Saturday, October 17, 2020

பித்தம் தலைக்கேறினால் என்ன செய்வாராம் #சேகர்குப்தா ?

ThePrint தளத்தின் சேகர் குப்தா நடத்தும்  செய்தி அரவை ஆலை சமீப நாட்களில் ஓவர்டைம் வேலை செய்கிறதே, நண்பர்கள் யாராவது கவனிக்கிறீர்களா? சற்றுமுன்னர் தான் இன்றைக்கு வலையேற்றப்பட்ட இந்த 18 நிமிட வீடியோவைப் பார்த்து முடித்தேன். அப்படியே பிரின்ட் தளத்தில் இன்று வெளியான அவருடைய செய்திக் கட்டுரையையும் படித்துப் பார்த்தாயிற்று.


பிஜேபி தலைமையில் இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளை நரேந்திர மோடி அமித்ஷா இரட்டையர்கள் #பலிகடாக்கள் போல ஆக்கி விட்டார்களாம்! அந்தவகையில் மோடி - ஷா ஜோடி அரசியலில் விதிகளையே மாற்றி எழுதிக் கொண்டிருப்பதாக சேகர் குப்தா இந்த 18 நிமிட வீடியோவில் ஒரே புலம்பல்! யாருக்காக இந்தப்புலம்பல்?

#nationalinterest என்ற தலைப்பில் இந்த வீடியோவை வகைப் படுத்தியிருந்தாலும், சேகர் குப்தா காங்கிரசுக்கு நேரடியாக வக்காலத்து வாங்க முடியாத சமயங்களில் இந்த மாதிரி வாஜ்பாயி, LK அத்வானி காலத்தைய கூட்டணிக் கணக்குகளை வைத்து (இன்றைய நிலவரம் எப்படி வெகுவாக மாறியிருக்கிறது என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமலேயே) பிஜேபியைக் குற்றம் சொல்லி  இருப்பது சேகர் குப்தா தெரிந்தே செய்திருக்கிற பாவம்!  அவர் சொல்கிற கால கட்டத்தில் பிஜேபி பரவலாக வளராமல் இருந்ததென்பது ஒருபுறம்! மாநிலக்கட்சிகளின் ஆதிக்கம் அன்று அதிகமாக இருந்தது என்பது இன்னொரு புறம்! அப்படிப்பட்ட சூழலில் எடுத்த அரசியல் முடிவுகளையே இன்றைக்கும் எடுத்தே ஆக வேண்டுமென்று விமரிசித்திருப்பது என்னவகையிலான ஜார்னலிசம்? 

By the fall of 2020 now, Narendra Modi and Amit Shah’s BJP has finished the NDA and written new rules and equations in national politics. Advani’s NDA is over, used and discarded. You might wish to compare this with the Ashwamedha Yagna of our Vedic tradition. Once your sovereignty is established with the display of an unstoppable horse across the nation, what do you do? Sacrifice that blessed horse. The NDA was that sacrificial horse. And we say it with no sense of judgement.

It is still called an NDA government but, at this point, its 53-member strong Union council of ministers has only one coalition partner. Don’t be embarrassed if you can’t recall who it is. I am also saving you the trouble of googling. It is Ramdas Athawale, of the Republican Party of India (RPI) faction named after himself, of course. He’s the solitary reminder of this being an NDA coalition government, a little bit like the Muslim driver of Advani’s ‘rath’ proving his secular commitment during his 1990 yatra. இது பிரின்ட் தளத்தில் சேகர் குப்தா எழுதியிருப்பது.

ஒரு கூட்டணி எப்போது அவசியமாகிறது? கூட்டணி அரசியல் என்பதே குழப்பங்களுக்கு உறுதியான தீர்வு காணமுடியாமல் எடுக்கப்படுகிற தற்காலிகமான சமரசம் தான் என்பதைப் புரிந்துகொள்ள முடியுமானால் சேகர் குப்தாவின் விமரிசனம் எவ்வளவு முட்டாள் தனமானது என்பதையும் ஓடனடியாகப் புரிந்துகொண்டு விடமுடியும்? #கூட்டணிஆட்சி என்பது மாநில அளவிலோ மத்திய அரசு அமைப்பதிலோ ஒரு ஸ்திரத் தன்மையுடன் இந்தியச் சூழ்நிலையில் எப்போதுமே இருந்ததில்லை. கடந்தகால கூட்டணிக் குழப்பங்களைக் கொஞ்சம் நினைவுபடுத்திக் கொண்டால், கூட்டணி, #கூட்டணிதர்மம் என்பதெல்லாம் எவ்வளவு அர்த்தம் இல்லாதவை என்பதும் கண்முன்னே வந்து போகும்! நினைவு படுத்திக் கொள்ள முடியவில்லையா? அதனால் ஒன்றுமில்லை! 2004 இல் அமைக்கப்பட்ட ஐக்கிய முன்னணிக்கு கூட்டணிக்கு குழப்பம் வெர்ஷன் 1.0 இல் வெறும் 18 எம்பிக்களை மட்டுமே வைத்திருந்த #திமுக எப்படி நாயின் வால் நாயையே ஆட்டிப்படைக்க முடிந்தது என்ற கதையை இணையத்தில் தேடி ஞாபகப் படுத்திக் கொண்டாலே போதுமானது.

மாநிலப்பிரச்சினைகளுக்கு மத்திய அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்ற காரணத்தால் மாநிலக் கட்சிகள் நேரு காலத்திலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தன. மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தபின்னால் பிரச்சினைகளுக்குத் தீர்வு வந்ததா என்றால் அதுவும் இல்லை! காங்கிரஸ் மாதிரியே ஊழல் செய்வதில் மட்டும் மாநிலக்கட்சிகள் தடம்புரண்டு போயின இயல்பாகவே பெரும்பாலான மாநிலக் கட்சிகளின் வீச்சும் செல்வாக்கும் தேய்ந்து கொண்டே வருவதில் உடைந்து சிதறிப்போனதைத் தவிர வேறொரு முன்னேற்றமும் இல்லை. தேசியக் கட்சியாகச் சொல்லிக் கொள்ளும் காங்கிரசே பெரும்பாலான மாநிலங்களில் கழுதை தேய்ந்து தேய்ந்து சித்தெறும்பாக குறுகிக் கிடக்கிறது. இந்த லட்சணத்தில் சேகர் குப்தாவின் புலம்பலை என்னவகைப் படுத்திப் புரிந்து கொள்வதாம்?

உங்களுக்கு ஏதாவது புரிகிறதா? கொஞ்சம் வந்து சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்                   

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)