Showing posts with label கூட்டணிப் பாவங்கள். Show all posts
Showing posts with label கூட்டணிப் பாவங்கள். Show all posts

Friday, February 26, 2021

#2021தேர்தல்களம் தேதிகள் அறிவிப்பு! கூட்டணி முடிவாகி விட்டதா?

தமிழகத்தில் ஏப்ரல் 6 அன்று ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல்கள் நடைபெறும் எனத் தேர்தல் ஆணைய அறிவிப்பும் வந்தாயிற்று. தமிழகத்தில் கூட்டணிகள் அப்படியே தொடருமா, அவர்கள் கேட்கிற சீட்டுகள் கிடைக்குமா என்பது இன்னமும் இழுபறியாகவே இருக்கிற நிலையில் வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீட்டை அறிவித்து, அதிமுக கூட்டணியில் பாமகவின் இருப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது சீட்டு எண்ணிக்கை ஏறத்தாழ இருந்தாலும் பெட்டிகள் ஒதுக்கப்படுவதில் சிக்கல் இருக்காது அந்தவகையில் அதிமுக பல படி முன்னால்! 


திமுக கூட்டணியில் சற்றே பெரிய உதிரியான சோனியா காங்கிரசுக்கு எத்தனை சீட்டு என்பதில் இன்னமும் முடிவெடுக்கப்படவில்லையாம்! ஜெயித்து விடுவோம் என்கிற மிதப்பில் 180+ என்ற கனவோடு திமுக இருப்பது, இதர உதிரிக்கட்சிகளுக்கு இன்னும் சிக்கலாக இருக்கலாம்! காங்கிரசுக்காவது இரட்டை இலக்க சீட்டுகள்! மற்றவைகளுக்கு ஒற்றை இலக்கம் என்பதிலும் மையமாக 4 அல்லது 5 தாண்டாது என்று சொல்கிறார்கள்.


தமிழ்நாட்டு நிலவரம்தான் இப்படியென்றால் நேற்று வரை காங்கிரஸ் தலைமையில் ஜூனியர் பார்ட்னராக திமுக என்றிருந்த புதுச்சேரியில் நீ பாதி நான் பாதி என்கிற நிலையை திமுக எடுக்கலாம் என்கிற வதந்தி மிக வலுவாக வலம் வருகிறது. அங்கே புதுச்சேரி அரசு கவிழ்ந்து கொண்டிருந்த நேரத்தில்   கேரளா டூரில் இருந்த ராகுல் காண்டி மீனவர்களுடன் மீன் பிடித்தார், கடலில் குதித்தார் என்ற நாடகங்கள் நடந்து கொண்டிருந்தன.

என்னதான் பக்கவாகப் பிளான் செய்து நாடகத்தை நடத்தியிருந்தாலும் வயநாடு எம்பிக்கு இது சிக்கலான சோதனை தான்!  UDF காங்கிரஸ் கூட்டணிக்கு எத்தனை சீட் கெலித்துத் தரப்போகிறார் என்பதைவைத்துத் தான் மல்லுதேசமும் காங்கிரஸ்காரர்களும் ராகுல் காண்டியை எடைபோடுவார்கள்! இங்கும் தோற்றால் ராகுல் போகிற இடமெல்லாம் காங்கிரஸ் தோற்கிறது என்கிற கிண்டல் இன்னுமொருதரம் உறுதியாகும்,
அவ்வளவுதானே! அவரும் ஜாலியாக வெளிநாடுகளுக்கு ட்ரிப் போய்விடுவார்!


புதிய தலைமுறை போன்ற ஊடகங்கள் இப்போதே கதற ஆரம்பித்து விட்டார்கள்!

மீண்டும் சந்திப்போம். 

Saturday, February 6, 2021

#நாசா நாராயணசாமி :::என் சோகக்கதையைக்கேளு #சோனியா தாய்க்குலமே!

மத்திய அரசின் நாடாளுமன்ற விவகாரங்களின் ராஜாங்க அமைச்சராக இருந்த, நாசா என்றே அந்தநாட்களில் அழைக்கப்பட்ட வி நாராயணசாமி அமர்த்தலாகப் பேசி வலம்வந்த பழைய நாட்களை நினைத்துப் பார்க்கும் போது, அதேநபர் புதுச்சேரி CM ஆகப் பேசும் தொனி மிகவும் பரிதாபமாக இருக்கிறதே, அந்தத் தமாஷாவை நண்பர்கள் யாராவது கவனிக்கிறீர்களா? 


ஜெகத்ரட்சகனை வைத்து திமுக நடத்திய நாடகத்தில் கதாநாயகனாக களத்தில் இறங்கிய ஒரே சீனோடு அவர் காமெடிப்பீசாகிப் போனது ஓருபக்கம்! அந்த ஒரே சீனில் நொந்து நூடுல்சாகிப்போனவர் நாசா என்பது அந்தக் காமெடியின் இன்னொருபக்கம். அசோகவர்த்தினியுடன் நாசா உரையாடும் இந்த 22 நிமிட கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி புதுச்சேரி தமாஷாவை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது. வெறும் விளையாட்டுப்பிள்ளையாகவே இருக்கும் ராகுல் காண்டி தமிழ்நாட்டுக்கு இரண்டுமுறை அரசியல் விஜயம் செய்து ஷோ காட்டியது கூட நாசா சோனியாவிடம் அழுதுபுலம்பியதால் தான் என்கிற மாதிரி செய்திகளும் வந்தனவே! திமுகவுக்குத் தாங்கள் யார் என்பதை ஒரு காட்டுகாட்ட வேண்டும் என்பதற்காகவே முதலில் ஜல்லிக்கட்டு, அதன்பின் மூன்று நாள் விஜயம் செய்தார் ராகுல் காண்டி என்பது ஊரறிந்த விஷயம். பதிலுக்கு திமுக என்ன காட்டப் போகிறது என்பது இனிவரும் நாட்களில் தெரியலாம்.

