பிள்ளையாண்டானுக்கும் எனக்கும் ஒத்துப்போகிற விஷயங்கள் என்று பட்டியலிட்டால் ஒரு கைவிரல் விட்டே எண்ணிவிடலாம் என்கிறபோது தனியாக லிஸ்ட் எதற்கு? புத்தகங்கள், ஆங்கில வீடியோ சீரியல்கள், மெல்லிசைப் பாடல்கள் கேட்பது, blog எழுதுவது இப்படி சிலவிஷயங்களில் ஒற்றுமை. அரசியல் அப்புறம் பலவிஷயங்களில் நேரெதிர்! அம்மாவிடம் மகன் அமேசான் பிரைமில் பார்க்க பலமாக சிபாரிசு செய்தது இந்த நிகழ்ச்சியை! Alex in wonderland - standup comedy
இந்த 7 நிமிட வீடியோவில் காமெடிக்காகத் தான் கலாய்க்கிறார் என்றாலும் நெம்பவே ஓவர் என்று முகம் சுளிக்க வைக்கிற ரகம். பாலையா என்று தெலுங்கு பேசும் மக்களால் கொண்டாடப்படும் நடிகர் பால கிருஷ்ணாவை அவர் பாலகிருஷ்ணா இல்லீங்க, பலான கிருஷ்ணா என்று கலாய்ப்பது எதில் சேர்த்தி? பட்டிக்காட்டான் பட்டணத்தில் என்று வலைப்பதிவும், கூகிள் பிளஸ்சில் பட்டிகாட்டான் Jey என்றும் எழுதிக்கொண்டிருந்த நண்பர் ஜெய் கண்ணில் மட்டும் பட்டிருந்தால் உண்டு இல்லை என்று ஒருவழி பண்ணியிருப்பார் என்று நினைவு வந்தபோதே, எத்தனை நல்ல நண்பர்களுடைய தொடர்புகளெல்லாம் கூகிள்+ உடன் விடுபட்டுப்போய்விட்டது என்கிற வருத்தமே மிஞ்சியது.
இரண்டு வருடங்களுக்கு முன்வரை இருவராக நிகழ்ச்சி நடத்தி வந்த அலெக்சாண்டர் பாபு, இப்போது solo வாக Alex in wonderland என்று கிளம்பிவிட்டார். அதற்காக இப்படியா? இதெல்லாம் நெம்ப ஓவரு! ஆமா, சொல்லிட்டேன்!
இந்தப் பத்துநிமிட ஒளித்துண்டில், அலெக்ஸ், ஆண்ட்ரியா எல்லோருமாக கொழுக்கட்டையை எப்படிப் பாடியே சாக அடிக்கிறார்கள் என்று பாருங்களேன்! முழுநிகழ்ச்சியும் இங்கே 41 நிமிடம்
இதெல்லாம் நெம்பத்தான் ஓவரு! இல்லீங்களா?😝😍🙉🙉
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment