியை பிடித்த சாபங்கள் என்று நீண்டநாட்களாகவே (2014 நாடாளு மன்றத் தேர்தல்களுக்கு முன்பிருந்தே) என்னுடைய கருத்தாகப் பதிவு செய்து வந்திருக்கிறேன்.இதை எழுத நான் பிஜேபி/RSS உறுப்பினர் அல்லது அனுதாபியாக இருந்துதான் ஆகவேண்டுமென்பதில்லை. அரசியல் நிகழ்வுகளைத் தொடர்ந்து கவனித்து வந்தாலே போதும் இல்லையா?  

சேகர் குப்தா மேலே இருக்கும் 28 நிமிட வீடியோவில் பிஜேபி அகாலி தளத்தைக் கைகழுவியது ஏன் என்பது குறித்து அவரது அரசியல் அகடவிகடத்தைச் சொல்லி இருக்கிறார். வாஜ்பாயி காலத்து அரசியல் நிதானம்  நரேந்திர மோடி-அமித்ஷா காலத்தில் இல்லாமல் போனதே என்று அனாவசியமாக விசனப்படுகிறார் 

சோனியா அமைத்த ஐமுகூ எப்படி பெரும் ஊழலுக்கான கூட்டணியாக மட்டுமே இருந்தது என்பதைச் சொல்லத்  தைரியம் இல்லாத ஒருவரால் மட்டுமே இப்படி ஒப்பாரி வைக்க முடியும். கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியால் அந்தக்கூட்டணிக்கு என்ன வலுசேர்க்க முடிந்தது என்ற ஒரு கேள்வியிலேயே சேகர் குப்தாவின் ஒருதலைப்பட்சமான விமரிசனத்துக்கான பதிலும் கூட இருக்கிறதே!

சிவசேனாவின் அதிகாரப் பேராசை அது மும்பை மாநகராட்சியைக் கைப்பற்றியதிலும், ஊழலில் திளைத்ததிலும் முன்னரே வெளிப்பட்டது. அதிகாரப் பசிக்காக தாக்கரேக்கள் சோனியாவுடன் கூட  கூட்டுச் சேர்ந்ததுமே தெரிந்த கதைதான்! தாக்கரேக்கள் புலிகள் அல்ல வெறும் எலிகள்தான் என்பதும் நிரூபணமானது. கங்கனா ரணாவத் கேலியாகச் சொன்னது போல இன்று அது சோனியா சேனா மட்டும் தான்! 

ஆக நேற்று சிவசேனா, இன்றைக்கு அகாலி தளம் இவை பிஜேபி கூட்டணியை விட்டு வெளியேறியது நல்லது தான்! விட்டது சனியன், விலகியது சாபம் என்று பிஜேபி கட்சியினர் சந்தோஷப்பட்டால், அதில் நியாயம் உண்டு!

அதேபோல தமிழகத்திலும் கூட ஏதோ ஒரு கழகத்துடன் ஒட்டிக் கொண்டிருப்பது என்பதையும் விட்டார்களானால் இன்னொரு சாபமும் கூட விலகிவிடும்!

தமிழக பிஜேபிக்கு அந்தத் தைரியம் இருக்கிறதா?

மீண்டும் சந்திப்போம்.         

           .

Thursday, November 28, 2019

முதுகில் குத்தப்போவது முதலில் யார்? #மஹாராஷ்டிரா

மாலை மயங்கும் 6.40 மணிக்கு தொடங்குகிறது உத்தவ் தாக்கரே பதவியேற்பு நிகழ்வு.எந்த சிவாஜி பார்க்கில் 1966 இல் பால் தாக்கரே மராத்திய மக்களுடைய உணர்வுகளை தென்னிந்திய மக்களுக்கெதிராகத் திருப்பி விட்டு சிவசேனா கடையை ஆரம்பித்தாரோ அதே சிவாஜி பார்க்கில் இன்று தனது பதவியேற்பு நிகழ்வை மிக ஆர்ப்பாட்டமாக நடத்தவிருக்கிறார்.


டைம்ஸ் ஆப் இந்தியாவில் சந்தீப் அத்வர்யு வரைந்திருக்கும் கார்டூன் கனகச்சிதமாக விஷயத்தை சொல்லிவிடுகிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 5 வருடங்களில் ஊழலற்ற ஆட்சியைக் கொடுக்க முடிந்த தேவேந்திர ஃபட்னவிசுக்கு, ஊழலுக்குப் பெயர்போன  சரத் பவாரை, ஊசலாட்டத்துக்குப் பெயர் போன தாக்கரேக்களை சமாளிக்கிற சூது தெரியவில்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

      
ஹிந்து ஆங்கிலநாளிதழுக்காக சுரேந்திரா போட்ட கார்டூனில் ஒரு பகுதி மட்டும் உண்மை. முரண்பாடுகளின் மொத்த உருவமாக அமைந்திருக்கிற சிவசேனா கூட்டணி அந்த முரண்பாடுகளாலேயே முடிந்து விடும் என்பது வரை சரிதான்! 

  
இந்தப்படத்தைப் போட்டு ஹிந்துஸ்தான் டைம்ஸில் Sharad Pawar-Sonia Gandhi axis can revive Congress, NCP | Opinion எழுதியிருக்கிறார் அபய் வைத்யா.There was enormous hesitation in the Congress to ally with the Shiv Sena to stake claim to power in Maharashtra. That, however, became a reality, only because of Pawar’s political acumen, his persuasive skills and his ability to accommodate disparate interests. காங்கிரஸ் சார்பு ஊடகத்தில் இப்படிக் காங்கிரஸ் மீண்டும் உயிர்த்தெழுகிற மாதிரியான கற்பிதங்கள் தம்பட்டம் அடிக்கப்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை தான்! ஆனால் சரத் பவாருக்கு காங்கிரஸ் முடிந்து போனாலென்ன? பிழைத்தால் தான் என்ன? இருபது வருடங்களுக்கு முன்னால் சோனியாவின் பிரதமர் கனவுக்கு ஆப்பு வைக்கிற மாதிரி அவருடைய இத்தாலிய பூர்வீகத்தை எதிர்த்துக் கலக்க கொடி எழுப்பியவர் சரத் பவார். ராகுல் காண்டி மாதிரி ஒரு உதவாக்கரைப் பிள்ளையை வைத்துக் கொண்டிருக்கிற காங்கிரஸ் மறுபடியும் மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதென்பது குதிரைக் கொம்புதான்! அண்ணன் மகன் அஜித் பவாரை மஹாராஷ்ட்ரா அரசியலுக்கும் ஒரே மகள் சுப்ரியா சுவேவை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி மத்திய ஆட்சியில் பங்கெடுக்கிற பழைய நினைப்பெல்லாம் இப்போதும் சரத் பவாருக்கு இருக்கிறதா? இந்தக்கேள்விக்கு விடைதெரியாமல்  Opinion என்று எத்தையாவது எழுதிவிட்டால் சரியாகப் போய்விடுமா?  உத்தவ் தாக்கரேவின் பேராசையைப் பயன்படுத்திக் கொண்டு மஹாராஷ்டிராவில் மீண்டும் மறைமுகமாக ஆட்சியை பிடித்திருக்கிற சரத் பவார் இதேபோல இதர மாநிலங்களிலும் காங்கிரசை உயிர்த்தெழ வைத்து விட முடியுமா?  

