Monday, October 28, 2019

இருக்கும் இடம் தேடி வரும் செய்திகள்!

ஹிந்து ஆங்கில நாளிதழை விடுங்கள்! அது சிவப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு  மவுன்ட்ரோடு மாவோ என் ராமால் நடத்தப்படுகிற ஒருமாதிரியான கலப்படம்! சீனா பற்றியும் பேசுவார்கள்! உள்ளூரில் சீனாதானா மாதிரி கடைந்தெடுத்த ஊழல் ஆசாமிக்கு  ஜாமீன் கேட்டுத் தலையங்கம் கூட எழுதுவார்கள்! ஆனால் நம்மூர்  ஆங்கில  ஊடகங்கள் (TOI, ஹிந்துஸ்தான் டைம்ஸ் மாதிரி) சீனாவின் உள்ளூர் அரசியல் விவகாரங்களையும் அவ்வப்போது கவனித்துச் செய்திகளும் போடுகிறார்கள் என்பது கொஞ்சம் ஆச்சரியப்படுத்துகிற சமாசாரம்! இங்கே தமிழில் திமுகவின் காலடியைச் சுற்றிவந்து செய்திபோட்டால் போதுமென்று கிடக்கிற ஊடகங்களுக்கு இது நிறையவே வித்தியாசமானது இல்லையா? 

இது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் 
முழு அளவிலான கூட்டம். ப்ளீனம் என்று சொல்வார்கள்.
இன்று திங்கள் தொடங்கி வியாழன் வரை நான்கு நாட்கள் 
கூடி விவாதிக்கப்போகிறார்கள் என்பதில் என்ன 
அத்தனை சுவாரசியம் இருக்கிறது? 

ஹிந்து ஆங்கில நாளிதழ் PTI செய்திகளை மேற்கோள் காட்டி Chinese Communist Party kicks off delayed conclave to discuss Hong Kong protests, trade war என்று தலைப்பிலேயே ரொம்பவும் பில்டப் கொடுத்து சொல்கிறது. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி கூட்டம், வரைவுத் திட்டம் இவையெல்லாம் மிக மிக அலுப்பூட்டுகிற சாங்கியம். இதற்கு முன்னால் 2018 பிப்ரவரியில் நடந்த இதேபோன்ற கூட்டத்தில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. ஷி ஜின்பிங் ஆயுட்காலம் உள்ள வரை சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும் அதன்மூலம் சீன அதிபராகவும் நீடிப்பதற்கும்  வழிவகை செய்யும் சாஸனத் திருத்தம் செய்யப்பட்டது. மா சேதுங், டெங் சியாவோ பிங் இருவருக்குப் பின்னால் சீனாவின் Paramount Leader அந்தஸ்தும், ஷி ஜின்பிங்கின் சிந்தனைகள் கம்யூனிஸ்ட் கட்சிக்குப் புதிய வேதமாக அறிவிக்கப்பட்டதுமான அரசியல் முடிவுகள் எடுக்கப்பட்டுவிட்டதால், இந்தக் கூட்டத்திலாவது சீனப் பொருளாதாரம் குறித்து விவாதிக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு இருந்தாலும், விவாதம் நடந்து வெளியே தெரிய வந்தால் மட்டுமே எதிர்பார்ப்புக்களை எந்த அளவுக்கு இந்த ப்ளீனம் நிறைவேற்றப் போகிறது என்பதும்  தெரியவரும். The official Xinhua News Agency said the party’s 19th Central Committee opened its fourth plenary session Monday. It said Xi Jinping, the party’s leader and China’s president, discussed a draft document on strengthening party rule but gave no details.என்கிறது வாஷிங்டன் போஸ்ட் செய்தி  


நல்ல நாளிதழ்தான்! வாட்டர்கேட் ஊழல் என்று ரிச்சர்ட் நிக்சன் செய்த தவறுகளைத் தைரியமாகத் தட்டிக் கேட்ட நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட்! டொனால்ட் ட்ரம்ப் மீதுள்ள வெறுப்பு அபு பக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டதில் மிக விசித்திரமான obituary செய்தி வெளியிட்டு வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது!


பிரிட்டிஷ் அரசியலும் சரி, அதன் அரச குடும்பத்தின் சர்ச்சைகளும் சரி மிக மிக விசித்திரமானவை. #Brexit  போரிஸ் ஜான்சன் வேண்டுகோளுக்கு  இணங்க ஐரோப்பிய ஒன்றியம், வருகிற ஜனவரி 31 வரை காலக்கெடுவை நீட்டித்திருக்கிறது. ஆனால் போரிஸ் ஜான்சனின் கனவுகளுக்கு வரவிருக்கும் பொதுத்தேர்தல் இடம் கொடுக்காதாமே! சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என்று எந்த நேரத்தில் மார்தட்டிச் சொன்னார்களோ?! இன்று கூனிக்குறுகிப்போய்க் கொண்டே இருப்பது காலத்தின் கட்டாயம்! 

        
Westminster தேர்தல்முறை  அரசியலின் அபத்தங்களை இங்கே மகாராஷ்டிராவில் சிவசேனா  மிகநன்றாகப் பயன்படுத்திக் கொண்டு ரவுசு காட்டுவதும்  பிஜேபி தொடர்ந்து அமைதி காத்து வருவதும் இங்கே இன்றைய அரசியலின் விசித்திரம்! 


இன்று கந்த சஷ்டி. திருச்செந்தூர் சூர சம்ஹாரம்.  

மீண்டும் சந்திப்போம். 

3 comments:


  1. சார் முடிந்தால் font size யை கொஞ்சம் பெரிதாக்கவும்... மிகவும் சிறிய அளவில் இருப்பதால் படிக்க கடினமாக இருக்கிறது நன்றி

    ReplyDelete
    Replies
    1. மத சொல்வது உண்மை தான். கணினி வழியே நான் படிக்கும் போது அளவு பெரிதாக்கிக் கொள்வதுண்டு. நீங்க வேணாப் பாருங்க. சிவசேனா தாக்ரே பேரன் ரொம்ப கஷ்டப்பட போகிறார். கட்சியே கலகலத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

      Delete
    2. Fire Fox இல் பார்க்கும்போது எழுத்துக்கள் மிகச் சிறிதாக இருப்பதை உணர்கிறேன். பதிவெழுதவும் பார்க்கவும் நான் கூகிள் க்ரோம் தான் பயன்படுத்துகிறேன். அதில் சிக்கல் இருப்பதாகத் தெரியவில்லை. என்ன செய்யலாம் என்று உதவி கேட்டிருக்கிறேன், சரிசெய்து விடலாம்!
      ஜோதிஜி! ஆதித்ய தாக்ரே அவஸ்தைப்படப் போகிறாரோ இல்லையோ, மஹாராஷ்டிரா மக்கள் நிறைய கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டிவரலாம்! மும்பைகர்களுக்கு இது ரொம்பவுமே பழகிப்போனதுதான் என்பதுதான் இங்கே மிகமுக்கியமான பிரச்சினையே!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)