Showing posts with label விவாதங்கள். Show all posts
Showing posts with label விவாதங்கள். Show all posts

Monday, January 18, 2021

#துக்ளக் ஆண்டுவிழா! குருமூர்த்தி பேசியதும் தொடரும் சர்ச்சைகளும்!

துக்ளக் ஆண்டுவிழா நிகழ்ச்சிகளை நேரலையில் பார்ப்பதோடு, சுடச்சுட அதை என்னுடைய பதிவிலும் கொடுக்கிற வேலையை இந்த வருடம் செய்ய முடியாத படி இந்த ஜனவரி 14 இல் சுணக்கம் ஏற்பட்டது. முன்பு கலாகேந்திரா நிறுவனம் செய்துகொண்டிருந்த நேரலை ஒளிபரப்பு, இந்த வருடம் துக்ளக் டிஜிட்டல் என்ற புது அமைப்பின் வழியாகச் செய்யப்பட்டது. ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா  சேனலின் நேரலையில் தான் நிகழ்ச்சியைப் பார்த்து முடித்தேன். 


துக்ளக் ஆண்டுவிழா நிகழ்ச்சிகளில் எப்போதும் இடம் பெறுகிற நிகழ்வுகள் தான்! ஆனாலும் ஆடிட்டர் குருமூர்த்தி மீது முன்னெப்போதுமில்லாத அளவுக்கு வன்மமும்,வெறுப்பையும் கக்குகிற மாதிரி முகநூல் ட்வீட்டர், ஊடக விவாதங்கள் என்று இந்த வருடம் கிளம்பியிருப்பதில், கொஞ்சம் அர்த்தமுள்ளதாக இருந்த ஒரே ஊடகவிவாதம் தந்திடிவியில் கடந்த 15ஆம் தேதி ஒளிபரப்பான ஆயுத எழுத்து நிகழ்ச்சி மட்டும்தான்.

தந்திடிவியிலா? அர்த்தமுள்ள விவாதமா? சந்தேகம் எழுவது இயற்கைதான்! இந்த விவாதத்தைப் பொருட் படுத்தக்கூடிய ஒன்றாக மாற்றியதே தேவையான விவரங்களை எடுத்துச் சொல்லிய துக்ளக் இதழின் முதன்மை நிருபர் ரமேஷும், பிஜேபியின் K.T. ராகவனும் தான்! இன்றைக்கு முகநூலில் நண்பர் K.G. ஜவர்லால் கூட குருமூர்த்தி பேசியதைக் கண்டிக்கிற மாதிரி ஒரு பகிர்வை எழுதியிருக்கிறார். அவர் மட்டுமல்ல, பிஜேபியை ஆதரிக்கிற பல பதிவர்களே, குனாமூனாவும் சுனா சாமியும் ஆணியே புடுங்க வேண்டாம் என்று கொதித்துப் போய்க் குமுறியிருப்பதையும் பார்த்தேன் 

குருமூர்த்தி துக்ளக் இதழின் ஆசிரியர். சோ ஆசிரியராக இருந்த நாட்களிலிருந்தே துக்ளக் தேர்தல் காலத்தில் யாருக்கு வாக்களிப்பது என்பதைக் காரண காரியங்களோடு ஒரு பரிந்துரையாகச் சொல்வது வாடிக்கைதான்! அதையே குருமூர்த்தியும் இப்போது செய்திருக்கிறார். பிடிக்காவிட்டால் விட்டுவிடலாம், அவ்வளவுதானே! அப்புறமும் ஏன் கொந்தளிக்கிறார்கள்?

மந்திரி ஜெய்குமாரோ டிடிவி தினகரனோ சொல்வது ஒருபுறம் இருக்கட்டும்! 2021தேர்தலின் முக்கியமான கேள்வி, பிரச்சினை என்ன?

