புத்தகங்கள், வாசிப்பு அனுபவம் பற்றிப் பேசுவதற்காக ஆரம்பித்த வலைப்பக்கங்கள் இவை. சமீபத்தில் நானாகப் பார்த்து வாங்கிய புத்தகங்கள் என்று எதுவுமில்லை. மகன் ஆர்டர் கொடுத்து மதுரைக்கு நேற்று வந்து சேர்ந்த மூன்று புத்தகங்களில் ஒன்று இது.
மூன்றுமாகச் சேர்த்து எடுத்த படம் இது.
முதல் புத்தகம் இந்தியர்களாகிய நாம் எங்கிருந்து வந்தோம் என்று ஒரு ஆராய்ச்சி. கொஞ்சம் படிக்க சுவாரஸ்யமான் அக்கப்போராகத் தானிருக்கும் என்று தோன்றுகிறது.
சு. வெங்கடேசன் எழுத்தையெல்லாம் படிக்கிற அளவுக்கு நான் அத்தனை வெட்டியில்லை! ஜெமோ எழுதிய காவியம் கொற்றவை முதல் ஐந்துபக்கங்களுக்கு மேல் தாண்ட முடியாமல் கண்ணெதிரே கிடக்கிறது. எடுத்துப்படிக்க ஏனோ தோன்ற மாட்டேன் என்கிறது.
