Showing posts with label சமூக நீதி. Show all posts
Showing posts with label சமூக நீதி. Show all posts

Monday, April 6, 2020

எல்லாம் ஒரு தகவலுக்காகத்தான்! ஆனால் கற்றுக்கொள்வதில் ஏன் மந்தமாக இருக்கிறோம்?

இங்கே திராவிடங்கள் அடித்த கூத்தில் பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி இன்னபிற வார்த்தைகளுக்கான சரியான பொருளே மாறிப்போய்விட்டதில், இந்தவார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தமென்ன என்பதை மீட்டெடுக்க, ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசர அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இதைவிளக்க பெரிய அளவில் தீசிஸ் எல்லாம் எழுதிப் படிக்க வேண்டிய அவசியமே இல்லை! நடப்பு நிகழ்வுகளை, செய்திகளை சரியானமுறையில் புரிந்துகொண்டாலே போதுமானது. உதாரணமாக TOI நாளிதழில் வெளியான செய்தி இது.

படத்தைப் பெரிதாக்கிப் படிப்பது, செய்தி ஆங்கிலத்தில் இருக்கிறதே என்றெல்லாம் தட்டிக் கழிக்க முடியாதபடி எழுத்தாளர் மாலன் நாராயணன் தமிழ்ப்படுத்தி கொடுத்திருப்பதை கொஞ்சம் வாசித்துத்தான் பாருங்களேன்! அவரது முகநூல் பக்கங்களுக்கு நன்றியுடன்! 

கோவிட் -19 தொற்று உலகெங்கும் பரவிய நிலையில் மார்ச் மாதம் தில்லி நிஜாமுதீனில் கூட்டப்பட்ட மாநாட்டை ரத்து செய்யுமாறு முஸ்லீம் துறவிகள், முஸ்லீம் சிந்தனையாளர்கள், ஏன் அவரது நெருங்கிய உதவியாளர்கள் கேட்டுக் கொண்டும் கூட தப்லிகி ஜமாத் தலைவர் மெளலானா முகமது சாத் அதற்கு இணங்கவில்லை.என்று கூறப்படுகிறது.

அவரது பிடிவாதம் அவர் மீது கண்மூடித்தனமாக நம்பிக்கை வைக்கப் பயிற்றுவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான அவரது சீடர்களின் வாழ்வை மட்டுமல்ல, முஸ்லீம்களின் இமேஜையும் சீர்குலைத்துவிட்டது என்று அந்த சமூகத்தைச் சேர்ந்த பலர் கூறுகிறார்கள்.

அவரது நிகழ்வில் (மார்கஜ்) கலந்து கொண்ட பலர் கொரானா தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், மெளலானா சாத் முஷீர்கள் எனப்படும் தனது ஆலோசகர்களுடன் ஒளிந்து கொண்டிருக்கிறார்.

இந்தியாவில் கொரானா தொற்றுள்ளதாகக் கண்டறியப்பட்டவர்களில் 30% பேர் தப்லிகி ஜமாத்தோடு தொடர்புடையவர்கள். உத்தர பிரதேசத்தில் இந்த எண்ணிக்கை 50% ஆக உயர்ந்துள்ளது ( இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படாத செய்தி தமிழ்நாட்டில் இது ஏறத்தாழ 80-90%) தில்லி துர்க்மான் கேட்டில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் தப்லிகி ஜமாத்திலிருந்து பிரிந்த இன்னொரு அமைப்பான ஷுரா -இ- ஜமாத், தொறு நோய் பரவும் செய்தி கிடைத்ததுமே தனது எல்லா நிகழ்சிகளையும் ரத்து செய்து விட்டது. ஆனால் அந்தச் செய்தி குறித்துச் சற்றும் கவலைபடாத மெளலானா சாத் திட்டமிட்டபடி நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினார். வைரலாகப் பரவிய அவரது டேப் ஒன்றில் அவர் " மசூதியில் இறப்பது உயர்ந்த சாவு" என்று போதித்துள்ளார்.