ஊழல் திமுகவை மறுபடியும் தமிழகத்தை ஆளவிடப் போகிறோமா? 10 வருடங்களாகக் காய்ந்து கிடந்த திமுக மீண்டும் ஆட்சிக்கு வருமேயானால் என்ன நடக்கும் என்பது தெரியாதா? 

அதிமுகவும் ஊழலில் திமுகவுக்குச்  சளைத்தவர்கள் இல்லை! திமுக குடும்பமாகக் கொள்ளை அடிக்கிறார்கள் என்றால், அதிமுக கூட்டுக்கொள்ளை அடிப்பவர்கள் தான்!  

வேறு மாற்று எதுவும் இங்கே வளர்ந்து விடாமல் இரண்டு கழகங்களும் இங்கேயுள்ள உதிரிக்கட்சிகளைக் கூட்டு சேர்த்துக் கொண்டு , திமுக அல்லது அதிமுக இரண்டு தான்! எது உங்கள் சாய்ஸ் என்று மக்களுக்கு கெக்கலி காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.இனியும் அப்படியே இருக்க விட்டு விடப்போகிறோமா என்ற கேள்விக்கு குருமூர்த்தி 2026 தேர்தலில் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் என்று சொன்னார். அதன் பொருளே இங்கே திமுக அல்லது அதிமுக என்கிற சாய்ஸ் தவிர வேறு வழியில்லாதபோது என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் குருமூர்த்தி சொன்னார். தவறென்ன?

துக்ளக் ஆண்டுவிழாவில் குருமூர்த்தி என்னதான் பேசினார்? வீடியோ 140 நிமிடம்  பார்த்துவிட்டு நீங்களே ஒரு அபிப்பிராயத்தை உருவாக்கிக் கொள்வது மிகவும் சரியானது என்பதை மட்டும் அழுத்தமாகச் சொல்வேன் 

நான் குருமூர்த்தியைக் கண்ணை மூடிக்கொண்டு  நம்புகிறவன் அல்ல! உண்மையைச் சொல்லப்போனால் குருமூர்த்தி தவிரவும் வேறு   யார்யார் எல்லாம் என்ன சொல்கிறார்கள் என்பதையும் கவனித்துக் கொண்டிருப்பவன்! 

வருகிற சட்டசபைத் தேர்தலில் திமுக தோற்கடிக்கப் பட்டே ஆக வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லாதவர்களுக்கு என்ன சாய்ஸ் இருக்கிறது? நண்பர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்!  

மீண்டும் சந்திப்போம்.       

Wednesday, January 8, 2020

பேசுகிற விஷயத்துக்காக மட்டும் தான்! மதன் ரவிச்சந்திரனுக்காக அல்ல !

JNU வில் நடப்பது என்ன? வன்முறைக்கு யார் காரணம்? இதற்கு பின்னூட்டத்தில் மதன் ரவிச்சந்திரன் பேசுகிற விதம் பிடிக்கவில்லை, அடிக்கடி இடையில் குறுக்கிடுகிறார் என்றொரு குற்றச்சாட்டை நண்பர் திருப்பூர் ஜோதிஜி சொல்லி இருந்தார். ஆர்னாப் கோஸ்வாமி முதல் இங்கே புதியதறுதலை கார்த்திகைச் செல்வன் இப்படி எவராக இருந்தாலும் நெறிப்படுத்துகிறேன் என்ற சாக்கில் இடையிடையே குறுக்குச்சால் ஓட்டுவது, உரத்த குரலில் பேசுவது என்பது சேனல் விவாதங்களில் ஒரு fashion மாதிரி ஆகிவிட்டது என்பதை வருத்தத்தோடு ஒப்புக் கொள்கிறேன். மதன் ரவிச்சந்திரன் ஒருவரை மட்டும் குறை சொல்வதால் மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது?  


