Friday, October 11, 2019

சீன அதிபர் விஜயமும்! உள்ளூர்க் காமெடிகளும்!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரதமர் நரேந்திர மோடியும் மாமல்லபுரத்தில் இன்றும் நாளையும் சந்தித்துப் பேசுவதில் என்னென்ன முக்கியத்துவம் இருக்கிறது என்பதை The Print தளத்தின் ஜ்யோதி மல்ஹோத்ரா விளக்குகிற இந்த  5 நிமிட வீடியோவைக் கொஞ்சம் பாருங்களேன்! ஆசியாவின் இரு பெரும் ஜனத்தொகை கொண்ட நாடுகள்! உலகின் மொத்தஜனத்தொகையில் இவ்விரு நாடுகளும் சேர்ந்தால்  மூன்றில் ஒருபங்குக்கும் மேல்(35%)! இதில்  ஒன்று வளர்ந்த பொருளாதாரமாகவும், ராணுவ சக்தியாகவும் இருக்கும் சீனா! இன்னொன்று ஒரு வலிமையான பொருளாதாரமாகவும், ராணுவ சக்தியாகவும் வளர்ந்து கொண்டிருக்கிற இந்தியா!      


சமூக வலைத்தளங்களில் இதைப்பற்றி ஆக்கபூர்வமான விஷயங்கள்  ஏதாவது விவாதிக்கப்படுகிறதா என்று தேடினால் மிஞ்சுவது ஏமாற்றம் தான்!  முகநூலில் ஒருவிதமாகவும் ட்வீட்டரில் வேறொரு விதமாகவும் கலாய்க்கப் படுவதை நிறைய இடங்களில் பார்த்தேன்.

  

அதே முகநூல் பக்கங்களில் கொஞ்சம் பொறுப்பான எழுத்தும் பார்க்கக் கிடைக்கிறதே! 

'தமிழ் பேசும் சீனர்கள்' என்று தமிழக ஊடகங்கள் செய்யும் பரப்புரைகள் ஏகம். அதிலும், 'தமிழை கொண்டாடும் சீனர்கள்' என்கிற அளவிற்கு தமிழக ஊடகங்கள் பூசும் முலாம் ஏகத்திற்கும் பளபளா!
முதலில்..நடக்கவிருப்பது முக்கிய அரசியல் சந்திப்பு.
இந்த நிலையில்..சீனாவின் மொழி கொள்கை குறித்த முழு உண்மைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதே முழுமையான செய்தியாக இருக்க முடியும்.
இன்றைய உலக நாடுகளின் பூகோள அரசியலில் ...Data என்பது எந்த அளவிற்கு பெட்ரோலியத்தை பின்னுக்கு தள்ளி..மிக அதிக மதிப்பு வாய்ந்த ஒன்றாக மாறி இருக்கிறது என்பதை அறிவோம்.
அதே போல..மொழி என்பதும் ...பெரும் மதிப்பு வாய்ந்த வளமாக மாறி இருக்கிறது. மொழி என்பது வெறும் சக மனிதர்களுடனான தொடர்புக்கான கருவி மட்டும் அல்ல. மொழி என்பது, அது சார்ந்த பூகோள பகுதியின் வாழ்வியல், அறிவுசார் சொத்துகள், கலாச்சாரம், பண்பாடு, மதம், வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள், சடங்குகள் , இலக்கியங்கள், இலக்கணங்கள், திருவிழாக்கள், தேவைகள், பிரச்சினைகள், பிளவுகள் என்று அனைத்தையும் தன்னுள்ளே ஏற்றி செல்லும் வாகனம். இன்றைய உலக அரசியலில் ஆகப் பெரும் மதிப்பு வாய்ந்த Data-ன் main server-களில் ஒன்று மொழி என்று கூட சொல்லலாம்!
இதனை 1949-ம் ஆண்டிலேயே புரிந்து கொண்டு ...கம்யூனிச சீனா விவாதிக்கிறது. இன்னொரு நாட்டின் அந்நிய மொழியை சீனர்கள் கற்றுக் கொண்டால்..அந்த நாட்டின் கலாச்சாரம், பண்பாடு என்று அனைத்தும் அதனோடு சேர்ந்து உள்ளே வந்து நம் மொழியை அழித்து விடும் என்று உள்ளிருந்தே அடிப்படைவாத கம்யூனிஸ்டுகள் [ இங்குள்ள தி.க.& தி.மு.க போல ] எதிர்க்கிறார்கள். பல வருடங்கள் நடந்த முன் பின் முடிவுகளுக்கு பிறகு ...சீனாவின் அரசியல் பொருளாதார முன்னேற்றத்திற்கு அந்நிய மொழிகள் கற்றுக் கொள்வது அவசியம் என்கிற முடிவிற்கு சீனா வருகிறது.
1986-ம் வருடம்.. சீனாவின் Foreign Language Education Planning -FLEP - ல் சில மாற்றங்களை செய்கிறது சீன அரசு.
உலக நாடுகளில்..அந்தந்த பிராந்திய முக்கியத்துவத்தை பொறுத்து ..அந்நாடுகளின் குறிப்பிட்ட பகுதிகளில் இருக்கும் அந்நிய மொழிகளை சீனாவில் கற்றுக் கொடுப்பது என்ற திட்டத்தை அமல் செய்கிறது. இதற்காக எடுத்த எடுப்பில் அம் மொழிகளை பேசும் பிற நாட்டினரை உள்ளே விடாமல்..முதலில் சீனர்களை ..அந்தந்த நாடுகளுக்கு அனுப்பி ...அம் மொழிகளை முழுமையாக கற்றுக் கொள்ள செய்தது.
அவ்வாறு பிற நாடுகளுக்கு மொழிகளை கற்றுக் கொள்ள செல்லும் சீனர்களுக்கு ..எவ்வாறு அந்நிய மொழியை கற்றுக் கொள்ள வேண்டும், எந்த அளவிற்கு கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை முழுமையாக போதித்து தான் அனுப்புகிறது சீன அரசு ! அந்நிய மொழியை கற்றுக் கொள்ளும் சீனர்கள்... மொழியை கற்றுக் கொள்வதோடு ..அம் மொழியின் இருப்பு, அம் மொழி பேசும் மக்களிடம் அது செலுத்தும் ஆளுமை, அம் மொழியில் இருக்கும் இலக்கியங்கள், அறிவுசார் சொத்துகள் ஆகியவை குறித்த விபரங்களையும் கற்று தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால்.. அம்மொழியோடு சேர்ந்து வரும் கலாச்சாரம் , பண்பாடு, மதம், கம்யுனிசத்திற்கு எதிரான கருத்துகள், தனிமனித உரிமை & கருத்துரிமை போன்றவற்றை சீனாவிற்குள் கொண்டுவரக் கூடாது.
ஏனெனில்..சீனா...அந்நிய மொழிகளை ஒரு தொடர்பு கருவியாக கருதவில்லை. மாறாக..உலகில் பூகோள முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இருக்கும் நாடுகளில் பேசப்படும் அந்நிய மொழிகள் அனைத்தும்..அப் பகுதிகளில் ..சீன ஆதிக்கத்திற்கு உதவக்கூடிய அரசியல் கருவி என்பதாக கணக்கிடுகிறது சீனா.
இன்றளவும்....சீனாவின் Foreign Language Education Planning -FLEP உலகில் சீன அரசியல் ஆதிக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில்.. மிகக் கூர்மையுடன் தீட்டப் பட்ட ஒரு அரசியல் திட்டம்.
இத்தகைய கூர்மையுடன் தந்திர அரசியல் செய்யும் சர்வாதிகார சீனாவை...கூடுதலான அரசியல் கூர்மையுடன் அணுகவேண்டியது அவசியம்.
கொஞ்சம் யோசிக்க வைக்கிற எழுத்துதான் இல்லையா? இங்கே தமிழேண்டா கோஷ்டிகளுக்குக் கொஞ்சம் கூடப் புரியாது என்கிறபோது அவர்கள் வேறு என்ன செய்வார்கள்?

வேலை வெட்டி இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? அதையே இங்குள்ள திராவிடங்களும், இந்தியாவுக்கு எதிராக இதுமாதிரி விஷயங்களில் ட்வீட்டர் மற்றும் இணையக்கூட்டாளிகளாக இருக்கும் பாகிஸ்தானிகளும் செய்திருக்கிறார்கள். இதையும் ஆனந்த விகடன் தளம் வெகு ஆனந்தமாக அனுபவித்து ஒரு பரபரப்புச் செய்தியாகப் போட்டிருக்கிறார்கள். 

  

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே! நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே! என்று பாரதி பாடல் வரிகளைக் காட்டி இவர்களைத் திருத்த முடியாது தான்! காங்கிரசை இன்னமும் விட்டு வைத்திருந்தாலும் கூடத் தாழ்வே என்று சொல்கிற இந்த வீடியோ செய்தியையும் பார்த்துவிடுங்கள்! 


அதெல்லாம் சரி! இந்தியா வருவதற்கு முன்னால் நேற்று முன்தினம் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானை பெய்ஜிங்கில் சந்தித்து காஷ்மீர் விவகாரத்தைக் கவனித்துக் கொண்டிருப்பதாக கொஞ்சம் ஆறுதல் சொல்லிவிட்டு வந்திருக்கும்  சீன அதிபர் நாளை இந்திய விஜயத்தை முடித்து விட்டு  நேபாளம் போகிறார் என்பதில் ஏதாவது புரிந்து கொள்ள முடிகிறதா? 

மீண்டும் சந்திப்போம். 

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)