Wednesday, October 2, 2019

இஸ்ரேல் தேர்தல்களும்! இந்தியா கற்றுக்கொள்ள வேண்டியதும்!

ரு 40/45வருடங்களுக்கு முன்னால் தினமணி ஆசிரியர் AN சிவராமன் கணக்கன் கட்டுரைகள் என்று தினமணி நாளிதழில் தொடர்கட்டுரைகளாக எழுதிக் கொண்டிருந்த விஷயங்களில் முக்கியமான ஒன்று தேர்தல் சீர்திருத்தங்கள்! தேர்தல் சீர்திருத்தங்களாகச் செய்ய வேண்டியது எவை என்று தன்னுடைய கருத்தாக எதையும் திணிக்கவில்லை. மாறாக தேர்தல் ஜனநாயகத்தைப் பின்பற்றும் பல நாடுகளில்  உள்ள வித்தியாசமான தேர்ந்தெடுக்கும் விதத்தை வாசகர்கள் புரிந்துகொள்ள உதவியாக எளியமுறையில் எழுதிய கட்டுரைகள் அவை! வலைக் குழுமங்களிலும் இங்கே பதிவுகளிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பதற்கு முக்கியமான உந்துகோலாகக் கணக்கன் கட்டுரைகள் இருந்தன 


ங்கே காங்கிரசுக்கு ஆதரவாகவே பேசி வரும் The Print தளத்தின் சேகர் குப்தா , காங்கிரஸ் கட்சியின் கோமாளித் தனங்களைப் பேசவேண்டி வந்துவிடுமோ என்ற பயத்திலோ அல்லது என்னதான் இருந்தாலும் ஒரு சீனியர் பத்திரிகையாளர், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் ஆசிரியர் பொறுப்பிலும் இருந்தவர் என்ற முறையிலோ சென்ற மாதம் நடந்து முடிந்த இஸ்ரேல் பொதுத்தேர்தல் முடிவுகளைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகவே இந்த 24 நிமிட வீடியோவில் பேசுகிறார். கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள், சேகர் குப்தாவின் காங்கிரஸ் ஆதரவெல்லாம்  ஒருபக்கம் கிடக்கட்டும், இஸ்ரேலியத் தேர்தல்களை, அதன் fractured முடிவுகளில்   உள்ள சிக்கல்களை, ஒரு அனுபவம் உள்ள பத்திரிகையாளராக  மிக நேர்த்தியாக விளக்குவதைப் புறந்தள்ளி விடமுடியுமா?   

னநாயக முறைகளே மிகச் சமீபத்தைய  காலவரவுதான் என்பதால் கொஞ்சம் குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. கவனித்துச் செம்மை செய்துகொண்டே வருவதில் தான் அதன் முழுமையான வளர்ச்சியும்,பலனும் ஜனங்களுக்குக் கிடைக்கும் என்பது குன்சாவாக எல்லோருமே புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றுதான்! உதாரணமாக இங்கே இந்தியாவில் பிரிட்டனிடமிருந்து இரவல் வாங்கிய Westminster தேர்தல் முறையைப் பயன் படுத்துகிறோம்! Winner takes all என்பது இந்த முறையின் முக்கியமான அம்சம்! இந்த அம்சத்தின் அடிப்படையில் பிரிட்டனில் நடந்துமுடிந்த brexit பொதுஜன வாக்கெடுப்பில் 51% வாக்குகள் பெற்று ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது என்ற முடிவைச் செயல் படுத்த முடியாமல் இன்னமும் பிரித்தானிய அரசியல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. (கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பதுதான் உண்மையான பிரச்சினை!) 

இப்படி   Winner takes all  தேர்தல் முறையின் மிகப்பெரிய குறை என்ன? மேலே சொன்ன உதாரணத்தில், ஒரு சின்ன வித்தியாசம்,  எதிர்த்து வாக்களித்த 49% சுத்தமாகப் புறக்கணிக்கப் படுகிறது, சின்ன வித்தியாசமாக இருந்தாலும் ஜெயித்தவனுக்கே மொத்த வாக்குகளும் போய்விடுவதாகக் கொள்கிற விதம்தான்! இங்கே நம்மூர்த் தேர்தல்களையே எடுத்துக் கொள்ளுங்கள்! மொத்தமுள்ள வ்வாக்குகளில் பதிவாகும் வாக்குகள் என்னவோ 50-60% தான்! அதிலும் கூட ஒரே ஒரு ஒட்டு மட்டும் கூடுதலாக, தனக்கு அடுத்து வருகிறவனை விட வாங்கிவிட்டால் போதும், அந்த ஒரு ஓட்டு 100% ஆக்கிவிடுகிற அதிசயம் அல்லது அநியாயம் தான் இந்த மாதிரித் தேர்தல் முறை! வெஸ்ட்மின்ஸ்டர் நியாயம்!

விகிதாசார பிரதிநிதித்துவம்! Proportionate Representation என்று ஒரு கட்சி வாங்கும் வாக்குகளின் அடிப்படையில் சட்டசபை அல்லது நாடாளுமன்றத்தில் சீட்டுகள் என்றிருப்பது இன்னொரு விதமான தேர்தல்முறை. இந்த முறையில் நடந்த இஸ்ரேல் தேர்தல்களில் (ஐந்து மாதங்களில் இது இரண்டாவது பொதுத்தேர்தல்) எந்தவொரு கட்சிக்கும் தனி மெஜாரிடி இல்லை, கூட்டணி அமைப்பதிலும் சிக்கல்கள், ஆக இன்னொரு பொதுத்தேர்தலை இஸ்ரேல் விரைவில் சந்திக்கலாம் என்பதிலேயே இந்தமுறையிலும் உள்ள கோளாறுகள்  வெளிப்பட்டிருக்கிறது என்றாலுமே கூட  தேர்தல் சீர்திருத்தங்களில் அதுவும் கூட களையக் கூடியதே!  

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் பற்றி இங்கே கொஞ்சம் பேசியிருக்கிறோம். புத்தகங்களை சேகரிப்பதையே  வாழ்க்கையின் தவமாகச் செய்து வரும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் கணக்கன் கட்டுரைகளில் தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றிப் பேசிய தொடர் புத்தகமாகவும் வந்தது அவருடைய சேகரத்தில் இருக்கிறதா என்று ஆறேழு வருடங்களுக்கு முன் கேட்டதில் பிகார் இயக்கம் என்று ஜெயப்ரகாஷ் நாராயணன் நடத்திய போராட்டவிவரங்களை 47 நாட்கள் தினமணியில் தொடர்ந்து எழுதி தினமணிகதிர் வெளியீடாக  வந்ததின் நகலை உடனே அனுப்பி வைத்தார். கணக்கன் கட்டுரைகள் புத்தகம் இருப்பதாகச் சொன்னவரிடம், அதில் தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றி எழுதிய கட்டுரைகள் இருக்கின்றனவா என்று கேட்கத் தோன்றாதது என்னுடைய குறை.

தை வாசித்துக் கொண்டிருக்கும் நண்பர்களிடம் வேண்டுவது  ஒன்றேதான்! இந்தமாதிரிப் பழைய புத்தகங்கள் உங்களிடம் பயனில்லாமல் பரணில் கிடக்குமானால், அவைகளை எடைக்குப்போட?வோ கரையான் அரித்து தூர எறியவோ முனையாமல் புத்தகங்களை தன்னுடைய கண்ணைப் போலப்  பராமரித்து, வேண்டுகிறவர்களுக்குப் பயன்படுகிறவிதமாக வழங்கிவரும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி ஐயாவுக்கு அனுப்பிவைத்தால் என்னைப்போல புத்தகம் இருந்தும் பராமரிக்கமுடியாமல் தொலைத்துவிட்டு பின்னொருகாலத்தில் தேடுகிறவர்களுக்கு மீண்ட சொர்க்கமாக, மீளவும் கிடைக்கும்!  

தேர்தல் சீர்திருத்தங்களின் அவசியத்தைக் கொஞ்சம் இஸ்ரேல் தேர்தலைவைத்து இங்கே  பார்த்திருக்கிறோம் இல்லையா எப்படி என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பதில் சொல்ல முடிகிறதா என்று கொஞ்சம்  முயற்சித்துப் பாருங்களேன்! அப்படியே   இந்தியாவில் இந்த  விகிதாசார பிரதிநிதித்துவம் எல்லாம் ஒத்துவருமா என்றும் கூட! 

மீண்டும் சந்திப்போம். 
         
    

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#சீனப்பூச்சாண்டி குறித்தான இந்திய அரசின் அணுகுமுறை மாறுகிறது!

நேற்று வெள்ளிக்கிழமை நமது பிரதமர் நரேந்திர மோடி போர்ப்பதற்றம் தொற்றிக் கொண்டிருக்கிற லடாக் பகுதிக்கு நேரடியாகச் சென்று நமது வீரர்களைப் பார்த...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (310) அனுபவம் (239) நையாண்டி (98) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (71) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (42) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (22) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) புத்தக விமரிசனம் (14) விமரிசனம் (14) தேர்தல் சீர்திருத்தங்கள் (13) Change Management (12) அரசியல் களம் (12) ஊடகப் பொய்கள் (12) கமல் காசர் (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) திராவிட மாயை (11) ஊடகங்கள் (10) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) புனைவு (9) ஆங்கிலப் புதினங்கள் (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) இடதுசாரிகள் (7) காமெடி டைம் (7) சுய முன்னேற்றம் (7) பானாசீனா (7) எங்கே போகிறோம் (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) புத்தகம் (6) மீள்பதிவு (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீ அரவிந்த அன்னை (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) அன்னை எனும் அற்புதப் பேரொளி (5) இர்விங் வாலஸ் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) கண்டு கொள்வோம் கழகங்களை (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) தேர்தல் முடிவுகள் (5) நா.பார்த்தசாரதி (5) படித்ததில் பிடித்தது (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) Tianxia (4) உதிரிகளான இடதுகள் (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) கவிதை நேரம் (4) கூட்டணிப் பாவங்கள் (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மோடி மீது பயம் (4) அஞ்சலி (3) ஒளி பொருந்திய பாதை (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) சீனா (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) மாற்று அரசியல் (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) The Sunlit Path (2) அம்பலம் (2) உதிரிக் கட்சிகள் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராகுல் காண்டி (2) ராஜமுத்திரை (2) ராமச்சந்திர குகா (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) ஸ்ரீ அரவிந்தர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) February 21 (1) The R Document (1) Three C's (1) YSR (1) Yatra (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சுத்தானந்த பாரதியார் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) திரைப்படங்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)