திரௌபதி என்றொரு திரைப்படத்துக்காக ஐந்து நாட்களுக்கு முன்னால் டீசர் மட்டும் தான் வெளியாகியிருக்கிறது. நான் இதை முதலில் பகிர்ந்த சமயத்தில் பதி.னோரு லட்சம் பார்வைகளை பெற்று இருந்தது. இப்போது 30,35,160 பார்வைகளைப் பெற்றதோடு 24,813 கமெண்டுகளையும் வாரிக் குவித்திருக்கிறது என்பதில் திரைப்படத்துக்கான ஒரு பரபரப்பான விளம்பரத்தையும் சேர்த்தே கொடுத்து இருக்கிறது. கமெண்டுகள் அத்தனையும் நான் பார்க்க விரும்பவில்லை. டீசரைப் பார்த்து மட்டுமே எந்தவொரு படத்தைப்பற்றியும் அபிப்பிராயம் சொல்கிற வழக்கம் எனக்கு இல்லை. படம் திரைக்கு வரட்டும், பார்த்துவிட்டு கருத்தைச் சொல்லலாம் என்று காத்திருக்கிறேன். ஆனால், டீசரைப் பார்த்துவிட்டு இப்போதே படத்தைத் தடை செய்யவேண்டும் என்ற மாதிரியான அபத்தமான எதிர்ப்புக்குரல்கள் கிளம்ப ஆரம்பித்து விட்டார்கள்.

      
மதன் ரவிச்சந்திரனிடம் எனக்குப் பிடித்தமான ஒரு விஷயம், யாருமே பேசத்துணியாத விஷயத்தைக் கூட ஒரு விவாதப்பொருளாக்கி விடுகிறார் என்பதுதான்! திரௌபதி படத்தைப் பற்றி எதுவும் தெரியாமலேயே முன்முடிவுகளோடு விவாதம் செய்யவருகிறவர்களை இங்கே தமிழகத்தில் நிறையக் காணலாம் என்பதற்கு இந்த 56 நிமிட விவாதத்தில் பங்கேற்ற 4 பேர்களே சரியான சாட்சி. விவாதத்தில் உருப்படியான அம்சம் என்னவென்றால் 5வதாக பங்கேற்ற படத்தின் இயக்குனர் G மோகன் தன்னுடைய படத்தைப் பற்றி, சுருக்கமாக விளக்கிய இறுதிப்பகுதிதான்! இங்கே திராவிடங்கள், கழகங்கள்  பீற்றிக்கொல்வது போல சாதி ஒழிப்பு கோஷங்கள் பிரகடனங்களால் நடந்து விடவில்லை, இவர்களால் சாதி ஒழியப்போவதுமில்லை என்பது பல்லிளிக்க ஆரம்பித்துவிட்டது என்பதை மறந்துவிட்டு விவாதங்களில் மட்டும் சத்தமாகக் கூவிக் கொண்டிருப்.பது ஆகப்பெரிய காமெடி! விவாதத்தைப் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்!


குண்டுசட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக் கொண்டிருந்த தமிழக டிவி சேனல்கள் யூட்யூப் சேனல்களில் கூட ஈரான் அமெரிக்கா மோதலைப்பற்றி எல்லாம் விவாதம் உரையாடல் நடத்த ஆரம்பித்து விட்டார்கள் என்பது தமிழகத்துக்கு நல்லகாலமா? போதாதகாலமா? இந்த 55 நிமிட உரையாடலை ஒரு காமெடிக்காக வேண்டுமானால் பார்க்கலாமே தவிர பரிந்துரைக்கிற அளவுக்கெல்லாம் ஒர்த் இல்லை. மூத்த பத்திரிகையாளர் என்று சொல்கிறார்கள் ஆனால் ஹோம் ஒர்க் செய்யாமலேயே, சீட்டில் குறித்து வைத்திருக்கிற செய்திகளைத் தப்பும் தவறுமாக சொன்னால் எப்படிப் பரிந்துரைப்பது? பொழுது போக வேண்டுமென்றால் எத்தனை தவறுகள் என்று கண்டு பிடிக்க முடிகிறதா  என்று கேம் விளையாடலாம். உதாரணத்துக்கு டொனால்ட் ட்ரம்ப் தகுதிநீக்கம் செய்யப் பட்டுவிட்டார் என்று திரும்பத்திரும்பச் சொல்வது! (இன்னமும்  அது செனேட் சபையின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவே இல்லை)

மீண்டும் சந்திப்போம்.  
      