மும்பையில் வசித்து வரும் தப்லிகி ஜமாத்தின் மூத்த உறுப்பினர் முகமது ஆலம் "சாத்திற்கு எல்லாம் தெரியும். அவரது பிடிவாதம் அப்பாவி தப்லிகிகளை (முஸ்லீம்களை) கொள்ளை நோயின் வாயில் தள்ளிவிட்டுவிட்டது" என்கிறார். "தன்னை முஸ்லீம் உலகின் அமீராக (அரசனாக்)க் கருதிக் கொள்ளும் ஒருவர். மெக்கா, மதீனாவிற்கு அடுத்தாற்போல் தப்லிகி மார்கஜ்தான் புனிதமான இடம் எனச் சொல்லும் ஒருவர் எப்படி கொள்ளை நோய் பற்றி அறியாதவராக இருந்திருக்க முடியும்?" எனக் கேட்கிறார் அவர்.

மாவைச் சேர்ந்த இன்னொரு மூத்த தப்லிகி உறுப்பினர் லியாகத் அலி கான், " பொறுப்புள்ள முஸ்லீம் சிந்தனையாளர்களின் அறிவுரைகளை ஏன் மெளலானா சாத் குப்பைத் தொட்டியில் போட்டார்? ஏன் தனனை வைரஸ் பரிசோதனைக்குட்படுத்திக் கொள்ளாமல் ஒளிந்த்திருக்கிறார்?" எனக் கேட்கிறார்.மெளலானா சாத்தின் நெருங்கிய நம்பிக்கைக்குரிய பெயரை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத ஒருவர், நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டதற்கு அவர் செவிமடுக்கவில்லை என டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் தெரிவித்தார். "இப்போது அவர் தனது சீடர்களையே அபாயத்தின் விளிம்பிற்குத் தள்ளிவிட்டார்!" என்கிறார்

மீம் அஃப்சல் என்ற காங்கிரஸ் தலைவரும், ஜாபர் சரேஷ்வாலா என்ற முஸ்லீம் தலைவரும், மெளலானாவிற்குப் பல முறை நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு தகவல் அனுப்பப்பட்டதாகவும் ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை என்றும் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்

"ஜனவரி -பிப்ரவரியில் கோவிட்-19 பற்றிய தகவல்கள் எங்களுக்குக் கிடைக்கத் தொடங்கியதும் நாங்கள் எல்லா நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தோம், இந்தியாவிற்கு வருகைதரயிருந்த அயல் நாட்டினரைத் தடுத்து நிறுத்தினோம். ஊரடங்கு இருக்கும் என எதிர்பார்த்தோம். அதனால் கூட்டங்கள் இல்லாமல் பார்த்துக் கொண்டோம்" என்கிறார் மருத்துவரும் ஷுரா பிரிவின் மூத்த உறுப்பினருமான டாக்டர் எம்.எஸ் கித்வாய்

என்றாலும் மெளலானா சாத்தின் நெருங்கிய மற்றொரு உதவியாளர் மெளலானா ஹாரிஸ், " அயல்நாடுகளிலிருந்து வந்த ஜமாத் உறுப்பினர்கள் இந்தியாவில் நுழைய இந்திய அரசு அனுமதித்தது. அது எப்படி எங்கள் தவறாகும்?" என்று தனது தலைவருக்கு ஆதரவாக வாதிடுகிறார்.

மற்றொரு முஸ்லீம் அமைப்பான தியோபந்த் துறவி அப்துல் காசிம், " தியோபந்த் இஸ்லாமிக் செமினரி மூன்றாண்டுகளுக்கு முன்னரே தப்லிகி ஜமாத்தைத் தடை செய்து விட்டது" என்கிறார்

[ இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த செய்தியின் தமிழாக்கம்]

இங்கே ஒவ்வொரு ஊடகத்துக்கும் ஊடகக்காரருக்கும் ஏதோவொரு சார்புநிலை இருக்கிறது. அதையும் தாண்டிக் காசுக்கு கூவுவது ஊடகங்களுடைய இன்னொருபக்கமாகவும் இருக்கிறது. செய்திகளைத் தவிர்ப்பதால் ஊடகப்பொய்களிலிருந்து தப்பித்துவிடுவோம் என்பதுகூடத் தவறான அனுமானம் தான்! வருகிற செய்திகளிலிருந்து உண்மையைப் பகுத்து அறிய முடிவதுதான் உண்மையிலேயே பகுத்தறிவு! செய்திகள் உண்மையா பொய்யா என்பதை அதன் வேரைப் பிடித்துப் பார்க்கப்பழக வேண்டும். தொடர்ந்து பழகினால் எவராலும் முடிகிற விஷயம்தான்!

மீண்டும் சந்திப்போம்.           

Wednesday, July 17, 2019

சமூக நீதி! சூர்யா கோபம்! கரு ''நாடக'' காமெடி!

பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய முற்பட்ட  வகுப்பினருக்கும் 10% இட  ஒதுக்கீடு என்று மத்திய அரசு சிலகாலத்துக்கு முன் கொண்டுவந்த மசோதா சட்டமான பின்னாலும் இன்னும் அதை ஒரு விவாதப்பொருளாக்கிக் கொண்டு சமூகநீதி, சமநீதி என்று  குழப்புகிற, குழம்புகிற இருதரப்பினருக்காகவும்! தமிழகத்தில் மட்டும் இது மாநிலத்தில் மட்டும் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுகிற மாநிலக்கட்சிகளுக்கும், தேசியக் கட்சிகளுக்குமான விவாதம் என்றாகிப்போன வேடிக்கையைப் பார்க்க வேண்டாமா? முற்பட்ட வகுப்பு என்றால் பார்ப்பனர்கள் மட்டுமே இல்லை, 82 வகுப்புகள் இதன் கீழ் வருகிறார்கள் என்பதையே இங்குள்ள திராவிடப் புரட்டுகள் மறந்து அல்ல , மறைத்தே பேசுகிறார்கள்! கொஞ்சம் கவனித்துக் கேட்கவேண்டிய விவாதம்!
      

ங்கே தமிழகத்தில் 69% இட  ஒதுக்கீடு என்பதே மொத்த ஒதுக்கீடுகள் 50% மேல் இருக்கக் கூடாது என்கிற உச்சநீதிமன்றத்தீர்ப்புக்கு   முரணானது, இதுகுறித்து வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. வேடிக்கை என்னவென்றால்  இதை  வழக்கறிஞர் விஜயன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போடப்போன போது  அவரைத் தாக்கியது,  1994 இல் அரசியல் சாசனத்தின் 9வது அட்டவணையின் கீழ் கொண்டுவந்து, நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்படுத்த முடியாததாக்கியது எல்லாமே  ஜெயலலிதா அரசில் தான்! சமூக நீதிகாத்த வீராங்கனை என்று வீரமணி பட்டம் கொடுத்ததும் அதற்காகத் தான்! அப்போது பிரதமராக இருந்த பிவி நரசிம்மராவ் இதைப்பற்றிக் கண்டுகொள்ளவே இல்லை. உச்சநீதிமன்றம் நிலுவையில் இருக்கிற வழக்கை எப்போது விழிப்பு வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால்  திராவிடங்கள் இந்த   10% இடஒதுக்கீட்டுக்கு 8 லட்ச ரூபாய் வருமான வரம்பு பற்றிக் கேள்வி எழுப்புகிறார்களே, அதுகூட க்ரீமி லேயர் பிரச்சினை வந்தபோது கொண்டுவந்தது யார் என்பதையோ, அதே வரம்புதான் இதற்கும் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பதை மறந்துபோய்க்கூடப் பேச மாட்டார்கள்!  ஏனென்றால் அவர்களெல்லாம் சுத்தமான #பெரியார்மண் அது எப்படிப்பட்டதென்றால் ......


ல்லதும் கெட்டதும் இங்கே தமிழ்சினிமா நடிகர்களிடம் இருந்தே தான் வரவேண்டும் என்பதை  ஒரு வியாதியாகவே  வளர்த்து விட்டிருக்கிறோம் என்பதில் அவர்களுடைய தவறு என்பதை விட நம்முடைய தவறு அதிகமாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வதில் அவமானமாக இருந்தாலும், அதைச் செய்யாமல் விடுவது இன்னும் பெரிய தவறாகிப் போய்விடும் என்பதைப் பதிவு செய்தே ஆகவேண்டும்!

  
மாரிதாஸ் இங்கே சில விஷயங்களைப் பளீரென்று கேட்கிறார். ஒரு நடிகனுக்கு கொடுக்கும் கவனத்தில் ஒரு சிறுபகுதியாவது  மாரிதாஸ் போன்றவர்களுக்குக் கொடுக்கிறோமா? 

குஷ்புவுக்குக் கோயில் கட்டிய இனமடா நாங்கள்! என்ன ஒரு ஆரியத் திமிர் உனக்கு?!
புரட்சிவீரன் விசய் சோசப்பு நீட்டும் ஒரு விரலில் 'மெர்சல்' ஆகி, அந்த அவனின் 'ஒற்றை விரல்' ஆட்டத்தில் சேகுவேரா, காஸ்ட்ரோ, மாவோ எல்லாரையும் தரிசிப்பவனடா நாங்கள்!
கைபர் கணவாய் வழி வந்த உனக்குப் புரியுமா, விசய் சோசப்பு வெள்ளித் திரையில் வீசி எறிந்த இலவச மிக்சியைத் திரையில் கண்டவுடன், வீட்டு மிக்சியைத் தெருவில் வீசிய எங்கள் பில்லைகலின் பகுத்தறிவு?
அக்ரகார வாசியே நீ அறியமாட்டாய் ஐட்ரோ கார்பன் எனும் நச்சுவாயுவின் வீர்யத்தை - எமது அறிவியல் மேதை மயில்சாமியைக் கேட்டுப்பார், கொங்கு நாடு தந்த சிங்கம் சூர்யாவைக் கேட்டுப்பார், 'ஆட்டு' ஆர்வலர் அமீரைக் கேட்டுப்பார்... ஐட்ரோகார்பன் தமிழினத்தை அழிக்க வந்த ஆரியவாயு எனப் புரியவைப்பார்கள்!
உனது தர்ப்பைப்புல் புத்தி குயுக்தியாக வேலை செய்யும் - 'ஒரு அறிவியல் பேராசிரியரை ஐட்ரோ கார்பனை விளக்கச் சொல்லி...'
போதும் நிறுத்து உன் ஆரிய சூழ்ச்சியை! சீமானை விடவா விஞ்ஞானி வேண்டும்! டேனியலை விடவா ஆய்வறிஞர் வேண்டும்? முத்தரசனை விடவா முற்றிய ஞானி வேண்டும்?
நீ பி.எச்டி படித்த பேராசிரியர் என்று ஒவ்வொரு துறையிலும் ஒரு 'தமிழ் இனப் பகைவரை' க் கொண்டு வந்து சொல்ல வைப்பாய்...
அறிவுடைமை என்பதே ஆரிய சூழ்ச்சி! இதை அறிந்தே எமது ஆசான்கள் வழி காட்டலில் மயில்சாமி முதல் மண்ணாங்கட்டி வரை, பட்ஜெட் முதல் ராக்கெட் வரை பதிலடி கொடுக்க சிந்தனைப் போராலிகலைக் கொம்பு சீவி வைத்துள்ளோம்!
நாளை வருவாள்கள் பார் எமது வீரத்தமிலச்சிகல் 'தமில் வால்க' முலக்கத்துடன்!
உனது ஆரிய முகமூடியைக் கிழித்தெறிய...
அறிவு, விவரம், படிப்பு , விவாதம் என்றெல்லாம் நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு சதிக்கும் எதிரடியாக...
இந்த அளவுக்கு நையாண்டி செய்யப்படுகிற அளவுக்கு இணைய வெட்டிப் போராளிகள் கும்பலாகக் குறுகி விடுவோமோ  என்ற அச்சத்தைத் தருகிற அளவுக்கு.........! ஒரே ஒரு விஷயம் மட்டும் எனக்கு இன்னமும் புரிபடாமல் உறுத்திக் கொண்டே இருக்கிறது. சூர்யாவின்  திடீர்க் கோபாவேசத்துக்கு நிஜமாக என்ன காரணம் இருக்க முடியும்? இந்த அறக்கட்டளைகள் எல்லாம் வருமானவரித்துறையின் லென்ஸின் கீழே! முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் அறக்கட்டளை அந்தஸ்து ரத்து! 47% வரிவிதிப்பு என்ற அறிவிப்பு காரணமாக இருக்குமோ? 