Breaking: 6 ministers being sworn in Maharashtra: Balasaheb Thorat, Nitin Raut (Cong), Chaggan Bhujbal, Jayant Patil (NCP), Subhash Desai, Eknath Shinde (Shiv Sena).. DCM likely to be who will be sworn in next week after confidence vote.
3:12 PM · Nov 28, 2019 from New Delhi,

அஜித் பவாருக்கு இங்கே நம்மூர் ரெண்டு முருகன் மாதிரி ஆயுசு முழுக்க இரண்டாவது இடம்தானா? இந்தக் கேள்விக்கு சரத் பவார் தனக்கடுத்து மகள் சுப்ரியா சுலேவை நம்பர் 1 இடத்துக்குக் கொண்டு வரப் போகிறாரா?  இல்லையா? இதற்கு விடைதெரிய வேண்டுமே! 

உத்தவ் தாக்கரேவுக்கு தற்போதைய கூட்டாளிகள் முதுகில் குத்துகிற வாய்ப்புக் கிடைக்குமா? அல்லது கூட்டாளிகள் அவர் முதுகில் குத்துவார்களா? விடை தெரிவதற்கான countdown மாலை 6.40  மணிக்குத் தொடங்குகிறது!      

மீண்டும் சந்திப்போம். 

நூறாவது நாள்! சில்வர் ஜூபிலி கோல்டன் ஜூபிலி தொடரட்டும்!

உச்சநீதிமன்றத்தில் இன்று பானாசீனாவின் ஜாமீன் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்ததில் இருதரப்பு வாதங்களையும் கேட்டபிறகு நீதிமன்றம் விசாரணையை தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்திருக்கிறது. ஆக, சீனாதானா வெற்றிகரமாக தன்னுடைய திகார் சிறை வாழ்க்கையை இன்று 100வது நாளாகத் தொடர்கிறார்.


வெற்றிகரமாக இதுவே 25வது வாரம், 50வது வாரம் என்று தொடர, ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களாகச் சேர்ந்து வாழ்த்துவோம்! ஜஸ்டிஸ் பானுமதி அமர்வில் இருக்கிறாரே , வாழ்த்து பலிக்குமா என்று கேட்கிறீர்களா? திருப்பூர் ஜோதி ஜி  கூட இப்படி 100 நாள் தொடர்ந்து சால்வை அழகரை உள்ளே வைத்து விட முடியும் என்று ஆரம்ப நாட்களில் நம்பவில்லை.


காயத்ரி ரகுராம்! ஒரு கட்சியாக பிஜேபி செய்யத் தவறியதை தனி ஒரு மனுஷியாக திருமாவளவனைத் தட்டிக்  கேட்டிருக்கிறார்.  விசிகவின் திருமாவளவன் இந்துக் கோவில்களைப் பற்றி இழிவாகப் பேசியதற்கு கண்டனம் தெரிவித்த காயத்ரி ரகுராமுக்கு எதிராக விசிகவினர் ஆபாச மிரட்டல்கள்,வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு திருமா பெண்களை இழிவு படுத்துகிற மாதிரி ஸ்டேட்மென்ட் விட்டதையும்  இங்குள்ள அரசியல் கட்சிகளோ மாதர் சங்கங்களோ ஒப்புக்குக்  கூட கண்டிக்க முன்வரவில்லை என்பது தமிழக அரசியலின் ஈரல், மூளை இப்படி எல்லாமே கெட்டுச் சீரழிவுக்குஆளாகியிருப்பதன் அடையாளம். H.ராஜா ஒருவர்தான் காயத்ரி ரகுராமுக்கு ஆதரவாக நின்றிருக்கிறார்.


