காங்கிரஸ் தோற்றுக் கொண்டே இருப்பது ஏன் என்பதற்கும் நரேந்திர மோடி ஜெயித்துக் கொண்டே வருவதற்கும் ஒரே காரணம் இல்லை என்றால் நம்புவீர்களா? சேகர் குப்தா இந்த 16 நிமிட வீடியோவில் அதைச் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். தெளிவாக உறைக்கிற மாதிரிச் சொன்னாரா என்பதை நீங்களே கேட்டுவிட்டு கொஞ்சம் சொல்லுங்களேன்!
தேசியம் தேசியவாதம், வலதுசாரிகள் உலக அளவில் வளர்ந்து கொண்டிருப்பது எதனால் என்ற கேள்வியை முன்வைத்து எழுதிய முந்தைய மூன்று பதிவுகளின் தொடர்ச்சி இது என்றே வைத்துக் கொள்ளலாம். காங்கிரஸ் பலவீனப்பட்டு, தோற்றுக் கொண்டே வருவதற்கு பிஜேபி, நரேந்திரமோடி தவிர முக்கியமான காரணம் வேறு என்னவாக இருக்க முடியும் என்பதை உங்களால் ஊகிக்க முடிகிறதா?
CAA வுக்கு எதிராக முதலில் கொந்தளித்த மாநிலம் அஸ்ஸாம். அதற்கான காரணங்களே வேறு. கலவரம் எதிர்ப்பென்று ஒரு பக்கம் இருந்தாலும், அமைதியாக இருந்து போடோ ஒப்பந்தத்தை வெற்றிகரமாக செயல் படுத்தி, அஸ்ஸாமில் அமைதியை மத்திய அரசு நிலை நாட்டியிருக்கிறது. அஸ்ஸாமில் போடோ மக்கள் கூட்டத்தில் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். காஷ்மீரில் எதிர்க்கட்சிகள், பாகிஸ்தான் எதிர்பார்த்த படி கடந்த ஆறு மாதங்களில் கலவரம் எதுவும் வெடிக்கவில்லை. டில்லியில் இருமாதங்களாக ஏதோ ஒருவகையில் ஊதிப்பெரிதாக்கப்படும் CAA NPR இவைகளுக்கெதிரான போராட்டங்களும் பிசுபிசுத்து வருவதைப் பார்க்க முடிகிறது.
சிரிப்பு, சர்ச்சைகளுக்கும் ராதாரவிக்கும் அப்படி என்ன தான் பொருத்தமோ வில்லங்க ராசியோ தெரியாது! ராதா ரவி என்ன பேசினாலும், எங்கே பேசினாலும், பலத்த சிரிப்பும் வரும்! பல சமயங்களில் பெரும் சர்ச்சைகளும் வரும் என்பது எல்லோருக்குமே நன்றாகத் தெரிந்த விஷயம் தான்! பழைய நினைவுகளை கொஞ்சம் சிரிப்பாகவும் கொஞ்சம் விவகாரமாகவும் ஆக்கிப் பேசுகிற கலை எல்லோருக்குமே கைவந்து விடுகிறதா என்ன? !!
வீடியோ 33 நிமிடம். சுவாரசியமாகத்தான் இருக்கிறது. இதிலும் சர்ச்சை கிளம்புமா என்பதெல்லாம் இதுவரை எனக்குத் தெரியாத விஷயம்! ராதா ரவியை திட்டிக் கொண்டாவது ரசிக்க முடிகிற மாதிரியே, கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யாவையும் ரசிக்க வேண்டியிருப்பதை என்ன சொல்ல?
இது ஒரு சிவசேனா ஆசாமி சென்ற ஞாயிறு அன்று சாம்னா நாளிதழில் எழுப்பியிருந்த கேள்வியைவைத்து வரைந்த படம்.உத்தவ் தாக்கரே கேட்கிற மாதிரி எதற்காக? இங்கே நண்பர்கள் விஷயம் புரியாமல் கேட்டுவிடக் கூடாதே என்பதற்காக மீண்டும் மீண்டும் சொல்வது இதுதான்! காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டாளிகளும் நச்சுக் களைகள் மாதிரி! திரும்பத் திரும்பக் களையெடுக்காமல் விட்டுவைத்தால் விஷ விருட்சமாக வளர்ந்துவிடக் கூடியவை! சதீஷ் ஆசார்யா இன்னொரு கார்டூனில் வேறு செம காமெடி செய்திருக்கிறார்!
