Tuesday, October 15, 2019

செய்திகளோடு கொஞ்சம் விமரிசன உலா!

வருகிற ஞாயிற்றுக்கிழமை மஹாராஷ்டிரா, ஹரியானா இருமாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்க இருக்கின்றன.ஆனால் பிஜேபிக்கு எதிராகக் கோதாவில் இறங்கி tough fight கொடுப்பதற்குத் தான் யாரையுமே காணோம் என்று The Print தளத்தில் இன்றைக்கு ஹேமந்த் தேசாய் மிகவும் குறைப்பாட்டுக் கொண்டு எழுதியிருந்த செய்திக் கட்டுரையை இப்போது வாசித்தேன்! காங்கிரஸ் NCP கூட்டணி என்னவோ தேர்தல் வந்துவிட்டால் பெயரளவுக்காவது போட்டியிட்டாக வேண்டுமே என்ற சலிப்புடன் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிற மாதிரித்தான் தெரிகிறது!  

   
காங்கிரஸ் NCP கூட்டணிதான் இப்படி என்றால் பிஜேபியுடன் முரண்டு பிடித்துக் கொண்டே கூட்டணி வைத்திருக்கும் சிவசேனா கதை இன்னும் பரிதாபம்! புலி என்று தங்களைக் குறித்துப் பீற்றிக்கொள்கிறவர்கள் எல்லோருமே  காகிதப்புலி தான் என்பது மஹாராஷ்டிர அரசியலிலும் கூட மெய்ப்பிக்கப் பட்டிருக்கிறது.மஹாராஷ்ட்ரா அரசியலில் அசைக்க முடியாத வலுவான சக்தியாக முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் வளர்ந்திருப்பதில் காங்கிரசுக்கு மட்டுமல்ல சிவசேனாவுக்கும் கூட உள்ளூரப் பொருமத்தான் முடிகிறது.

   
Devendra Fadnavis is so strong in Maharashtra that he is ready to wrestle, but ring is empty இது ஹேமந்த் தேசாய் எழுதிய செய்திக் கட்டுரையின் தலைப்பு! Chief Minister Devendra Fadnavis was recently asked on the Zee 24 Taas show whether he considers himself the Narendra Modi of Maharashtra. He replied: “There can be only and one only Narendra Modi in the world. I am satisfied to remain as Devendra Fadnavis of Maharashtra”. இந்த ஒரு பதிலிலேயே ஏன் அமித் ஷா, ஃபட்னவிஸ்  தான் மாநிலத்தின் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்ததற்கான காரணமும் இருக்கிறதோ? மராத்தா+OBC  வாக்குகளில் ஜெயித்துவந்த காங்கிரஸ் NCP கூட்டணி இப்போது இரண்டையும் இழந்து நிற்பது காலம் செய்திருக்கிற அலங்கோலம்! ஹரியானாவில் நிலைமை இன்னமும் மோசம்.


சீனாதானாவிடம்  நீதிமன்றங்கள், அதிகாரிகள் எல்லோருமே பயந்து கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. அவ்வளவு ஆட்டங்களுக்கும் பதில்சொல்ல வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிற மாதிரித்தான் எனக்குத்  தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்க்கவேண்டிய சப்ஜெக்ட் இது.  

    
இது இன்றைய துக்ளக் இதழின் அட்டைப்பட நையாண்டி! தமிழக பிஜேபி தலைமையைக் கூண்டோடு கலைத்தாக வேண்டும் என்று முகநூலில் பல பிஜேபி ஆதரவாளர்கள் ஏன் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான காரணத்தை ஒரு அட்டைப்படக் கார்டூனிலேயே சொல்லியாகி விட்டது!

மீண்டும் சந்திப்போம்.  


No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)