இந்த லட்சணத்தில் `கமல்ஹாசன் உடலில் ஓடுவது காங்கிரஸ் ரத்தம்!' - என சிலிர்த்திருக்கிறார்  பீட்டர் அல்போன்ஸ்! உண்மையாகக்கூட இருக்கலாம்! அந்த அளவுக்கு சோனியா காங்கிரசைப்போலவே கமல் காசரும் படு கலப்படம், பெரும் குழப்பம்! சிலகாலமாக பீட்டர் அல்போன்சின் பெயர் செய்திகளில் காணாமல் போயிருந்தது.இப்போது பீட்டர் அல்போன்ஸ் மீது, கட்சி தலைமைக்கு புகார் கொடுத்துள்ளார் கோபண்ணா. இதையடுத்து, பீட்டரும், கோபண்ணா மீது புகார் அளித்துள்ளார். ராகுல், சோனியா என, இருவருக்குமே இந்த புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன.'தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், இப்படி புகார்கள் வருகிறதே' என, ராகுல் வெறுப்படைந்து உள்ளார். சோனியாவுக்கும் இது பிடிக்கவில்லை. 'சண்டையை நிறுத்திவிட்டு தேர்தல் வேலைகளைப் பாருங்கள்' என்று ராகுல்.சொன்னதாக தினமலர் செய்தி. 

  


 இன்று மாலை 4 மணி அளவில் முதல்வர் எடப்பாடி  பழனிசாமியுடன் பாமக ராமதாஸ் சந்திப்பதாக இருந்தது. இந்தச் சந்திப்பின்போது தொகுதி பங்கீடு, வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த விஷயங்கள் பேசப்படும் எனத் தகவல் வெளியானது. ஆனால் திடீரென அந்த சந்திப்பு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.இதுகுறித்து பாமக தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில் பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் மீண்டும் அமைச்சர் தங்கமணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

விவசாயக்கடன்கள் ரத்து என்ற அறிவிப்பொன்றே போதுமே! பாமகவைக் கழற்றிவிட அதிமுகவுக்கு இதை விட வேறு நல்லதருணம் இருக்கமுடியாது! ஒரு உதிரிக் கட்சியாவது பலவீனப்பட்டு ஒழியட்டுமே!  


இன்னொரு குழப்பமும் ஆரம்பத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது போல. இப்படியாக தமிழக அரசியல் நிலவரம் இன்று. 

மீண்டும் சந்திப்போம்.   

Thursday, February 4, 2021

கோபுரத்தைப் பொம்மைகளா தாங்குகின்றன? உதிரிக்கட்சிகளா அரசியலைத் தீர்மானிக்கின்றன?

இனிமேலும் கிராக்கி பண்ணிக்கொண்டே போக முடியாது என்பதால் ஒருவழியாக பாமக, அதிமுக கூட்டணியில் நீடிப்பது என்பது உறுதியாகிவிட்ட மாதிரி செய்திகள் வருகின்றன. சீட்டு பேரம் பெட்டி பேரம் இரண்டும் அநேகமாக  வருகிற ஒருசில நாட்களில் முடிவாகி விடும்.அடுத்த அழைப்பு தங்களுக்கு வருமென்று தேமுதிக போன்ற சில கட்சிகள் காத்திருக்கின்றன. வாக்காளர்கள் ஓட்டளிப்பதற்கு முன்னாலேயே இப்படி உதிரிக்கட்சிகள் தங்களுக்கான முக்கியத்துவம், ஆதாயம், சமயங்களில் அதிகாரத்தையும் பெற்று விடுகிற நமது ஜனநாயக அதிசயத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 


சசிகலா வகையறா அதிமுகவுக்கே உண்டான தனிப் பிரச்சினை என்றாலும், உதிரிகளால் என்ன மாதிரி சேதம் விளைவிக்க முடியும் என்பதற்கு இன்னுமொரு உதாரணம்.

இந்தப்பக்கம் பாமக அதிமுக கூட்டணியில்  குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிற மாதிரி அந்தப்பக்கம் சோனியா காங்கிரஸ், திமுக கூட்டணியில் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ராகுல் காண்டி இரண்டு முறை தமிழ்நாட்டுக்கு வந்து போய்விட்டார். தமிழக சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்தே இந்த வருகை இருந்தது. இப்போது மூன்றாவது முறையாகவும் ராகுல் வருகிற 14,15,16 தேதிகளில் தமிழகத்துக்கு வருகிறாராம். திமுகவுடன் தான் கூட்டணி, இசுடாலின் தான் முதல்வர் வேட்பாளர் என்று ராகுல் காண்டி  சொல்லி விட்டாலும் இந்த முறையும் இசுடாலினை சந்திக்கிற ஐடியா இல்லை என்றே தெரிகிறது. காங்கிரசுக்கு 15 சீட் என்று திமுக தரப்பில் கோடி காட்டப்பட்டதில் அதிருப்தி, பின்னால் இருந்து கையை முறுக்குகிற வேலையை காங்கிரஸ் சைலண்டாக செய்து வருவது வெளிப்படை.

இப்படி இரண்டு கூட்டணிகளிலுமே, வலுவான உதிரிக் கட்சிகளான பாமக, சோனியா காங்கிரஸ் இரண்டும் வறட்டு இழுப்பாக அரசியல் செய்து கொண்டிருப்பதில், தமிழ்நாட்டில் இருக்கிற மற்ற உதிரிக்கட்சிகள் கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றன. 

கழகங்களிடம் உறுதியாகப் பேரம் முடியாமல் கிடைத்ததை வாங்கிக் கொண்டு உள்ளுக்குள் பொருமுவதைத்தவிர வேறு எதுவும் செய்யமுடியாத கையறுநிலையில் இருப்பது 2021 தேர்தல் களத்தில், தமிழக அரசியல் நிலவரம். இன்னும்  வேடிக்கையான விஷயம், இரண்டு கழகங்களுமே கூட இந்த உதிரிகளை உதறித்தள்ளி விட்டுத் தனித்தே களம் காணத் தயங்கிக்  கொண்டிருப்பதுதான்!