சில நாட்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி பாலிவுட் திரை நட்சந்திரங்களைச் சந்தித்ததைப் பற்றிக் கேலியாக வரைந்த கார்டூன் இது! ஒரிஜினல் காந்தி கூட ஏதோ சினிமாவில் நடித்த மாதிரிச் சொல்லிக் கொண்டால்தான் சந்திக்க முடியும் என்பது போல ஒரு உள்குத்து! போகட்டும்! ஒரிஜினல் காந்தி மீது நிஜமாகவே அத்தனை அக்கறை இருந்தால் இங்கே சில டூப்ளிகேட்டுகள், பாட்டி, மகன், பேரன் பேத்தி என்று மூன்று தலைமுறைகளாகவே காந்தி பெயரை தங்கள் குடும்பப் பெயராக வைத்து ஏமாற்றிக் கொண்டிருப்பதை அல்லவா முதலில் கேள்வி கேட்டிருக்க வேண்டும்?
இன்றைக்கு ரங்கராஜ் பாண்டே ஒரு 14 நிமிட வீடியோவை எந்த ஒரு ஊடகமும் என்னை நம்பாது என்று தலைப்பிட்டு வெளியிட்டிருக்கிறார். பார்த்தபிறகுதான் அது அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்ற 2018 ஏப்ரலில் பொன் மாலை பொழுது நிகழ்ச்சியில் பேசியதன் சுருக்கம் எனத் தெரிந்தது! பழசுதான்! தந்திடிவியில் இருந்த பழைய நாட்களில் பேசியது தான்! இப்போது கேட்கிற சமயத்திலும் கூட சுவாரசியமாகத் தான் இருக்கிறது! கேட்டுப்பாருங்களேன்!
தேதிமுக! பாவம், துரைமுருகன் நேற்றைக்கு அடித்த தம்பட்டத்தில் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டிய கட்டாயம்! புதியதலைமுறை செய்தி வீடியோவில் எப்போதுமில்லாத விதத்தில், தேதிமுக விலாசம் காண்பிக்கப்படுவதில் உள்ளர்த்தம் ஏதாவது இருப்பதாக நினைத்தால், அது உங்கள் சௌகரியம்! தேதிமுகவுக்கு விலாசம் அப்படி ஒன்றும் காணாமல் போய்விடவில்லை என்று சொல்வதாகக் கூட இருக்கலாம்!
புதியதலைமுறையில் தடுமாறும் தேதிமுக பின்னணி என்ன? என்ற தலைப்பில் ஒரு செய்தித் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.சினிமா பிரவேசம், 2005 இல் கட்சி ஆரம்பித்தது என்று கொஞ்சம் சுவாரசியமான பழையதகவல்களுடன்! இருந்தென்ன பிரயோசனம்?
அசிங்கப்பட்டாண்டா ஆட்டோக்காரன்! சினிமா காமெடி ஆகவேண்டுமானால் இருக்கலாம்!நம்மூர் அரசியலில், அசிங்கப்படுவதே ஒரு தனிப்பெரும் தகுதியாக வளர்ந்துகொண்டிருக்கிற சீரழிவில் இன்னுமொன்று என்று தாண்டிப்போய் விடுவோமா? போவோமானால் , அது சரிதானா?
நேற்று மாலை மோடியின் பிரசார உரையை ஒட்டி, புதிய தலைமுறை தொலைக்காட்சி நேரலையில் உட்கார்ந்திருந்தேன். எண்ணற்ற விஷயங்கள் என் மனத்தில் அலைமோதத் தொடங்கின. கட்டமைக்கப்படும் பிம்பத்துக்கும் யதார்த்தத்துக்கும் இடையே இருக்கும் வேறுபாடு என்னை ஆச்சரியப்படுத்தின.
1. பா.ஜ.க. ஒரு தீண்டத்தகாத மதவாத கட்சி. அவர்களோடு யாரும் கூட்டணி வைக்க தயங்குவார்கள், கூட்டணி கிடைக்காது.
யதார்த்தம் : பா.ஜ.க.வோடு குறைந்தபட்சம் 6 கட்சிகளும் இயக்கங்களும் கூட்டணி கண்டிருக்கின்றன.
2.கழகங்கள் இல்லாத ஆட்சியே எங்கள் லட்சியம்.
யதார்த்தம் : கழகம் ஒன்றின் தோளில் உட்கார்ந்துகொண்டு, கூட்டணியோடுதான் தேர்தலைச் சந்திக்கிறது பா.ஜ.க.
3. தமிழகத்துக்கு பா.ஜ.க. அரசு என்ன செய்தது?
யதார்த்தம் : நேற்றுகூட 5,100 கோடி ரூபாய்க்கான திட்டங்கள் அர்ப்பணிக்கப்பட்டு இருக்கின்றன, தொடங்கப்பட்டு இருக்கின்றன.
4. கழகங்களை நோக்கி விமர்சனங்களைக் கொட்டிய எச். ராஜா வாயால்,
நேற்று கழகத்தின் புகழ்மொழி ஒலித்தது இன்னொரு யதார்த்தம்.
