புத்தகங்கள், வாசிப்பு அனுபவம் பற்றிப் பேசுவதற்காக ஆரம்பித்த வலைப்பக்கங்கள் இவை. சமீபத்தில் நானாகப் பார்த்து வாங்கிய புத்தகங்கள் என்று எதுவுமில்லை. மகன் ஆர்டர் கொடுத்து மதுரைக்கு நேற்று வந்து சேர்ந்த மூன்று புத்தகங்களில் ஒன்று இது.
மூன்றுமாகச் சேர்த்து எடுத்த படம் இது.
முதல் புத்தகம் இந்தியர்களாகிய நாம் எங்கிருந்து வந்தோம் என்று ஒரு ஆராய்ச்சி. கொஞ்சம் படிக்க சுவாரஸ்யமான் அக்கப்போராகத் தானிருக்கும் என்று தோன்றுகிறது.
சு. வெங்கடேசன் எழுத்தையெல்லாம் படிக்கிற அளவுக்கு நான் அத்தனை வெட்டியில்லை! ஜெமோ எழுதிய காவியம் கொற்றவை முதல் ஐந்துபக்கங்களுக்கு மேல் தாண்ட முடியாமல் கண்ணெதிரே கிடக்கிறது. எடுத்துப்படிக்க ஏனோ தோன்ற மாட்டேன் என்கிறது.
சுவாரஸ்யமானதாகத் தான் இருக்கும் போலிருக்கு..
ReplyDeleteயாராவது வாசித்துத் தெளிவடைகிற அரசியல்வாதி இருந்தால் படித்துப் பார்க்கலாம்.
பி.ஆரின் 'விடுதலைப் போரும் திராவிட இயக்கமும்' நூல் நினைவுக்கு வருகிறது. பழனியப்பா பிரதர்ஸ் 1983-ல் வெளியிட்ட நூல். சு.வெங்கடேசன் வாசித்திருப்பாரோ?
முதல் புத்தகம் இப்போது படிக்க எடுத்துக் கொண்டிருக்கிறேன். டோனி ஜோசப் ஒரு பத்திரிகையாளர். இந்தியர்களாகிய நாம் யார்? நம்முடைய மூதாதையர் எங்கிருந்து வந்தார்கள் என்பதை DNA ஆராய்ச்சி முடிவுகளை வைத்து ஒரு 256 பக்கங்களில் சொல்லியிருக்கிறார் என்று பின் அட்டைக்கு குறிப்பில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
Deleteசு வெங்கடேசன் பற்றி எனக்கு அவ்வளவாக நல்ல மதிப்பீடு இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கிற ஒரு திராவிடர் கழக ஆசாமி என்பதாக ஒரு அபிப்பிராயம். இவர் என்னென்ன படித்திருக்கிறார் என்பது என்னுடைய ஊகத்துக்கு அப்பாற்பட்ட விஷயம்.
முதல் புத்தகம் சுவாரஸ்யமாய் இருக்கும் போல.... எழுதியவர் இந்தியரா, வெளிநாட்டுக்காரரா?
ReplyDeleteகாவல்கோட்டம் படித்திருக்கிறேன். வேள்பாரி படிக்கும் பொறுமை எனக்கும் இல்லை.
ஸ்ரீராம்! இவை என்னுடைய மகனுடைய தேர்வு. கொஞ்சம் சீரியசான டாபிக் தேடிப் படிக்கிறான் என்பதில் சந்தோஷம்! காவல்கோட்டம் படித்திருந்தால் இதற்கு ஆர்டர் கொடுத்திருப்பானா என்பது சந்தேகமே! இங்கே மீடியாவில் கொடுக்கப்பட்ட over hype இல் வாங்கியிருப்பானோ என்றொரு சந்தேகம். ஆனால் நாங்கள் இது பற்றி எதுவும் பேசிக்கொள்வதில்லை.
Delete