பிமான கார்டூனிஸ்ட்  சதீஷ் ஆசார்யா இன்றைக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்த சூட்டோடு சூடாக வரைந்த கார்டூன் இது. கர்நாடகக் குழப்பங்கள்  பற்றி மதியமே இன்னொரு வலைப்பக்கத்தில் எழுதிய பிறகே கண்ணில் பட்டது. நாளை என்ன கூத்துடன் ஆரம்பமாகிறது என்பது தெளிவான பிறகு விரிவாகப் பார்க்கலாம். நம்மூரில் கூத்தடிப்பதில் எவன் நடிகன் எவன் அரசியல்வாதி என்பதே பெரும்பாலான சமயங்களில் புரிய மாட்டேன் என்கிறதே! என்ன செய்ய??

மீண்டும் சந்திப்போம்.
          

Saturday, March 30, 2019

சிவன்கோவில் கட்டினாரா திருமா ? இது என்ன புதுக்கூத்து?

கார்த்தி சிதம்பரத்தை ஆதரிக்கிற சாக்கில் இசுடாலின் பிஜேபியின் H ராஜாவை கடைந்தெடுத்த அயோக்கியன் என்று வெறுப்பைக் கக்கியதில், H ராஜா எழுப்புகிற பல கேள்விகள் திராவிடங்களையும் கூட்டாளி சிவகங்கை ஜாமீன்களையும் எப்படி உறுத்தியிருக்கின்றன என்பது மட்டுமே வெளிப்பட்டது. வெறுப்பரசியலை விதைத்த திராவிடங்கள் அந்த வெறுப்பிலேயே வெந்து முடியப் போகிறார்களோ?


‘‘கூட்டணிக் கட்சிகள் எனக்கு அசுரபலம். அதிலும் எதிரணியின் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் களத்தில் நிற்பது, என் வெற்றிக்குக் கூடுதல் பலம். 30 ஆண்டுகளுக்கு மேல் இந்தத் தொகுதியின் எம்.பி-யாக இருந்த சிதம்பரம், கொண்டுவராத திட்டங்களைக் கொண்டுவர இருக்கிறேன். மோடி அரசின் சாதனைகள், தமிழக அரசின் சாதனைகள் என் வெற்றிக்கு உதவும்.’’ -ஹெச்.ராஜா
“பி.ஜே.பி ஆட்சியில் பணமதிப்பிழப்பு, குழப்பமான ஜி.எஸ்.டி., சிறுபான்மையினருக்கான அச்சுறுத்தல் என்று பிரச்னைகள் ஏராளம். தமிழகத்தில், ‘மோடிஎம்கே’ ஆட்சி அகற்றப்பட வேண்டும். நான் வெற்றிபெற்றால், தனியார் நிறுவனங்கள் மூலமாக இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பேன். காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘ஸ்பைசஸ் பார்க்’ திறக்கப்படும்.’’ - கார்த்தி சிதம்பரம்  
கம்யூனிஸ்ட் கட்சிகளில் ஒருகாலத்தில் அதன் எதிரிகளும் வியந்து பாராட்டிய கட்சிக்கட்டுப்பாடு, இன்றைக்குக் காணாமலேயே போய்விட்டதோ?


மதுரை நாடாளுமன்றத்தொகுதியின் திமுக கூட்டணி வேட்பாளர் சு வெங்கடேசன் மதுரைத் தொகுதிக்கென்றே தனியாகவொரு  தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறாராம்! CPI நல்லகண்ணு, திமுக ஆசாமிகளை மட்டும்   படத்தில்  காண முடிகிறது. சு.வெங்கடேசன், எழுத்தாளராக அறிமுகம் ஆகிக் கொண்டிருந்த அந்த நாட்களிலேயே கட்சியைத் தனது ஓட்டுவாலாகவே நினைத்தவர் என்பது கட்சி வட்டாரங்களில் உரக்கவே கேட்க முடிந்த அதிருப்திக் குரல்கள்தான்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எவ்வளவு தேய்ந்து சிற்றெறும்பாக குறுகிப்போய்க் கொண்டிருக்கிறது என்பதன் அடையாளமாகத் தான் பார்க்கமுடிகிறது. தொடர்புடைய பதிவு இடதுசாரிகள் இங்கே தீண்டத் தகாத கட்சிகள் தானா?