என்னுடைய நல்லநேரம், ராஜதீப் சர்தேசாய், பர்கா தத் போன்ற ஊடகத் தறுதலைகளிடமிருந்துதான் அரசியல் நடப்பைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்கிற அவசியம் இல்லை! அந்த 39 நிமிட முழுநீளக்  காமெடியில், நான் கவனிக்கத் தவறிய ஒரு செய்தி ஸ்க்ரோலில் வருகிறது. சோனியா, ராகுல்  காண்டி, மம்தா பானெர்ஜி, கேஜ்ரிவால் போன்ற சிறப்பு அழைப்பாளர்கள் எவருமே உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு வைபவத்தில் கலந்துகொள்ளவில்லையாம்! இலவுகாத்த கிளியாக இங்கே என்னமோ தத்துப்பித்து அரசியல் செய்து கொண்டிருக்கிற இசுடாலின் மட்டும் தான் கலந்து கொள்ளப்போகும் ஒரே பெத்த பேரு என்கிறார்கள் பாருங்கள்! அதுதான் அடிக்கோடிட்டுக் காண்பிக்க விரும்பிய  செய்தி.

மீண்டும் சந்திப்போம்.         


Sunday, November 24, 2019

மகாராஷ்டிரா: பிஜேபி சிவசேனா NCP! பின்னே துக்ளக் 50!

இன்றைக்கு அச்சு ஊடகங்களுடைய பரிதாபமான நிலைமை பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டிருப்பது அவர்களுடைய ஏலாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறமாதிரி நேற்றைக்கு மஹாராஷ்டிராவில் பிஜேபி காட்டிய அதிரடி, ரொம்பவுமே வலிக்கச் செய்து விட்டதோ! மாதிரிக்கு ஒரு ஊடக ஊளை!


தங்களைப்பற்றிய மிதமிஞ்சிய மிதப்பில் இருந்த ஊடகங்கள், இப்போதும் கூடத்  தாங்கள் முட்டாள்களாக ஆக்கப்பட்டதை ஒப்புக்கொள்கிற மனநிலையில் இல்லை! என்னவோ பிரதமர் நரேந்திர மோடி ஜனங்களை முட்டாள்களாக ஆக்கிவிட்ட மாதிரி ஒரு பில்டப் கொடுத்திருப்பது வேடிக்கை! அது மட்டுமா? ஊடகங்கள் தங்களுடைய பாடி, பேஸ்மெண்ட் இரண்டுமே படு வீக் என்பதைக் காட்டிக் கொண்ட தருணமாகவும் இருக்கிறது.

    
DNA தளத்துக்காக மஞ்சுள் வரைந்திருக்கிற இந்தக் கார்டூன் கள யதார்த்தத்துக்கு மிக நெருக்கமாக! இதைப் புரிந்துகொள்ளாமல் அகமது படேல் மாதிரி காங்கிரசைக் கெடுக்கவென்றே பிறந்தவர்கள் வீரமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் மகாராஷ்டிரா விஷயத்தை கையாளுவோம் என்று உளறியிருப்பது இன்னொரு காங்கிரஸ் கொடுங் காமெடி!


இது ட்வீட்டரில் நீலப் பானெர்ஜி வரைந்திருக்கிற கார்டூன்! மஞ்சுள், நீலப், இருவருமே சிவசேனா அகலக் கால் வைத்து சறுக்கி, வீழ்ந்தே  விட்டது என்று அபிப்பிராயம் சொல்வதைக் கவனித்தீர்களா? சரத் பவார் நிலைமை மட்டும் ரொம்பத்தெளிவாக இருக்கிறதாமா?   

முற்பகல் இன்னா செய்யின்
:
1978
1977 தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து இந்திரா காங்கிரஸ் இரண்டாக உடைந்தது.உடைந்த ஒரு பிரிவிற்கு தேவராஜ் அர்ஸ் தலைவர் .காங்கிரஸ் (எஸ்) S for socialist என்றழைக்கப்பட்ட அதில் ஏ.கே. அந்தோணி (கேரளம்) டி.கே. பரூவா (அஸ்ஸாம்) பி.ஆர். முன்ஷி (வங்கம்) ஆகியோர் இருந்தனர்.மகராஷ்டிரத்திலிருந்து அதில் அங்கம் வகித்தவர் சரத் பவார். (1981ல் அவர் அந்தக் கட்சியின் தலைமைப் பொறுப்பேற்ற போதுதான் அது காங் (எஸ்) என்ற பெயரைப் பெற்றது . அதுவரை அது காங்(அர்ஸ்)
1978 நடந்த தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக ஜனதா கட்சி 99 இடங்களைப் பெற்றது. இந்திரா காiங்கிரஸ் 69. காங் எஸ் 62. யாருக்கும் பெரும்பானமை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது இரண்டு காங்கிரசும் சேர்ந்து மற்ற உதிரிகளின் ஆதரவில் ஆட்சி அமைத்தனர். வசந்த் தாதா பாடீல் முதல்வராக ஆனார்.
மார்ச்சில் முதல்வரானார். ஜூலைக்குள் பதவிச் சண்டை மூண்டது. ஜூலையில் ஜனதாக் கட்சித் தலைவர் சந்திரசேகருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு 38 எம்.எல்.ஏக்களுடன் வெளியேறி, வேறு சில உதிரிக்கட்சிகளையும் சேர்த்துக் கொண்டு முற்போக்கு ஜனநாயகக் கூட்டணி என்ற ஓர் கூட்டணியை அமைத்து, பாடீலின் ஆட்சியைக் கவிழ்த்து, பவார் முதலமைச்சராக ஆனார் அப்போது அவருக்கு வயது 38
1980ல் இந்திரா மீண்டும் பிரதமரானார். அதைத் தொடர்ந்து சரத்பவாரின் ஆட்சி கலைக்கப்பட்டது
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும் (திருக்குறள் 319)   

மாலன் இன்னொரு விஷயத்தையும் சேர்த்தே சொல்லி இருக்கலாம்! ஒரு வெளிநாட்டவர் தலைமையை ஏற்க மறுத்து (சோனியாG என்றறிக) P A  சங்மாவுடன் சேர்ந்து  NCP தேசியவாத காங்கிரஸ் கட்சி என்று  பிரதமர் நாற்காலி மீது கண்வைத்து ஆரம்பித்த சரத் பவார், அந்தக்கனவு நிறைவேறாது என்று புரிந்தவுடன் அதே சோனியா காங்கிரசுடன் மறுபடி இழைய ஆரம்பித்தது, மஹாராஷ்டிராவில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் முதல் தாவூத் இப்ராஹிமுடன் ஒட்டி உறவாடித் தப்பிக்க விட்டது, இப்படி ஏராளமான ஊழல் விவகாரங்களில், சில விஷயங்களில் சிவசேனாவின் பால் தாக்கரேவுக்கும் தீனிபோட்டது என்று பலவிதமான பெருமைக்கும் உரியவரை, ஒரே ஒரு திருக்குறளோடு முடித்திருக்க வேண்டாம்! ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் 2G ஸ்பெக்ட்ரம் உள்ளிட்டவைகளில் கருணாநிதி சரத் பவாரைக் கொஞ்சம் மிஞ்சிவிட்டார் அல்லது சமன் செய்துவிட்டார் என்று எளிதாகப் புரிந்து கொள்ள ஒரு ஒப்பீடு செய்யலாம்! 


அஜித் பவாரும் லேசுப்பட்டவர் அல்ல.  இவரோடு பிஜேபி கூட்டு வைப்பதா என்று புலம்புவதில் பயனேதும் இல்லை, நடந்துகொண்டிருப்பது பக்கா அரசியல்! உச்ச நீதிமன்றம் வந்து தலைகீழாக மாற்றிவிடும் என்று கற்பனை செய்வதே கூட ஒருவித நகைமுரண்.


திருச்சியில் துக்ளக் 50 நிகழ்ச்சியின் நேரலை. தமிழருவி மணியன் பிஜேபியைக் கண்டித்துப் பேசிக்கொண்டிருக்கிறார். பார்த்துக் கொண்டே பதிவை நிறைவு செய்கிறேன். 

மீண்டும் சந்திப்போம்.                             

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)