தமிழக ஊடகங்களில் ரொம்பவுமே துள்ளிக் குதித்தது நக்கீரன்! Investigative Journalism என்ற பெயரில் மஞ்சள் பத்திரிகையாகவே ரொம்பநாட்களாகவே நடந்து வருவதில் திடீரென்று ஒரு மாற்றம் தென்பட்டிருக்கிறது. நக்கீரன் முதன்முறையாக தமிழ்நாடு ஆளுநரைப் பற்றி தான் வெளியிட்ட செய்தி பொய்யானது என்று ஒரு ஓரத்தில் சின்ன பாக்ஸ் கட்டி அச்சு ஊடகத்தில் வருத்தம் தெரிவித்திருப்பதே பெரிய ஆச்சரியம் தான்!
நிர்மலாதேவி படத்தை அட்டைப்படத்திலேயே போட்டு ஆளுநரை சம்பந்தப்படுத்திச் செய்தி போட்டவர்கள் அதே மாதிரி முகப்பு அட்டையிலேயே வருந்துகிறோம் என்று போடுவார்கள் என்று எதிர்பார்ப்பதே முதலில் தவறுதான்! இந்த விஷயத்தை முடித்துவைக்கவும் இந்து என் . ராம்தான் வரவேண்டியிருக்கிறது என்பதுமே கூட வெட்கப்பட வேண்டிய விஷயம் தான் ! ஆனால் நக்கீரன் கோபாலுக்கு நல்ல புத்தி வந்திருப்பது நம்புகிற மாதிரியா இருக்கிறது? எங்கேயோ இடிக்கிறதே என்ற சந்தேகம் வருகிறதா? இந்த விஷயத்தை முதலில் கிளறியது கிஷோர் கே சுவாமி தான்!
நேற்று மீசை(க்கீரன்) safari ஏஜெண்டின் மகளுக்கும் செயலின் செயல்படாத வாரிசுக்கும் 5 star ஹோட்டல் பார்ட்டியில் கைகலப்பு மீசைக்கீரன் யாருக்கு பிரச்னையானாலும் அந்த நாய் அந்த நாய்னு வீடியோ போடுவாரே அவர் மகள் தாக்கப்பட்டதுக்கு வீடியோ உதயமாகுமா இல்ல பேக்கரி dealing ah
பிற்பகல் 2:23 · 1 ஜன., 2020Facebook
நக்கீரன் கோபால் திடீரென மன்னிப்பு கேட்கிறாரே?
எங்கயோ இடிக்குதே,
பிரஷாந்த் கிஷோர் இராஜினாமா..
காயத்ரி கந்தாடையின் பாகிஸ்த்தானிய தொடர்பு கண்டுபிடிப்பு..
இரண்டு நாட்களுக்கு முன்னர்தான், நக்கீரன் கோபாலுடைய மகளுக்கும் கருணாநிதி அவர்கள் குடும்ப வாரிசுக்கும் சண்டைனு ஒரு செய்தி பார்த்தேன், இன்று நக்கீரன் தடாலடி பல்டி?
நாம் அனைவரும் யூகிப்பதினைவிட ஏதோ பெரிய அளவில் திமுக மாட்டிக்கொண்டுள்ளதாகவே படுகிறது. மாரிதாஸ் சொல்வது போல, வரும் நாட்களில் பல திமுக பெரிய தலைகள் கூட வேறிடத்திற்கு மாறலாம்.
விஷயம் ரொம்ப சீரியஸா இருக்கும் போலயே?
Disclaimer: WhatsApp forwarded message
பிரசாந்த் கிஷோர் திமுகவுக்கு தேர்தல் உத்தி வகுக்கும் பணியிலிருந்து ஒதுங்கிக் கொண்டு விட்டதாக வரும் செய்திகள் தவறானவை என்கிறார் மாரிதாஸ்.
பிரசாந்த் கிஷோர் திமுகவிற்கு வேலை செய்வதிலிருந்து விலகிவிட்டார் என்ற செய்தி தவறானது.
அவர் விலகிவிட்டதாகத் திட்டமிட்டு பொய்யான செய்தி பரப்பியதும் திமுக ஆதரவாளர்கள் தான்.
ஆக ஸ்டாலின் எடுக்கும் அனைத்து புதிய முயற்சியோடு பிரசாந்த் கிஷோரையும் இணைத்தே சிந்திக்கவும். வச்சு செய்யவும்.
பிற்பகல் 5:29 · 4 ஜன., 2020Twitter Web App
கோலம் போட்டது கூடத் தவறில்லை. ஆனால் சம்பந்தமே இல்லாமல் வேறொருவர் வீட்டின் முன் காயத்ரி முதலானவர்கள் எதிர்ப்புக் கோலம் போட்டது சரிதானா? போதாக்குறைக்கு அம்மணிக்கு பாகிஸ்தான் அமைப்பு ஒன்றுடன் தொடர்பு வேறு! மாரிதாசுக்கு புதிதாக காணொளி ஒன்று வெளியிட வாகாக ஒரு செய்தி கிடைத்து விட்டது!
இன்ஸ்டன்ட் போராளிகளை இங்கே உள்ள ஊடகங்கள் எப்படி உருவாக்குகின்றன என்ற விஷயத்தை மாரிதாஸ் கொஞ்சம் சுவாரசியமாக விளக்குகிறார்.
அடங்கமறு அத்துமீறு சரக்கு மிடுக்கு என்று பேசுகிற படங்கள் வரிசைகட்டி வந்தால், அதற்கு மாற்றுப் பார்வை திரைப்படங்களும் வரும் தானே!
ட்ரெயிலர் வெளியான ஒருநாளிலேயே 11,61, 720 பார்வைகளைப் பெற்றிருக்கிறது என்பதே ஒரு சாதனை! திரௌபதி திரைப்பட இயக்குனர் மோகன் உள்ளிட்ட குழுவினருடன் ஒரு 26 நிமிட உரையாடல்
Crowd Funding மூலமாக மூலதனம் திரட்டப்பட்டு மிகுந்த நம்பிக்கையோடு திரௌபதி திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள் என்பது சுவாரசியமான தகவல்.
தமிழக ஊடக நிலவரத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மீண்டும் சந்திப்போம்.
பொய்ச் செய்தியைப் பரப்பும் ஊடகங்கள் மறுப்போ, உண்மையையோ மறுபடி சொல்வதே பெரிய விஷயம். சின்னஞ்சிறிய ஃபாண்ட்ஸ்களாக இருந்தாலும்! ஆனால் அதற்குஏதாவது பின்னணி இருக்கும் போல...
ReplyDelete//பின்னணி இருக்கும் போல...//
Deleteஎன்னவாக இருக்கும் ஸ்ரீராம்? அதைச் சொல்லவே இல்லையே!