கோபுரத்தில் இருக்கும் பொம்மை எதுவும் கோபுரத்தைத் தூங்குவதில்லை. ஆனால் தேர்தல் அரசியலில் அப்படியே தலைகீழ் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறதா? 

தேர்தல்நேரங்களில் நான் எப்போதுமே வலியுறுத்தி வருவதைத் தான் இப்போதும் சொல்கிறேன். ஒருநல்ல  ஜனநாயகமாக நாம் வலுப்பட அவ்வப்போது தேர்தல் முறைகளில் தேவையான சீர்திருத்தங்கள் செயதே ஆக வேண்டும். தேர்தல் சீர்.திருத்தங்களை செய்யாததால் தான் இங்கே உதிரிக்கட்சிகள் ஆட்டம்போட முடிகிறது. தகுதியில்லாத கழகங்கள் அரசியலில் ஆட்டிப்படைக்க முடிகிறது. வாக்குச்சீட்டுகளை முந்திக்கொண்டு பணப் பெட்டிகளே முடிவைத் தீர்மானிப்பவை என்றாகிப் போகும் அவலமும் தொடர்ந்து அரங்கேறிக்கொண்டே இருக்கிறது.

ஊழலின் ஊற்றுக்கண்ணாக இப்படிக் குறைபாடுடைய தேர்தல் முறைகளே இருக்கின்றன என்பதை எப்போது புரிந்துகொள்ளப்போகிறோம்? 

மாற்றத்துக்காக என்ன செய்யப்போகிறோம்?  எப்போது செய்யப் போகிறோம்?

மீண்டும் சந்திப்போம்.  

Tuesday, February 2, 2021

#2021தேர்தல்களம் பாஜகவின் காவடிக்குப் போட்டியாக அங்கப்பிரதட்சிணமா?

தாத்தா கருணாநிதி பிரசார நாடகங்களில் நடித்தார்! மகன் இசுடாலின் குறிஞ்சிமலர் டிவி சீரியலில் நடித்தார். பேரன் உதயநிதி திரைப்படங்களில் நடித்தார். ஆனால் இவர்களுக்கு நடிப்பு சுட்டுப்போட்டாலும் வராதென்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான்! ஆனால் அசல் அக்மார்க் அரசியல்வாதிகளாக இவர்களுடைய நடிப்பு மகான் கவுண்டமணி சொல்கிற மாதிரி உலகமகா நடிப்புடா சாமீ என்பதை அறிந்திருக்கிறீர்களா?


முரசொலி தளத்துக்குப் போகாமலேயே என்ன எழுதி இருக்கிறார்கள் என்பதை இங்கே படிக்கலாம். 

தேமுதிக தொண்டன் பிரேமலதாவுக்குக் கடிதம் ஒன்று எழுதுகிற மாதிரி நேற்றைய முரசொலியில் சிலந்தி என்கிற புனைபெயரில் ஒரு மித்ர பேதம் செய்கிற கட்டுரை வெளியாகியிருக்கிறது. ஆடு நனைகிறதே என்று ஓநாய் ஆழுததாம்! அந்தமாதிரி நீலிக்கண்ணீர் வடிப்பது முரசொலியில் அந்த நாட்களில் கருணாநிதியின் ஸ்பெஷாலிட்டி! இப்போது இசுடாலின் துண்டுச்சீட்டைப் பார்த்து உளறுவதற்கே நேரம் சரியாக இருப்பதால் யாரோ மண்டபத்தில் எழுதிக்கொடுத்ததை முரசொலியில் போட்டு நிரப்பவேண்டியிருக்கிறதென்ற பரிதாபம் ஒருபக்கம் இருந்தாலும், திமுகவின் அரசியல் நாடகத்தனமானது,, நயவஞ்சகங்கள் நிறைந்தது! இதைத் தமிழ்நாட்டு மகாஜனங்கள் என்றுதெரிந்து கொள்கிறார்களோ அன்றுதான் தமிழகத்தைப் பிடித்த பெருவியாதிக்கு விமோசனம்! 

முழுச்செய்தியும் இங்கே   ஆதாரமில்லாமல் உதயநிதி ஏன் இப்படிப்பேச வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியதை அடுத்தே இப்படி ஒரு அந்தர்பல்டி. திமுகவினர் எந்தக்காலத்தில் உண்மையை, ஆதாரத்தோடு பேசியிருக்கிறார்கள்? கொஞ்சம் அரசியல் தெரிந்தவர்களுக்குக் கூட திராவிடங்கள் செய்வதெல்லாம் பொய்ச்செய்தியைத் தெரிந்தே பரப்புவதுதான் என்பது புரியுமே! நான் அதிமுக ஆதரவாளன் அல்ல, இரண்டு கழகங்களுமே தமிழ்நாட்டைப் பிடித்த சாபக்கேடுகள் தான் என்பதை உறுதியாக நம்புகிறவன். 

அதிமுக கூட்டணியில் சரத்குமார், லொடுக்குப்பாண்டி கருணாஸ் இருவரும்  2+ சீட்டுகளைக் கேட்கிறார்கள், AC சண்முகம் 8 சீட் கேட்கிறார், பாஜக, பாமக இரண்டும் சமமான சீட்டுக்களை கேட்கின்றன தேமுதிக பிரேமலதா 41 சீட் கேட்கிறார் இப்படி அதிமுக கூட்டணியில் விரிசல் என்ற செய்தியைப் பரப்பி, திமுக ஆதரவு ஊடகங்கள் திமுக கூட்டணியின் நிலை என்ன என்பதை சாமர்த்தியமாக மறைத்தாலும், இந்தவார முடிவுக்குள் இரண்டு கூட்டணிகளிலுமே என்ன நிலைமை என்பது ஏறத்தாழத் தெரிந்துவிடும். நாளை பாமக அதிமுக இடையிலான பேச்சுவார்த்தை என்னவாகும் என்பதிலிருந்தே அணிமாற்றம் இருக்குமா இருக்காதா என்பதும் ஒருவாறாகத் தெளிந்துவிடும்!  அங்கே திமுக, காங்கிரசைத் திருப்திப் படுத்தத் தவறினால் பெயரளவிலான மூன்றாவது அணி ஒன்று உருவாகலாம் என்ற பூச்சாண்டி நிஜமாகக்  கூட ஆகிவிடலாம்! 


