எது எழுத்து என்கிற கேள்விக்கு விடைதேடுவதில் நண்பர்கள் கொஞ்சம் மெதுவாகத்தான் வருகிறார்கள் வந்து கருத்தும் சொல்கிறார்கள் என்பதால், முந்தைய பதிவின் தொடர்ச்சியை கொஞ்சம் இடைவெளிவிட்டுப் பேசலாம்! அதுவரை என்ன செய்யலாம்? இருக்கவே இருக்கிறது தேர்தலும் அரசியலும்!
மஹாராஷ்டிரா, ஹரியானா இரண்டு மாநிலங்களிலும் சட்ட சபைத்தேர்தல்கள் வருகிற திங்கட்கிழமை நடக்க இருக்கும் நிலையில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. பிஜேபி சிவசேனா கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக மீண்டும் தேவேந்திர ஃபட்னவிஸ் முன்னிறுத்தப் படும் அதே நேரம் காங்கிரஸ் NCP கூட்டணியில் அப்படி யாருமே இல்லை என்பது ஒரு விசித்திரம் என்றால் , ராகுல் காண்டியின் இமேஜ் ஹரியானாவில் மட்டுமல்ல, மஹாராஷ்டிராவிலும் கூடக் காங்கிரசுக்கு பாதகமாகத்தான் இருப்பது இன்னொரு விசித்திரம்! ஷரத் பவார் மட்டும் தான் இன்று கொட்டும் மழை என்றாலும் சதாரா தொகுதியில் இன்று தேர்தல் பிரசாரத்தில் சளைக்காமல் இறங்கியதாக செய்திகள் சொல்கின்றன.
முன்பு சலாம்போட்டு காசுவாங்கிக் கொண்டு கூவிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம், இப்போது சோனியாG ராகுல் காண்டி கும்பலுக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்! The Print தளத்தின் சேகர் குப்தாவின் முறை இப்போது! இதற்கு முன்னால் பர்கா தத் ஆவேசமாக உபதேசம் செய்துகொண்டிருந்ததை சொன்ன நினைவிருக்கிறதா? இந்த 10 நிமிட வீடியோவில் சேகர் குப்தா, இந்திராவிடமிருந்து அரசியலைக் கற்றுக் கொள்ளும்படி உபதேசம் செய்கிறார்! இதை National Interest எனத் தலைப்பிட்டுச் சொல்லியிருப்பது காமெடிக் கொடுமை!
ஹரியானா மஹேந்திரகார் தொகுதியில் நேற்றைக்கு சோனியா பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கூட்டத்தில் சோனியா கலந்துகொள்ளவில்லை. பதிலியாக ராகுல் காண்டி கலந்துகொண்டு பேசினார் என்பதில் கிளிப்பிள்ளை மாதிரி அதே ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசுவதுதான் என்றாகிப் போனதால் என்ன பெரிய நஷ்டம்? எப்படி இருந்தாலும் தோற்பதுதான், அது சோனியா பேசித் தோற்றால் என்ன? ராகுல் காண்டி உளறிக்கொட்டித் தோற்றால் தான் என்ன?
#brexit உடன்பாடு கிட்டத்தட்ட ஏற்பட்டுவிட்டதாகச் சொல்லப் பட்டாலும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக, விவாதம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு ஒன்றரை நிமிட வீடியோ. பிரதமர் போரிஸ் ஜான்சன் அவரது அஜெண்டாவில் தெளிவாக இருக்கிறார் என்றால், எம்பிக்கள் அவரவர் அஜெண்டாவில் உறுதியாக இருக்கிறமாதிரித்தான் இழுபறியாக இருக்கும் போல!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment