Monday, September 28, 2020

கூட்டணி தர்மம்! அரசியலில் சாபங்கள் விலகும் நேரம் இது!

கூகிள் ப்ளஸ் இருந்த நாட்களில் வலைப்பதிவுகள் எழுதத் தோன்றியதே இல்லை. முக்கியமான காரணமாக, கூகிள் பிளஸ்சில் நடப்புச் செய்திகளின் மீது சுருக்கமான விமரிசனங்களை எழுத முடிந்ததுதான்! ஒரேநாளில் இருபது, முப்பது  விமரிசனக் குறிப்புக்களைக் கூட நடப்பு செய்திகளின் மீது சுடச் சுட எழுத முடிந்ததும் இன்னொரு காரணம். எதற்காக இந்த பழைய கூகிள் ப்ளஸ் புராணம் என்கிறீர்களா?  காரணம் இருக்கிறது. 

 

சிவசேனா, அகாலி தளம் இரண்டுமே பிஜேபியை பிடித்த சாபங்கள் என்று நீண்டநாட்களாகவே (2014 நாடாளு மன்றத் தேர்தல்களுக்கு முன்பிருந்தே) என்னுடைய கருத்தாகப் பதிவு செய்து வந்திருக்கிறேன்.இதை எழுத நான் பிஜேபி/RSS உறுப்பினர் அல்லது அனுதாபியாக இருந்துதான் ஆகவேண்டுமென்பதில்லை. அரசியல் நிகழ்வுகளைத் தொடர்ந்து கவனித்து வந்தாலே போதும் இல்லையா?  

சேகர் குப்தா மேலே இருக்கும் 28 நிமிட வீடியோவில் பிஜேபி அகாலி தளத்தைக் கைகழுவியது ஏன் என்பது குறித்து அவரது அரசியல் அகடவிகடத்தைச் சொல்லி இருக்கிறார். வாஜ்பாயி காலத்து அரசியல் நிதானம்  நரேந்திர மோடி-அமித்ஷா காலத்தில் இல்லாமல் போனதே என்று அனாவசியமாக விசனப்படுகிறார் 

சோனியா அமைத்த ஐமுகூ எப்படி பெரும் ஊழலுக்கான கூட்டணியாக மட்டுமே இருந்தது என்பதைச் சொல்லத்  தைரியம் இல்லாத ஒருவரால் மட்டுமே இப்படி ஒப்பாரி வைக்க முடியும். கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியால் அந்தக்கூட்டணிக்கு என்ன வலுசேர்க்க முடிந்தது என்ற ஒரு கேள்வியிலேயே சேகர் குப்தாவின் ஒருதலைப்பட்சமான விமரிசனத்துக்கான பதிலும் கூட இருக்கிறதே!

சிவசேனாவின் அதிகாரப் பேராசை அது மும்பை மாநகராட்சியைக் கைப்பற்றியதிலும், ஊழலில் திளைத்ததிலும் முன்னரே வெளிப்பட்டது. அதிகாரப் பசிக்காக தாக்கரேக்கள் சோனியாவுடன் கூட  கூட்டுச் சேர்ந்ததுமே தெரிந்த கதைதான்! தாக்கரேக்கள் புலிகள் அல்ல வெறும் எலிகள்தான் என்பதும் நிரூபணமானது. கங்கனா ரணாவத் கேலியாகச் சொன்னது போல இன்று அது சோனியா சேனா மட்டும் தான்! 

ஆக நேற்று சிவசேனா, இன்றைக்கு அகாலி தளம் இவை பிஜேபி கூட்டணியை விட்டு வெளியேறியது நல்லது தான்! விட்டது சனியன், விலகியது சாபம் என்று பிஜேபி கட்சியினர் சந்தோஷப்பட்டால், அதில் நியாயம் உண்டு!

அதேபோல தமிழகத்திலும் கூட ஏதோ ஒரு கழகத்துடன் ஒட்டிக் கொண்டிருப்பது என்பதையும் விட்டார்களானால் இன்னொரு சாபமும் கூட விலகிவிடும்!

தமிழக பிஜேபிக்கு அந்தத் தைரியம் இருக்கிறதா?

மீண்டும் சந்திப்போம்.         

           .

4 comments:

  1. ஆட்டத்தில் வெல்வதை விட வெல்லத் தயாராக இருக்கின்றவர்கள் தகுதியாக உள்ளவர்களின் மனநிலையை பாதிப்படையச் செய்வதும் வெற்றிக்கான வழியே. காத்திருக்கவும். காலம் கனியும்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதிஜி!

      பதிவின் கடைசி வரியில் இருக்கிற கேலி, கேள்வியைப் புரிந்துகொண்ட மாதிரித் தெரியவில்லையே! தமிழக பிஜேபி, தமிழிசை காலத்தைய எதோ ஒரு கழகத்துடன் ஒட்டிக் கொண்டிருக்கிற மனோநிலையில் இருந்து வெளியே வந்து விட்டதா என்ன?

      Delete
  2. கழகம் என்னும் பெயர் இருந்தால்தான் வாக்களிப்போம் என்னும் மன நிலையிலிருந்து தமிழக மக்கள் விடுபட வேண்டும், தமிழகத்தில் பி.ஜே.பி. நன்கு வேரூன்ற வேண்டும், அது வரை கூட்டணியைத் தவிர்க்க முடியாது. 

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்மா!

      இங்கே கூட்டணி என்ற அம்சம் உண்மையான பிரச்சினையில்லை. யாருடன் எதற்காக எதுவரை கூட்டு என்பதில் தெளிவில்லாத கூட்டணியைப் பற்றித்தான் இங்கே யோசிக்க வேண்டியிருக்கிறது. ஐக்கிய முன்னணித் தந்திரம் என்று கம்யூனிஸ்டுகள் ஒருகாலத்தில் கூட்டணியை ஒரு இடைக்கால ஏற்பாடாக மட்டுமே பயன்படுத்தியதுண்டு. இங்கே இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தக் கூட்டணியை மேற்கு வங்கத்தில் வெற்றிகரமாகப் பயன்படுத்தியதும் உண்டு.அந்த நாட்களில் மார்க்சிஸ்டுகளுக்குத் தங்களுடைய எதிரி அல்லது எதிர்த்தரப்பு நீண்ட கால அடிப்படையில் காங்கிரஸ் கட்சிதான் என்ற தெளிவும் இருந்ததுண்டு அரசியலை ஆழமாக யோசித்து முடிவெடுக்கிற திறமை இருந்த மார்க்சிஸ்டுகளே பிந்தைய நாட்களில் தெளிவான அரசியல் முடிவெடுப்பதில் இன்றுவரை பிறழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

      இங்கே காங்கிரஸ், பிஜேபி இரண்டு கட்சிகளும் கூட்டணி விஷயத்தில் எப்படி முடிவெடுக்கிறார்கள்? அவர்கள் எப்படி முடிவெடுக்க வேண்டும் என்பதை சேகர் குப்தாவோ அல்லது நானோ சொல்ல முடியாது

      இந்தப் பதிவை பிஜேபி அல்லது காங்கிரஸ் சார்பு / எதிர்ப்பு என்று பார்க்காமல், நாட்டுக்கு எது நல்லது என்ற ஒரே கோணத்திலிருந்து கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)