திமுக என்ன லேசுப்பட்டவர்களா? பாஜகவின்  காவடிக்குப் போட்டியாக அங்கப்பிரதட்சிணம், மடிப் பிச்சை இப்படி சென்டிமென்டாக  எதையாவது செய்து ஓட்டுக்கேட்கத் தெரியாதா என்ன? !!

ஹிந்து ஓட்டுவங்கி என்று இன்னமும் உருவாகவே இல்லை என்கிற போதே இப்படியென்றால் ......?  

மீண்டும் சந்திப்போம்.              

Tuesday, December 29, 2020

அதிமுக -பிஜேபி கூட்டணி(??) எந்த லட்சணத்தில் இருக்கிறது?

மூன்று நாட்களுக்கு முன்னால் அதிமுகவின் கே பி முனுசாமி மிகவும் தெனாவட்டாக, பிஜேபிக்கு ஒரு சவாலைப் பொதுவெளியில் விடுத்திருக்கிறார். கீழே வீடியோவை முழுதாய்ப் பார்க்கமுடியாவிட்டாலும், எட்டாவது நிமிடத்திலிருந்தாவது பார்த்து விடுங்கள்! ஆட்சியில் பங்கு கூட்டணி ஆட்சி என்று யாராவது வந்தால் ....என முழங்குகிறார். வெறும் 96 MLA க்களை மட்டும் வைத்துக்கொண்டு மைனாரிட்டி அரசை நடத்திக் கொண்டிருந்த கருணாநிதி கூட இத்தனை வெளிப்படையாக, ஆட்சியில் பங்குக்கு ஆசைப்பட்ட காங்கிரஸ் MLA க்களைப் பார்த்து முழங்கியதில்லை. டில்லித் தலைமையிடம் பேசி அவர்களைத் தலையெடுக்க விடாமல் வைத்திருந்தார் என்பது மிகச் சமீபத்திய வரலாறுதான்! கேபி முனுசாமி அவராகவே இப்படிப் பேசினாரா அல்லது பேசிவைத்துக் கொண்டு இப்படிப் பேச வைத்தார்களா என்பது அனாவசியம் திமுக, அதிமுக இரு கழகங்களுமே தங்களுடைய அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்பியதே இல்லை! இந்த இரண்டு கழகங்களை விட்டால் தமிழனுக்கு வேறு கதியே இல்லை என்ற மிதப்பில் இருக்கிற கழகங்களைக் கண்டுகொள்வதற்கு தமிழக வாக்காளருக்குத் திறமை இல்லையா? அல்லது வேறெந்தக் காரணமாவது இருக்கிறதா?    

 


கே பி முனுசாமியின் எச்சரிக்கையை தமிழக பிஜேபி எப்படி எடுத்துக் கொண்டது என்ற விவரம் பரம ரகசியமாக இருக்கிறது போல! 


இந்த ரகசியத்தை எப்படியாவது வெளிப்படுத்தலாம் என்று இந்த 44 நிமிட இருதுருவம் நிகழ்ச்சியில் அதிமுக MLA செம்மலை, பிஜேபியின் நாராயணன் திருப்பதி இருவருடனும் ரங்கராஜ் முட்டி மோதிப் பார்க்கிறார். கூட்டணி உடைகிறதா, அல்லது வீரத்தழும்புகளுடன் நீடிக்கிறதா என்ற ரகசியத்தைக் கடைசிவரை இருவரும் சொல்லவே இல்லை.

😎
தேர்தல் செய்திகள்!
—————————-
சிம்பிளா, கூட்டணி கிடையாது போங்கடான்னு சொல்ல முடிஞ்சா அது வீரம்! மத்தபடி இதெல்லாம் ஒப்பாரி!

வசந்தன் பெருமாள் சொல்வது போல இதுதான் உண்மை நிலவரம் என்று எடுத்துக்கொள்ள முடியுமா?

என்னமோ போடா மாதவா! தமிழக அரசியள் களமும் கூட்டணிக் குழப்பங்களும் பிரிக்க முடியாத இரட்டை தானா? உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

மீண்டும் சந்திப்போம்.

Thursday, December 24, 2020

எங்கள்Blog ஸ்ரீராமுக்காக ஒரு ஸ்பெஷல் பதிவு!

சரியாகப் பிரசங்கம் கூடச் செய்யத் தெரியாத எஸ்ரா சற்குணம் எப்படிப் பாதிரியானார், எப்போது பேராயர் ஆனார் என்பதெல்லாம் கிறித்தவர்கள் படவேண்டிய கவலை! இந்தப் பாதிரி எப்படி திமுகவின் ஆஸ்தானப் பேச்சாளராக நீடிக்கிறார் என்பது ஒரு அரசியல் கேள்வி என்பதை எவராலும் மறுக்க முடியாதே! முந்தைய பதிவில் எஸ்ரா சற்குணம் திமுகவுக்கு பிரசார பீரங்கியாக செயல் படுவதை விட, திமுகவின் மீது வெறுப்பும் அதிருப்தியும் அதிகரிப்பதற்கே உளறிக் கொண்டிருக்கிறார் என்பதை ஒரு கோடி காட்டியிருந்தேன். வின் டிவியில் இருந்து விலகி, பிஜேபியில் சேர்ந்த மதன் ரவிச்சந்திரன் இப்போது மதன் டயரி என்று தனியாக ஒரு யூட்யூப் சேனலை ஆரம்பித்திருக்கிறார். அதில் நேற்றிரவு எஸ்ரா சற்குணத்துடன்  சுடச்சுட ஒரு நேர்காணலை வெளியிட்டு இருக்கிறார். 


