JNU விவகாரத்தை ஊதி ஊதிப் பெரிதாக்குவதில் சில அரசியல் கட்சிகளும் அவர்களுக்கு விலைபோன பல ஊடகங்களும் மும்முரமாக இருப்பதைப் போல, அங்கே நடப்பதென்ன என்பதை விவாதிக்க சில ஊடகங்களும் இருக்கத்தான் செய்கின்றன. மதன் ரவிச்சந்திரன் தனக்குக் கிடைத்த வாய்ப்பை மிகச் சுறுசுறுப்பாக விவாதக்களங்களை சுடச்சுட நடத்துவதில் பயன் படுத்திக் கொண்டு வருகிறார்.விவாதிக்க வரும் பங்கேற்பாளர்கள் எவரும் மக்களுக்கு அறிமுகமானவர்கள் என்று சொல்ல முடியாது. கட்சியிடமிருந்தும் சேனல்களிடமிருந்தும் காசு வாங்கிக் கொண்டு பேசிவரும் தொழில்முறைப் பேச்சாளர்களுக்கு காசுகொடுக்கும் அளவுக்கு வளர்ந்த சேனலாக வின் தொலைக்காட்சி இல்லை என்பதும் பிரபலமான முகங்களைப் பார்க்க முடியாததற்கு ஒரு முக்கியமான காரணம்.
JNU வில் நடப்பது என்ன? வன்முறைக்கு யார் காரணம்? என்ற தலைப்பில் இன்றிரவு சுடச்சுட ஒரு விவாதம்! எவருக்கும் எழுகிற இயல்பான சந்தேகங்கள் கேள்விகள் எல்லாவற்றையும் தொட்டு இந்த விவாதம் நகர்வது சிறப்பு. வீடியோ 54 நிமிடம்
JNU இடதுசாரிகள் பிடியில் நீண்டநாட்களாக இருந்து ஈரல் முதல் எல்லாமே சீரழிந்து கிடப்பதைத் தொட்டுப் பேசும் முந்தைய பதிவைக் கொஞ்சம் பார்த்து விடுங்கள்!
மீண்டும் சந்திப்போம்.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள்
நான்கு நாட்கள் ஊர்ப்பயணம் முடிந்து இன்று தான் வந்தேன். இந்த காணொலிக் காட்சி பார்க்க வேண்டியதில் முதல் பட்டியலில் இருந்தது. இன்று பார்த்து விடுகிறேன். நன்றி.
ReplyDeleteவாருங்கள் ஜோதிஜி! பார்த்துவிட்டு அப்படியே இதைப்பற்றி உங்களுடைய பதிவிலும் என்ன நினைக்கிறீர்கள் என்பதைக் கொஞ்சம் எழுதுங்களேன்!
Deleteபாதி பார்த்தேன். மதன் ரவியின் பேச்சு எனக்குப் பிடிக்கவில்லை. மற்றவர்களை பேச விடுவதே இல்லை. தான் சொல் வந்த விசயங்களைப் பற்றியே பேசுகின்றார். ஓரளவுக்குஇதன் பின்னால் உள்ள அரசியல் புரிந்து கொண்டேன்.
Deleteஒப்பீட்டளவில் மதன்ரவிச்சந்திரன் அனுபவம் குறைவுதான். சுடசுட விவாதங்களை நடத்தவேண்டும் என்கிற அவரது ஆர்வத்தைப் புரிந்துகொண்டால் அவரது பேச்சு ஒரு குறையாகத் தெரியாது. இதே தலைப்பில் ரங்கராஜ் பாண்டே தனி ஆவர்த்தனமாகப் பேசிய வீடியோ கூட அவரது chanakyaa தளத்தில் பார்த்தேன். அதைப்பகிராமல் இந்த வீடியோவைப் பகிர்ந்ததற்கு வேறென்ன காரணம் இருக்கமுடியும் என்று நினைக்கிறீர்கள்?
Delete