சிரிப்பு, சர்ச்சைகளுக்கும் ராதாரவிக்கும் அப்படி என்ன தான் பொருத்தமோ வில்லங்க ராசியோ தெரியாது! ராதா ரவி என்ன பேசினாலும், எங்கே பேசினாலும், பலத்த சிரிப்பும் வரும்! பல சமயங்களில் பெரும் சர்ச்சைகளும் வரும் என்பது எல்லோருக்குமே நன்றாகத் தெரிந்த விஷயம் தான்! பழைய நினைவுகளை கொஞ்சம் சிரிப்பாகவும் கொஞ்சம் விவகாரமாகவும் ஆக்கிப் பேசுகிற கலை எல்லோருக்குமே கைவந்து விடுகிறதா என்ன? !!
வீடியோ 33 நிமிடம். சுவாரசியமாகத்தான் இருக்கிறது. இதிலும் சர்ச்சை கிளம்புமா என்பதெல்லாம் இதுவரை எனக்குத் தெரியாத விஷயம்! ராதா ரவியை திட்டிக் கொண்டாவது ரசிக்க முடிகிற மாதிரியே, கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யாவையும் ரசிக்க வேண்டியிருப்பதை என்ன சொல்ல?
இது ஒரு சிவசேனா ஆசாமி சென்ற ஞாயிறு அன்று சாம்னா நாளிதழில் எழுப்பியிருந்த கேள்வியைவைத்து வரைந்த படம்.உத்தவ் தாக்கரே கேட்கிற மாதிரி எதற்காக? இங்கே நண்பர்கள் விஷயம் புரியாமல் கேட்டுவிடக் கூடாதே என்பதற்காக மீண்டும் மீண்டும் சொல்வது இதுதான்! காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டாளிகளும் நச்சுக் களைகள் மாதிரி! திரும்பத் திரும்பக் களையெடுக்காமல் விட்டுவைத்தால் விஷ விருட்சமாக வளர்ந்துவிடக் கூடியவை! சதீஷ் ஆசார்யா இன்னொரு கார்டூனில் வேறு செம காமெடி செய்திருக்கிறார்!
சில நாட்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி பாலிவுட் திரை நட்சந்திரங்களைச் சந்தித்ததைப் பற்றிக் கேலியாக வரைந்த கார்டூன் இது! ஒரிஜினல் காந்தி கூட ஏதோ சினிமாவில் நடித்த மாதிரிச் சொல்லிக் கொண்டால்தான் சந்திக்க முடியும் என்பது போல ஒரு உள்குத்து! போகட்டும்! ஒரிஜினல் காந்தி மீது நிஜமாகவே அத்தனை அக்கறை இருந்தால் இங்கே சில டூப்ளிகேட்டுகள், பாட்டி, மகன், பேரன் பேத்தி என்று மூன்று தலைமுறைகளாகவே காந்தி பெயரை தங்கள் குடும்பப் பெயராக வைத்து ஏமாற்றிக் கொண்டிருப்பதை அல்லவா முதலில் கேள்வி கேட்டிருக்க வேண்டும்?
இன்றைக்கு ரங்கராஜ் பாண்டே ஒரு 14 நிமிட வீடியோவை எந்த ஒரு ஊடகமும் என்னை நம்பாது என்று தலைப்பிட்டு வெளியிட்டிருக்கிறார். பார்த்தபிறகுதான் அது அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்ற 2018 ஏப்ரலில் பொன் மாலை பொழுது நிகழ்ச்சியில் பேசியதன் சுருக்கம் எனத் தெரிந்தது! பழசுதான்! தந்திடிவியில் இருந்த பழைய நாட்களில் பேசியது தான்! இப்போது கேட்கிற சமயத்திலும் கூட சுவாரசியமாகத் தான் இருக்கிறது! கேட்டுப்பாருங்களேன்!
பதிவு கொஞ்சம் பொழுதுபோக்க உதவியாக இருந்ததா?
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment