அக்கப்போர்கள் என்னென்ன என்று பார்ப்பதற்கு முன்னால் இந்தப் பக்கங்களில் எழுத்தாளர் பிலஹரியைப் பற்றிக் கொஞ்சம் பேசியிருந்தோம் இல்லையா? R P ராஜநாயஹம் தன் முகநூல் பதிவில் இன்னும் சிறிது தகவலைச் சொல்லி இருக்கிறார். நெஞ்சே நீ வாழ்க! இது பிலஹரி எழுதிய நாடகம். TS சேஷாத்ரி அதை நாடகமாக நடத்தி இருக்கிறார். நாடகத்தில் டைபிஸ்ட்டாக, ஒரு வசனமும் இல்லாத வேடத்தில் நடித்த கோபு, டைபிஸ்ட் கோபுவாக ஆனதைத் தொட்டு எழுதப்பட்ட பகிர்வு அது. பின்னால் அந்த நாடகம் ஆலயம் என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டபோது, டைபிஸ்ட் கோபுவும் அதே டைபிஸ்ட் வேடத்தில் நடித்தார் என்கிறார் .
வின் நியூஸ் சேனலில் சேர்ந்த கையோடு மதன் ரவிச்சந்திரன் மீண்டும் சுறுசுறுப்பாகி விட்டார். நல்ல செய்திதான்! ஆனால் அவர் தன்னை மேம்படுத்திக் கொள்ளவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. ஒரு நேர்காணலில், விஷயங்களை வரவழைக்கிற விதத்தில் கேள்விகள் கேட்க வேண்டியதுதான்! அதற்காக தன்னுடைய சொந்தக் கருத்தை கேள்விகளோடு சேர்த்து திணிக்க முற்படுவது இந்த இளைஞனிடம் இருக்கிற குறை. ஒரு விஷயத்தை இன்னொரு விஷயத்தோடு முடிச்சுப் போட்டுக் கேள்வி கேட்கும்போது,தனக்கு கிடைத்த தகவல்கள் சரியானவை தானா, ஒப்பிடத் தகுந்தவைதானா என்று ஹோம் ஒர்க் செய்துகொள்ள வேண்டியது மிகமிக அவசியம். 43 நிமிட வீடியோவில் அவர் பேட்டியெடுக்கிற விதம் குறித்து உங்களுக்கென்ன படுகிறது என்று சொல்லுங்களேன்!
ராதா ரவி ஜாதக விசேஷமோ என்னவோ? என்ன பேசினாலும் அதை ஒரு சர்ச்சையாகவும் அக்கப்போராகவும் வளர்ப்பது தமிழக சேனல்களுக்கு ஆகி வந்த விஷயம் என்றாகி விட்டது. அவரும் தான் என்ன செய்வார்? சொல்லுங்கள்! வீடியோ 40 நிமிடம். இந்த மாதிரி அக்கப்போர்களையே பார்க்கிறவன் தலைக்குள் திணிக்கிற ஊடகங்கள், சேனல்களை ஒருவழி பண்ணினால் மட்டுமே தமிழகம் உருப்படும்! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
ஆயிரம் குற்றம் குறை சொன்னாலும் தமிழ்நாட்டில் செய்தி வாசிக்கும் பழக்கத்தை வளர்த்தது தினத்தந்திதான் என்று நண்பர் திருப்பூர் ஜோதிஜி எங்கோ ஓரிடத்தில் எழுதியிருந்ததை வாசித்ததாக ஞாபகம்!
இந்த மாலைமுரசு கிளிப்பிங்கை முகநூலில் நேற்றைக்கு பதிவர் உண்மைத்தமிழன் பகிர்ந்திருந்தார். ஆதித்தன் வகையறா நடத்தும் ஊடகங்கள் வாசிப்புப்பழக்கத்தை ஊக்குவிக்கும் விதத்தில் இது ஒரு சாம்பிள்.
மீண்டும் சந்திப்போம்.
ஒரு பத்திரிக்கை முதலாளி சென்ற வருடம் முக்கியமான பதவியில் இருந்து இருவரை மறைமுகமாக வெளியே அனுப்ப அனைத்து விதமான அவமானங்களையும் அவர்களுக்கு ஏற்படுத்தி மன உளைச்சலை உருவாக்கினார். அவர்களின் சம்பளம் லட்சத்திற்கு மேலே. அதே சம்பளத்தில் ஐந்து பேர்களை அவர்களை அனுப்பி விட்டு கொண்டு வந்தார். அப்படிப்பட்டவர்களின் தரம் இப்படித்தான் இருக்கும் என்பதனை புரிந்து கொண்டேன்.
ReplyDeleteவாருங்கள் ஜோதிஜி! பள்ளி மாணவனாக இருந்த நாட்களில் எனக்கு மதுரை தினத்தந்தி, தினமணி நாளிதழ்களின் துணை ஆசிரியர்கள் பலர் வழிகாட்டியாகவும் நாம் அச்சில் படிக்கிற செய்தி எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதைச் சொல்லித்தந்த ஆசிரியர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அந்தநாட்களில் டெலிப்ரிண்டர் வழியாகத்தான் பெரிய செய்தி ஏஜென்சிகளிடமிருந்து செய்திகள் வரும். அதை நகாசு, ஜிகினா வேலை செய்து செய்தியாக்கித்தருவது துணை ஆசிரியர்களுடைய வேலை.
Deleteஅரைக்காசு பெறாத உள்ளூர்க் கள்ளக்காதல், கொலை, திருட்டு இவைகளைப் பரபரப்புச் செய்தியாக்கியது கூட தினத்தந்திதான். முதலாளிகள் விருப்பத்துக்குத் தகுந்தமாதிரிச் செய்திகளை எப்படி திசைமாற்றுவது, திரிப்பது என்பதை அந்தநாட்களிலேயே தினத்தந்தி தான் ஆரம்பித்து வைத்தது என்பது சொல்லித் தெரிய வேண்டியதே இல்லை.