இந்த 36 நிமிட நேர்காணலில் எஸ்ரா சற்குணம் உளறல் கொஞ்சமல்ல, மொத்தமும் அதுவே தான்! இவர்களைத் திருத்தமுடியாது, ஆனாலும் காமெடியை ரசிக்கலாம் இல்லையா! மதன் குறிப்பிட்டு எழுப்புகிற கேள்விகள், சொல்லப்படும் பதில்களில் இந்தக் கோமாளிப் பாதிரிக்கு கிறித்தவத்தில் இருக்கும் கோளாறுகளைப் பற்றி ஏதாவது தெரியுமா என்பதே பெரும் குழப்பம் அந்த வகையில் பார்த்தால் திமுகவுக்கு மிகவும் பொருத்தமான வசைப் பேச்சாளர் தான் என்பதில் சந்தேகம் இல்லை! ஆனால் இவரால் திமுகவுக்கு எத்தனை கிறித்தவ ஓட்டுக்கள் கிடைத்துவிடும்? எப்படி இவரையும் ஒரு பொருட்டாக நம்புகிறார்கள்? 


தயாநிதி மாறன் ஏதோ தெரியாமல் பாமகவின் ராமதாசு, அன்புமணி இருவர் மீதும் கூட்டணி சேர்வதற்கே பலநூறு கோடிகளில் பணம் கேட்டு பேரம் பேசுவதாக, சொல்லிவிட்டார் என்று சொல்ல முடியுமா? துரைமுருகன் ஆசைப்படுவது போல திமுக கூட்டணிக்கு பாமக வந்துவிடக்கூடாது என்பதற்காக  வேண்டும் என்றே பாமகவைச் சீண்டிப்பார்த்தது மாதிரித் தெரிகிறதோ? தயாநிதியின் மனக்கிடக்கை எதுவானாலும், பின்விளைவென்னவோ பாமக இதற்கு மேலும் திமுக கூட்டணிக்குள் வராது என்பது தான்! அப்படியே வந்தாலும் சில நூறு கோடிகளில் அல்ல, சில ஆயிரம் கோடிகளில் தான் பேரம் இருக்குமோ? யாருடன் யார் கூட்டு என்பதில் தயாநிதி மாறனுடைய பேச்சு, பாமகவுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கி விட்டது. இனிமேல் அங்கும் இங்கும் போய்விடுவதாகப் போக்குக்காட்ட முடியாது. தவிர அதிமுகவிலும் கூட பாமகவுக்கு அதிக இடம் கொடுத்துவிடக்கூடாது என்ற குரல் வலுத்துவருவதாகவும் தெரிகிறது. இக்கட்டான இந்தச் சூழ்நிலையை மருத்துவர் ராமதாசு எப்படி சமாளிக்கப் போகிறார்? 20% வன்னியர் இட ஒதுக்கீடு கோரிக்கை,போராட்டத்தை அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என்று கைவிடப்போகிறாரா? துணை முதல்வர் போன்ற அதீதமான கோரிக்கைகள், சீட்டுகள் என வற்புறுத்தாமல் தகுதிக்குத் தகுந்த எள்ளுருண்டை கிடைத்தாலே போதுமென்று பதுங்கப்போகிறாரா? OR அன்புமணி4CM என்ற பழைய கோஷத்தை முன்னிறுத்தி, தனித்தே களம் காணப்போகிறாரா? 

எப்படி முடிவெடுத்தாலும் அது பாமகவுக்கு மட்டுமல்ல, இடதுசாரிகள், விசிக, மதிமுக போன்ற உதிரிகளுக்கும் கூட்டணி யாருடன் என்பதில் பெரிய குழப்பத்தையும் சேர்த்தே கொண்டு வந்திருக்கிறது

கமல்காசருக்கு அசாதுதீன் ஒவைசி கூட்டு நிச்சயம்! சீமான் தனித்தே நிற்பாரா அல்லது ஒவைசியுடன் கூட்டு என்று போவாரா? #அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனா பீகியால் நிறுத்தப்பட்டதில் ரஜனிகாந்த் சென்னை திரும்பிவிட்டாரா? டிசம்பர் 31 அன்று கட்சி பற்றி அறிவிப்பு இருக்குமா? ஜனவரியில் மெய்யாலுமே கட்சி ஆரம்பித்து விடுவாரா? இப்படி ஏகப்பட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்காமலேயே தமிழக அரசியல்களம் சூடுபிடித்து விட்டதாக எப்படிச் சொல்வது ஸ்ரீராம்?  

ஆக, அரசியல் களம் சூடு பிடிக்கிறது!

ReplyDelete
Replies
  1. சரியான பதத்துக்கு, சூடுபிடிக்க பிப்ரவரி, மார்ச் மாதம் வரை காத்திருக்க வேண்டும் ஸ்ரீராம் !


                             . 

Wednesday, March 6, 2019

கூட்டணிப் பாவங்கள்! அரசியல்களம் இன்று!

தமிழ்நாடு கூட்டணிக் குழப்பங்களுக்கு அனேகமாக ஒரு இறுதிவடிவம் இன்று எட்டப்படலாம்! அதிமுக அணி இன்னமும் முழுமைபெறாமல், பிரேமலதா உபயத்தில் இழுத்துக் கொண்டே வருவதும் கூட இன்றைக்கு நீங்கள் இதை வாசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் முடிவுக்கு வந்துவிடலாம்! புதுச்சேரியை சேர்த்து மொத்தம் 40 தொகுதிகள் தான் என்றாலும், பிரதான கட்சிகள் இரண்டும் ஒருசீட் இரண்டுசீட் பேரத்தில் உதிரிக் கட்சிகளோடு மணிக்கணக்கில் பேரம்பேசி, ஒருவழியான பிறகே தொகுதிப்பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டிய நிலைமைக்கு வந்திருப்பது பலமா? பலவீனமா?

இந்த விவாதத்தில் திமுகவின் பிரதிநிதி பேசுவதைக் கேட்க மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. என்னபடம் இயக்கினார் என்றுகூடத் தெரியாத கௌதமன் கூட ஒரு கட்சி ஆரம்பித்து சட்டமன்றத்தேர்தலில் 25 சீட் ஜெயிப்போம் என்று பேசுகிற அளவுக்கு மாநிலத்தில் பெரிய கட்சிகளுடைய பலம் தேய்ந்துகொண்டே வருவதை மறந்துவிட்டுப் பேசுவது என்ன அரசியல்?
வாசகர் ரிஸ்வான் கருத்தாக இப்படிப் படம்போட்டு ஹிந்து நாளிதழ் மகிழ்ந்து கொள்கிற அதே நேரம் வைகோ திமுகவைப் பற்றி எவ்வளவு கேவலமாகப் பேசினார் என்பதும் பழைய வீடியோ ஆதாரங்களோடு திருப்பித் தாக்கிக் கொண்டிருக்கிறது.


திமுகவுக்கு எதிராக 25 ஆண்டுகளுக்கு முன்பு மதிமுகவை தொடங்கிய வைகோ, மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்துள்ளார். திமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாகும் வாய்ப்பு 29 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு கிடைக்கிறது என்று நக்கல் அடித்துச் செய்தி வெளியிட்டிருப்பதும் இதே ஹிந்து நாளிதழில் தான்!  

மாநிலக்கட்சிகள் வலுவாக இருக்கின்றனவா என்ற கேள்விக்கு இது ஒருசோறு பதம்.  இங்கேமட்டும்தான் இப்படியா? வாருங்கள்! உத்தரப்பிரதேச அரசியல் தமாஷாவையும் பார்த்துவிடலாம்!
படத்தில் அகிலேஷ் யாதவுடன் இருப்பது முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பேரன் ஜெயந்த் சௌத்ரி! அப்பா அஜித்சிங் நடத்தும் ராஷ்ட்ரீய லோக் தள் கட்சிசார்பாக அகிலேஷுடன் தொகுதிப்பங்கீடு செய்துகொண்டு 3 இடங்களைப் பெற்றிருக்கிறார். அதுவா விஷயம்? இல்லை!

செய்தியாளர்களிடம் அகிலேஷ் யாதவ் சொன்னதுதான் அரசியல் தமாஷாவின் உச்சமே! மெகா கூட்டணியில் காங்கிரசும் இருக்கிறது. அமேதி, ரேபரேலி இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுவதாக! சமாஜ்வாதி கட்சி தனது இடத்தில் ஒரு தொகுதியைக் கூடுதலாக RLD கட்சிக்கு வீட்டுக் கொடுத்து 37 இடங்களிலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களிலும் அமேதி, ரேபரேலி இரண்டு தொகுதிகளில் போட்டி இடாமல் காங்கிரசுக்கு வீட்டுக் கொடுப்பதாக சென்ற ஜனவரியிலேயே அறிவித்ததுதான்! இப்படி நக்கலாக!

காங்கிரசின் நிஜமான யோக்கியதை தான் என்ன? தலை' கள் மட்டுமே இருக்கிற விசித்திரமான கட்சி அது! முறையான கட்சி அமைப்போ தொண்டர்களோ இல்லாமல் மேலிட நியமனத்தில் மட்டுமே இயங்குகிற மாதிரி பாவ்லா காட்டிக் கொண்டிருக்கிற கும்பல் அது! காலிப்பெருங்காய டப்பா என்பதற்கு சாட்சியாக இன்னமும் அந்தப் பெயருக்கு வாக்களிக்கிற அப்பாவி ஜனங்கள் பரவலாக இருப்பதால், தேசியக் கட்சியாக இன்னமும் நம்பப்படுகிற வேடிக்கை! ஏதோவொரு பதவி பொறுப்பு இல்லாவிட்டால் கிறுக்குப் பிடித்து விடும் நபர்களால், நேரு இந்திராவாரிசுகளுக்கு அடிமைப் பட்டயம் எழுதிக் கொடுத்துவிட்டதாக வேடமிடுகிறவர்களால் ஆன ஒரு amorphous body!

பானாசீனா குடும்பம் முழுக்கவே வழக்குகளில் ஜாமீன் பார்ட்டிகளாகி விட்டதால், மிச்சமிருக்கும் ஒரே ஒருநபர் மருமகள் ஸ்ரீநிதியை களமிறக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன!

சிவகங்கை எம்.பி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுவது உறுதியாகி விட்டது என்கிறார்கள் அக்கட்சியினர். தொகுதி நிலவரப்படி சிதம்பரமோ அல்லது அவரது மகன் கார்த்தி ஆகியோர் போட்டியிடுவதை மக்கள் விரும்பவில்லை என்று பேசப்படுகிறது. இதனால், தன் மருமகள் டாக்டர்.ஸ்ரீநிதியை களத்தில் இறக்கிவிட சிதம்பரம் முடிவு செய்திருக்கிறார்.  இது விகடன் தளச் செய்தி!    

விஷவிருட்சங்கள் மேலும்மேலும் வளராமல் தடுப்பது உங்கள் கைகளில்தான் இருக்கிறது.

என்ன செய்வதாக உத்தேசம்? சொல்லுங்களேன்!   
        

Monday, March 4, 2019

கூட்டணிக் குழப்பங்கள்! பம் பம் பம்! ஆரம்பம்!

சண்டேபோஸ்ட்!இன்னொரு மூணு!   நேற்றைய பதிவை இன்னொரு தரம் வாசித்துவிடுவது நலம்!

இசுடாலின் தந்தையின் இடத்தை நிரப்பப் படாதபாடு படுவதை சமீபத்தைய கூட்டணிக்கணக்குகள் சுட்டிக் காட்டுவதைத் தெளிவாகவே பார்க்க முடிகிறது. ஒரு பக்கம் கட்சியின் சீனியர்கள் துரைமுருகன், TR பாலு இவர்கள் ஒருபக்கம், ஆ.ராசா முதலானவர்கள் ஒரு பக்கமுமாக இழுப்பதும் கிச்சன் கேபினெட் (குடும்ப உறவுகள்) வேறுமாக, இசுடாலின் ஒரு தெளிவான முடிவை எடுக்கத் தவறுவதாகப் பார்க்க முடிகிறது.

இதயத்தில் இடம் என்று கருணாநிதி அந்தநாட்களில்  கூட்டாளிகளுக்கு அல்வா கொடுத்தமாதிரி இசுடாலின் அத்தனை சக்திவாய்ந்தவராக இல்லையோ? இதற்கு முக்கியமாக, காங்கிரசுக்கு முந்திக்கொண்டு 10 சீட் கொடுத்ததும் பலவீனத்தின் அடையாளமாகவே கருத வேண்டியிருக்கிறது! ஒரு கணக்கின் படி கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதுபோக திமுகவுக்கு மிஞ்சுவது வெறும் 20 தொகுதிகள்தான் என்கிறார்கள்! கர்நாடக முதல்வர் குமாரசாமி தைரியமாகச்சொன்னமாதிரி இதைவைத்து துணை பிரதமராகவாவது ஆகிவிட முடியுமா என்ன? 
அதிமுக மட்டும் விதிவிலக்கா? அவர்களும் தான் தடுமாறுகிறார்கள்! பாமகவுக்குக் கொடுத்த விலையை விடக் கொஞ்சம் கூடுதலாகக் கேட்டு பிரேமலதா தரும் அழுத்தம் வெளிப்படையாகவே தெரிகிறது! கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதுபோக அதிமுகவுக்கு மிஞ்சுவது வெறும் 19 தொகுதிகள்தான் என்றால், சிட்டிங் எம்பிக்களுக்கு, புதிதாகக் களம் காண விரும்பும் வாரிசுகளுக்கு எப்படிப் பங்கிடுவார்களாம்?

ஒரு சூப்பர் சமாளிஃபிகேஷன் கண்ணில் பட்டதை அப்படியே!     

Haran Prasannaஇடுகையைப் பகிர்ந்துள்ளார்.
50 இடம் கொடுத்து ஜெயிக்க விட்ருக்கலாமே. நமக்கென்ன, அவங்க கட்சி. அவங்க இஷ்டம்.  நாளைக்கு ஸ்டாலின் ரெண்டு சீட் கொடுத்தா அதுக்கும் கட்டுரை எழுத பாய்ண்ட் வெச்சிருப்பாங்க.
M.m. Abdulla
ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் தலைவர் கலைஞர் இரண்டு கம்யூனிஸ்டுகளுக்கும் தலா பத்து, பதினோரு இடங்களை வழங்குவார்!
அவர்களுக்கு மட்டுமல்ல..சிறிய இயக்கங்களுக்குக் கூட சீட் குடுப்பார். எரிச்சலாக இருக்கும் எனக்கு!
"ஊருக்கு பத்து பேரு கூட இல்லாத கட்சிக்கெல்லாம் என்னத்துக்கு பத்து சீட்டு? சாதாரண தொண்டனான 25 வயசு பையனான எனக்கே இதெல்லாம் தெரியுதே! ஆனால் இவ்வளவு பெரிய இயக்கத்தின் தலைவராக இருக்கும் இவர் இந்த எதார்த்தம் கூட புரியாமல் தூக்கிக் குடுக்குறாரே!" என்றெல்லாம் நினைத்து கலைஞரை விட எனக்கு அதிக விஷய ஞானம் இருப்பதாய் என்னை நானே பெருமையாகக் கூட நினைத்துக் கொள்வேன்.
2016 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி. தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வரும் நாள். காலையில் இருந்து நியூஸ் செவன் சேனல் ஸ்டுடியோவில் தேர்தல் முடிவுகள் குறித்த விவாத நிகழ்வுக்காக அமர்ந்து இருக்கிறேன்.. தொடர்ந்து வரும் செய்திகள் உவப்பாய் இல்லை. மதியம் மூன்று மணி அளவில் முன்னணி முடிவை வைத்து "இனி நமது ஆட்சி இல்லை" என்ற முடிவிற்கு வந்து விட்டேன். எனக்கு அடுத்து அமர்ந்து இருந்த..அதிமுக சார்பாக பங்கேற்க வந்த நகைச்சுவை நடிகர் அண்ணன் செந்திலிடம் "அண்ணே, நான் கிளம்புறேன்ணே" என்று சொன்னேன். அதற்கு அவர் "ஏம்ப்பா.. மாலை வரை இருந்துட்டு போகலாமே?" என்றார். "இல்லைண்ணே.. உங்க கட்சி ஆட்சிக்கு மீண்டும் வந்திருச்சு. நீயி ஜாலியா இருப்ப. ஆனா இனி நாங்க ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. என்னால முகத்தில் சோகத்தை காட்டாமல் இயல்பா அமர முடியலை. அதை மத்தவங்க உணர்வதற்கு முன்னாடி நான் வெளிய போறதுதான் நல்லது" என்றேன். "செரி தம்பி..அப்ப நெல்சன்கிட்ட சொல்லிட்டு கிளம்பு" என்றார். கிளம்பி நேராக அறிவாலயம் வந்து அண்ணா சிலையின் கீழ் வருத்தத்தோடு அமர்ந்து விட்டேன்.
மாலை ஆறு மணி இருக்கும். தலைவர் கலைஞர் வந்தார். பத்திரிக்கையாளர்கள் சூழ்கின்றனர். நானும் அருகில் சென்று வேடிக்கை பார்க்கிறேன்.
ஒரு பத்திரிக்கையாளர் கலைஞரை நோக்கிக் கேட்கிறார். "இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?"
இந்தக் கேள்வி என் காதில் விழுந்ததும் " பண நாயகம் வெற்றி பெற்றது".. " இது ஒரு மோசடி தேர்தல்".. " தமிழக வரலாற்றில் முதல் முறையாக எதிர்கட்சி ஒன்று 89 இடங்கள் பெற்று அமர்கிறது"... என்றெல்லாம் தலைவர் பதில் சொல்வார் என்று என் மனதில் ஓடுகிறது.
தலைவர் கலைஞருக்கு மிக நன்றாகத் தெரியும்.. தான் முதல்வராக வாய்ப்பு இருந்த கடைசித் தேர்தல் இதுதான் என்று! இனி எந்தக் காலத்திலும் தான் முதல்வராகும்.வாய்ப்பு இல்லை என்பதும் அவருக்குத் தெரியும்! அதை விட பெரிய சோகம் அந்த மனிதருக்கு அவர் வாழ்நாளில் வேறு எதுவும் இருக்க முடியவே முடியாது!!!
ஆனால் அதையெல்லாம் பெரிதாகக் கருதாமல் உண்மையான வருத்தத்தோடு கலைஞர் சொன்னார் "கம்யூனிஸ்டுகள் ஒருவர் கூட இடம் பெறாத சட்டமன்றம் முதல் முறையாக அமைகிறது..அதுதான் எனக்கு மிக.வருத்தமாக இருக்கிறது".
என் மனதில் ஒரு மின்னல் வெட்டுகிறது. "இவரா எதார்த்தம் தெரியாதவர்? இவரா புரியாத மனிதர்? இவரை இதுநாள் வரை புரிந்து கொள்ளாத நான் அல்லவோ அடி முட்டாள்! ஒரு ஜனநாயகத்தில் அத்தனை பேரின் குரலும் ஒலிக்க வேண்டும் என்று இந்த மனிதர் நினைக்கிறார். பத்து இடம் குடுத்தால்தான் ரெண்டு இடங்களிலாவது வென்று வருவார்கள் என்று நினைத்து இருக்கிறார். "ரெண்டு இடம் குடுத்து ஒன்று கூட வராமல் போனால் அவர்கள் குரல் சட்டமன்றத்த ஒலிக்காதே...இது அனைவரும் பங்கேற்கும் ஜனநாயகத்திற்கு நல்லதில்லையே" என்று நினைத்து இருக்கிறார் . இது நம் மரமண்டைக்கு இது நாள் வரை புரியவில்லையே என்று நினைத்த சமயத்தில் என்னை அறியாமல் என் கண்களில் நீர் வழியத் துவங்கியது.
அந்தத் தலைவரின் வழி வந்த இன்றைய கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அனைத்து தரப்பின் குரலும் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஒரு இடத்தில் தோற்றாலும் இன்னொரு இடத்தில் வென்று வரட்டும் என்று நினைத்து இடங்களை அளிக்கிறார்.
நம் வேலை.."தலைவர் அதிக இடங்களை அளிக்கிறார் என்று வருந்தாது ஏன் அளிக்கிறார் என்பதை உணர்ந்து" நம்மோடு நம் கூட்டணித் தோழர்கள் வெற்றி பெறவும் பாடுபடுவதே!நாடும் நமதே! நாற்பதும் நமதே!   
இதற்கென்ன சொல்வீர்கள்? 