முகநூலில் சமூக ஆர்வலர் பானு கோம்ஸ் சரியான புள்ளியில் சிந்திக்க உதவுகிறார்!
மத்தியில்..எதிர் கூட்டணியின் UPA ஆட்சி எந்த விதத்தில் மோடியின் ஆட்சியை விட சிறந்ததாக இருந்தது ?
ஊழல்களை கட்டுப்படுத்திய ஆட்சியாக இருந்ததா ? அல்லது...எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்பதாக இருந்ததா ?
168 பேர் கொல்லப் பட்ட மும்பை தாக்குதல் உட்பட பல பயங்கரவாத தாக்குதல்களை UPA ஆட்சி எதிர்கொண்ட விதம் எப்படி இருந்தது ?
நாட்டின் அதிகார அமைப்புகள் ஒவ்வொன்றையும் தங்கள் அரசியல் மனிதர்களைக் கொண்டு நிரப்பி ..அமைப்பின் செயல்பாடுகளை நியாயமற்றதாக வைத்திருந்ததை என்னெவென்று சொல்வது ?
UPA ஆட்சி காலத்தில் ...ஊழல் வழக்குகள், VVIP, VIP, High profile வழக்குகளில் ...நீதித்துறையின் தீர்ப்புகள் எவ்வாறு அமைந்திருந்தன ?
சோனியா, ராகுல் உட்பட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைகள் அனைத்தும் ''ஊழல் நடந்ததிருப்பதற்கான அடிப்படை முகாந்திரம் உடைய ஊழல் வழக்குகளில்''...நீதிமன்ற ஜாமீனில் தானே இருக்கிறார்கள் ?
மத்திய நிலையை கூட விட்டுவிடுவோம்.
மாநில அளவில் ..UPA ன் dmk + cong கூட்டணி ஆட்சியால் தமிழகத்திற்கு விளைந்த நன்மை தான் என்ன ????
துரோகங்கள் என்னென்ன ??
அ.தி.மு.க கூட்டணி & தி.மு.க கூட்டணி ...இவ்விரண்டில்..
தமிழகத்திற்கு திட்டங்களை கொண்டுவருவதன் மூலமும் & நீண்ட கால பிரச்சினைகளை தீர்த்திருப்பதன் மூலமும் & பிற செயல்பாடுகளின் மூலமும்... நன்மைகளை செய்திருக்கிற கட்சிகளை கொண்ட கூட்டணி எது ?
எதிர் கூட்டணி ..தாங்கள் எந்த விதத்தில் ஆளும் கூட்டணியை விட மேல் என்பதை பேச முடியாமல் இருப்பதே உண்மை நிலை !
வாக்களிப்பதற்கு முன்னால், யோசிக்க வேண்டிய விஷயங்கள்,
வெறுப்பரசியல் பேசுகிறவர்களுடைய உள்நோக்கம் என்ன?
இவர்கள் ஆட்சிசெய்யக் கிடைத்த காலங்களில் செய்தது, செய்யத்தவறியவைகளோடு ஒப்பிட்டால் நரேந்திர மோடிக்கு இன்னொரு வாய்ப்பைத் தருவதில் தவறென்ன?
தமிழ்நாடு கூட்டணிக் குழப்பங்களுக்கு அனேகமாக ஒரு இறுதிவடிவம் இன்று எட்டப்படலாம்! அதிமுக அணி இன்னமும் முழுமைபெறாமல், பிரேமலதா உபயத்தில் இழுத்துக் கொண்டே வருவதும் கூட இன்றைக்கு நீங்கள் இதை வாசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் முடிவுக்கு வந்துவிடலாம்! புதுச்சேரியை சேர்த்து மொத்தம் 40 தொகுதிகள் தான் என்றாலும், பிரதான கட்சிகள் இரண்டும் ஒருசீட் இரண்டுசீட் பேரத்தில் உதிரிக் கட்சிகளோடு மணிக்கணக்கில் பேரம்பேசி, ஒருவழியான பிறகே தொகுதிப்பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டிய நிலைமைக்கு வந்திருப்பது பலமா? பலவீனமா?
இந்த விவாதத்தில் திமுகவின் பிரதிநிதி பேசுவதைக் கேட்க மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. என்னபடம் இயக்கினார் என்றுகூடத் தெரியாத கௌதமன் கூட ஒரு கட்சி ஆரம்பித்து சட்டமன்றத்தேர்தலில் 25 சீட் ஜெயிப்போம் என்று பேசுகிற அளவுக்கு மாநிலத்தில் பெரிய கட்சிகளுடைய பலம் தேய்ந்துகொண்டே வருவதை மறந்துவிட்டுப் பேசுவது என்ன அரசியல்?
வாசகர் ரிஸ்வான் கருத்தாக இப்படிப் படம்போட்டு ஹிந்து நாளிதழ் மகிழ்ந்து கொள்கிற அதே நேரம் வைகோ திமுகவைப் பற்றி எவ்வளவு கேவலமாகப் பேசினார் என்பதும் பழைய வீடியோ ஆதாரங்களோடு திருப்பித் தாக்கிக் கொண்டிருக்கிறது.
திமுகவுக்கு எதிராக 25 ஆண்டுகளுக்கு முன்பு மதிமுகவை தொடங்கிய வைகோ, மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்துள்ளார். திமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாகும் வாய்ப்பு 29 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு கிடைக்கிறது என்று நக்கல் அடித்துச் செய்தி வெளியிட்டிருப்பதும் இதே ஹிந்து நாளிதழில் தான்!
மாநிலக்கட்சிகள் வலுவாக இருக்கின்றனவா என்ற கேள்விக்கு இது ஒருசோறு பதம். இங்கேமட்டும்தான் இப்படியா? வாருங்கள்! உத்தரப்பிரதேச அரசியல் தமாஷாவையும் பார்த்துவிடலாம்!
படத்தில் அகிலேஷ் யாதவுடன் இருப்பது முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பேரன் ஜெயந்த் சௌத்ரி! அப்பா அஜித்சிங் நடத்தும் ராஷ்ட்ரீய லோக் தள் கட்சிசார்பாக அகிலேஷுடன் தொகுதிப்பங்கீடு செய்துகொண்டு 3 இடங்களைப் பெற்றிருக்கிறார். அதுவா விஷயம்? இல்லை!
செய்தியாளர்களிடம் அகிலேஷ் யாதவ் சொன்னதுதான் அரசியல் தமாஷாவின் உச்சமே! மெகா கூட்டணியில் காங்கிரசும் இருக்கிறது. அமேதி, ரேபரேலி இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுவதாக! சமாஜ்வாதி கட்சி தனது இடத்தில் ஒரு தொகுதியைக் கூடுதலாக RLD கட்சிக்கு வீட்டுக் கொடுத்து 37 இடங்களிலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களிலும் அமேதி, ரேபரேலி இரண்டு தொகுதிகளில் போட்டி இடாமல் காங்கிரசுக்கு வீட்டுக் கொடுப்பதாக சென்ற ஜனவரியிலேயே அறிவித்ததுதான்! இப்படி நக்கலாக!
காங்கிரசின் நிஜமான யோக்கியதை தான் என்ன? தலை' கள் மட்டுமே இருக்கிற விசித்திரமான கட்சி அது! முறையான கட்சி அமைப்போ தொண்டர்களோ இல்லாமல் மேலிட நியமனத்தில் மட்டுமே இயங்குகிற மாதிரி பாவ்லா காட்டிக் கொண்டிருக்கிற கும்பல் அது! காலிப்பெருங்காய டப்பா என்பதற்கு சாட்சியாக இன்னமும் அந்தப் பெயருக்கு வாக்களிக்கிற அப்பாவி ஜனங்கள் பரவலாக இருப்பதால், தேசியக் கட்சியாக இன்னமும் நம்பப்படுகிற வேடிக்கை! ஏதோவொரு பதவி பொறுப்பு இல்லாவிட்டால் கிறுக்குப் பிடித்து விடும் நபர்களால், நேரு இந்திராவாரிசுகளுக்கு அடிமைப் பட்டயம் எழுதிக் கொடுத்துவிட்டதாக வேடமிடுகிறவர்களால் ஆன ஒரு amorphous body!
பானாசீனா குடும்பம் முழுக்கவே வழக்குகளில் ஜாமீன் பார்ட்டிகளாகி விட்டதால், மிச்சமிருக்கும் ஒரே ஒருநபர் மருமகள் ஸ்ரீநிதியை களமிறக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன!
சிவகங்கை எம்.பி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுவது உறுதியாகி விட்டது என்கிறார்கள் அக்கட்சியினர். தொகுதி நிலவரப்படி சிதம்பரமோ அல்லது அவரது மகன் கார்த்தி ஆகியோர் போட்டியிடுவதை மக்கள் விரும்பவில்லை என்று பேசப்படுகிறது. இதனால், தன் மருமகள் டாக்டர்.ஸ்ரீநிதியை களத்தில் இறக்கிவிட சிதம்பரம் முடிவு செய்திருக்கிறார்.இது விகடன் தளச் செய்தி!
விஷவிருட்சங்கள் மேலும்மேலும் வளராமல் தடுப்பது உங்கள் கைகளில்தான் இருக்கிறது.