Tuesday, October 8, 2019

தினமும் ஒரு அக்கப்போர்! இன்றைக்கு #கீழடி

நண்பர்கள் அனைவருக்கும் இனிய விஜயதசமி வெற்றித் திருநாள் வாழ்த்துக்கள்! இடைவிடாமல் தினமும் ஏதாவது அக்கப்போரை உங்கள் கவனத்துக்கு பதிவுகள் எழுதிக் கொண்டிருந்தாலும் சற்று மெதுவாகவேனும் வந்து வாசிக்கிற உங்கள் பொறுமைக்கும் நிச்சயமாக இந்த நாளில் என்னுடைய நன்றியைத் தெரிவித்தே ஆகவேண்டும் இல்லையா!  இப்படி சோப்புப் போடும்போதே இன்றைக்கும் ஒரு அக்கப்போர் பற்றித்தான் பதிவு இருக்கும் என்று கண்டுபிடிப்பதற்கு எங்கிருந்தோ ஒரு ஷெர்லாக் ஹோம்ஸ் வரவேண்டுமா என்ன?


புதிய தலைமுறை என்ற பெயரை மாற்றிவிட்டு தினமொரு அக்கப்போர் என்றே சேனலுக்குப் புதுப்பெயர் வைத்து விடலாம்! வீடியோ 63 நிமிடம்! கீழே இருக்கிற முகநூல் பகிர்வை முதலில் படித்துவிட்டு வந்தால் இந்த வட்டமேசைக் கும்மி என்கிற அக்கப்போரை முழுவதுமாக ரசிக்கலாம் என்பதற்கு நான் காரண்டீ! போதுமா? 
கீழடி நிறைய பேசப்படுகிறது. நிறைய விவாதிக்கப்படுகிறது. நிறைய அரசியல் ஆக்கப்படுகிறது.
புதிய தலைமுறையின் வட்டமேசை விவாதத்தைப் பார்த்த பிறகு கீழடி பற்றி நிறையப் படித்தேன். கம்யூனிஸ்ட், திமுக, விசிக ஆசாமிகள் ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்கள்.
1. அகழ்வாராய்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அகழ்வாளர் பணியிட மாற்றம் செய்யப்படுவது முதன் முதலாக இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கும் அமர்நாத் ராமகிருஷ்ணனுக்குத்தான் நிகழ்ந்துள்ளது என்பது ஒரு குற்றச்சாட்டு.
Archeological Survey of India, Tamilnadu Chapter இன் வலைப்பக்கத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 1950 லிருந்து 2010 வரையிலான அகழ்வுகள் சுமார் 20 வேறுபட்ட நபர்களால் மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. அதாவது சராசரியாய் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஆள் மாறுகிறார். ஆகவே முதல் குற்றச்சாட்டு புஸ்ஸ்ஸ்ஸ்.
2. சிந்து சமவெளியை விடப் பழமையானது தமிழர் நாகரிகம் என்பதால் இது ஒடுக்கப்படுகிறது என்பது மாதிரியான பேச்சும் இருக்கிறது.
இதுவரை கிடைத்த சான்றுகளின் படி அதிகபட்சம் கிமு 600 என்பதாகத்தான் சொல்லப்பட்டு வருகிறது. அதாவது 2600 ஆண்டுகள் பழமை. ஆனால் சிந்து சமவெளி நாகரிகம் 3300 என்று (அதாவது சிந்து சமவெளியில் கிடைத்த மிக Recent விஷயம் 3300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பல்வேறு காலக்கட்டங்கள் காணப்படுமானால் இருப்பதிலேயே Recent ஐ வயதாகக் கொள்வதுதான் ஒப்புக் கொள்ளப்பட்ட நடைமுறை என்று திரு. நாகசாமி தெரிவித்தார்) நிறுவப்பட்டிருக்கிறது. அதைக் காட்டிலும் பழமையான விஷயங்கள் அங்கே உண்டு. அதிகபட்சம் 5000 வரை தொடும் ஆதாரங்கள் உண்டு.
மேலும், கீழடியில் கிடைத்ததாய்ச் சொல்லப்படும் எழுத்துக்களைத் தமிழ் எழுத்து வரலாற்று அட்டவனையுடன் ஒப்பிட்ட போது அது கிபி 6ம் நூற்றாண்டில் இருந்த எழுத்தாகத்தான் இருக்கிறது.
3. கிடைத்திருக்கும் விஷயங்கள் ஒரு Secular Society யைச் சுட்டிக் காட்டுவதால் மத்திய அரசு ஒடுக்க நினைக்கிறது என்பதாக ஒரு கருத்து இருக்கிறது.
கிமு 600 இல் மதங்களே இல்லை என்பதில் என்ன ஆச்சரியம்?
வருணன், வாயு, அக்னி முதலிய இயற்கைகளை வழிபட்ட காலம் புராதன காலம். பல மதங்கள் இருந்தால் பலவும் தெரியும். இருந்தது ஒரே முறை. வழிபாடு வருணன், வாயு, அக்னி என்றால் என்ன சான்று கிடைக்கும்?
பௌத்தமே அப்போது இல்லை. பௌத்தத்தின் காலம் கிமு 400. பிறகெப்படிப் பிற மதங்கள் இருக்கும்?
4. தமிழனுக்கு 2600 ஆண்டுகள் முன்னமே எழுதப் படிக்கத் தெரிந்திருக்கிறது என்பதில் வட நாட்டானுக்குப் பொறாமை என்கிற அளவில் சில கருத்துக்கள்.
இதில் என்ன ஆச்சரியம்?
முற்காலச் சோழர்களில் ஒருவனான எல்லாளன்(மனுநீதி சோழன்) கிமு 400 காலத்தவன்தானே? இது இலங்கைச் சரித்திரத்திலும் அங்கீகரிக்கப்படுகிறதே? அனுராத புரத்தைத் தலைநகராகக் கொண்டு அங்கே ஆட்சி செய்தவன் இவன்தானே?
ஏற்கனவே நிறுவப்பட்ட உண்மைதானே?
அகழ்வாராய்ச்சி மேற்கொள்வோர் உணர்வுப்பூர்வமாக விஷயங்களைப் பார்ப்பதில்லை. எல்லா ஆதாரங்களும் கிடைத்த பின் அவற்றைப் பொருத்திப் பார்த்து இலக்கியங்களுடன் ஒப்பிட்டு, ஏற்கனவே பல்வேறு இடங்களில் கிடைத்த விஷயங்களுடன் ஒப்பிட்டு பிறகு அங்கிருந்த நாகரிகம் குறித்து முடிவுக்கு வர வேண்டும்.
அமர்நாத் ராமகிருஷ்ணன் தஞ்சையில் பேசுவதை யுட்யூபில் கேட்டேன்.
’ராமாயணம், மகாபாரதம் ஆதாரங்களைத் தேடறாங்க, அதெல்லாம் எதுவும் கிடைக்கப் போகிறதில்லை’ என்று ஒரு லூஸ் டாக் விட்டிருக்கிறார். ஆகவே இந்த அகழ்வு Politicize ஆவது அவரிடமிருந்துதான் துவங்கியிருக்கிறது என்று தோன்றுகிறது. இது, ஒரு அகழ்வாராய்ச்சி செய்பவருக்கு உகந்த ஆரோக்யமான மனநிலை அல்ல.
திரு. நாகசாமி அவர்கள் சொல்வது போல, இது ஒரு ஆரம்பம். Bias, Prejudice இல்லாமல் திறந்த மனதுடன் ஆய்வு தொடர வேண்டும். Interpretation செய்வதற்கு இது ரொம்ப Premature காலம். தொடர்வோம், அறிவோம்.
அரசியல் செய்ய இந்தக் களத்தைப் பயன்படுத்தாமல் இருப்போம்.
மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை விடுவதில்லை என்று சொன்னாராம் மா சேதுங்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை எம்பியும் எழுத்தாளருமான சு வெங்கடேசன் தன்னுடைய எழுத்து வியாபாரத்தை வைத்துக் கூட அல்ல  இந்த கீழடி விவகாரத்தை மட்டுமே  தொடர்ந்து பேசி அரசியல் செய்தே பாப்புலரானார் என்பது அவருடைய தனித்துவமான அரசியல்! கட்சி அவர்போக்கில் போகவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது என்பது என்னுடைய அனுமானம் மட்டுமே அல்ல!  
 
காவல்கோட்டம் நாவலுக்கு சாகித்ய அகாடெமி விருது வழங்கப்பட்ட சமயம் என்ன கூத்தெல்லாம் நடந்தது? இங்கே கொஞ்சம் பாருங்கள்! 
சாகித்ய  அகாதமி விருது உடனடியாக வாங்க வேண்டும் என்றால் இன்று இருக்கும் சுலபமான வழி ஒன்றே, உடனடியாக நீங்கள் தமுஎகச வின் ஏதேனும் ஒரு கிளையில் உறுப்பினர் ஆக வேண்டும், அடுத்து சில வருடங்களில் கட்சியிலும் உறுப்பினராக வேண்டும். முதலில் தான் இருக்கும் கிளையில் 
எவரும் எழுதிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்து மாவட்ட குழுவிலும் கூட யாராவது படைப்பு கிடைப்புனு பேசினால் அவர்களை எல்லாம் சில ஆண்டுகளில் வெளியேற்ற வேண்டும். அமைப்பின் உறுப்பினர்களை எல்லாம் பேனர் ஒட்டுபவர்களாக, சவுக்கு நட குழி தேண்டுபவர்களாக மாற்ற வேண்டும். அவர்கள் அனைவரையும் வீடு வீடாக உண்டியல் அடிக்க செய்து அந்த பணத்தில் நீங்கள் உங்கள் கவிதை தொகுதியை பல வண்ணத்தில் அச்சடித்து அனைவரையும் மிரட்ட வேண்டும். அந்த கவிதை தொகுதியை பார்த்து தமிழ்செல்வனை போன்றவர்கள் ”வெளக்கமாத்துக்கு பட்டு குஞ்சம்” என்று விமர்சித்தால் கொஞ்சம் காலம் அவருடன் பேச்சை நிறுத்த வேண்டும். அந்த கால இடைவெளியில் அவருக்கும் குழி பறிக்க வேண்டும்.  என்று எழுத்தாளர், எம்பியின் சாமர்த்தியத்தை வெகு விரிவாகவே இந்தப்பதிவு பேசுகிறது. 

இப்படியாகப்பட்ட சாமர்த்தியசாலி சு வெங்கடேசனிடமிருந்து திமுக கீழடியில் கிடைத்த வெளிச்சம் முழுதையும் ஹைஜாக் செய்து தன்னுடையதாக்கிக் கொண்டு விட்டது. பத்துகோடி ரூபாய் நன்கொடை வாங்கிய விஷயத்தில் இதுவும் அடக்கமா என்பது தெரியவில்லை.

#கீழடி அரசியல் ஆக்கப்படுகிற விஷயத்தைப் பற்றிப் பேசவேண்டாம் என்று இருந்தவனையும் கூட ஒரு பதிவு எழுதவைத்துவிட்டதே! விலைக்கு வாங்கியவர்கள் அப்புறம் எப்படி அரசியல் செய்ய இதைப் பயன்படுத்தாமல் இருப்பார்கள்? கொஞ்சம் சொல்லுங்களேன்! அரசியல் செய்ய வேறெந்த விஷயமும்  கிடைக்காமல் திமுகவும்  திமுகவுக்கு ஒத்து ஊதும் சேனல்களும் ஒரு வறட்சியில் கீழடி பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள்!  

மீண்டும் சந்திப்போம். 

2 comments:

  1. கீழடியில் கம்யூனிசம் இருந்தது என்று இவர்கள் பிதற்றாத வரையில் சரிதான். ஆனால் நிச்சயம் அப்போது லிங்க வழிபாடு இருந்திருக்கணும். வடநாட்டில் இதைவிட பழமையான இடங்களைத் தொல்லியல் துறை கண்டெடுத்திருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நெ.த. சார்!

      Primitive Communism என்று ஆதிகாலத்திலேயே நடைமுறையில் இருந்ததுதான்! ஆனால் மதுரை எம்பி கம்யூனிசம் பேசுகிறாரா என்ன? பேசிக் கேட்டிருக்கிறீர்களா? உலகின் முதல்குரங்கே தமிழ்க் குரங்குதான் என்ற தேய்ந்துபோன பல்லவியைப் பாடுகிற ரகம்!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)