                 

Thursday, February 28, 2019

கூட்டணி என்றால் குழப்பம்தான்! அரசியல் இன்று!

விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானியர்களிடம் சிக்கி இருப்பது குறித்து சமூக வலைத்தளங்களில் படு கேவலமான பகிர்வுகள், சமாதானப் புறாக்கள் வேடத்தில் வந்து கொண்டிருக்கும் போது நடிகர் மாதவனின் ட்வீட்டர் பகிர்வு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது! எங்கள்Blog டிவிட்டரில் கூட, கொஞ்சம் வாயை மூடிக் கொண்டிருந்தால் நல்லது என்ற மாதிரி ஒரு செய்தி!
கிருஷ்ண மூர்த்தி STweet text
 
 

    
அங்கேயும் கொஞ்சம் கலப்படமான பின்னூட்டங்கள்!

கலப்படம் என்றால் கழகங்கள் நினைவு வராமல் இருக்குமா என்ன?   

இன்றைய செய்திகளில் தமிழக அரசியல் நிலவரம் படு கலவரமாக இருப்பதைப் பார்த்துச் சிரிப்பதா? அழுவதா? என்று ஒரே குழப்பம்! ஊடகங்களைப் பார்த்து வேறென்ன வரும்?



மதுரைக்கே உண்டான வெள்ளந்தித்தனம், தெனாவட்டு மிகுந்த விஜய காந்தை இந்தத் தேர்தல் களத்தில் ரொம்பவும் மிஸ் பண்ணுகிறோமோ? இந்தப் பழைய வீடியோ தொகுப்பைப் பார்த்த பிறகு அப்படித்தான் ஒரு எண்ணம் எழுந்தது.

அதிக தொகுதிகள், அதிக டிமாண்ட் வைப்பதால் தேமுதிகவை திமுக நிராகரிக்க உள்ளதாக திமுக வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளது. நாளை ஸ்டாலின் பிறந்த நாளில் தொகுதி பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்கிறது ஹிந்து நாளிதழ்    பழம் நழுவிப் பாலில் விழும் என்று அந்தநாளில் கருணாநிதி காத்திருந்து ஏமாந்தது போல இல்லாமல் இந்தமுறை திமுக ரொம்ப விழிப்போடு இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா?
முக அழகிரி கொடுப்பது ஸ்டாலினுக்கு சாபமா? தமிழக மக்களுக்கு ஆசீர்வாதமா? எதுவானாலும்  அதை ஜனங்களாகிய நாம்தானே முடிவு செய்ய வேண்டும்!  

இது கேப்டனோட  2014 கூட்டணி அறிவிப்பு! ச்சும்மா ட்டமாஷுக்கு! எப்படியிருந்தவரைப் போய் இப்படி நாலுக்கும் அஞ்சுக்குமா அலைய விடறாங்க?  

அது யாரு அடக்க ஒடுக்கமா பின்னால? டாக்டர் யக்கோவ் தானா?!



இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)