ரங்கராஜ் பாண்டே இந்த வீடியோவைப் பகிர்ந்து இருப்பது எனக்கு ஆச்சரியம் இல்லை. திருமாவளவன் சிவன்கோவில் கட்டியதாகச் சொல்வதும் கூட! சலுகைகளுக்காக இந்து என்று சொல்லிக் கொள்வதும் கிறித்தவர்களாக வாழ்வதும் இங்கே மிகச் சாதாரணமாகிப்போய்விட்ட விஷயம். தேர்தல் நேரத்தில் இந்து வாக்குகளை இழக்கத் தயாராக ஏதாவதொரு  வேட்பாளரோ, கட்சியோ உள்ள தேசமா இது? !!   

ரெட்டியார்கள், கொண்டாரெட்டி ஜாதிச் சான்றிதழ் வாங்குவதும், நாயக்கர்கள் காட்டுநாய்க்கன் ஜாதிச் சான்றிதழ் வாங்குவதும் அப்படிச் சான்றிதழ் வாங்கி SC/ST சலுகைகளை அனுபவிப்பதும் இங்கே சர்வ சாதாரணம்! கிறித்தவ மதத்துக்கு மாறி இந்து என்று சான்றிதழ் கொடுத்து SC/ST சலுகை அனுபவித்த ஒருவர் சிக்கிக் கொண்டபோது தொழிற்சங்கம் அவரை இப்படி பதிலெழுத வைத்துக் காப்பாற்றிய கதையையும் நேரடியாகவே அறிவேன்.  I am born as Hindu but practising christianity!  கேஸ் மூடப்பட்டது. அரசியல்ல  இதெல்லாம் சாதாரணமப்பா ரகம்தான்!
      
மீண்டும் சந்திப்போம்.
         

Sunday, January 27, 2019

சமூக நீதி, சமநீதி விவாதங்கள் தொடர்கிறது!

புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி சொல்வதைக் கொஞ்சம் கேட்டுப் பாருங்கள்! இட ஒதுக்கீட்டுக்காக எங்களையும் பட்டியலில் சேருங்கள் என்று புதிதாகப்  பலசாதியினரும் போராடுகிற நேரத்தில், எங்களுக்கு அது வேண்டாம், தேவேந்திரகுலத்தவரை SC / ST பட்டியலில் இருந்து நீக்குங்கள் என்று குரல் கொடுப்பது மிகவும் வித்தியாசமாக ஒலிக்கிறது. தலித் அடையாளம் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்வதற்கு மிகுந்த தைரியம் வேண்டும்!

124 வது திருத்தம் தொடர்பான இன்னொரு விவாதம் இங்கே! வழக்கறிஞர் விஜயன்,  மார்க்சிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் என்று மட்டுமில்லை பங்கு கொண்ட அனைவருமே தங்களது வாதங்களைக் கோர்வையாக எடுத்துச் சொன்னது, சீர்தூக்கிப் பார்க்க உதவியாக இருக்கலாம்!      


மதுரைக்கு வரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி, கறுப்பு பலூன் பறக்கவிடுவது என்பதான திராவிட சிறுபிள்ளைத்தனத்தை வைகோ, மோடி வந்த இடத்தில் இல்லை, 10 கிலோமீட்டர் தள்ளி மத்திய பேருந்து நிலையம் அருகே அரங்கேற்றியிருக்கிறார்.வயதான காலத்தில் இத்தனை கஷ்டப்பட்டு மதுரைக்குத்தான் வரவேண்டுமா? இதற்கு கலிங்கப்பட்டி வீட்டிலிருந்தே காட்டி இருக்கலாமே வைகோ என்று பரிதாபப்படத் தான் முடிகிறது! மே 17 இயக்கத்தின்  தி.மு.காந்தி தமிழக அரசியல் களத்தில் சிரிப்பு வில்லனாக உருவாகி வருகிறார்.


பிரதமராகும் தகுதி! கொல்கத்தா கூட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டு இப்படிப் பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி பெங்களூரு திரும்பியவுடன் வேற வாயில் பேசியிருக்கிறார்! ஆக, ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்த ராசி இன்னமும் ஆக்டிவாகத்தான் இ!ருக்கிறது!

          

Wednesday, January 16, 2019

சமூகநீதி, சமநீதி! தொடரும் விவாதங்கள்!

நாடாளுமன்றம் சமீபத்தில் நிறைவேற்றிய 124 வது சட்டத் திருத்தம், பொருளாதார அடிப்படையிலான 10% இட ஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு தவிர வேறெங்காவது சர்ச்சை, விவாதங்கள் நடந்ததாக செய்திகள் உண்டா?

உண்மையை அறிந்துகொள்வதற்காகவாவது தேடிப் பார்த்திருக்கிறோமா? கனிமொழி மாநிங்களவையில் இந்த மசோதா மீது கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்தவர்கள் யார் என்கிற விவரம், எண்ணிக்கை, என்னவென்று பார்த்தாலேயே, அல்லது முந்தைய பதிவில் மார்க்சிஸ்ட் கட்சியின் டி கே ரங்கராஜனுடைய நேர்காணலில் பார்த்தாலேயே கண்டுகொள்ளக் கூடிய எளிமையான தேடல்தான்!


இங்கே தொலைகாட்சி விவாதங்களில் கூவுகிற கட்சி எதுவுமே, எங்கே விவாதம் முறையாக நடத்தியிருக்க வேண்டுமோ அங்கே நாடாளுமன்ற இரு அவைகளிலும் செய்யவில்லை என்பதைக் கவனத்தில் கொண்டு விவாதங்களைக் கவனிக்கவேண்டும். அரசு வேறு, அரசியல் கட்சி நிலைபாடு வேறு என்கிறார் நெறியாளர். அரசிலிருந்து, அரசியலை (கட்சிகளை)  பிரித்துவிட முடியுமா என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! 

அதிமுக மாநிலங்களவையில்  எதிர்த்துப் பேசிவிட்டு, வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டது ஏனென்றோ, அவர்களுடைய கட்சி நிறுவனர் எம்ஜியாரே பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு வேண்டுமென்று சொன்னதை மறந்தது ஏனென்றோ சொல்லாமல் நவநீதகிருஷ்ணன் MP கவனமாகத் தவிர்த்து விட்டார். ஆதரித்து வாக்களித்த காங்கிரஸ் கட்சியின் அமெரிக்கை நாராயணனும் இரட்டை நாக்கில் பேசுகிறார்.     

By calling the Stafford Cripps Mission of 1942 a “post-dated cheque on a [failing bank]”, Mohandas Gandhi created a certifiably modern aphorism. It is also a neat description of the Union government’s proposal to amend the Constitution to permit reservations to “Economically Weaker Sections” upto 10% of seats and jobs. என்று சௌகரியப்படுகிற தருணங்களில் மட்டும் ஒரிஜினல் காந்தியை மேற்கோள் காட்டுவது  டூப்ளிகேட் காந்திகளை ஆதரிக்கும் ஊடகங்களின் நிலை. இது மசோதா நிறைவேறுவதற்கு முன்னால் எழுதப்பட்டது என்பதையும் நினைவில் வைத்துக் கொண்டு படித்துப் பாருங்கள்!  

ஜனாதிபதி இந்த மசோதாவுக்கு ஒப்புதல் தந்திருக்கிற நிலையில், இந்தத்திருத்தம் சட்டமாகிவிட்டது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட /படும் வழக்குகளில் நீதிமன்றம் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதில் தான் இந்த விவாதங்களுக்கு சரியான முடிவு தெரியவரும்!

வறட்டுத்தவளைகளாக இங்கே தொலைக்காட்சிகளில் கூவிக்கொண்டிருப்பதில் எந்தவொரு தீர்வும் வராது.

  

Tuesday, January 15, 2019

எது சமூக நீதி? தொடரும் விவாதங்கள்!

கனிமொழி, என்ன அநியாயம் இது என்று ஒரே ஒரு கேள்விதான் சூடாகக் கேட்டார்! அதிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் TK ரங்கராஜன் பரபரப்பான, பேசும் பொருளாகி விட்டார்! ஓசி விளம்பரமாகக் கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்! ஆனால் தெளிவான விடைகள் கிடைக்கிறதா என்பதை பார்க்கும் மக்கள் தான் வந்து சொல்லவேண்டும்!


red publicly

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)