            

Sunday, December 29, 2019

மதன் ரவிச்சந்திரன்! கொஞ்சம் நிதானிப்பது நல்லது!

சின்னச்சின்ன செய்திகள்தான்! அடடே! அப்படியா! என்று ஆச்சரியப்பட வைக்கிறமாதிரி! சம்பந்தப்பட்ட சேனல் பரிதாபங்கள் எப்படியிருக்கும் என்று கொஞ்சமாவது புரிந்து கொள்ள முடிகிறதா?


கௌரவ டாக்டர் பட்டம் கிடைக்காமல்  போனதோடு மானம் மரியாதை எல்லாம் கப்பலேறிப்போயாச்சு என்று சோக கீதம் பாடவேண்டிய நிலைமையில் டய மண்டு! அடடே, அப்படியா என்று கேட்காமல் என்ன செய்வது? ஆனால் விதைத்ததைத்தானே  அறுவடை செய்கிறார் பாடலாசிரியர் என்கிற போது என்னவென்று அனுதாபப் படுவீர்களாம்? கொஞ்சம் சொல்லுங்களேன்!  


சதுரங்கம் நிகழ்ச்சிக்காக மதன் ரவிச்சந்திரன், அர்ஜுன் சம்பத்தை பேட்டி எடுக்கிறார். எப்போதும் இல்லாத அதிசயமாக, மதன் ரவிச்சந்திரன் அர்ஜுன் சம்பத்தைப் பதில் சொல்ல விடாமல் கேள்வி மேல் கேள்வியாக கேட்டுக்கொண்டே போவதில் எரிச்சலோடு பின்னூட்டங்களை இந்த வீடியோவில் தான் பார்த்தேன். கேள்விகேட்டுவிட்டு பதில்சொல்வதற்கு இடைவெளியே கொடுக்காமல் அடுத்தடுத்துக் கேள்விகளாக எழுப்பிக் கொண்டிருந்தால் எப்படி என்று ஒருத்தர்  இரண்டு பேர் இல்லை, வரிசையாக இதேமாதிரிப் பின்னூட்டங்களாக இருந்தால்....! மதன் ரவிச்சந்திரன் கொஞ்சம் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது!  கேள்வி கேட்பதில் மதன் ரவிச்சந்திரன் தடுமாறுவதையும், அர்ஜுன் சம்பத் நிதானம் இழக்காமல் பொறுமையாகப் பதில் சொல்வதையும் கவனித்துப்பாருங்கள்! வீடியோ 32 நிமிடம்.


2019 ஆம் ஆண்டில் மதன் ரவிச்சந்திரன் எடுத்த பல பேட்டிகளில் ஆகச் சிறந்த நேர்காணலாக இதைத்தான் சொல்வேன்! வீடியோ 41 நிமிடம். காவேரி நியூஸ் சேனல் மதன் ரவிச்சந்திரன் எடுத்த பல நேர்காணல் காணொளிகளை யூட்யூப் தளத்திலிருந்து அழித்து வருவதாகச் சொல்லப்படும் நிலையில் இது எத்தனை நாள் காணக்கிடைக்கும் என்பது தெரியாது. இப்போது இன்னொரு முறை பார்த்துவிடுவதில் என்ன தடை?

மீண்டும் சந்திப்போம்.                 

Friday, December 20, 2019

#501 அக்கம் பக்கம்! அரசியல்

பாகிஸ்தானைப் பற்றி வேடிக்கையாகச் சொல்லப் படுகிற, ஆனால் துல்லியமான களயதார்த்தம் ஒன்றுண்டு. உலகத்தில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு ராணுவம் இருப்பதுண்டு. ஆனால் ராணுவத்துக்காக (நேர்ந்து விடப்பட்ட) ஒருநாடு இருக்கிறது என்றால் அது பாகிஸ்தான் தான்! இந்தியாவிலிருந்து பிடிவாதமாகப் பிரிந்து போனார்கள். பிரிந்த பிறகாவது நிம்மதியாக வாழ முடிகிற நாடாக பாகிஸ்தான் இருக்கிறதா என்றால் இல்லை என்பது மட்டும்தான் பதிலாக இருக்கும். 1948 இலேயே ராணுவம் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசைட் கவிழ்த்துத் தன் வசமாக்கிக் கொண்டது.


முன்னாள் ராணுவத்தளபதியும் அதிபருமாக இருந்த பர்வேஸ் முஷாரஃபுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்திருக்கிறது. வெளிநாட்டில் தஞ்சம் அடைந்திருக்கிற முஷாரஃபுக்கு தண்டனையை நிறைவேற்ற முடியுமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும்   தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிற இன்னொரு விஷயம் நெருடலாக இருக்கிறது. தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னால் இறந்து போனால் அவருடைய சடலத்தை இழுத்துவந்து மூன்று நாட்கள் தூக்கில் தொங்கவிடப்படவேண்டும் என்பதில் பாகிஸ்தானில் ராணுவத்துக்கும் நீதிமன்றத்துக்கும் இடையிலான போட்டியாகவே பார்க்கப்படுகிறது. இந்த 14 நிமிட வீடியோவில் சேகர் குப்தா என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் பாருங்கள்.

  

இந்த 53 நிமிட விவாதத்தைக் கொஞ்சம் கவனித்துக் கேளுங்கள். ஆர்னாப் கோஸ்வாமி  வழக்கத்துக்கு மாறாக மிக நிதானமாக விவாதத்தை நடத்துகிறார். எதற்காக  எதிர்க்கிறோம், என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பேசுகிறவர்களிடம் கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது என்று நினைத்த்தாரோ என்னவோ! நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே செம காமெடியாகப் போவதை பார்க்காமல் மிஸ் பண்ணுவீர்களா என்ன?

மீண்டும் சந்திப்போம்.             

Sunday, October 13, 2019

வழக்கமான அக்கப்போர்களோடு கொஞ்சம் செய்திகள்!

அக்கப்போர்கள் என்னென்ன என்று பார்ப்பதற்கு முன்னால் இந்தப் பக்கங்களில் எழுத்தாளர் பிலஹரியைப் பற்றிக் கொஞ்சம் பேசியிருந்தோம் இல்லையா? R P ராஜநாயஹம் தன் முகநூல் பதிவில் இன்னும் சிறிது தகவலைச் சொல்லி இருக்கிறார். நெஞ்சே நீ வாழ்க!  இது பிலஹரி எழுதிய நாடகம். TS சேஷாத்ரி அதை நாடகமாக நடத்தி இருக்கிறார். நாடகத்தில் டைபிஸ்ட்டாக, ஒரு வசனமும் இல்லாத வேடத்தில் நடித்த கோபு, டைபிஸ்ட் கோபுவாக ஆனதைத் தொட்டு எழுதப்பட்ட  பகிர்வு அது. பின்னால் அந்த நாடகம் ஆலயம் என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டபோது, டைபிஸ்ட் கோபுவும் அதே டைபிஸ்ட் வேடத்தில் நடித்தார் என்கிறார் .  


வின் நியூஸ் சேனலில் சேர்ந்த கையோடு மதன் ரவிச்சந்திரன் மீண்டும் சுறுசுறுப்பாகி விட்டார். நல்ல செய்திதான்! ஆனால் அவர் தன்னை மேம்படுத்திக் கொள்ளவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. ஒரு நேர்காணலில், விஷயங்களை வரவழைக்கிற விதத்தில் கேள்விகள் கேட்க வேண்டியதுதான்! அதற்காக தன்னுடைய சொந்தக் கருத்தை கேள்விகளோடு சேர்த்து திணிக்க முற்படுவது இந்த இளைஞனிடம் இருக்கிற குறை. ஒரு விஷயத்தை இன்னொரு விஷயத்தோடு முடிச்சுப் போட்டுக் கேள்வி கேட்கும்போது,தனக்கு கிடைத்த தகவல்கள் சரியானவை தானா, ஒப்பிடத் தகுந்தவைதானா என்று ஹோம் ஒர்க் செய்துகொள்ள வேண்டியது மிகமிக அவசியம். 43 நிமிட வீடியோவில் அவர் பேட்டியெடுக்கிற விதம் குறித்து  உங்களுக்கென்ன படுகிறது என்று சொல்லுங்களேன்!


ராதா ரவி ஜாதக விசேஷமோ என்னவோ? என்ன பேசினாலும் அதை ஒரு சர்ச்சையாகவும் அக்கப்போராகவும் வளர்ப்பது தமிழக சேனல்களுக்கு ஆகி வந்த விஷயம் என்றாகி விட்டது. அவரும் தான் என்ன செய்வார்? சொல்லுங்கள்! வீடியோ 40 நிமிடம். இந்த மாதிரி அக்கப்போர்களையே பார்க்கிறவன் தலைக்குள் திணிக்கிற ஊடகங்கள், சேனல்களை ஒருவழி பண்ணினால் மட்டுமே  தமிழகம் உருப்படும்! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?


ஆயிரம் குற்றம் குறை சொன்னாலும் தமிழ்நாட்டில் செய்தி வாசிக்கும் பழக்கத்தை வளர்த்தது தினத்தந்திதான் என்று நண்பர் திருப்பூர்  ஜோதிஜி எங்கோ ஓரிடத்தில் எழுதியிருந்ததை வாசித்ததாக ஞாபகம்!

இந்த மாலைமுரசு கிளிப்பிங்கை முகநூலில் நேற்றைக்கு பதிவர் உண்மைத்தமிழன் பகிர்ந்திருந்தார். ஆதித்தன் வகையறா நடத்தும் ஊடகங்கள் வாசிப்புப்பழக்கத்தை ஊக்குவிக்கும் விதத்தில்  இது ஒரு சாம்பிள்.

மீண்டும் சந்திப்போம்.  

Wednesday, July 17, 2019

சமூக நீதி! சூர்யா கோபம்! கரு ''நாடக'' காமெடி!

பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய முற்பட்ட  வகுப்பினருக்கும் 10% இட  ஒதுக்கீடு என்று மத்திய அரசு சிலகாலத்துக்கு முன் கொண்டுவந்த மசோதா சட்டமான பின்னாலும் இன்னும் அதை ஒரு விவாதப்பொருளாக்கிக் கொண்டு சமூகநீதி, சமநீதி என்று  குழப்புகிற, குழம்புகிற இருதரப்பினருக்காகவும்! தமிழகத்தில் மட்டும் இது மாநிலத்தில் மட்டும் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுகிற மாநிலக்கட்சிகளுக்கும், தேசியக் கட்சிகளுக்குமான விவாதம் என்றாகிப்போன வேடிக்கையைப் பார்க்க வேண்டாமா? முற்பட்ட வகுப்பு என்றால் பார்ப்பனர்கள் மட்டுமே இல்லை, 82 வகுப்புகள் இதன் கீழ் வருகிறார்கள் என்பதையே இங்குள்ள திராவிடப் புரட்டுகள் மறந்து அல்ல , மறைத்தே பேசுகிறார்கள்! கொஞ்சம் கவனித்துக் கேட்கவேண்டிய விவாதம்!
      

ங்கே தமிழகத்தில் 69% இட  ஒதுக்கீடு என்பதே மொத்த ஒதுக்கீடுகள் 50% மேல் இருக்கக் கூடாது என்கிற உச்சநீதிமன்றத்தீர்ப்புக்கு   முரணானது, இதுகுறித்து வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. வேடிக்கை என்னவென்றால்  இதை  வழக்கறிஞர் விஜயன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போடப்போன போது  அவரைத் தாக்கியது,  1994 இல் அரசியல் சாசனத்தின் 9வது அட்டவணையின் கீழ் கொண்டுவந்து, நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்படுத்த முடியாததாக்கியது எல்லாமே  ஜெயலலிதா அரசில் தான்! சமூக நீதிகாத்த வீராங்கனை என்று வீரமணி பட்டம் கொடுத்ததும் அதற்காகத் தான்! அப்போது பிரதமராக இருந்த பிவி நரசிம்மராவ் இதைப்பற்றிக் கண்டுகொள்ளவே இல்லை. உச்சநீதிமன்றம் நிலுவையில் இருக்கிற வழக்கை எப்போது விழிப்பு வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால்  திராவிடங்கள் இந்த   10% இடஒதுக்கீட்டுக்கு 8 லட்ச ரூபாய் வருமான வரம்பு பற்றிக் கேள்வி எழுப்புகிறார்களே, அதுகூட க்ரீமி லேயர் பிரச்சினை வந்தபோது கொண்டுவந்தது யார் என்பதையோ, அதே வரம்புதான் இதற்கும் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பதை மறந்துபோய்க்கூடப் பேச மாட்டார்கள்!  ஏனென்றால் அவர்களெல்லாம் சுத்தமான #பெரியார்மண் அது எப்படிப்பட்டதென்றால் ......


ல்லதும் கெட்டதும் இங்கே தமிழ்சினிமா நடிகர்களிடம் இருந்தே தான் வரவேண்டும் என்பதை  ஒரு வியாதியாகவே  வளர்த்து விட்டிருக்கிறோம் என்பதில் அவர்களுடைய தவறு என்பதை விட நம்முடைய தவறு அதிகமாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வதில் அவமானமாக இருந்தாலும், அதைச் செய்யாமல் விடுவது இன்னும் பெரிய தவறாகிப் போய்விடும் என்பதைப் பதிவு செய்தே ஆகவேண்டும்!

  
மாரிதாஸ் இங்கே சில விஷயங்களைப் பளீரென்று கேட்கிறார். ஒரு நடிகனுக்கு கொடுக்கும் கவனத்தில் ஒரு சிறுபகுதியாவது  மாரிதாஸ் போன்றவர்களுக்குக் கொடுக்கிறோமா? 

குஷ்புவுக்குக் கோயில் கட்டிய இனமடா நாங்கள்! என்ன ஒரு ஆரியத் திமிர் உனக்கு?!
புரட்சிவீரன் விசய் சோசப்பு நீட்டும் ஒரு விரலில் 'மெர்சல்' ஆகி, அந்த அவனின் 'ஒற்றை விரல்' ஆட்டத்தில் சேகுவேரா, காஸ்ட்ரோ, மாவோ எல்லாரையும் தரிசிப்பவனடா நாங்கள்!
கைபர் கணவாய் வழி வந்த உனக்குப் புரியுமா, விசய் சோசப்பு வெள்ளித் திரையில் வீசி எறிந்த இலவச மிக்சியைத் திரையில் கண்டவுடன், வீட்டு மிக்சியைத் தெருவில் வீசிய எங்கள் பில்லைகலின் பகுத்தறிவு?
அக்ரகார வாசியே நீ அறியமாட்டாய் ஐட்ரோ கார்பன் எனும் நச்சுவாயுவின் வீர்யத்தை - எமது அறிவியல் மேதை மயில்சாமியைக் கேட்டுப்பார், கொங்கு நாடு தந்த சிங்கம் சூர்யாவைக் கேட்டுப்பார், 'ஆட்டு' ஆர்வலர் அமீரைக் கேட்டுப்பார்... ஐட்ரோகார்பன் தமிழினத்தை அழிக்க வந்த ஆரியவாயு எனப் புரியவைப்பார்கள்!
உனது தர்ப்பைப்புல் புத்தி குயுக்தியாக வேலை செய்யும் - 'ஒரு அறிவியல் பேராசிரியரை ஐட்ரோ கார்பனை விளக்கச் சொல்லி...'
போதும் நிறுத்து உன் ஆரிய சூழ்ச்சியை! சீமானை விடவா விஞ்ஞானி வேண்டும்! டேனியலை விடவா ஆய்வறிஞர் வேண்டும்? முத்தரசனை விடவா முற்றிய ஞானி வேண்டும்?
நீ பி.எச்டி படித்த பேராசிரியர் என்று ஒவ்வொரு துறையிலும் ஒரு 'தமிழ் இனப் பகைவரை' க் கொண்டு வந்து சொல்ல வைப்பாய்...
அறிவுடைமை என்பதே ஆரிய சூழ்ச்சி! இதை அறிந்தே எமது ஆசான்கள் வழி காட்டலில் மயில்சாமி முதல் மண்ணாங்கட்டி வரை, பட்ஜெட் முதல் ராக்கெட் வரை பதிலடி கொடுக்க சிந்தனைப் போராலிகலைக் கொம்பு சீவி வைத்துள்ளோம்!
நாளை வருவாள்கள் பார் எமது வீரத்தமிலச்சிகல் 'தமில் வால்க' முலக்கத்துடன்!
உனது ஆரிய முகமூடியைக் கிழித்தெறிய...
அறிவு, விவரம், படிப்பு , விவாதம் என்றெல்லாம் நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு சதிக்கும் எதிரடியாக...
இந்த அளவுக்கு நையாண்டி செய்யப்படுகிற அளவுக்கு இணைய வெட்டிப் போராளிகள் கும்பலாகக் குறுகி விடுவோமோ  என்ற அச்சத்தைத் தருகிற அளவுக்கு.........! ஒரே ஒரு விஷயம் மட்டும் எனக்கு இன்னமும் புரிபடாமல் உறுத்திக் கொண்டே இருக்கிறது. சூர்யாவின்  திடீர்க் கோபாவேசத்துக்கு நிஜமாக என்ன காரணம் இருக்க முடியும்? இந்த அறக்கட்டளைகள் எல்லாம் வருமானவரித்துறையின் லென்ஸின் கீழே! முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் அறக்கட்டளை அந்தஸ்து ரத்து! 47% வரிவிதிப்பு என்ற அறிவிப்பு காரணமாக இருக்குமோ? 


பிமான கார்டூனிஸ்ட்  சதீஷ் ஆசார்யா இன்றைக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்த சூட்டோடு சூடாக வரைந்த கார்டூன் இது. கர்நாடகக் குழப்பங்கள்  பற்றி மதியமே இன்னொரு வலைப்பக்கத்தில் எழுதிய பிறகே கண்ணில் பட்டது. நாளை என்ன கூத்துடன் ஆரம்பமாகிறது என்பது தெளிவான பிறகு விரிவாகப் பார்க்கலாம். நம்மூரில் கூத்தடிப்பதில் எவன் நடிகன் எவன் அரசியல்வாதி என்பதே பெரும்பாலான சமயங்களில் புரிய மாட்டேன் என்கிறதே! என்ன செய்ய??

மீண்டும் சந்திப்போம்.
          

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)